மாவட்ட அரசு பள்ளிகளைக் குறித்து ஒரு ஆரோக்கியமான அலசல்

திருவண்ணாமலையில் இரண்டு கல்வி மாவட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
i.செய்யாறு கல்வி மாவட்டம்
ii.திருவண்ணாமலை கல்வி மாவட்டம்.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட கல்வி அதிகாரியும்(மொத்தம் 2 டிஇஓ), ஒரு முதன்மை கல்வி அதிகாரி கீழ் உள்ளனர்.என்னுடைய முந்தைய பதிவுகளில் இந்த மாவட்டம் தமிழகத்தில் கல்வியில் மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளேன்.இந்த பதிவில் சில முக்கிய விவரங்களை அரசுப்பள்ளிகள் பற்றி காண்போம்.ஏனெனில் அரசுப் பள்ளிகளே மாவட்டத்தின் முக்கிய கல்விக்கூடங்கள்.ஏழை மாணாக்கரின் சரணாலயங்கள்.

அரசு பள்ளிகளை எடுத்துக்கொண்டோமேயானால் 5-9 வயது வகுப்பிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 1.4 லட்சம் ஆகும்.10-14 வயது வகுப்பிலுள்ள குழந்தைகள் 1.6 லட்ச எண்ணிக்கையில் அடங்குவர்.15-17 வயது வகுப்பினர் ஒன்றரை லட்சம் பேர் ஆவர்.ஆக பள்ளிப்படிப்பை துவங்கியதிலிருந்து முடிக்கும் வரை, அரசுப்பள்ளிகளையே நாடி இருக்கும் மாணவ மாணவிகளின் தொகை கிட்டத்தட்ட 4.5 லட்சம்.இது வெறும் சராசரி கணக்கு.

2011 சென்சஸிலிருந்து இன்றைய தேதி வரை வருடாந்திர டீவியேஷன் கணக்கிட்டு பார்த்தால் இன்றைய நிலையில் ஒரு 6 லட்சம் பேர் இந்த இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் பயில்வர்.இந்த பள்ளிகளின் நிலைதான் என்ன? தொடர்ந்து காண்போம்.

ஆசிரியர் பற்றாக்குறை அறவே இல்லை.சமீபகாலமாக தேவையான அளவு,மாணவர்களின் விகிதத்திற்கேற்ப ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெளிவாகத் தெரிகின்றது.அப்புறம் என்ன பிரச்னை? இங்குதான் நாம் சில நுணுக்கமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

இதற்காக செங்கம், மங்கலம், திருவண்ணாமலை நகர், கோளாப்பாடி, தெள்ளார், செய்யார் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடமும் தலைமை ஆசிரியர்களிடமும் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்புக்கொண்டு சில விபரங்களை திரட்டினேன்.என்னென்ன பிரச்னைகள் என்று அவர்கள் குறிப்பிட்டவை:

உதாரணத்திற்கு செங்கம் அரசுப்பள்ளிகளை எடுத்துக்கொள்வோம்.இங்கு மாணவர்கள் GBHS,மாணவிகளுக்கு GGHS என இரு பெரும் அரசுப் பள்ளிகள் உள்ளன.’பெரு’ என்ற வார்த்தை இங்கு மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிப்பிடுவது ஆகும்.இடத்தை அல்ல.

ஏனெனில் அவ்வளவு இடப்பற்றாக்குறை.வருடாவருடம் அரசுப்பள்ளி மாணவமாணவியர் எண்ணிக்கைக்கேற்ப இடவசதி வளர இயலுமா? ஏற்கனவே அமைந்துள்ள கட்டடங்களின் வகுப்பறைகளில் நெருக்கடியுடனும், மரத்தடிகளிலும், திண்ணைகளிலும், வராந்தாக்களிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து மாணவச் செல்வங்கள் கல்வி கற்கின்றனர்.இதனால் வசதியின்மை ஏற்பட்டு பாடங்களில் இவர்கள் பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை.ஆசிரியர்கள் இவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கே பெருமுயற்சி செய்கின்றார்கள்.

இட நெருக்கடியைத் தவிர்த்து ஆராயும் பொழுது சுகாதாரமற்ற கழிப்பறைகள் பெரும் துர்நாற்றத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன.தலைமை ஆசிரியர்கள் மாறினாலும் மாறாத தலைவலியாய் இது இருக்கின்றது.1300 மாணவிகள் பயன்படுத்தும் இந்த கழிப்பறையும் சரி,50 ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையும் சரி-தண்ணீரே இல்லாமல், உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இன்னொரு விவரம்-இந்த பள்ளிகளில் மாணவ மாணவிகள் விளையாட திடலே இல்லை.பி.ஈ.டி எனப்படும் உடற்கல்வி வகுப்பு வெறும் ஒரு கண்துடைப்பு.இவை கட்டமைப்பு குறித்த பிரச்சினைகள்.மற்றொன்று மாணாக்கரின் சமூகச் சூழல்.பெரும்பாலானோர் மலைவாழ் மக்களின் குழந்தைகள்.தற்பொழுதுதான் இவர்கள் பெற்றோருக்கு சிறிதளவில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டு, அரசு மடிக்கணினி, மதிய உணவு போன்ற திட்டங்களினால் கவரப்பட்டு பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.ஆனால் இந்த மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளில் வழங்கப்படும் காலை, இரவு உணவாகட்டும், பள்ளிகளில் கொடுக்கப்படும் மதிய சத்துணவாகட்டும் மோசமான தரத்தில் இருப்பதாக கூறுகின்றார்கள்.இவர்களுக்கு போதிய சத்தான உணவு கிடைப்பதில்லை.

இதற்கு நல்ல உதாரணம் செங்கத்தில் தங்கிப் படிக்கும் “P.L தண்டா” என்ற மலைவாழ் கிராம அரசுப்பள்ளி குழந்தைகள்.பெற்றோர்களுக்கு இன்னும் கல்வி குறித்த விழிப்புணர்வு குறைவாகவும், இல்லாமலும் பள்ளியிலிருந்து நிற்கும் ட்ராப் அவுட் விகிதம் அதிகம்.நிலையில்லாத அட்டெண்டன்ஸ், ஆர்வமின்மை இந்த மாணவர்களிடையே அதிகமாக நிலவுகிறது.உண்மையைப் பதிந்துதான் ஆக வேண்டும்.அப்பொழுதுதான் இந்த குறைகள் நீங்கும்.

மதிய உணவை சீர்படுத்தி தரமாக வழங்கியும்,lighting(வெளிச்ச)-space(இட)-ventilation(காற்றோட்ட) என்ற முக்கிய மூன்று விஷயங்கள் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு ஒழுங்காக பரமாரிக்கப்பட்டும், குடிநீர்-சானிடரி நாப்கின்(பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில்)
கியாஸ்க் எந்திரம்,சுத்தமான தண்ணீர் வசதி கொண்ட கழிவறை ஏற்பாடு செய்து கொடுத்து உதவினால் குழந்தைகள் நன்கு கல்வி கற்று ஜொலிப்பர்.அவை அந்தந்த பள்ளிகளின் நிதியிலேயே, ஒரு வருட காலக்கட்டத்திலேயே செய்யக்கூடிய திட்டங்கள்தாம்.இந்த விஷயத்தில் தலைமை ஆசிரியருக்கு  உதவுவதற்கென தனி சிறப்பு ஊழியர்(சிவில் படித்த பொறியாளராயிருந்தால் சிறப்பு) ஒருவர்-இது போன்ற கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு மட்டுமாயும் நியமிக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையின் கண்பார்வைக்கும் செவிகளுக்கும் இட்டுச்செல்வது நம் கடமையே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s