நலிந்து வரும் தொழில்களும் மறக்கப்படும் மனிதர்களும்

ஆரணி பட்டுத் தொழில் குடும்பங்கள் மற்றும் செய்யாறு தெருக்கூத்து நடத்தும் மக்கள் பற்றிய பதிவு.

ஆரணிப் பட்டு..
போட்டு அழகு காட்டு.
செய்யாறு போல
அட-இனிக்கும் பாட்டு.
சவ்வாதுமலை-ஒரு கான மெட்டு
இலயித்துக் கேட்டு
கொஞ்சம் தலையை ஆட்டு.

சுமார் 2 கோடியே 36 லட்சத்து 74 ஆயிரத்து 172 ரூபாய் சராசரி ஆண்டு வருமானம் ஈட்டும் பட்டுப்புழு உற்பத்தி.அன்னை அஞ்சுகம் பட்டு, ஆரணி தயாளு பட்டு, ஆரணி சைதாப்பேட்டை காமராஜர் பட்டு, அம்மாப்பாளையம் சாமுண்டேஸ்வரி பட்டு, துருகம் அம்மன் பட்டு, ஆதிமலைப்பட் அறிஞர் அண்ணா பட்டு, கொருக்கத்தூர் பட்டு, கோவிலூர் பாலசுப்ரமணியர் பட்டு, ஹஸ்னம்பேட்டை, வடமண்பாக்கம் ஓம் சக்திவேல், கீழ்கொடுங்காளூர், பொன்னூர் ஸ்ரீமுருகன், அம்மையாப்பட்டு, குனகம்பூண்டிப்புதூர், வேடல், தென்மாத்திமங்கலம், சித்ரகாவூர்.

இவை அனைத்தும் இணைந்ததுதான் உலகப்புகழ்ப்பெற்ற ஆரணி பட்டு.மைசூரையும் காஞ்சிபுரத்தையும் வாரணாசியையும் போட்டிக்கு இழுத்தப் பட்டு.ஏன் ‘இழுத்த’ என்று குறிப்பிடுகின்றேன் என்றால் இந்த தொழில் சமீபமாக இழுபறியில் உள்ளது.முக்கிய வில்லன் மின்சாரம்.அந்த மின்சார வில்லனுக்கு அல்லக்கை அடியாள் வில்லன் மானியம்.

இரண்டும் சேர்ந்து ஏற்றுமதியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வருகின்றன.இன்று சில குறிப்பிட்ட மில்களை தவிர்த்து மிகவும் நலிந்த நிலையே இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு.

மாவட்டம் முழுவதுமே 6,445 கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் இந்த பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தாலும் ஆரணி-தெள்ளாரில் மட்டும் 3 ஆயிரத்து 712 குடும்பங்கள் இத்தொழிலை பல தலைமுறைகளாக பின்பற்றி வருகின்றனர்.27 சங்கங்கள் இருக்கின்றது இவர்களுக்கு.இருப்பினும் 16.78 லட்சம் மீட்டர் என்ற அளவில் (அதாவது 6 கோடியே 90 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் அளவு முன்னொரு காலத்தில் இருந்தது) பட்டு ஏற்றுமதி தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி யோ 6 கோடியே 64 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் அளவில் நடக்கிறது.

Source: Asst Director of Handloom

ஸ்பின்னிங் மில் மொத்த உற்பத்தியோ தற்பொழுது வெறும் 47.80 பேல்கள் ஆகும்.

நெசவாளர்கள் தொழில் நலிந்து வருவதைப் போல செய்யாறு தெருக்கூத்து கலைஞர்களும் மறக்கப்பட்டு வருகின்றனர்.
மூவேந்தர் காலத்திற்கு முன்பிருந்தே நிகழந்து வரும் கலை தெருக்கூத்து.தமிழகம் முழுவதும் தற்பொழுது குறைந்து வருகின்றது.அத்தகைய செய்யாறு கலைஞர்களின் கிட்டத்தட்ட கடைசி சந்ததியினர் தான் இக்கலையைப் பழகி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.கிளம்பும் பொழுதே ஒப்பனைப் பொருட்கள், துணி திரைகள் பின்புலமாகவும் பல ரூபங்களில் பயன்படுத்தி இவர்கள் போடும் தெருக்கூத்து இந்த பகுதிகளில் மிகவும் பிரசித்தி.
கோவில் கூழ் ஊற்றும்போது, கோடை, திருவிழா, பொங்கல் போன்ற சீஸன்களில் இவர்கள் தெருக்கூத்துக்கு மவுசு கூடிவிடும்.

குரவைக்கூத்து, கம்ப ராமாயணம், விக்கிரமாதித்தன் கதைகள், தெனாலி கூத்து, மகாபாரத கதை, வாமன-மாபலி சக்ரவர்த்தி கதை, வேட்டுவன் கதை என்ற தெருக்கூத்து கலைஞர்களின் பங்களிப்பு மக்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமைந்தது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு வளரும்போதே கற்பனையையும் சிந்தனையையும் வளரும்போதே பல நன்னெறிகளையும் பாலபாடங்களாக புகட்டுவது இந்த அற்புத கலையின் அரிய அம்சமாகும்.

அழிந்து வரும் இக்கலையை அழியாமல் காத்திட,இக்கலைஞர்கள் வாழ்வு பொய்த்திடாமல் இருக்க இன்றைய நாம் செய்யவேண்டிய குறைந்தபட்ச ஆதரவு:

ஒரு கோடை விடுமுறையா?
வாங்க ஊர் பக்கம் போய் ஒரு கூத்து பார்ப்போம்.

சக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s