பாஸ்போர்ட் சேவா கேந்திரா-தாம்பரம்

இது தெரியாதவர்களுக்கு மட்டும் உதவுவதற்காக.தெரிந்தவர்கள் சரிபார்த்து ஞாபகப்படுத்தி கொள்ளவும் கூட.

புதுசா பாஸ்போர்ட் எடுக்க போறீங்களா? நீங்க கோவை, மதுரை, திருச்சி கேந்திராவுலயும் அப்ளை பண்ணலாம்.
சரி அதுலான் இல்லீங்க எனக்கு மெட்ராஸ்தான் வேணும் என்று வரும் பெருந்திரள் கூட்டத்திற்கான ஜாலி வழிகாட்டி இது.
மெட்ராஸ்(சென்னையில்) பத்து வருடங்கள் முன்பு பாஸ்போர்ட் எடுப்பது என்பது குதிரை கொம்பு போன்றது.ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஒரே ஆபீஸ் சென்னை சாஸ்திரி பவன்.

அவனவன் பெட்டி படுக்கையெல்லாம் இரவே எடுத்துவைத்துக்கொண்டு வந்து சாஸ்திரி நகர் ஆபீஸ் அருகே தூங்கி விடுவான்கள்.சிறுநீர், கக்கூஸ் போகும் நேரத்தில் தான் நின்ற இடத்தில் ஒரு பெரிய கல்லை வைத்துவிட்டு போகும் வழக்கமும் உண்டாம்.
இப்பொழுதெல்லாம் அந்த பிரச்னை இல்லை.
ஆன்லைனிலேயே ஷெட்யூலை புக் செய்து, வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்தி பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு, ஒரிஜினல் டாக்யூமெண்ட்ஸை ஏசியில் உட்கார்ந்துக்கொண்டே காண்பித்து தட்காலில் போலீஸ் வெரிபிகேஷன் இல்லாமலேயே பத்து வருஷத்துக்கு பாஸ்போர்ட் வாங்கலாம்.நவ் த டெக்நாலஜி இஸ் இம்ப்ரூவ் யார். 😛

இப்ப மெட்ராஸ் கேந்திராக்கள் விஷயத்துக்கு வருவோம்.மூன்று கேந்திராக்கள் உண்டு.
1.சாலிகிராமம்
2.அமிஞ்சிக்கரை
3.தாம்பரம்

நான் 2014லேயே சாலிகிராமம் கேந்திராவில் இன்போசிஸ் காரன் கேட்டான் என்பதற்காக தட்காலில் புக் செய்தும் பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.
அந்த செண்டிமெண்ட் உறுத்தியதால் சரி சும்மா பண்ணி பார்ப்போமே என்று பாஸ்போர்ட் ஆன்லைன் ஒரு வாரம் முன்பு சென்று சைட்டை நோண்டிக்கொண்டிருந்தேன்.

சரி இந்த தடவை தாம்பரம் போடுவோம் என்று நார்மல் மோடிலேயே அப்ளை செய்தேன்.
ஜம்போ(அதாவது 60 பக்க மெகா சைஸ் பாஸ்போர்ட்) அப்ளை செய்தேன்.கட்டணம் ரூபாய்.2000+ரூபாய் 17 (எஸ்பிஐ வங்கி அல்லாத டிரான்சாக்ஷன் கட்டணம்).
அப்பாய்ண்ட்மெண்ட் புக் ஆயிற்று.
சென்றேன் ஒரிஜினல் டாக்யூமெண்டுகளுடன்.

மூன்று டாக்யூமெண்டுகள் தேவை நார்மல் அப்ளிகேஷனுக்கு.
1.1989க்கு பிறகு பிறந்தவன் என்பதால் பிறப்பு சான்றிதழ்
2.விலாச சான்றுக்கு ஆதார் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக்
3.இமிகிரேஷன் செக்கிங் தேவை இல்லை என்பதை குறிக்க கல்வி சான்றிதழ்(குறைந்தபட்சம் மெட்ரிக் சர்டிபிகேட் போதும்).
இது மூன்று ஒரிஜினல் மற்றும் சுய கையெழுத்திட்ட ஜெராக்ஸ் காப்பிக்கள்+அப்பாய்ண்ட்மெண்ட் பிரிண்ட் அவுட்.
அவ்வளவு தான் மேட்டர்.

சிட்டியின் உள் இருந்து தாம்பரம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா(சுருக்கமாக பிஎஸ்கே-தாம்பரம்) அடைவதற்கு நீங்கள் 5/10 ரூபாய் லோக்கல் ட்ரெயினில் பயணித்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ளுங்கள்.ஸ்டேஷன் வெளியே வந்து பார்த்தால் தாம்பரம் பேருந்து நிலையம் தெரியும்.
வெளியூரிலிருந்து வருபவர்கள் குறிப்பிட்ட தேதியில் எப்படியாவது தாம்பரம் பேருந்து நிலையம் வந்துவிடுங்கள்.
பெருங்களத்தூரிலிருந்து ரயில் மற்றும் எம்டிசி பேருந்துகள் உண்டு.
பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு சப் வே மூலம் சாலையை கடந்து அடையலாம்.

ஒட்டுமொத்த தாம்பரம் பேருந்து நிலையத்தையும் கடந்து ஒரு லெப்ட் எடுங்கள்.அதுதான் துரைசாமி சாலை.பிஎஸ்கே-தாம்பரம் அமைந்திருக்கும் சாலை.
அந்த சாலையின் இடதுபுறம் எஸ்பிஐ வங்கி தாம்பரம் கிளைக்கு அடுத்த பில்டிங்கான கிளாரட் புத்தகாலய வளாகம் தான் நம் பிஎஸ்கே.

உங்கள் அப்பாய்ண்ட்மெண்ட் டைமிங்குக்கு ஏத்தாற்போல் செக்யூரிட்டி உங்கள் பிரிண்ட் அவுட்டை செக் செய்து உள்ளே அனுப்புவார்.பிரிண்ட் அவுட் இல்லையென்றால் டண்டணக்கா தான்.ஏதாவது ஜெராக்ஸ் எடுக்க மறந்தாலும் கூட வெளியில் இருக்கும் கடையில் எடுத்துவிடுங்கள்.

முதல் ஸ்பாட் எங்குவைரி கவுண்ட்டர்.க்யூட்டான இளம்பெண்கள் அவர்கள் முகத்திற்கு சற்றும் பொருந்தாத சுடுசுடு தோற்றத்துடன் அமர்ந்திருப்பார்கள்.அங்கு ஒரு ஐந்தாறு வரிசை நிற்கும்.
1.நார்மல்-இரு வரிசை
2.தட்கல்
3.ரீ இஷ்யூ
4.ஆன் ஹோல்டு(நொட்டை கண்டுபிடித்த கேஸ்கள்).உங்கள் வகைக்கேற்ப போய் சரியாக நின்று விடுங்கள்.

அவர்களிடம் போய் நின்றால் உங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களில் எது தேறும் எது தேறாது என்று அக்குவேறு ஆணிவேறாக அலசி சொல்லிவிடுவார்கள்.அதில் நீங்கள் கிளியர் ஆனால் உள்ளே ஒரு ஏசி வெயிட்டிங் ஹாலில் அமர்த்தப்படுவீர்கள்.
உங்களுக்கு சிறிது நேரத்தில் ஒரு பிரிண்ட் அவுட் டோக்கன் வழங்கப்படும்.நார்மல் என்றால் n என்றும் தட்கல் என்றால் t என்றும் பிரீபிக்ஸ் செய்யப்பட்டு ஒரு எண் வழங்கப்படும்.
இந்த வெயிட்டிங் ஹாலில் தான் சகல மனிதர்களையும் ரசிக்க முடியும்.
பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை வீர் என்று அழுதுகொண்டிருக்கும்.அதன் தாய் அந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்திருப்பாள்.நம்மை போன்ற சராசரி இளைஞர்கள் கடுகடுவென்று காண்டாக காத்துக்கொண்டிருப்பார்கள்.
ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கும்மென்று பெர்ப்யூம் போட்டு வந்திருக்கும் ‘ஹெப்’ காலேஜ் பெண்கள் நம் அருகே காலியாக இருக்கும் இடத்தில் உட்காரலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள்.நாம்தான் பேட் பாய் ஆயிற்றே.நின்னாலும் சைட் அடிப்போம்.உட்கார்ந்தால் கொஞ்சம் குறைச்சலாக சைட் அடிப்போம்.இது தெரியாமல் பரிதாபமாக கால் கடுக்க நின்றுக்கொண்டிருப்பார்கள்.
பஞ்சகச்சம் கட்டிய மாமாக்கள், மடிசார் கட்டிய மைலாப்பூர் மாமிக்கள்,”இந்த வயசுல பாட்டி எங்க பாஸ்போர்ட் எடுக்குது?” என்று நம்மை மிரள வைக்கும் அளவிற்கு பரிதமான அதி வயதான, கோல் ஊன்றி நடக்கும் பாட்டிகள், பாஸ்போர்ட் ரீ இஷ்யூக்காக வந்திருக்கும் மேல்தட்டு ஹஸ்பண்டுகள்.அந்த ஹஸ்பண்டுகள் ஒருபுறமிருக்க கால் முளைத்த தன் குட்டி பெண்ணை எங்கோ விளையாட திரியவிட்டுவிட்டு தன் ஸ்லீவ்லைஸை அட்ஜெஸ்ட் செய்யும் மேல்தட்டு மனைவிகள்,
இவர்களை பார்த்து “ஓவரா சீன் போட்றா இல்ல?” என்று வயிரெறிந்து புழுங்கிக் கொண்டிருக்கும் ஹோம்லியாக பழக்கப்பட்டு விடப்பட்டிருக்கும் வயசு பெண்கள் என்று பல ரகம் பல விதம்.எண்டர்டெயிண்ட்மெண்டுக்கு பஞ்சமே இல்லை.இந்தியா போன்ற அதிகம் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகங்களில்.

இங்கே இனி டோக்கனுடன் வெளி செல்லக்கூடாது என்று ரூல் இருப்பதால் கொறிக்க-குடிக்க ஒரு குட்டி கபே போன்ற ஸ்பாட் உண்டு.
என்ன விலை ரொம்ப சாஸ்தி.
ரவூண்டு கூல்டு மில்க் டின் 60 ரூவா.ஒரு பிரவுணி 40 ரூவா.பப்ஸூம் அதே விலை.
நம் பட்ஜெட்டுக்கு ஏற்றதும் குடித்தே ஆகவேண்டும் என்று இருக்கும் ஒரே அயிட்டம் காபி.அதுவே 30 ரூவா.சுகர் பேக்கெட், ஸ்பூன் நம்மிடம் கொடுத்துவிட வழக்கம்போல கலக்கு கலக்கென்று கலக்கி உள்ளே விட்டால் அந்த எனர்ஜியை வைத்து ஏ, பி, சி என்ற மூன்று கவுண்டர்களையும் அதனதன் கேள்விகளையும் காத்திருப்புகளையும் தாங்கலாம்.
இது கிரவுண்ட் ப்ளோர்.

அடுத்து முதல் மாடி. முதலில் ஏ கவுண்ட்டர்.
ஏ1 முதல் ஏ14 வரை.ஒவ்வொருக்கும் ஒன்று.நம் விவரங்களை சரிபார்த்து கன்பார்ம் செய்து, நகல்களை ஸ்கேன் செய்வார்கள்.பின்னர் பாஸ்போர்ட் போட்டோ அங்கே பக்கத்து சேரில் உட்காரவைத்து தலையை இப்படி அப்படி அசைக்க சொல்வார்கள்.ஸ்டைலாக போஸ் கொடுங்கள்.பத்து வருஷம் அதே முகரைதான் உங்கள் பாஸ்போர்ட்டிலிருந்து உலகத்தை பார்த்து சிரிக்கும்.அந்த நேரத்தில் ஏதோ ஞாபகத்தில் ஆதார் கார்டு எக்ஸ்பிரெஷன் கொடுத்தீர்களானால் உலகம்தான் பத்து வருஷத்துக்கு உங்கள் பாஸ்போர்ட்டை பார்த்து சிரிக்கும்.
ஸோ நோ பேட் பீலிங்ஸூ வென் டேக்கிங் போட்டோ.ஓகே?
அடுத்து டிஜிட்டல் கைநாட்டு.அஞ்சு விரலுக்கும்.
ஏ ஓவர்.
அடுத்து பி.இங்குதான் டாக்யூமெண்ட்டில் நொட்டை கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானாவர்கள் ஈவு இரக்கமின்றி அடுத்த அப்பாய்ண்மெண்ட்டுக்கு வரவழைக்கப்படுவார்கள்.உங்கள் ஆதாரங்கள் தோண்டி தூர்வாரப்படும்.இதில் தப்பித்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் கன்பார்ம்.இல்லையென்றால் ஊஊ.நாய் மாதிரி ஊருக்கும் ஆபீஸூக்கும் அலைய விடுவார்கள்.

அடுத்து சி கவுண்ட்டர்.அப்பிராணி ஆபீஸர்கள்.ஓகே செய்துவிடுவார்கள்.
வில்லங்கமான கேஸ்களை அசிஸ்டெண்ட் பாஸ்போர்ட் ஆபீஸரிடம் தள்ளி விட்டுவிடுவார்கள்.அவர் ஒரு வழி பண்ணிடுவார்.
இது முடிந்தால் எக்ஸிட் கவுண்ட்டர்.உங்கள் பிராஸஸ் முடிந்ததற்கான அத்தாட்சியை வாங்கிக்கொண்டு(அதற்கு முன் உங்கள் டோக்கன் பின்னாலிருக்கும் ஃபீட்பேக் பார்மை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் அங்கு) போய்கிட்டே இருக்கலாம்.

சோ ஆல் தி பெஸ்ட் மக்களே.டாக்குமெண்ட்டுகளை பக்காவாக வைத்துக்கொண்டு
ஒரு நாள் ஒதுக்குங்கள்.விடாமுயற்சி.விஸ்வரூப வெற்றி.
நான் காலை 9 மணி சென்றேன்.மாலை 3 மணிக்கு வெளியே வந்தேன்.கூட்டத்தை பொறுத்திருக்கிறது மற்றும் உங்களுக்கு கிடைக்கும் அலாட்மெண்ட் எண்ணைப் பொறுத்திருக்கிறது.
இதற்கு பிறகு தட்கல் என்றால் மூன்று நாளிலேயே போலீஸ் ஆய்வு இல்லாமல் ஸ்பீட் போஸ்டில் பாஸ்போர்ட் வீட்டு அட்ரெஸ் தேடி வந்துவிடும். (ஆனால் 1500 ரூவா எக்ஸ்ட்ரா)
இல்லையென்றால் போலீஸ் நம் அட்ரெஸ்க்கு வந்து சரிபார்த்துவிட்டு ஒரு 20 நாட்களில் போஸ்ட்டில் வீட்டை அடைந்துவிடும் நார்மல் பாஸ்போர்ட்.
குட்டி சைஸ் பாஸ்போர்ட்(36 பக்கம்) என்றால் நார்மலில் 1500 ரூவா.இதுவே ஜம்போ பாஸ்போர்ட்(60 பக்கம்) என்றால் 500 ரூவா கூடுதல்.பத்து வருட காலகட்டம் என்பதால் நிறைய பிரயாணம் செய்பவர்கள் 60 பக்கம் எடுத்துக்கொள்வது நல்லது.
ஏனென்னறால் அமெரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ செல்லும் இந்தியர்களின் ஒரு ட்ரிப்புக்கு
அரைவல்/செக் இன்-இரு பக்கம்,
செக் அவுட்/டிபார்ச்சர்-இரு பக்கம்,
விசா-1 பக்கம்,
ட்ரான்ஸிட்(துபாய், ஜெர்மனி பிராங்க்பர்ட் இடங்களில் விமானம் நின்று சென்றால்) சில பக்கங்கள் என்று ஒரு ட்ரிப்பிலேயே ஏகப்பட்ட பக்கங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் காலி செய்துவிடுவார்கள்.அதனால் 60 பக்கங்களா? ஆ அதெல்லாம் நமக்கு எதுக்கு என்று வாய் பிளக்க வேண்டாம்.பத்து வருடத்தில் நிலை எப்படி இருந்தாலும் ஆசைப்படும்போதாவது பெரிதாவது ஆசைப்பட வேண்டும்.
சொல்ல போனால் பட்ஜெட் விமானங்களின் வருகையும், சில நாடுகளின் டூரிஸ்ட்/வொர்க் விசா கொள்கைகளும் இந்த 60 பக்க மெகா பிம்பத்தை சல்லி சல்லியாய் நொறுக்கி விடும்.அப்பொழுது ஆயிரக்கணக்கில் செலவு செய்து பத்து வருடம் முடியாமலேயே பாஸ்போர்ட் ஆபீஸ் நோக்கி அலையோ அலை என்று அலைந்துக்கொண்டிருப்பதை விட இப்போ ஒரு 500 ரூவா மோசம் பாக்காம கூட சேர்த்து காசை கட்டிப்புடறது உசிதம்.
அதுக்கு மேல உங்க விருப்பம்.உங்கள் உரிமை.
இந்த பதிவு பயனுள்ளதா இருந்திருக்கும்னு நினைக்கிறேன் மக்களே.
நன்றி.
சக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s