மாரி ரசிகன் ரிவ்யூ

image

முதல் மூன்று நாளாவே மாரி போகலாமா வேணாமா என்று மிக்ஸிங் எமோஷன்.
நேற்று இரவு வரை புக் செய்யவில்லை.சென்னையில் இருந்தது வசதியாய் போயிற்று.
SPI சினிமாஸை துழாவினேன் ஒரு டிக்கட் கூட மிச்சம் இல்லை.
அதே கதி தான் புக் மை ஷோவிற்கும்.அடுத்து இருக்கவே இருக்கிறது டிக்கட் நியூ. மாஸ் தியேட்டர்களோடு டை அப் வைத்திருக்கும்.மாரி போன்ற மாஸ் படத்தை கிளாஸ் தியேட்டரில் பார்த்தால் கடுப்படித்து விடும்.
இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் மெட்ராஸ் தியேட்டரில் மாரி 11.30 மணி ஷோ எதிர்ப்பார்ப்பது பேராசைத்தான்.
அதே பேராசைத்தான் பட்டேன்.கிடைத்தது.காரப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அரவிந்த் தியேட்டரில் ஒரு பால்கனி டிக்கட்.
பஸ் பிடித்து ரீச் ஆகி விட்டேன்.
கூட்டம் அள்ளியது.
தனுஷ் வொண்டர் பார் ஸ்டூடியோஸ் விஐபி தீம் மியூசிக்கோடு களமிறங்கியது.விசில் ரகளை ஸ்டார்ட்.
அடுத்து தனுஷ் பெயர் போடும்போது.பிறகு தனுஷ் இன்ட்ரோ.தொண்டை கிழிந்துவிட்டது.

மாரியின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு சீன் பிஜிஎம்மும் தெறி கிழி.
தனுஷின் ஏரியாவில் சண்முகபாண்டியன் வேலன் என்கிற தாதா.
அவருக்கு தளபதி நம்ம மாரி.மாரியோட அல்லக்கைகள் சனிக்கிழமை என்கிற ரோபோ சங்கரும், அடிதாங்கி என்கிற அப்பாவி ஜீவனும்.ரவுசு பிரிக்கிறார்கள்.

மாரிக்கேற்ற ஜோடியாக ஸ்ரீதேவி கேரக்டரில் காஜல் குல்ஃபிமா.
தனுஷை விட காஜலிடம் அதிகம் ரொமான்ஸ் பண்ணுவது ரோபோ தான்.கிளாப்ஸ் அள்ளுகிறார்.

காஜலை தனுஷிடம் “லட்டு மாதிரி பொண்ணுப்பா.சும்மா சுண்டுனா ரத்தம் வரும்” என்று சொல்லும் இடத்தில் எல்லாருமே விசிலடிக்கிறார்கள்.நிறைய வசனங்களுக்காகவும் பஞ்ச்களுக்காகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்.மாஸ் கமெர்ஷியல் இயக்குநராக வெற்றி பெற்று விட்டீர்கள்.

என்னால் தனுஷை ரஜினியோடு கம்பேர் செய்யாமல் இருக்கவே முடியவில்லை.தியேட்டருக்கு வெளியே ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்று சில ரசிகர்கள் தனுஷூக்கு பட்டம் கொடுத்து பேனர் வைத்திருந்தார்கள்.அப்பொழுது ஓவராக தெரிந்தது.
ஆனால் தியேட்டர் உள்ளே மாரியாக பரிணமிக்கும் தனுஷை பார்க்கும்போது அது அவ்வளவு தப்பாக தெரியவில்லை.
ரஜினி போலவே எவ்வளவு ஸ்டைல் உழைப்பை போட முடியுமோ அவ்வளவு உழைப்பையும் கொட்டியிருக்கிறார்.
பூ போட்ட சட்டை, பிரியவே பிரியாத சிகரட் புகை, கோல்டன் ஃபிரேம் கூலர்ஸ், நகை கடை விளம்பரம் போல செயின், மோதிரங்கள், தன் டிரேட் மார்க் ருத்ராட்சம் என்று ஒரு ஸ்டைல் காம்ரேட்டாக வலம் வருகிறார் தனுஷ்.
ஓவர் மாஸ்.சிங்கிள் மேன் ஆர்மி.ஒவ்வொரு சிச்சுவேஷனிலும் மாரிக்கு ஒவ்வொரு தீம்.அனிருத் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
புல்லரிக்கிறது.பின் அந்த அளவுக்கு மாஸாக எதிரே நிற்க யாரும் இல்லாததால் பேலன்ஸ் தவறி போரடிக்கிறது.என்ன அந்த போரடிப்பதை கிளைமாக்ஸில் தான் லைட்டாக ஒரு பிஞ்ச் உணர்வோம்.அது வரைக்கும் மாரியின் கெத்தே நம்மை கரை சேர்த்துவிடும்.அவ்வாறு திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
வீக்கான கதை.அதை வைத்து தனுஷ் என்ற ஒற்றை துருப்பு சீட்டை விளையாடி இருக்கிறார்கள்.ஜெயித்தும் விட்டார்கள்.ஏனென்றால் தனுஷின் ஆன் ஸ்கிரீன் மெஸ்மரிசம் அவ்வளவு பவர்ஃபுல்.

“என்னைப்பார்த்தா ரேப் பண்றவன் மாதிரி இருக்குதா? பொட்டைங்க தான் ரேப் பண்ணுவானுங்க.நான் ஆம்பளைடி” டயலாக்குக்கு தியேட்டர் அதிரல்.
“செஞ்சிருவேன்” பஞ்ச் மேனரிஸம் ஒவ்வொரு தடவை தனுஷ் பேசும் போதும் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
ஆட்டோக்காரர் எஃபெக்ட் அல்ட்ரா மாஸ்.

என்ன? விஜய் யேசுதாஸ் பத்தி எதுவுமே சொல்லலைனு பாக்கறீங்களா?
நீங்க கேட்கிறதுக்காக சொல்றேன்.தனுஷ் ஓங்கி அடிப்பதற்காகவே ஏற்படுத்த பட்ட அமுல் பேபி வெர்ஷன் 2.
பெர்பெக் பிஸிக், கம்பீரமான தோற்றம்.ஆனால் ரொம்ப மென்மையான குரல்.வில்லனுக்கு பாப்பா வேஷம்.பொருத்தமில்லை பாஸ்.சாக்லேட் ஹீரோவா ட்ரை பண்ணுங்க.தனுஷின் ஓவர் கெத்துக்கு முன்னாடி அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.அதுவே ப்ளஸ்.அதுவே மைனஸ்ஸூம் கூட.

மொத்தத்தில் மாரி.சாமானிய ரசிகனின் நியூ ஏஜ் கமெர்ஷியல் கடவுள்.தனுஷ் என்ற ஒற்றை மூலவர், உற்சவருடன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s