ரயீஸ்-RAEES

image

ஷா நடை..

நான் ஷாருக்கின் பரம ரசிகன்.
தில் ஸேவில் யாருமில்லா ரயில்வே ஸ்டேஷனில் தம் பற்றவைக்க போராடிக்கொண்டிருக்கும்போது, ஒரு அழகு தேவதையிடம் தீப்பெட்டி கேட்டு பல்பு வாங்கியபின் ,அவள் கேட்ட டீக்காக தூங்கிக்கொண்டிருக்கும் டீக்கடைக்காரரை மழையிடையே ஓடி எழுப்பி டீ கொண்டு வந்து அவள் ரயிலில் ஏறிச்செல்வதை பார்த்துவிட்டு, மழைத்துளி இறங்கும் டீயினை தனியே புன்னகைத்து குடிக்கும் அந்த சார்ம்.சேன்ஸ்லெஸ்.

தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கேவில் கஜோலுடனான குறும்புத்தனமான வேதியியலெல்லாம் இந்தி(ய) சினிமாவில் மீண்டும் அதே ஜோடி கரண் ஜோஹர் இயக்கும் தில்வாலேவில் தான் தொடர முடியும்.
சக் தே இந்தியா.பாகிஸ்தான் ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டு தேசத்துரோகி பழியை சுமக்கும் ஒரு நேர்மையான, மனிதாபிமானமுள்ள இந்திய ஹாக்கி வீரர், பின்னர் தேசிய மகளிர் அணியின் கோச்சாக பரிணமித்து அணியை நல்வழிபடுத்தி ஜெயிக்கும் அட்ராஷியஸ் அழகு திரைக்கதை.
மை நேம் இஸ் கான்.அண்டு ஐ எம் நாட் எ டெரரிஸ்ட்.
இந்த வசனம்தான் எவ்வளவு புகழ்பெற்றது.
ஜப் டக் ஹை ஜானில் கத்ரீனா கைப், அனுஷ்கா ஷர்மாவுடன் இவர் தோன்றும் காட்சிகளை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
கபி அல்விடா நா கேஹ்னா கள்ளத்தொடர்பு என்று கூற முடியாது.ஆனால் அது அவ்வளவு டீப்பான எக்ஸ்ட்ரா மேரிட்டல் காதல்.தவறான காவியம்.இறுதியில் காதல் மட்டுமே ஜெயிக்கும் என்று குறிக்கும் படம்.கணவன் மனைவி ஜோடிகளின் அந்நியோநியம் எப்படி பேணிக்காக்கப்பட வேண்டும் என்பதை காட்டும்.

ஹேப்பி நியூ யெர், ஸ்வதேஸ் பார்க்க முடியவில்லை.சென்னை எக்ஸ்பிரஸ் மீனம்மாவுடன் குஜால் குஷால் ஜாலி லூட்டி.
பிரியாமணியுடன் சரி குத்து என்று தெக்கத்திய ஆடியன்ஸையும் கையில் போட்டுக்கொண்டார்.ரஜினிக்கும் ட்ரிப்யூட் கொடுத்தார் லுங்கி டான்ஸ் செய்து.
டான்ஸ் பே சான்ஸ் வாலியே என்று அனுஷ்கா ஷர்மாவை ஷேக் செய்துகொண்டே அறிமுகம் செய்துவைத்து ஹோலே ஹோலே என்ற நடுத்தர வயது இந்திக்காரராகவும் ஈர்த்தார்.

ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உரிமையாளராக ஈடன் கார்டன் மற்றும் வாங்கடேவில் இவர் தோன்றி, பெரிய திரையில் கை அசைக்கும்போதுதான் இந்தியா வெறும் அமிதாப்களுக்கும் ரஜினிகளுக்கும் மட்டும் சொந்தம் இல்லை என்று புரிந்தது.
ஆனால் ரஜினியின் எந்திரனை ரா-ஒன்னாக காப்பியடிக்க முயன்று பெரும் பல்பு வாங்கினார்.
ஆனால் இடையில் அப்படத்தின் சம்மக் சல்லோ பாடலுக்காக ஏக்கானுடன் இணைந்து தூள் கிளப்பியதெல்லாம் தனி வரலாறு.

டான் பில்லாவின் மூலக்கதை.டான் 2 வில் பிரியங்காவுடனான செக்ஸி கெமிஸ்ட்ரி, அந்த டான் லாங் லாக் கெட்டப், தி கிங் இஸ் பேக் தீம் மியூசிக்குடன் இவரின் அதிரடி பரிணாமங்களை நம்மை ஒரு மாய உலகிற்கே அழைத்து செல்வார் பாலிவுட்டின் பாட்ஷா.தி கிங் கான்.

ஷாருக்கை பாலிவுட்டில் களமிறக்கியதே பம்பாய் டான் தாவூத் இப்ராகிம்தான் என்பதுபோன்ற பல கர்ண பரம்பரை கதைகள் வழிவழியாக உண்டு.
இத்தகைய பாட்ஷா விடாமல் தம்மடிக்கும் செயின் ஸ்மோக்கர்.
ஆனால் அதே அளவு அடிக்ஷன் ஜிம்மிலும் காட்டுவதில் பாடி செம்ம ஃபிட்.இந்திய பெண்கள் கல்லூரி காலத்தில் இவர் தலைமுடி, பேச்சு மேனரிஸங்களில் மயங்கி விழுந்து சைட்டடிக்க ஆரம்பித்து, கனவில் இவருடனே பேரன் பேத்தி எடுக்கும் வரை வாழ்ந்து, நிஜ வாழ்க்கையில் வேறு யாரையோ கல்யாணம் செய்து, பிள்ளைக்குட்டி பெற்றுப்போட்டு, நரை வந்து, ஆண்டி ஆகி, தன் புருஷனுக்கு சொட்டை விழுந்த பின்பும் இன்றும் ஷாருக்கை மனதார சைட்டடித்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.
அவருக்கும் பெண்களுக்கும் இடையேயான அந்த மேஜிக்கல் ரிலேஷன்ஷிப்பாலோ என்னவோ! அவருக்கு மட்டும் அழகு குறையவோ இல்லை.ஐம்பதை நெருங்கும்போதும்.நம் கமலஹாசன் ஐயா போல.
இன்றும் டீன் ஏஜ் கியூட்டி ஹீரோயினை ஜோடியாக போட்டாலும் செம்ம டஃப் அவளுக்கு கொடுப்பார் நம்ம எஸ்ஆர்கே.

image

டைட்டில் கார்ட்

இப்பொழுது ரம்ஜான் சீஸன்.இத் வாழ்த்து வணக்கங்களுடன் ஒரு இனிய சர்ப்ரைஸும் நம் இந்திய ரசிகர்களுக்கு கிட்டியிருக்கிறது.அதுதான் ஷாருக்கின் அடுத்த படமான ராயீஸின் முதல் லுக் டீஸரின் வெளியீடு.ஷாரூக் வெளுக்கிறார் வழக்கம்போல.

image

இன்றைய ரியாலிட்டி

ரெட் சில்லீஸ் எண்டர்டெயிண்மெண்ட்டின் சுய தயாரிப்பு.பூட் லெக்கர் எனப்படும் சாராய கடத்தல் டானாக காட்சி தருகிறார் ஷாரூக்.அவரே சமூகத்தில் பெரிய அந்தஸ்துள்ள ஆளாகவும் பரிணமிப்பது/இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிஜிஎம் தெறி தெறிக்கிறது.

image

சமூக அந்தஸ்தில் பெரிய ஆளாக பரிணமித்தல்

டீஸரின் கடைசி ஃபிரேமில் ஸ்பெக்ஸ் அணிந்து மைவைத்த கண்ணுடன் “பாய்” பார்க்கும் அந்த பார்வை அதிரடி.
இத் 2016ல் ரிலீஸ் என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
நிச்சயம் இன்றைய அரசியல் ரியாலிட்டிகளோடு படத்தின் களம் பொருந்துவதால் ஷாருக்கின் கரியரில் இது ஒரு மைல்கல் படமாக அமையும் என்று நிச்சயம் நம்பலாம்.

image

பாயின் தெறி லுக்

ஜெய் ஹிந்த்.
சக்தி.

image

ரமலான் 2016 ரிலீஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s