சுய ஆப்பு அப்பீட்டாகுமா?

உலகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.
16 வயது சிறுவர்களும் சிறுமிகளும் அமெரிக்காவில் பாப் ஆல்பம் போட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து போதை மருந்து அடிக்ட் ஆகி இறந்து போகின்றனர்.சிலர் ரீஹேப் சென்று மீண்டு வாழ்வை தொடர்கின்றனர்.
இன்னொரு கோடி உலகத்தில் ஒரு வேளை உணவு கிடைத்தால் பெருமாள் புண்ணியம் என்று பிச்சையெடுக்காத குறையாய் குழந்தைகளும் ஆதரவற்றவர்களும் வாழ்கின்றனர்.

ஏன் உலகத்துக்கெல்லாம் போகிறேன்.இந்தியாவே ஓர் உலகம்.ஏற்றத்தாழ்வுக்கு அதை விட சிறந்த எடுத்துக்காட்டு ஏது?
ஒரு புறம் கொழுத்த அம்பானியின் பையன் கிரவுண்ட் பவுண்டரியிலேயே சோஃபாவில் அமர்ந்து ஐபிஎல்லை தான் “நினைத்தவாறு” ரசிக்கிறான்.
இங்கே துரைசாமி சப்வே கீழ் தினமும் ஒரு மனிதர் எலிகளோடு தூங்குகிறார்.

இது ஒரு புறம்.இது பணம் சம்பந்தப்பட்டது.இன்னொன்று சமூக அந்தஸ்து மற்றும் கட்டாயம்.அதிர்ஷ்டவசமாகவே இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ நானும் இந்த சுழலில் சிக்கி கொண்டேன்.
நான் பிறந்ததிலிருந்தே கல்வியில் தோற்றதில்லை.முதன்மை மாணவனாகவே எல்லாருக்கும் ருசி கொடுத்து பழகி விட்டேன்.

எங்கு சென்றாலும் ஆயிரத்தில் ஒருவன், பத்தாயிரத்தில் ஒருவன் என்ற விகிதத்தில் தேர்வாகி தேர்வாகி என்னை சுற்றி ருசி கண்ட பூனைகள் இன்று புலிகளாய் மாறி என்னையே சுவைக்க துவங்கியுள்ளன.

மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமி.
எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி.
இன்போசிஸ்.
புதிய தலைமுறை.

பிறருக்கு கனவாகவே இருப்பதை, நான் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஆனால் விரும்புகிற விஷயங்கள் எனக்கு எளிதாக கிட்டி என்னை சுற்றியுள்ள சிலருக்கு வெற்றி களிப்பு போதையையும், சிலருக்கு வன்ம பொறாமையையும், எனக்கு மிகப்பெரிய ஆப்புகளையும் பரிசாக தந்துவிடுகின்றன.

சந்தோஷம் தானே? இதில் என்ன பிரச்னை என்பவர்களுக்கு என் நிலை புரியாது.இது நூலிழைமேல் ஆயிரமடி உயரத்தில் நடப்பதை போன்றது.எனக்கென்று தேவையில்லாத ஒரு கெத்தை பிறந்ததிலிருந்தே நானே உருவாக்கி விட்டேன்.
ஒன்று இப்பொழுது அந்த கெத்தை நிறைவு செய்யும் வகையில் நான் சாதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இல்லாவிடில் காலி.எனக்கு என்னாலேயே தோண்டப்பட்ட குழியில் நான் தவறி விழுந்தவுடன், மண்ணை போட்டு மூடுவதற்கு பலர் ரெடியாக இருக்கிறார்கள்.
ஆண்டவா! ஈஸ்வரா! நீ காட்டும் பாதையென என் வாழ்வை உன்னிடத்தில் முழுவதும் என்னை கொடுத்து, என் பயணத்தை தொடர்கிறேன்.தவறா ஒளியென எனை வழிநடத்துவாயாக.
ஜெய் ஸ்ரீராம்.
ஜெய் ஹிந்த்.
வாழ்க மனிதம்.வளர்க பாரதம்.

சக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s