அரசியல் தாண்டிய ஆளுமை

image

ஆக்ஸ்போர்டில் தரூர் ஆற்றிய உரை

சசி தரூர் உலகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறார்.
இம்முறை சுனந்தா புஷ்கர் விவகாரத்துக்காக அல்ல.பிரிட்டிஷ் சர்க்காரையே தன் வாதத் திறமையால் அசத்தல் கைத்தட்டலடிக்கவைத்த சாதனைக்காக.

சசி தரூர் யார் என்று தெரியாதவர்களுக்காக ஒரு நறுக் அறிமுகம்.
முன்னாள் மத்திய காங்கிரஸ் அமைச்சர்.
இந்நாள் திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினர்.
அந்நாள் ஐ.நா பொருளாதார மற்றும் ஆசிய கொள்கை சிறப்பு நிபுணர்.

கேரளாவில் தரூர்,நமது இறையன்பு ஐஏஎஸ் தமிழ்நாட்டில் செய்துவருவது போல,குடிமைப்பணிகளுக்காக தங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக “மலையாள மனோரமா” பத்திரிக்கை குழுமத்துடன் கைகோர்த்து ரகசியமாக மாணவர்களை வழிநடத்தி உதவிக்கொண்டிருப்பவர்.
பூர்வீகம் கேரளாவாகினும் இவர் பேசும் ஆங்கில உச்சரிப்பில் இவரது சர்வதேச பட்டப்படிப்புகளின் வாசம் வீசும்.பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.அனைத்திலும் ஒரே கரு-இந்தியா, இந்தியா, இந்தியா.

ஆனால் எப்பொழுதும் வடநாட்டு ஊடகங்கள் இவரை வம்பிழுத்து சண்டைக்கோழியாக காட்சிப்படுத்துவதிலேயே அதிக ஆர்வம் காட்டும்.இருப்பினும் சமீபத்தில் சசி தரூரின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேச்சுக்காக எல்லா ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு சசி தரூரை வீடியோ கான்பிரன்சிங்கில் அழைத்து ஷோவில் பேட்டி கண்டு வருகின்றன.கடந்த ஒரு வாரமாக இதே அலப்பறைதான்.
அப்படி என்னதான் பேசிவிட்டார் சசி தரூர்?

இதற்கு முன்பாகவே இந்த உரையை பிரிட்டன் சட்ட கவுன்சில் போன்ற இடங்களில் 9 மாதங்கள் முன்பாகவே பதிந்தார் சசி.அப்பொழுதெல்லாம் குவியாத கவனம், தற்பொழுது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அடித்த நெற்றியடி காரணமாக அவர் பக்கம் திரும்பியிருக்கிறது.இந்த உரைக்கு பிரதமர் மோடியே சசி தரூரை புகழோ புகழ் என்று கட்சி சார்பற்று புகழ்ந்து தள்ளிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.
அவர் பேசியதன் சாராம்ச குறிப்புகள் இதோ:

1.தற்பொழுது இந்த நிகழ்வின் பொழுது 8 பேச்சாளர்கள் பேசுகிறோம்.நான் 7வதாக பேசுகிறேன்.ஹென்றி த 8 மன்னனின் மனைவிகள் போல எனக்கும் நான் என்ன பேசினால் நீங்கள் என் கருத்தினை தனித்து ஏற்றுக்கொள்வீர்கள்? என்ற ஐயம் இருக்கிறது.

2.காலனி ஆதிக்கத்தால் சீரழிந்த உலக நாடுகளின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பால் 23% உலக பொருளாதாரத்திற்கு காரணமாக இருந்த இந்திய வர்த்தகம்,4% என்ற அளவிற்கு அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய 1947ன் போது சுருங்கிற்று.

3.இரண்டு உலக போர்களின் போது அதிக பொருள், உயிர் சேதத்தை இந்தியாத்தான் சந்தித்திருக்கிறது.பிரிட்டனுக்காக போரில் செத்த 6 வீரர்களுள் ஒருவன் இந்தியன்.இந்த இந்தியர்களுக்குத்தான் வங்காள பஞ்சத்தின் போது நிவாரண உதவி கேட்டபொழுது “காந்தி இன்னும் உயிரோடு தானே இருக்கிறார்?” என்று அலட்சியமாக சொல்லி நிதி மறுத்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

4.இந்தியா பிரிட்டனால் சிதைந்ததற்கு முதற் முக்கிய காரணம்-இந்தியாவின் புகழ்பெற்ற நெசவுத்துறையை முடக்கி, அதை தன் வசமாக்கிய பிரட்டனின் குள்ளநரித்தனம்தான்.

5.மற்ற நாடுகளை விட இரு மடங்கு அதிக வரி விதித்து-அதில் இந்தியர்களின் ரத்தத்தையே உறிந்து-சாலை, ரயில்வே, கப்பல் என்று கட்டி தன் நாட்டு வர்த்தகத்தை பெருமளவில் உயர்த்திக்கொண்டு, இந்தியர்களை நாகரீகப்படுத்திவிட்டோம் என்ற ஆட்டுப்போர்வைக்குள் ஒளிந்துகிடக்கும் சுயநலவாதிதான் பிரிட்டன்.

6.எங்கள் சுதந்திரத்தை நீங்கள் எங்களுக்கு வழங்கியதாக வரலாற்றில் பதிந்துவிட்டீர்கள்.மிகத் தவறு! அதை நாங்கள் வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டோம்.அதுதான் எங்களின் பெருவெற்றி.

7.இந்த 2015 வரை தொடரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லை விவகாரம், இந்து-முஸ்லிம் மத பிரச்னை, ஆந்திர-தெலுங்கானா முட்டல் மோதல்கள் அனைத்திற்கும் துவக்கப்புள்ளியாக அமைந்தது அன்றைய காலனி ஆங்கிலேயே ஆட்சியின் தவறான நிர்வாக முடிவுகளே காரணம்.

8.இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொண்டு, உங்கள் முன்னோர் செய்த தீங்கிற்காக நீங்கள் இந்தியாவிற்கு கடன்பட்டுள்ளீர்கள் என்பதை உணரவேண்டும்.You owe a big sorry to India.

கைதட்டல் அதிர்ந்தது.பிரிட்டிஷ் மக்களே-மெய்மறந்து பாராட்டினார்கள்-தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளும் விதமாக.
ஏற்கனவே மோடி அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் தூதுவராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் மோடியின் லைக்ஸையும், சோனியாவின் கடுப்ஸையும் பரிசாக பெற்றுள்ள சசி தரூர்-மோடியின் தற்போதைய பாராட்டு விவகாரத்தினால் பாஜகவில் இணையப்போகிறார் என்ற பேச்சுக்கள் டெல்லி மற்றும் கேரள வட்டாரங்களில் சத்தமாகவே முணுமுணுக்கப்படுகின்றன.

மக்கள் மனதில் உள்ள இதே கேள்வியை பட்டென சசி தரூரின் முன்பு 23.07.2015 இரவு அன்று NDTVயின் பர்கா தத் கேட்டுவிட, சசி தரூர் புன்னகைத்துக்கொண்டே,
“பிஜேபியில் இணையும் எண்ணமும் எனக்கில்லை.என்னை துரத்தும் எண்ணமும் காங்கிரஸ் தலைமைக்கு இல்லை.பிஜேபியின் அடிப்படைகளையே இன்றுவரை விமர்சித்து வரும் ரத்த சுத்தமான காங்கிரஸ்காரன் நான்.மோடி என்னை பாராட்டினார் என்றால் அது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது.அவருக்கும் தெரியும் நான் காங்கிரஸை விட்டு அகல மாட்டேன் என்று” என்று பதிலளிக்க, கருத்தை பர்காவும் ஏற்றுக்கொண்டார்.

சோனியாவும் அவ்வளவு எளிதில் தரூரை நீக்கிவிட மாட்டார்.ஏனென்றால் தன்மையான மக்கள் எம்.பி என்பதை கடந்த திருவனந்தபுர பாராளுமன்ற தேர்தல்களின் போது தொடர்ந்து பெற்ற வெற்றிகளின் மூலம் நிரூபித்து கட்சி தொண்டர்களின் நன்மதிப்பை பெற்றது மட்டுமல்லாமல், ஜெட்லியின் பட்ஜெட்டில் உள்ள ஓட்டைகளை அதே கூட்டத்தொடரின் போதே அடுத்த நாளே அக்குவேறு ஆணிவேறாக சரமாரியாக விமர்சிக்கும் ஆற்றல் உள்ள மிகச்சில காங்கிரஸ் தலைவர்களில் தரூரும் ஒருவர்.
முடியைக் கோதிக்கொண்டே, அலட்டிக் கொள்ளாமல் யோசிக்கும் அவரது பாணி போலவே அவரது அரசியல் வாழ்வும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
தரூரின் ஆக்ஸ்போர்டு பேச்சை பார்க்க இதோ சுட்டி:

https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://m.ndtv.com/video/player/news/watch-the-tharoor-speech-on-british-rule-that-s-gone-viral/375995&ved=0CB0QyCkwAGoVChMI06ew8Z7zxgIVQ46UCh3hWwAF&usg=AFQjCNHHsFhBWLJpasRwHsPb9tlB1Iz2wA

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s