வெறும் கணக்கு

இரு வாரங்களுக்கு முன்பு தமன்னா அட்டைப்படமிட்ட ஒரு விகடனில் எஸ்.ராமகிருஷ்ணனின் “வெறும் கணக்கு” என்ற சிறுகதையை படிக்க நேர்ந்தது.
தாமோதரன் என்ற கேரக்டரை கொண்டு,போன ஜெனரேஷன் மனிதர்களிடம் இன்றைய என்னைப்போன்ற அரைவேக்காட்டு துள்ளிகுதிக்கும் இளைஞர்கள் என்ன கற்க வேண்டும்? என்பதை அந்த கேரக்டரை ஓவராக புனிதப்படுத்தாமல் படு துல்லியமாக நிறுவி, அந்த கதையை நகர்த்தியிருப்பார் எஸ்ரா.

நாம் taken for grantedஆக நினைத்துக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் இயல்பில் ஒவ்வொரு மணித்துளியாக,ஒவ்வொரு பைசாவுக்கான மரியாதையாக நிஜ உலகில் எவ்வாறு பரிணமிக்கிறது என்பதை ஒரு நுண்ணிய பார்வையில் நமக்கு காட்டியிருப்பார்.
அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் ஏதோ பெரிசு கூறும் அட்வைஸ் அல்ல.மனசாட்சிக்கு இலக்கியம் அவ்வப்போது வழங்கும் சவுக்கடி.

அந்த தாமோதரன் என்ற கறுப்பான, குட்டையான அந்தகாலத்து முதியவரின் மனநிலையின் குணாம்சத்தோடு என் ஒரு வருட டைரியில் கணக்கு வழக்கு எழுதும் பழக்கம் ஒன்றிப்போகிறது என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு ஒருவித லஜ்ஜையும் இல்லை.
நான் பழமையின் தீவிர காதலன்.எனக்கு என் அம்மா, சித்திகளை விட தாத்தா பாட்டிகளை தான் அதிகம் பிடிக்கும்.மொத்தத்தில் ஹைலேண்டர் சட்டை அணிந்த பழைய பஞ்சாங்கம்.
என் தாத்தாவிடம்தான் நான் கணக்கு எழுதும் பழக்கத்தை சிறுவயதில் கவனித்திருக்கிறேன்.7 வயதில் தாத்தா படித்து முடித்த தமிழ் பத்திரிக்கைகளை வாசிப்பதுதான் என் முதல் இலக்கிய அனுபவமாக இருந்தது.
வேப்பங்குச்சியில் பல் தேய்ப்பார்.ராணுவத்தில் வேலை செய்தும் மது அருந்துவதை தவிர்த்தார்.மிலிட்டரி கேண்டீனில் வெறும் சோப்பு, இன்னபிற மளிகைகளை மட்டும் மலிவான விலையில் அவர் வாங்கி வந்ததை இன்றும் ஊரில் கதையாய் பேசுவர்.அவரிடம் நான் கற்காதது நேரம் தவறாமை.அந்த டாபிக்கை விடுங்கள்.

எப்படி நாம் ரூல்ஸ் ராமானுஜங்களாக முகம் சுளித்து புறக்கணிக்கும் ஒரு ஜனத்தொகையில் கற்றுக்கொள்ள-அள்ள குறையாத அறம் இருக்கிறது என்பதை எஸ்ராவின் சிறுகதை எனக்கு ஆச்சரியங்களாய் பரிசளித்தது.
இதுநாள் வரை அவரின் நான்- ஃபிக்ஷனான கோடுகள் இல்லாத வரைபடம் மட்டும்தான் வாசிக்க எனக்கு கிடைத்திருக்கிறது.இன்னும் எஸ்ரா என்ற பிரபஞ்சத்தில் நான் உள்நுழையவில்லை.
இந்த கதையை படித்து பிறகு நான் எஸ்ரா சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தால் இன்றைய என் முகத்தை இழந்துவிடுவேனோ என்ற ஐயம் ஒருபுறமும் அதை தாண்டி உண்மைகளை பரிசீலித்து பயணிக்கும் மனத்திண்மையை பெற்ற வேறொருவனாய் பரிணமித்தால் தவறுதான் என்ன? என்று மறுபுறமும் இரு மன ராட்சஷன்கள் என்னை கேள்விகளால் சிதறடிக்கின்றனர்.
அமேஸான் திறந்தே கிடக்கிறது.திநகர் தெருமுனை புத்தக கடையிலும் எஸ்ரா பெயர் தெரிகிறது.பயணிக்கும் மனம் எடுக்கும் முடிவே துணை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s