டாக்டர்.அப்துல் கலாம் பற்றிய உணர்வுகள் பகிர்வு

குழந்தையாக நான் அவரை டிவியில் பார்க்கையில் முதலில் கவர்ந்தது அவரது ஹேர்ஸ்டைல்.உலகத்துக்கு சாண்டா கிளாஸ் என்றால் அப்போதைய குழந்தைகளுக்கு எங்கள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
பல நாட்கள் மனதில் ஆழமாய் அவர் மட்டும் தான் குடியரசு தலைவர் என்று முற்றிலும் பதிந்த ஒன்று.
சோவியத்தையும் அமெரிக்காவையும் அஞ்சி நடுங்கி கொண்டிருந்த தொடைநடுங்கி தேசத்தை ஏவுகணை ஆராய்ச்சி மூலம் வீறுகொண்டு நடக்க வைத்தார்.
விஞ்ஞானி, ஜனாதிபதி தாண்டி அவரது முகம் ஆசிரியர்.

ராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை உழைப்பு உழைப்பு-அயராத உழைப்பு.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகட்டும் சென்னை எம்ஐடி ஆகட்டும் இஸ்ரோவாகட்டும் டிஆர்டிஓ ஆகட்டும் தில்லி ஆகட்டும் அவர் புன்னகை மாறா பேச்சுடன் இந்தியாவுக்காக உழைத்தார்.இந்தியாவை மட்டுமே நினைத்தார்.
அதன் வருங்கால தூண்களான இளைஞர்களையும் குழந்தைகளையும் தீராது நேசித்து வாழ்ந்தார் .
பாருங்கள் இளைஞர்களிடையே தான் அவர் தன் இறுதி மூச்சை விட்டுள்ளார்.
ஆம் ஐஐஎம் ஷில்லாங் மாணவர்களிடையே இறுதிவரை உரையாற்றியிருக்கிறார்.

ஜனாதிபதி பதவிகாலம் முடிந்ததும் மீண்டும் அந்த பதவியில் அவரையே பரிந்துரைக்க காங்கிரஸ் அரசு ரெடியாக இருந்தபோதிலும் அதை விரும்பாமல் மாணவர்களிடையே தன் நேரத்தை முழுமையாக செலவழிக்க எண்ணினார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் வந்து பாடம் சொல்லி கொடுத்தார்.தன் அல்மா மேடரான எம்ஐடியையும் காதலித்தார்.
சுஜாதா ரங்கராஜனும் ஏபிஜேவும் இப்பொழுது விண்வெளி தாண்டிய ஒரு உலகில் இன்னும் கல்லூரி தோழர்களாய் கனவு கண்டுக்கொண்டிருப்பார்கள்.
அந்த குழந்தை சிரிப்பு எம்எஸ்வி இசையை ரசித்துக்கொண்டிருக்கும்.

மூன்றாவது தமிழக ஜனாதிபதி.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணிக்கம்.
இந்த மண்ணிலே முளைத்த ஏவுகணை மூளை.
சகாப்தம் படைக்க இறைவன் விதைத்திட்ட வித்து.

தேசத்தின் பாதுகாப்பினை உறுதி செய்த சிவரூபம்.
சர்வதேச அளவில் நாம் மார்தட்டி கொள்ளும் பாரத ரத்னா, வீர் சவார்க்கர், பத்ம பூஷன்.
40 டாக்டர் பட்டங்கள்.விருதுகளுக்காக அவர் பிறந்தாரா இல்லை அவருக்காக விருதுகள் பிறந்தனவா? யார் அறிவார்.

ஆனால் அவரின் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற கனவு நனவாகுமா? நாம்தான் அதை நிறைவேற்ற வேண்டும் தோழர்களே! அதுதான் அவருக்கு நாம் செய்யும் உறுதியான மரியாதை.
கண்கள் குளமாகின்றன.யாருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காத முகம், நினைவு தப்பாத குரல்.
மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர்.அக்னி சிறகுகளை நமக்கு பொறுத்தியவர்.
வானளாவ சிந்தித்தவர், தலைமுறைகளுக்காக வழிசெய்தவர்.அவர் வழியில் நாம் நடப்போம்.
இன்று ஒருநாளோ, இந்த ஒருவாரமோ துக்கம் அனுசரித்துவிட்டு அவர் கனவை மறந்துவிட போகிறோம்.அது தவறு.அவர் கனவுகள் உண்மையில் நம்மை தூங்கவிடக்கூடாது.
ராமேஸ்வர மைந்தன் எல்லைகள் தாண்டி நேசிக்கப்படுகிறார்.ஜாதி மதங்களை கடந்து போற்றப்படுகிறார்.அதுவே இந்திய இறையாண்மையாய் அவர் தன் சீரான வாழ்வை வாழ்ந்து காட்டிய வரலாறு.

மண்ணில்லா விவசாயம் குறித்து ஐந்து வருடம் முன்பே கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சென்று கண்டு வந்து நம் மக்களிடம் அது பற்றி உரையாற்றினார்.
விவசாயம் இந்தியாவில் அழியாது என்று தீர்க்கமாக பறைசாற்றினார்.
நம்பினார்.அவர் நம்பிக்கையை பொய்க்க விடலாகாது.
கட்டை பிரம்மச்சாரி.வாஜ்பாயி போல.துணை தேடி வினை தேடாமல் தனியாக நின்று விண்ணை தேடியிருக்கிறார்.
அந்த உயர்ந்த லட்சியத்தில் ஒரு பங்கு உழைப்பையாவது நாம் முதலீடாக்கி இந்த தேசத்தை செழுமமையாக்குவோம்-நம் வியர்வை கொண்டு.

முக்கால்வாசி நாட்கள் சரிவர உணவில்லாத ஆரம்பநாட்களிலும் சரி, இந்தியாவின் முதல் குடிமகனாக, முப்படைகளின் ஒரே தலைமை இயக்கியாக முன்னேறியிருந்த நேரத்திலும் சரி அவர் இம்மியளவிலும் தன் செயல்பாட்டிலிருந்து விலகாதிருந்தார்.லட்சியமே கண்ணாயிருந்து காரியத்தை செய்து முடித்தார்.
பாடபுத்தகத்தில் அவரின் வாழ்வு குறித்த உரைநடை பாடம் என்னை ஆங்கில கட்டுரைகள் அனைத்திலும் அவர் குறித்தே சிந்தித்து எழுதவைத்தது.

என் வகுப்பு தோழி மாஷா நசீம் ஓர் இளம் விஞ்ஞானி.அவள் பல படைப்புகளை கண்டுபிடித்திருக்கிறாள்.அதன் காரணமாக ஏபிஜேவை நேரில் சந்தித்து விருதுகளை பெறும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறாள்.
அவள் செய்த flameless sealmaker(நெருப்பில்லா அரக்கு எந்திரம்) ஜனாதிபதி பரிசை பெற்று அவரின் கவனத்துக்கு சென்றது.
இதனால் அதிகம் அவர் பூரித்தவாறே மாஷாவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் நான் என் வகுப்பு தோழர் தோழியருடன் சேர்ந்து பார்த்து வியந்திருக்கிறேன்.
ஆர்வம் தீராத குழந்தை நாம் அறியாத வேறோரு கிரகத்தையோ உலகத்தையோ ஆராய சென்றிருக்கிறது.அப்படித்தான் அணையாத இந்த அக்னி சிறகின் பறவையின் பிரிவை நான் உணர்கிறேன்.
உங்கள் ஒளி எங்கள் உள்ளங்களில் வாழும்.ஜெய் அப்துல்கலாம்.ஜெய் ஹிந்த்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s