தேசிய நீதித்துறை நியமனக்குழு

பெரும் விவாதம் கிளப்பிக் கொண்டிருக்கும் விஷயம்.லலித் மோடி, வியாபம், நில மசோதா மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு இதுதான் கூடுதல் தலைவலி.அட்டார்ணியாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹாத்கி ஆக்ரோஷமாக வாதிட்டு வந்தாலும் இந்த வழக்கில் சில ஓட்டைகளும் சிக்கல்களும் நீடிக்கின்றன.
முதலில் இந்த வழக்கை பற்றிய சில அடிப்படை அம்சங்களை புரிந்துக்கொள்வோம்.

டைம்லைன்:

1.ஆகஸ்ட் 13,2014-லோக் சபாவில் இந்த NJAC மசோதா நிறைவேற்றப்பட்டது.

2.ஆகஸ்ட் 14,2014-மேற்சபையான ராஜ்யசபாவிலும்(மாநிலங்களவை) நிறைவேற்றப்பட்டது.

3.டிசம்பர் 2014-குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த தேசிய நீதித்துறை நியமனக்குழு மசோதா சட்டமாவதற்கு ஒப்புதல் அளித்தார்.

4.ஏப்ரல் 13,2015-சட்டம் அமலுக்கு வந்த தினம்.ஆனால் இதை நீதித்துறை ஏற்றுக்கொள்ளாமல் பெரும் பூகம்பம் இன்றைய தேதிகளில் கிளம்பியிருக்கிறது.

இந்த சட்ட பிரச்னையை புரிந்துகொள்வதற்கு முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்:

1.அரசியல் சாசன விதி 141:
உச்சநீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு சட்டத்தின் கோணம் அனைவரும் கீழ்படிந்து நடக்கவேண்டிய சட்டமே ஆகும்.

2.அரசியல் சாசன விதிகள் 124&217:
1993ல் இவை சம்பந்தமான விவாதத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசிக்காமல் எந்த வித நீதிபதி நியமனமும் நடைபெறாது என்று எடுத்துக்கொள்ளப்பட்ட கோணம்.அன்றிலிருந்து நீதிபதிகள் தேர்வுக்குழுவின்(collegium) தலைவராக CJI எனப்படும் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே விளங்கிவருகிறார்.

இந்த கோணம் நீடிக்கும்வரை NJAC சட்டம் செல்லுபடி ஆகாது என்று நீதித்துறையை சார்ந்த பலரும் வாதிட்டு வருகின்றனர்.
1.உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சம்மேளனமும்
2.பொதுநல வழக்குகள் மையமும் NJACக்கு எதிராக உள்ளனர்.வழக்கு முறையீடும் பதிந்துள்ளனர்.

நீதிபதிகள் தேர்வுக்குழு என்ன செய்தது?

1.ஒரு தலைமை நீதிபதி
2.நான்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உட்பட ஐந்து பேர்கொண்ட குழுவாக
நீதிபதிகள் நியமனம் மற்றும் பணிமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுத்து வந்தது.

அரசு முன்வைக்கும் NJAC (தேசிய நீதித்துறை நியமனக்குழு)வில் என்ன மாற்றங்கள்?

1.தலைமை நீதிபதி எப்பொழுதும்போல இருப்பார்
2.இரண்டு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள்
3.மத்திய சட்ட அமைச்சர்
4.இரு பிரபலங்கள்

இந்த 3,4 பாயிண்டில் இருப்பவர்கள்தான் பிரச்னைக்கு காரணமே.

நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான முடிவை எடுக்கும்பொழுது எந்த அம்சத்தை கவனிக்கும்?

இது அரசியல் சாசன திருத்தம் மூலம் கொண்டுவரப்படும் ஒரு சட்டம்.எனவே நீதிமன்றம் இது சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கு முன் இது அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு எதிராக இருக்கிறதா இல்லையா என்ற ரீதியில் அணுகும்.

அரசு எந்த காரணத்தை முன்வைத்து இந்த மசோதாவை கொண்டுவந்தது?

முந்தைய நீதிபதிகள் நியமனக்குழுவில்(collegium)நிர்வாக தெளிவின்மை(lack of administrative transparency)இருந்ததாக கூறித்தான் அரசு இந்த சட்ட மசோதாவை கையிலெடுத்தது.

நீதித்துறை இதை எவ்வாறு பார்க்கிறது?

பெரும்பாலான நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.ஏனெனில் இது நீதித்துறை சுதந்திரத்தின் குரல்வளையை அரசு நெறிக்கும் தந்திரம் என அவர்கள் கருதுகிறார்கள்.
பிரபல நீதி புள்ளிகளான ஃபாலி நாரிமன் மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோர் இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர்.

நீதித்துறையின் வாதம்:

தற்பொழுதுள்ள NJAC சட்டத்தின் படி குழுவின் இரு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு நீதிபதி வேட்பாளரின் மனுவை நிராகரித்தால் அது நிராகரிக்கப்பட்ட விண்ணப்பமாக கருதப்படும்(வீட்டோ செய்யப்பட்டதாக).
பிரச்னை என்னவெனில் இந்த குழுவில் வெறும் நீதித்துறையை சார்ந்த தலைமை நீதிபதி, இரு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் மற்றும் சட்டத்துறைக்கு முற்றிலும சம்பந்தமில்லாத இரு பிரபலங்கள் உள்ளனர்.எனவே தங்கள் அரசின் விருப்பு வெறுப்புகளுக்கு சாதகமாக நீதிபதி பணி நியமன முடிவுகளை மாற்றி மாற்றி பிறப்பித்துக்கொள்ள முடியும்.மற்றவர்கள் கேள்வி கேட்க முடியாது.இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

அரசு தரப்பு வாதம்:

1993ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட கோணம்(interpretation)தவிர வேறெங்குமே தலைமை நீதிபதிக்கு நீதிமன்ற நியமனங்களில் அதிகாரம் இல்லையென அரசு தரப்பில் வாதிடுகிறார்கள்.இந்த வழக்கிற்கு முன்பு அரசும் குடியரசுத் தலைவரும் தான் இந்த நியமனங்களை செய்து வந்தனர் என்று தொடர்ந்து குறிப்பிடடு வருகிறது ரோஹாத்கி தலைமையிலான அரசு தரப்பு வக்கீல் குழு.

நடுநிலையாளர்களின் மற்றும் சட்ட வல்லுநர்களின் கருத்து:

1.நீதிமன்றமும் நீதித்துறையின் அரசின் தற்போதைய சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
2.அதே சமயம் அதை வலுவாக எதிர்க்கவும் முடியாது.ஏனெனில் 1993 தீர்ப்பு தவிர்த்து அவர்களுக்கு சாதகமான வேறு வலுவான சட்ட காரணிகள் ஏதுவாக அமையப் பெறாதது.
3.ஆனால் NJAC சட்டம் 2014ல் மேற்கூறிய மாற்றங்களை அரசு செய்தாலொழிய அரசுக்கும் நீதித்துறைக்கும் எதிரான இந்த முட்டல் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கும்.அது இந்த தேச நலனுக்கு உகந்ததல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s