வாஜ்பாயி நாட்களில் காஷ்மீரம்

image

இன்றைய இந்தியா பாகிஸ்தான் நிலைமை என்ன? வழக்கம்போல காஷ்மீர குழப்பம்.
தென்னிந்தியர்களுக்கு காஷ்மீர் தூள் படத்தில் விக்ரம் ரீமா சென்னிடம் இங்கிலீஷ் தெரியாமல் எஸ்கேப் ஆக பாடும் “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்..
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்” என்ற லெவலில் தான் தெரியும்.

வடக்கே செல்லும் பட்டாளத்துக்காரர்கள், துணிந்த, அட்வெஞ்ச்சர் தேடும் ஹனிமூன் கிக் தம்பதிகள் தவிர தமிழர்கள் மற்றவர் காஷ்மீரத்தை கண்டது பெரும்பாலும் மணிரத்னத்தின் தயவால்தான்.மற்றபடி அது செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறும் ஒரு நியூஸ்.அடிக்கடி ஆங்கில சேனல் விவாதங்களில் மூச்சுமுட்ட விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருள்.இதுவே நம் காஷ்மீர அறிவு.

உண்மையில் பல நாட்கள் அங்கு பணியிலிருந்தவர்களுக்கே காஷ்மீரம் முழுவதும் புரிந்தபாடில்லை என்பதுதான் நிதர்சனம்.ஏனெனில் ஒரு காஷ்மீரியின் மனநிலை அப்படிப்பட்ட சந்தேகங்களால் பீடிக்கப்பட்ட பாவமான மனநிலை.
ஏ.எஸ்.துலாத் எழுதியிருக்கும் இந்த புத்தகம் அறிவுச் சந்தைகளில் நல்ல வியாபாரம் ஆகிறது.தொன்றுதொட்டு நமக்கு பாகிஸ்தானுடனான உறவில் பெரும் சிக்கல் காஷ்மீரமே என்பது விளங்கும்.
ஏற்கனவே எனக்கு புரிந்தவரையில் ஜம்முவுக்கு மேற்கிலுள்ள அனைத்தும் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரமாகினும் அவர்களின் வேட்கை குறையவில்லை.

ஐஎஸ்ஐ, கொரில்லா வீரர்கள், தீவிரவாதிகள் இவர்கள் அனைவரும் உடைய ஒரு பெரும் குழாம் அங்குள்ள பிரிவினைவாதிகளோடு இணைந்து காஷ்மீர விடுதலைக்கு மக்களை தூண்டி வருகின்றன.இதை ஒரு இந்திய அரசு டாப் அதிகாரத்தில் இருந்த ஒரு இன்டலிஜென்ஸ் அலுவலர் ஒரு புத்தகமாக எழுதினால் கிடைக்கும் அனுபவமே-Kashmir the Vajpayee years.

1947-48,1965,1999 என மூன்று போர்கள், ஆக்ரா பிரியாணி தூது, நவாஸ் ஷெரீப்-மோதி தற்காலிக இணக்கம் இவற்றையெல்லாம் விட காஷ்மீரத்துக்கு பயனுள்ள, முக்கியமான காலக்கட்டமாக அமைந்தது வாஜ்பாய் தலைமையிலான அரசு செயல்பட்ட பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசின் காலகட்டமே ஆகும்.

வாஜ்பாய் மீது காஷ்மீர முஸ்லீம் மக்கள் எவ்வளவு பெரிய மரியாதை வைத்திருந்தனர் என்பதை அறியும் பொழுது மெய் சிலிர்க்கிறது.அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தனது ஆட்சி முழுவதும் அடல் பிகாரி வாஜ்பாய் செயல்பட்டிருக்கிறார்.அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்த உறவை சரிவர மேம்படுத்த தவறிவிட்டதாக துலாத் உணர்கிறார.

மோடிக்கு காஷ்மீரிகள் ஓட்டுப்போட்டதற்கு அவர் அடுத்த வாஜ்பாயாக இருப்பார் என்று அவர்கள் பெரும் நம்பிக்கையே காரணம்.ஏ.எஸ் துலாத் ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோவிலும், ரா எனப்படும் ரிசர்ச்&அனாலிஸிஸ் விங்கிலும் பல்லாண்டு தலைவராக இருந்தவர்.பின் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு காஷ்மீர் சம்பந்தமான அத்தனை பேச்சுவார்த்தைகளையும் ஹூரியத் அமைப்பு, அங்குள்ள பண்டிட்டுகள், வியாபாரிகள், மத்திய அரசு ஆகியோரிடையே பாலமாக இருந்தவர்.

இந்த வாஜ்பாய் ஆட்சி காலகட்டத்திற்கு முன்பும் பின்பும் 10 வருடங்கள் இவர் பேசிய காஷ்மீரிகளுடனான உரையாடல்கள், அதன் மூலம் கிடைத்த அடிப்படை புரிதல்கள், பரூக் அப்துல்லாவிடம் துலாத் தகவல் சேகரிக்க முடியாத இயலாமை என இந்த புத்தகம் நகர்கிறது.

முன்னாள் பஞ்சாப் மாநில முதல்வரும், முன்னாள் குடியரசு தலைவரான ஜெயில் சிங் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்கள் நூலினிடையே நிரவிக் கிடக்கின்றன.முதல் முறை ஏ.எஸ்.துலாத்தும் ஜெயில் சிங்கும் சந்திகரில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சந்தித்து சாப்பிடும் தரமான சிக்கன் பிரியாணி துவங்கி, ஜெயில் சிங் அமெரிக்காவுக்கு இதய ஆபரேஷன் செய்துக்கொள்ள சென்று வந்தபோது அவரோடு சேர்ந்து செக்யூரிட்டி ஆபீஸராக 20 நாட்கள் அங்கு துலாத் ரவுண்டு அடித்தது எல்லாம் உபரி மசாலா தகவல்கள்.

ராஜஸ்தான் கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தன் பணியை தொடங்கிய துலாத் தலைமை பணிகளை அலங்கரித்திருக்கிறார்.
அவர் காஷ்மீரிகளை விரல்நுணி போல அறிந்துவைத்திருக்கிறார்.
அவர்கள் பற்றி அவர் சொல்லும் சில அரிய தகவல்கள்:

1.காஷ்மீரி நேரடியாக உண்மையை உரைக்க மாட்டார்.பல உட்கதைகள் கொண்டதுதான் அவர் கூறும் உண்மை.
2.காஷ்மீரில் உண்மைகளைவிட புனைக்கதைகளே உண்மையானவை.
3.காஷ்மீரி ஒருவர் உங்களை தன் இல்லத்து திருமணத்துக்கு கெஸ்ட்டாக அழைத்துவிட்டார் என்றால் அவரின் பரிபூரண நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

போன்ற சிலபல அதிரடி நிஜங்கள்.

இந்த புத்தகத்தை ஆதித்யா சின்காவுடன் இணைந்து எழுதியுள்ளார் துலாத்.பேச்சுவார்த்தையே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு என வாஜ்பாயி நிரூபித்து சென்றிருக்கிறார் என்பதை துலாத் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார்.

நீங்களும் வாசிக்க.
வர்ட்டா?!

Advertisements

பட்லாபூர்

image

இப்பொழுதுதான் பட்லாபூர் பார்க்க முடிந்தது.தரமான படம்.பார்க்காதவர்களுக்கான சஜெஸ்ஷன் பதிவு இது.

பூனாவில் ரத்தம் உறையும் வங்கி கொள்ளை எஸ்கேப்பின்போது தப்பிக்க வருண் தவான் மனைவியான யாமி கவுதம் காரை உபயோகிக்கின்றனர் நவாசுத்தின் சித்திக்கி மற்றும் அவரது கூட்டாளியான அர்மான்.
வண்டியை நவாசுத்தின் ஓட்டிச் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் யாமி காரின் கதவு களேபரத்தில் திறக்க யாமி-வருண் தம்பதியின் அன்பு மகன் சிறுவன் வெளியே விழுந்து சாகிறான்.யாமியும் நவாசுத்தினால் சுட்டுக்கொள்ளப்படுகிறாள்.
இறக்கும் நொடிகளில் யாமியுடனும், இறந்த பிணமாய் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கிடக்கும் தன் பிள்ளையையும் பார்க்கும் வருண் உள்ளே அசுர மூர்க்கம் பிறக்கிறது.

இங்கிருந்து பதினைந்து வருடங்கள் வரை நகர்கிறது பட்லாபூர் கதை.அதை முழுவதும் ப்ளூ ரே டிவிடியில் கண்டு மகிழ.
நவாஸ் கேரக்டராய் வாழ்ந்திருக்கிறார்.அவருக்கு ஒரு விலைமாது காதலியாய் ஹியூமா குரேஷி.இவர்கள் தவிர நவாஸின் பார்ட்னர் அர்மான், கிளாம் தேவதை ராதிகா ஆப்தே அவரின் மனைவியாக, நவாஸின் டாக்டராக வரும் அந்த பெண்,ஆரம்பத்தில் வரும் அந்த லேடி டிடக்டிவ் என எல்லாரும் நடிப்பில் அசத்துகிறார்கள்.குறிப்பாக வருண் தவான்.முரட்டு தாடி, கலங்கா பார்வை, பழிவாங்கும் வெறி என துல்லியமாய் ரூட் பிடித்து கலக்கியிருக்கிறார்.

ஆனால் இயக்குநரின் திரைக்கதை படத்தை வேற மாஸ் லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.ஹியூமாவுடனான நவாஸ்&வருண் இணைந்து வரும் காட்சிகள், ராதிகா குளித்து முடித்து வெளியே வந்ததும் எதிர்பாராத அந்த ட்விஸ்ட் என பரபரக்க வைக்கிறது இயக்கமும் திரைக்கதையும்.நம்மூரிலும் இதுபோன்ற முயற்சிகள் அதிகம் வேண்டும்.

சாதாரண ரிவெஞ்ச் கதையாக மொக்கை போட்டு முடித்துவிடுவார்கள் என்று நாம் சூடம் அடித்து நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், நம்மை அவ்வாறு நம்பவைத்து கிளைமேக்ஸில் படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருப்பது கிளாஸிக்.

இது நம்ப முடியாத சூப்பர் மேஜிக்.
நிச்சயம் டயம் கிடைக்கும்பொழுது பார்க்க மக்களே!!

வர்ட்டா?!

அண்ணா சதுக்கம் டிப்போ மற்றும் ஓட்டை ஏக்டிவா

சென்னை பல்கலைக்கழகத்துக்கு தியாகராய நகரின் தம்பையா சாலையிலிருந்து 11H மற்றும் 12G ஆகிய பேருந்துகள் செல்லும்.ஒரு 20-25 நிமிட பயணம்.காலையில் ஐந்து முதல் பத்து நிமிட இடைவேளையில் ஒரு பேருந்து. பிரச்னை இல்லை.

இந்த மதிய நேரத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து விரைவாக வீடு திரும்புவதென்பது ஒரு குதிரைக்கொம்பு.ஏனெனில் ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து,ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என டங்குவாரு அறுந்தநிலைக்கு கால்கள் சென்றால்தான் போனால் போகிறதென்று ஒரு பேருந்து வரும்.ஒருநாள் கடும் வெயில்.தோலை உரித்து எலும்பை உருக்கி விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தது.இத்தனைக்கும் இது ஆகஸ்ட்.இதுவே மே மாசம் என்றால் இன்னும் கொளுத்தியிருக்கும்.ஒரு முப்பந்தைந்து நிமிடம் பேருந்து நிறுத்தத்தில் நின்று 12ஜிக்காக காத்திருந்தேன்.அதை தவிர அத்தனைப் பேருந்துகளும் என்னை கடந்து சென்றன.

ஒரு பெரியவரிடம் விசாரித்து அண்ணா சதுக்கம் பேருந்து டிப்போவில் “நிறைய” திநகர் பேருந்துகள் வரும் என கேள்விப்பட்டு அங்கு நடந்து சென்றேன்.
அம்மா குடிநீர் போத்தல் வாங்கி முகத்தில் ஊற்றி வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முயன்றேன்.அங்கு ஒரு ஒன்றரை மணி நேரம் காத்திருந்திருப்பேன்.
டிரைவர்கள் லானா முடித்துவிட்டு நிழலில் பஸ்ஸை நிறுத்திவிட்டு மட்டையாகி இருப்பார்கள் போலும்.அட்லீஸ்ட் இருபது நிமிடத்திற்கு ஒரு முறையாவது வரவேண்டிய பஸ் காலம் தாழ்ந்து, காலம் மறந்து வந்தது.பயணிகள் கால் நொந்து நின்று ஏறினர்.

அங்குள்ள தகவல் நிலையத்திற்கு சென்று ஏன் 11H உள்ளே வருவதில்லை? என விசாரித்ததற்கு “வரவேண்டும். ஆனால் டிரைவர்கள் பல நேரங்களில் அந்த ரூலை மதிப்பதில்லை.என்ன செய்வது?” என்று அங்கிருந்த எம்டிசி சீனியர் ஆளே நொந்துக்கொண்டார்.
“இவிங்களலாம் யார்ங்க கேப்பாங்க.” என்றார்.

போனால் போகிறது என்று ரொம்ப நேரத்துக்கு பிறகு ஒரு 12ஜி வந்து ஜனங்களுக்கு உயிர் கொடுத்தது.இது ஒருநாள் டிராஜெடி என்றால் இன்னொரு நாள் வீறுகொண்டு என் அண்ணனின் பலநாட்கள் ஓட்டப்படாத ஏக்டிவாவின் சாவிக்கொத்தை போட்டு முக்கால் மணிநேரம் அதனோடு மாரடித்தும் அது இயங்க மறுத்த பிளாக் காமெடி இன்னொரு நாள் நிகழ்ந்தது.

எனக்கு ஏற்கனவே வண்டி மீது லைட்டாக டவுட்டு இருந்ததால்தான் மெயின் ரோட்டுக்கு உடனே செல்லாமல் வேறொரு சாலைவரை ஓட்டிச்சென்றேன்.
தலையில் ஹெல்மெட், பாக்கெட்டில் லைசென்ஸ், ஜி என் செட்டி சாலை பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப ஒரு தொகை, முன்கூட்டியே வீட்டிலிருந்து கிளம்பியது என வண்டி ஆசையில் கிளம்பி இருந்தேன்.

ஒரு மீட்டர் பயணத்திலேயே அவற்றை புஸ் ஆக்கியது வண்டி.குறுக்கே ஒரு டெம்போ சென்றதால் ஸ்லோ டவுன் செய்தபோது ஆஃப் ஆன வண்டியை அதன் பிறகு என்னால் எழுப்பவே முடியவில்லை.
ஹெல்மெட்டை கழற்றி ஸீட்டின் அடியில் வைத்து, வீடு வரை வண்டியை தள்ளிக்கொண்டே வந்து பார்க்கிங் லாட்டில் விட்டுவிட்டு பஸ் நிறுத்தம் நோக்கி ஓடோடி சென்றேன்.
வண்டி காலில் விழவில்லை.அது ஒன்றுதான் குறை.மற்றபடி எல்லாவகையிலும் முயற்சித்து விட்டேன்.

மாலை வந்து சோக் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று இடதுகை பெருவிரல் வீங்கிப் போனதுதான் மிச்சம்.சர்வீஸூக்கு விட்டு செல்ப் ஸ்டார்ட் பேட்டரியை ரீசார்ஜ் செய்தால்தான் வண்டி தேறும்.
எப்படியோ போக்குவரத்தை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியா சாஸ்திரா

image

சசி தரூர் எழுதிய இந்தியா குறித்த trilogyல் இது அவரே குறிப்பிடுவதாக கடைசி நூல்.
மோடி ஆட்சிக்கு வந்த 2014 மற்றும் அதற்கு பிந்தைய இன்றைய காலகட்டத்தை குறித்து விவாதிக்கும் நூல்.

சசியின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உரையை கேட்டபின்பு எனக்கு அவரது கருத்துக்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் நாட்டமும் ஏற்பட்டுள்ளது.சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயில ஆரம்பித்திருக்கும் நான் என் விருப்ப நிபுணத்துறையாக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறைகளை இரட்டை ஸ்பெஷலைசேஷன்களாக கற்றுத்தேரலாம் என்று ஒரு யோசனையில் இருக்கிறேன்.
மனிதவள மேம்பாட்டில் சசி ஒரு விற்பன்னர்.

பல்லாண்டு ஐநா அனுபவமும், முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையிலும் சசி இதில் ரொம்பவே ஸ்ட்ராங்.எனவே இயற்கையாக அவரின் எழுத்துக்களின் மீது ஆர்வம் எனக்கு எழுந்துள்ளது.

இந்த நூலில் குறிப்பாக அவர்
1.மோடி பிரச்சாரத்தின் போது குறிப்பிட்ட வாக்குறுதிகள்
2.தற்பொழுது அவரது அரசால் நிகழ்த்தப்படும் திட்டங்கள்
3.ஜெட்லியின் 2014 பட்ஜெட்-அதில் உள்ள பெரும் ஓட்டைகள்.அவர் பேசிய முந்தைய கிண்டல்களை சசி திருப்பி அவருக்கே “என்னய்யா பெருசா செஞ்சு கிழிச்சுபுட்ட?” என்று நையாண்டியாக கேட்கிறார்.
4.மோடி ஆட்சியின் சாதனைகளாக அவர் கருதுபவை(அதிசயமாக எதிர்க்கட்சி முக்கிய பிரமுகராக இருப்பினும் வெளிப்படையாக பாராட்டுதல் சிறந்த குணம்) குறித்து சில தகவல்கள்
5.RBIயின் ரகுராம் ராஜனுக்கு ஜெட்லி எடுக்கவேண்டிய காம்ப்ளிமெண்டரி கொள்கை முடிவுகள் என செம ரோலர்கோஸ்டராக செல்கிறது புத்தகம்.
492 பக்கங்கள்,699 ரூவா என ஷங்கர் பட பட்ஜெட் போலத்தான் சசி தரூரின் புத்தகங்களும்.
அதிலுள்ள விஷயங்களும் அதே அளவு பிரம்மாண்டமும் சகல நுணுக்கங்களையும் உள்ளடக்கி நகரும்.

பிரத்யேகமான,அருமையான மொழிநடை.யுபிஎஸ்சி பிரிலிமினரி(முதன்மை) தேர்வின் இரண்டாம் தாள் சிஸாட் எனப்படும் ஆப்டிட்யூட் தேர்வு.இதில் பெரும்பங்கு ஆங்கில காம்ப்ரஹென்ஷன் வகையறா கேள்விகள்.எனக்கு தேர்வு மையம் வேப்பேரியில் அமைந்திருந்தது.

பெண்டிங் பள்ளி வளாகத்தில் காலையில் முதல் தாளை எழுதி முடித்து விட்டு, மதிய உணவு இடைவேளையான மெகா 3 மணி நேர கால அளவையின்போது இந்த புத்தகத்தை ஸ்னிப்பெட் போல வாசிக்க ஆரம்பித்தேன்.அது எனக்கு காம்ப்ரஹென்ஷனிலும் சுலபமாக கவனம் வரவழைத்து தேர்வின்போது கைகொடுத்தது.
டிக்ஷனரியையும் தரவிறக்கி விட்டதால் சசியின் பிரிட்டிஷ் பீட்டர் சொல்லாடல் கப்சாக்களை சுலபமாக லாங் பிரெஸ் செய்து பொருள் அறிந்துகொள்ள முடிகிறது.
நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசியுங்கள்.தற்காலிக மோடி இந்தியா குறித்த ஒளிவுமறைவற்ற பார்வை.

நச் ஏரியா: ஒரு இடத்தில் ஜெட்லியின் பட்ஜெட்டை இவ்வாறு கிண்டலடித்திருப்பார் சசி.
பாலிவுட் படங்கள் பட்ஜெட்டும் 100 கோடி.ஜெட்லி நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களின் ஒதுக்கீடும் 100 கோடி.இரண்டும் ஒரு சாரமும் இல்லை.

பின்குறிப்பு: தொழிற்துறையில் சட்ட நுணுக்கங்கள்(legal aspects of business/legal systems) என்ற பாடத்திற்கு டாக்டர்.நாராயண சாஸ்திரி,தர மேலாண்மை(quality management)பாடத்திற்கு டாக்டர்.சேஷாத்ரிநாதன் என இரு முதுபெரும் பேராசிரியர்கள் எனக்கு வாய்க்க பெற்றுள்ளனர்.நல்லதே நடக்கும்.
ஜெய் ஹிந்த்.

காந்தி டுடே

image

கைத்தறி கடவுள்

காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் (அப்துல் கலாம் பிரதிபலிக்கும் முன்னுரையோடு) அமேஸானில் ஆர்டர் செய்துள்ளேன்.
சேத்தனின் half girlfriendம் what young India wants புத்தகமும் ஆர்டர் செய்து வந்தாயிற்று.வாசிக்க போகிறேன்.
அதற்கு முன் கிண்டிள் செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி பார்த்தேன்.
கிளிம்ப்ஸஸ்(glimpses) வகையறாவுக்கு இது சொர்க்கம்.

மினி புத்தகங்களாக, சிறு சிறு பகுதிகளாக, முக்கியமான உரைகளாக,இலவச மற்றும் குறைந்த விலை முழு புத்தகங்களாக நிறைய பயனுள்ள வாசிப்பு இதில் அடங்கும். சில சமயம் முழு விலையுயர்ந்த புத்தகத்தையும் வாசிக்க செயலி தூண்டும்தான்.பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அவற்றை அமேஸான் கிண்டிள் ஈ ரீடர் வாங்கின பின்பு வாசித்துக்கொள்ளலாம்.
இந்த வரிசையில் நான் முதலில் வாசித்த பகுதி காந்தி டுடே.

image

பாப்பு

காந்தியை எவிடன்ஸோடு நேசிக்க எனக்கு மற்றுமொரு வாய்ப்பு.சில இடங்களில் அழுதுவிட்டேன்.என் கல் நெஞ்சையும் மீறி.
காந்தியை பற்றிய அடிப்படை புரிதலை சுலபமான மொழிநடை மூலம் நம்முள் செலுத்திவிட்டு,நூலின் ஆசிரியரான மார்க் ஷெப்பர்ட் அடுத்து காந்தியவாதிகள் நோக்கி நகர்கிறார்.

காந்தியின் ஆன்மீக வாரிசான வினோபா பாவே பற்றியும் அரசியல் வாரிசான ஜெயபிரகாஷ்(ஜேபி) நாராயணன் பற்றியும் அருமையான சில தகவல்கள் தருகிறார்.

image

வினோபா பாவே

1916ல் தனது இருபதாவது வயதில் வாரணாசி வந்த வினோபா பாவே சமஸ்கிருதத்தை கரைத்து குடிக்கிறார்.வேத மந்திரங்களின் மன்னன் ஆகிறார்.ஆனால் படித்து முடித்ததும் அவருக்குள் ஒரு மனக் குழப்பம்.இமயமலைக்கு சென்று சந்நியாசி ஆவதா இல்லை மேற்கு வங்கம் சென்று அரசியல் ஒடுக்குமுறைகளை ஒடுக்கும் தீவிரவாதி ஆவதா? என்று.
இந்நிலையில் தான் ஒரு தினசரியில் காந்தியின் பேட்டி ஒன்றை காண்கிறார்.காந்தியின் ஐடியாலஜியால் த்ரில் ஆகிறார்.
காந்தியிடம் தான் விரும்பிய இரண்டுமே இருப்பதை உணர்கிறார் பாவே.

image

நன்றி:காந்தி நூற்றாண்டு நினைவு குழு

அவரின் சபர்மதி ஆசிரமம் சென்று அவரின் நல்லாசி பெற்ற சீடராகிறார்.கடும் உழைப்பும், மத பேதமின்றி அறிவும் கொண்ட வினோபா காந்தியவாதிகளில் முதன்மையானவராக அவரது விமர்சகர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டவர்.

image

சர்வோதயா இயக்கம்

காந்திக்கு தெரியும்.இந்தியாவின் எதிரி வெள்ளைக்காரன் அல்ல.அவன் உள்ளே நுழைவதற்கு இடமளித்த நமது நாட்டின் ஏற்றத்தாழ்வுகள்.
காந்தியின் படுகொலைக்கு பிறகு யமுனை நதிக்கரையில் நடந்த அவரது இறுதி ஊர்வல விவரனை முதுகுத்தண்டை சில்லிட வைத்து ஏதோ ஒரு சொல்ல முடியாத வலியை பாய்ச்சியது.அதிலிருந்து வினோபா பற்றிய அதிசய குறிப்புகளே நம்மை மீட்டெடுக்கிறது.

வினோபா தன் காந்திய சீடர்களிடம் சொல்கிறார்.நாம் நம் இரு இலக்குகளில் ஒன்றினை அடைந்துவிட்டோம்.அது ஸ்வராஜ் எனப்படும் சுயராஜ்ஜியம்.நம் அடைய வேண்டிய நம் இரண்டாவது இலக்கு சர்வோதயம் எனப்படும் அனைவருக்குமான நல்வாழ்வு.
பாப்பு(காந்தி) பெரும்பான்மைக்கான நல்வாழ்வு என நம்மிடம் சொல்லவில்லை.எப்பொழுதும் முழுமையான எல்லோருக்குமான நல்வாழ்வு என்றே உரைப்பார்.அதுவே நம் நோக்கம் என்றார்.

காந்தியின் உருவாகவும், அவரின் மகனாகவும் வினோபா காந்தியவாதிகளால் வழிபடப்பட்டார்.ஆனால் அதை அவர் விரும்பவில்லை.பூரண சுயசார்பு(complete self reliance) என்ற ஆய்வை அவர் தன் ஆசிரமத்தில் நடத்திக் கொண்டிருந்தார்.

image

காந்தி இன்று இவர்களால் தொடர்கிறார்

இரண்டாம் சர்வோதயா மாநாட்டையே புறக்கணித்து அந்த ஆய்வை அவர் தன்னிலையிலே மேற்கொண்டிருந்தார்.ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் மூன்றாவது சர்வோதயா மாநாட்டில் வினோபா கலந்துகொள்ளவில்லையென்றால் மாநாட்டையே நடத்தமாட்டோம் என்ற தொண்டர்களின் அன்பு கட்டளையை ஏற்று 300 கி.மீ தன் ஆசிரமத்தில் இருந்து நடந்தே அன்றைய ஹைதராபாத் மாகாணத்தை அடைந்தார்.

அன்றைய தேதிகளில் தெலுங்கானாவில் பெரும் ரணகளம் ஏழை கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களை ஒடுக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்துக்கும் இவர்கள் இருவரிடையே பலியாடாக மாட்டிக்கொண்ட மக்களுக்கும் நடுவில் நிகழ்ந்துவந்தது.

ஹரிஜன மக்களின் நலனுக்காக அவர் ஹைதராபாத் முழுக்க பாதயாத்திரை மேற்கொண்டு நில செல்வந்தர்களிடம் பேசி, அவர்களின் அரக்க மனங்களைக்கூட மாற்றி நிலமற்ற ஏழைகளுக்கு பல லட்சம் ஏக்கர்கள் பெற்றுக்கொடுத்தார்.
அப்படித்தான் பூதன்(பூமி+தானம்) எனப்படும் பேரியக்கம் இந்தியாவில் நிறுவப்பட்டது.
ஒட்டுமொத்த இந்திய வேளாண் நிலங்களின் அளவில் ஆறில் ஒரு பங்கு நிலத்தை செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஹரிஜன ஏழை மக்களுக்கு கொடுத்தார்.
இன்று நாம் பேசும் சோஷியல் இங்க்ளூஷன் அன்று செயல்முறையில் வினோபாவால் செய்து காட்டப்பட்டது.ஹைதராபாத் தொடர்ந்து உத்திர பிரதேசம், பீகார் என தன் பாதயாத்திரையை தொடர்ந்து இதை அவர் சாத்தியமாக்கி காட்டினார்.

காந்தியின் கொள்கைகள் வெறும் ஏட்டு சுரைக்காய் அல்ல.அவை ஏழை மக்களின் கறிக்கும் உதவும் என்னும் பேருண்மையை இந்தியாவிற்கு உணர்த்தினார்.அன்றிலிருந்து காந்தியம் அமரத்துவம் பெற்றது.
காந்தியின் காதலர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் ஷெப்பர்ட்டின் காந்தி டுடே.

சுதந்திர தின சேல் எப்படி சுஜாதாவில் முடிந்தது?

சமீப சுதந்திர தின வாழ்த்துக்கள்.
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலக், பகத் சிங், பாரதியார், வஉசி, ராஜாஜி, ஜான்சி ராணி லஷ்மிபாய், கொடி காத்த குமரன், ஆஷ் துரையை போட்டு தள்ளிய வாஞ்சி(இன்று இரு குடும்பங்களும் சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள்.ஒன்றாக ஷாம்பெயின் சாப்பிடும் அளவிற்கு), அண்ணல் அம்பேத்கர் போல ஒன்றா இரண்டா? சொல்லி மாளாது நம் நாட்டுக்காக வாழ்ந்து மாண்டவர்கள் லிஸ்ட்டை…

ஏபிஜே அப்துல் கலாம் விடவா நாட்டுக்காகவே ஒருவர் வாழ்ந்துவிட முடியும்?
வரி செலுத்தலாம்.இயற்கை காக்கலாம்.படிப்பறிவளிக்கலாம்.ஆரோக்கிய இந்தியா உருவாக்கலாம்.உறுதியான இந்தியா உருவாக்கலாம்.லஞ்ச பேர்வழிகளை அட்லீஸ்ட் கனவிலாவது போட்டு சுடலாம்(ஸாரி மகாத்மா).

ஜெய் ஹிந்த்.

அடுத்து கிண்டிள்.
அமேஸான் கிண்டில் தற்பொழுது சுதந்திர தின சேல்ஸில் வெறும் 4999 ரூபாய்க்கு கிடைக்கிறது.கொடுமை எனனவென்றால் சட்டுனு அதை வாங்க கூட காசு கிடைக்கல.
உடனே திரட்ட முடில.ஒரு நூலகத்தையே பாக்கெட்டில் சுமந்து செல்லலாம்.வெறும் 200 கிராம் எடை.வைஃபை உண்டு.அமேஸான் ஸ்டோரில் தேவையான புக்குகளை தரவிறக்கி கொள்ளலாம்,லேப்டாப்பில் இருந்து யுஎஸ்பி கேபிள் கொண்டு பிடிஎப் கோப்புகளையும் பக்காவாக ஏற்றப் படிக்கலாம்.

உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் கிண்டிள் செயலியில் பதிவிறக்கிய புத்தகங்களை இதனோடு சிங்க் செய்து கொள்ளலாம்.
டச் ஸ்கிரீன், 4ஜிபி மெமரி,1ஜிபி ராம் எல்லாம் எல்லாம்.
நுகர்வு வெறியில் அவனவன் என்னன்னவோ வாங்கி குவக்கறான்.ஆனால் என்னால் எனக்கு அத்தாவசியமாக பயன்படக் கூடியதையே வாங்க முடியவில்லை.
இதவும் கடந்து போகட்டும் பிரம்மா..

கிண்டிலில் படிக்க சுஜாதா வேண்டுமே?! 😉

சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி ஒரு முழு பிடிஎஃப படித்தேன்.
அது ஒன்றையே தொழிலாக கொடுத்தால் அருமையாக செய்யலாம்.திகட்ட திகட்ட புதுமையான பதில்கள்.
ஏங்க இந்த ஐஸ்கிரீம் டேஸ்ட் பண்ற வேலை, காபி டேஸ்ட் பண்ற வேலை மாதிரி சுஜாதா புக் படிக்ற வேலை ஏதாச்சு இருந்தா கொடுங்க…
Like

அழியா குறளில் பார்க்காத அழகியல்

திருக்குறளை பத்தி சமீபத்துல சிலபல பதிவுகள் தோன்றியது.அவற்றில் சில சாம்பிள்கள்.என்ன ரூட் பிடித்தாவது அந்த நல்ல விஷயத்தை என் ஜெனரேஷனுக்கும் அடுத்த சந்ததியினருக்கும் கடத்திவிட வேண்டும் என்ற நப்பாசையில் எழுதப்பட்டவையே இவை என்பதை கவனத்தில் கொள்க. 😉

அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)..
இதுதான் நம்ம தமிழ் முன்னோர் சொல்லியிருக்கிற வரிசை. எவன்டா அதுனுலாம் கேட்கக்கூடாது.

ஆனா வீட்ல இருந்து கிளம்பின உடனே இன்பத்தை தேடி பொருளை தொலைச்சு அறம் செத்து போச்சுனு அழுவறான் மாடர்ன் தமிழன்.

திருக்குறள் என்னும் ட்விட்டரில் அய்யன் வள்ளுவன் என்ற ஐடி ஐஐஎம், ஸ்டான்போர்டு,யேல், ஆக்ஸ்போர்டு, வார்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ், ஹார்வார்டு, எக்ஸ்எல்ஆர்ஐ போன்ற சகல பி-ஸ்கூல்களும் நாமலான் என்னய்யா செய்துட்டோம்னு வெட்கப்படுற அளவுக்கு ஒரேடியா பொருளியல்னு ஒரு பாலில் 70 அதிகாரங்களில் 700 குறள்களில் தந்துட்டார்.

அதை யார் யார் ஃபாலோ பண்றாங்கங்கிற விவரம்லான் தெரியலை.பட் நிச்சயம் மாஸா இருப்பாங்கங்கிறது உண்மை.

திருவள்ளுவரும் விஜய்யும் ஒரே கான்செப்டத்தான் சொல்லிருக்காங்க..
“எண்ணி துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
இது வள்ளுவர்.

“ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்”
இது விஜய்.

நல்லதுதானே. யார் சொன்னா என்ன?

திருக்குறளை பழைய புத்தக கடைகளிலோ, கோனார் உரைகள், பள்ளி தமிழ் புத்தகங்கள், அரத பழைய நூலகங்கள்,brick and mortar கடைகளில் மட்டும் தேடுபவர்களின் கற்பனை வறட்சியை போக்க ஒரு உபரித் தகவல்.
இந்த ஒப்பிலா களஞ்சியம் ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியாக கிடைக்கிறது.வெளியில் வாங்கினால் ஒவ்வொரு உரையும் தனித்தனி நூல்.
இங்கு
1.மு.வரதராசனார்
2.கலைஞர் கருணாநிதி
3.சாலமன் பாப்பையா என சகல உரைகளும் ஒரே இடத்தில்.

வர்ட்டா??

பின்குறிப்பு: யான் ஒரு அஜித்-கமல் வெறியன்.அவ்வளவே.

மெட்ராஸ் பல்கலைக்கழக முதல் வார பதிவுகள்

நான் சென்னை சேப்பாக்கத்துல இருக்க போற ரெண்டு வருஷமும் சிஎஸ்கே தடை செய்யப்பட்டிருக்கு..
இதுல ஏதாச்சு உள்குத்து இருக்குமோ?

நான் அங்கு அட்மிஷன் போட்ட அடுத்த நாள் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கைத்தறி ‘பிராண்ட்’ஐ அறிமுகப்படுத்தினார்.

சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் மென்திறன் பாடங்கள் நான்கு படிக்க வேண்டும்.முதல் செமஸ்டரில் ஒன்று.இரண்டாம் செமஸ்டரில் இரண்டு.மூன்றாம் செமஸ்டரில் ஒன்று என மொத்தம் நான்கு. அதற்கு மேலும் நாம் படிக்க வேண்டும் என விருப்பப்பட்டால் நிறைய ஆப்ஷன்கள் தருகிறார்கள்.கிரிமினாலஜி,சைக்காலஜி, இதழியல் துறையின் கீழ் பிஸினஸ் கம்யூனிகேஷன் ஸ்கில் என ஏக வகையறா.
பொதுவாக ஒரு ஏழு கழுதை வயதிற்கு பிறகு அவ்வளவு சுலபமாக ஒரு புது மொழி கற்க யாரும் விரும்புவதில்லை. நானும் அப்படித்தான் சுற்றக்கொண்டிருந்தேன். இப்பொழுது என்முன் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற ஆப்ஷன்கள் வைத்தார்கள். நான் ஜெர்மன் தேர்வு செய்ததுதான் தாமதம் பயலுவ எல்லாம் ஜெர்மன் ஜெர்மன் ஜெர்மன் என்று எழுதி தேர்வு செய்து விட்டார்கள்.
பாவம் எங்க வாத்தியாரு.இநத ஜிப்ரீஷ் பயபுள்ளைக கூட்டத்தை எப்படித்தான் ஜெர்மன் படிக்க வைக்கிறாரோ? பார்ப்போம்.

வர்ட்டா.

கோயம்பேடு டூ திநகர்-ஒரு படகு சவாரி

மழை-ஆட்டோ

திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேட்டுக்கு 120 பஸ் டிக்கட் கொடுத்து இறங்கின என் கையில் ஏகப்பட்ட லக்கேஜ்.
புறநகர் பேருந்து நிலையம் விளிம்பில் ஆட்டோவுக்கு கை காட்டினேன்.
திநகர் பிருந்தாவன் தெரு செல்ல எவ்வளவு?

ஆட்டோ டிரைவர்:150 ரூவா
நான்: சரிங்க நான் வேற ஆட்டோ பாத்துக்குறேன்.
ஆட்டோ டிரைவர்: சரி முடிவா எவ்ளோதான் தரமுடியும்?
நான்: மீட்டரை ஆன் பண்ணுங்க.ஒரு பத்தோ இருபதோ மீட்டருக்கு மேலயே போட்டுத்தரேன்.
ஆட்டோ டிரைவர்: மீட்டர்லான் இப்போ போட மாட்டோம் சார்..
நான்: ஏங்க?
ஆட்டோ டிரைவர்: மழை சார்…
நான் உரையாடலை தொடராமல் அடுத்த ஆட்டோ நோக்கி சென்றேன். .

புது ஆட்டோக்காரர் முகத்தில் புத்தரும் அரவிந்தரும் ஒன்றுகூடி தியானம் செய்தனர்.
நான்: அண்ணே! திநகர் பிருந்தாவன் தெரு போகணும்.எவ்ளோ ஆவும்?
புது ஆட்டோ டிரைவர்: போலாம் பா..ஒரு 250 ரூவா ஆவும்.
நான்: அண்ணே! நாக்குல நரம்போட பேசுண்ணே…நான் வெளியூர்க்காரன்தான் ஆனா இரண்டு மூணு தடவை இங்கருந்து ஆட்டோ புடிச்சு போயிருக்கேன்.
புது ஆட்டோ டிரைவர்: அதுலான் அந்த காலம்ப்பா…எப்போ போன நீ! இப்பலாம் மழை..எவனும் சவாரி வரமாட்டான்.நீ என்னாண்ட தான் ஏறி ஆவனும்.

நான் வீடு வந்து சேர்ந்தேன்.120 ரூவாய் கொடுத்து மூன்றாவது ஆட்டோவில் ஏறி.
மழை இல்லைன்னா அந்த மூன்றாவது ஆட்டோக்காரர் 100 ரூவாய்க்கே வருவேன் என்றார்.முன்னாள் பேரக்காரர்களின் தயவு தாட்சணியமில்லா தண்மையை விட இவருக்கு 20 ரூவாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் தப்பில்லை என்று தோன்றியது.
மீட்டர் போட்டிருந்தால் 73 ரூவாய் அளவு வந்திருக்கும்.மேலே 20-30 போட்டு கொடுத்திருப்போம்.
மீட்டர் இல்லைனா இதுதான் தேவலை..
20 நிமிஷம் கூட மழை பெஞ்சிருக்காது .ரோடு கடல் போலவும், ஆட்டோ போட்டு போல மெதந்து போகுது.ஆட்டோ பத்து தடவை ஆஃப் ஆயிடுச்சு.
மழைன்னா இவ்ளோ லீடு இருக்கு.
இந்த போட்டு சவாரிக்கு 20 ரூவா எக்ஸ்ட்ரா தந்தே ஆவனும்..இல்லன்னா ஆட்டோக்கரர் கோவிச்சுப்பார்.
😛

பின்குறிப்பு: நான் ஏறுன அதே ஆட்டோல பிருந்தாவன் தெருல இருந்து 130 ரூவாய்க்கு கோயம்பேடு வந்து ஒரு குரூப் எறங்குச்சு.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க-VSOP

image

லக்கா மாட்டிகிச்சு..
லக்கா மாட்டிகிச்சு..
வாசு கிட்டயும் சரவணன் கிட்டயும் ஆடியன்ஸூ..
லாஜிக் எதிர்பார்க்கறவங்களுக்கு இது நான்சென்ஸ்.
சிரிக்க மட்டும் வர்றவங்களுக்கு கதையில்லாத பாஸ் என்கிற பாஸ்கரன் ஹியூமர் சென்ஸ்.
எல்லாம் ஆர்யா-சந்தானத்தோட ரைமிங் டைமிங் எப்பெக்ட்.

ராஜேஷ் சார் தயவு செஞ்சு கதைய மாத்துங்க.நீங்க சீரியஸ் இல்ல ஜாலியான ஆளு ஓகே.டைம்பாஸ்க்கு ஒரு படம் பார்க்க வர்றோம்.உங்க கிட்ட பெருசா, அட கதைலான் எதிர்ப்பார்க்கலை ஓகே.
அதுக்காக ஒரே படத்தையே பேரு மாத்தி ஆளு மாத்தி பஞ்ச் மாத்தி ரிலீஸ் பண்றீங்களே..இது நியாயமா?இந்த ஃபார்முலா வச்சே கல்லா கட்டி பழக்கப்பட்டுட்டீங்க.
அதே வேலையை வெறுக்கும் இளைஞர்கள், அதே சந்தானம், அதே டாஸ்மாக், அதே சந்தானத்தை கலாய்ச்சுட்டாராமாம் ஆளு, அதே ஷகீலா இன்டர்வென்ஷன், அதே கெஸ்ட் ரோல் நண்பன்.இதுல லைட்டா வாச்சு மாத்தி பண்ணுங்க ஜி.நாங்க லைக் பண்றோம்.

உங்க படங்களாம் ஜாலி தான்.ஆனா அந்த ஜாலிக்கு மரியாதையான வேலி போடுங்க ஜி.
பாருங்க டாஸ்மாக் பக்கம் தலைவச்சி கூட படுக்காம உங்க படம் பாத்தே இப்டி ஓவராயிடுச்சு..
இது மதுவிலக்குக்காக இணையப்போராளிகள் இணைஞ்சிருக்கிற உணர்ச்சிகரமான தருணம் ஜி..அவங்கதான் உங்க படத்துக்கு பேஸ்புக், ட்விட்டர்னு ரிவ்யூ எழுதறவங்க…அதனால அந்த விஷயத்தலயும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க.
வேற ஒண்ணும் இல்ல.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.
பார்ல சரக்கடிச்சவங்க.
பொண்டாட்டி, காதலிகிட்ட நட்பு கழட்டிவிட்டுட்ட மாதிரி நடிக்றதை
கிளைமேக்ஸ்ல விஷால்கிட்ட இருந்து படிச்சவங்க.
அப்படியே இம்ப்ளிமெண்ட் பண்ணி நடிச்சவங்க.

நோ ஃபைட்டு ஸீன்.நோ சீரியஸ் செண்டிமெண்ட் ஸீன்.
தி ஒன் அண்டு ஒன்லி ரைமிங் டைமிங் காமெடி.
ஆர்யா அஸ் யூஷுவல் பளபள மடச்சாம்பிராணி.வழக்கம்போல அவருக்கு ஜாலி மம்மி(அயன், வணக்கம் சென்னை படத்துல வர்ற மம்மி தான்)
தமன்னா பார்பி பொம்மை.
வித்யூலேகா மெகா சைஸ் சேட்டை.அதோட பேமிலி மொக்க கோட்டை.
கருணாகரன் இவங்க சரக்குக்காக தொட்டுக்கிற ஊறுகாய்/சிப்ஸ் சைடிஷ் பேக்கெட்.அவ்ளோதான் மேட்டர்.
இதுக்கு போய் ஓவரா ஃபீல் ஆகி ரிவ்யூ எழுதிகிட்டு.
வர்ட்டா..!! 😉

சக்தி.