யாருமே பேசாத காதல் கதை

எப்படி இவ்வளவு இளிச்சவாய்த்தனமாய் நம் தமிழ் ஆடியன்ஸை இந்த இளம் இயக்குநர்கள் நினைத்துவிடுகிறார்கள் பாருங்க.

சில எடுத்துக்காட்டு சொல்றேன்.
ஹீரோயின் அம்மா அப்பாவை பெரிசா நிறைய சீன்ல காட்ட மாட்டாங்க.ஏன் சில படங்கள்ல காட்டவே மாட்டாங்க.
கேட்டா வெளிநாட்ல இருப்பாங்க.இல்லனா செத்து போயிருப்பாங்க.அப்டே காட்டினாலும் அவங்க பெரிய காதல் எதிர்ப்பாளரா இருக்க மாட்டாங்க.காமெடி பீஸா காட்டி இருப்பாங்க.
அப்படியும் இல்லையா காதலை தடுக்க வலுவில்லாத தாத்தாவோ பாட்டியோ வேற வழியில்லாம காதலுக்கு ஜயிஞ்சக் தட்டி-தூது போயி, தன் பேத்தியோட காதலன் கூட சேர்த்து வைப்பாங்க.நம்மவர்களோட அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் னு சொன்னா இந்த மாதிரி கற்பனை கதாபாத்திரங்கள் தான்.

நிஜ வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு மனிதரையும் சந்திக்க முடியாது.முடிந்தவரை காதலை எதிர்ப்பவர்கள்.கழுத்தை வெட்டுபவர்கள்.கௌரவ கொலைகள் செய்பவர்கள்.ஜாதி சங்கம் இல்லையென்றால் மத பொலிட்டிக்கல் வாட்ச்டாக்.சரி இருப்பதிலேயே-காதலுக்கு உகந்த, சற்று சாதுவான கேரக்டர்களை கவனித்தோம் என்றால் அவர்களே நம் பாடி கண்டிஷன் தெரியாமல் ரணக் கொடூரமாய் யோசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

யோசித்தெல்லாம் கிடையாது, வாயில் வந்து ஸ்டார்ட் ஆவதே கெட்ட கெட்ட வார்த்தையாகத்தான் இருக்கு.
உனக்கு அவ்ளோ சூ** கொழுப்பா? என்பதெல்லாம் ரொம்ப மரியாதையான உரையாடல்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
கொஞ்சவும் கொஞ்சாமல் கொலையும் செய்யாமல் நடுவில் வயலென்ஸ் மட்டும் காட்டி மிரட்டி அதட்டி உருட்டி கட்டுக்குள் வைக்கும் தகப்பன்மார்களும் இருக்கிறார்கள்.
பொண்ணு லவ் பண்ணிடுவாளோ என்ற பயத்தில் கல்யாணம் செய்து வைத்து, தாலி கட்டிய கழுத்தோடு பிள்ளையை பள்ளி(!), கல்லூரிக்கு அனுப்புபவர்களும் உண்டு.அவள் புருஷன் சும்மா இருப்பானா? அவனுக்கும் ஆசைகள் இருக்கும்தானே? இவளும் படிக்க வேண்டும்.கேட்டால் சோஷியல் செக்யூரிட்டி என்கிறார்கள்.என்னய்யா மயிறு செக்யூரிட்டி?அவள் கற்றலும் தடைபடும், தாம்பத்ய வாழ்வும் வாழ முடியாது.ரண வேதனை. அவளை எவன் தலையிலயாவது தள்ளி விடனும்.அந்த எவனோ உங்க ஜாதியா இருக்கணும்.கேட்டா கரையேத்தறாங்களாம்மாம்!!
ஒம்மாலே ஒய்யாலே கரையேத்தாதீங்க டா..நீச்சல் கத்து குடுங்க.கல்விங்கிற நீச்சல் கத்து கொடுங்க.தைரியம், தன்னம்பிக்கைங்கிற துடுப்பை குடுங்க.அதுதான் நீங்க செத்ததுக்கு அப்புறமும் அவளை காப்பாத்தும்.ஆடா பொறந்தா சமைச்சு பிரியாணி ஆக்குற மாதிரி பொண்ணா பொறந்தா கல்யாணம் பண்ணி குடுக்கறதுலியே ஏண்டா குறியா இருக்கறீங்க?அவளுக்குனு ஆசைகள் இருக்கும்டா..மியூசிக் கத்துக்கணும், பரதநாட்டியம் ஆடணும், ஹிந்தி கிளாஸ் போகணும், கொஞ்ச நாள் வேலை செய்யணும்..இன்னும் எவ்ளோவோ! அதலான் காது கொடுத்து கேளுங்க.அவளுக்கு அரவணைப்பா இருங்க.சொந்த கால்ல நிக்க உடுங்க.நிஜ உலகத்தை புரிய வைங்க.ரியாலிட்டி ஊட்டி வளங்க.அவளை சிண்ட்ரெல்லா இளவரசி மாதிரி வளர்த்து சிம்பன்சி குரங்குக்கு வியாபாரம் பண்ணுறதை விட சாதாரண மனுஷியாவே வளர்த்து, சாதாரண நல்லா படிச்ச, நல்ல குணமுடைய மனுஷனுக்கு கட்டி குடுங்க.யார் வேணாம்னு சொன்னா? அதைவிட்டுட்டு புடிச்சு தள்ளி உட்டுட்டா வேலை முடிஞ்சதுனுதான் பாதி தகப்பாஸ் நினைக்கறானுங்க.கொய்யா மண்டையனுங்களா!

அதிகமாக படித்தால் சுய சிந்தனைகள் அதிகமாகி தன் பேச்சை கேட்காமல் தன் வாழ்க்கை துணையை தானே தேடி பாய்ஃபிரண்டுடன் வந்து நிற்பாலோ என்று பிஇ மட்டும் படிக்க வைத்து கட்டி கொடுப்பவர்கள் இன்னொரு வகை.

இதெல்லாம் தெரியாமல் சினிமாவை பார்த்துவிட்டு இதுபோலத்தான் நமக்கும் நடக்கும்.பேன்டஸி நாடோடி சசிகுமார் போல நண்பர்கள் சேர்த்துவைப்பார்கள்.ராஜாராணி சத்யராஜ் போல அப்பாக்கள் மாறுவார்கள் என்ற பெருத்த முட்டாள்தனத்தோடு திரியும் அப்பாவிகள் இன்னமும் இருக்கிறார்கள்.
நாம் காணும் சக்ஸஸ்புல் காதல் ஜோடிகள் அனைவருமே பிராக்டிகலாக தங்கள் காதலை எதிர்கொண்டவர்கள்.நன்றாக படித்து நல்ல நிலைக்கு வந்து அதன்பின் வீட்டிற்கு பேசி ஓகேவென்றால் அவர்கள் தலைமையிலேயே திருமணம் செய்து, இல்லையெனறால் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று திருமணம் செய்து வாழ்க்கை முழுக்க உறவுகள் இல்லாமல் முடக்கப்படும் நிஜமும் உண்டு.இது அவர்களுக்கு வேண்டுமானால் பெயின்ஃபுலான கிக்காக, வாழ்வில் எதையோ சாதித்துவிட்டதாக நினைக்கலாம்.
தாத்தா பாட்டி, மாமா மாமி, சித்தி சித்தப்பா ஒரு ஒட்டு ஒறவும் இல்லாமல் யார் யாரையோ ஒத்தாசைக்கு பிடித்து தொங்கி கொண்டு வளர்க்க போகும் அவர்கள் பிள்ளைகள் பற்றி யோசித்து பாருங்கள்.ஒவ்வொரு கல்யாணமான காதல் ஜோடிக்கு பின்னாலும் ஒரு ரண கொடூரமான ரத்த வரலாறு உண்டு.அவர்களிடம் கேட்டு பாருங்கள்.கண்ணீராய் சிந்துவார்கள்.அப்படியெல்லாம் இல்லாமல் சுகமாய் திருமணம் செய்தவர்கள் வெகு குறைவு.கொடுத்து வைத்தவர்கள் அவர்கள்.ஆனால் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் அல்லர்.

காதல் புனிதமானது.ஆனால் யோசிக்காமல் காதலிக்காதீர்கள்.
யோசிச்சா காதலே இல்லைங்கிற புண்ணாக்கு சினிமா வசனம்லான் பேசாதீங்க.உங்க வாழ்க்கை நீங்கதான் ஜெயிக்கணும்.
அதுக்கு மைக்ரோ லெவல் முதற்கொண்டு மெகா விஷயங்கள் வரை simultaneousஆக யோசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.இது அட்வைஸ் இல்லை.அனுபவம்.எதார்த்தம்.என் கல்லூரி நண்பர்கள் வாழ்வில்,என் உறவினர்கள் வாழ்வின் மூலமாக நான் கற்றறிந்த சிம்பிளான உண்மை.
பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s