கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்

நான் என் வாழ்வின் நாற்கரை சந்திப்பில் இருக்கிறேன்.
I am at the crossroads of my life now.
உயிரியல் பாடப்பிரிவை 11ம் வகுப்பில் தேர்ந்தெடுத்து ஆனால் அதைவிட பொறியியல் மதிப்பெண் அதிகம் பெற்று, தேசத்தின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான SSN பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்.பள்ளி அளவில் +2வில் மூன்றாம் இடம், பொறியியல் சேர்க்கை கலந்தாய்விற்கு இரண்டாம் நாள் சென்றேன்.

கிண்டி பொறியியல் கல்லூரி,எம்ஐடி கல்லூரி உள்ளிட்ட புகழ்பெற்ற அரசு கல்லூரிகளிலும், பிஎஸ்ஜி, தியாகராஜா போன்ற அரசு சார் தனியார் கல்லூரிகளிலும் கற்கும் அனுபவம் வேறு.என்னத்தான் சொர்க்கம் என்றாலும் தலைசிறந்த அரசு கல்லூரியின் முதன்மை இடங்களை பெறவில்லையே என்றொரு ஏக்கம் இருந்தது.நான்கு வருடங்கள் இனிமையாக படித்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3 மாதம் பயிற்சி பெற்றேன்.
பின் பத்திரிக்கைத்துறையின் மீதுகொண்ட பேரார்வத்தின் காரணமாக புதிய தலைமுறை குழுமத்தில் பயிற்சி பத்திரிகையாளனாக கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறேன்.

அடுத்து என்ன?அடுத்து என்ன? என்ற தேடல் இயற்கையாக எழ, மேற்படிப்பு நிலையில் பொறியியல் தொடரலாமா? என்றொரு கேள்வி.தொடர்ந்தால் பெரும் தவறு ஒன்றுமில்லை.அதைவிட அதிகமாய் மேலாண்மையில் என்னால் கவனம் செலுத்தி உழைத்து உயரமுடியும் என்று தோன்றியது.அதனால் தமிழக உயர்கல்விக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் தேர்வுகளில் மேலாண்மை படிப்புக்கான தேர்வுக்கு மட்டும் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி சென்று விண்ணப்பித்து, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்வெழுதி நல்ல முறையில் தேர்ச்சி பெற்றேன்.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில்,அரசு தொழிற்கல்வி இயக்குநகரகம்(directorate of technical education-DOTE) நடத்திய கலந்தாய்வுக்கு முதல் நாளே அழைக்கப்பட்டேன்.
அரசு கல்லூரிகளில் மேலாண்மைக்கு அண்ணா மற்றும் மெட்ராஸ்(சென்னை) பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இடம் கிட்டிவிட்டால் சாலச்சிறந்தது என்று தோன்றியது.

எல்லாம் வல்ல இறைவனும், இயற்கையும் வழிநடத்தும் பாதை என் வாழ்க்கை பாதை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.அதற்கு சான்றாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயில எனக்கு இடம் கிடைத்துள்ளது.நல்லதொரு மாபெரும் நூலகம், அகன்ற பாரம்பரியம் கொண்ட-155 ஆண்டுகளைத் தாண்டிய ஆங்கிலேயே கால கட்டடங்கள், நல் ஆசிரியர்கள், நல்லதொரு மேலாண்மை குழு, பிரம்மாண்டமான கேளரங்கம், முக்கிய ஆசிரியர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களின் விருந்தினர் உரைகள்,கருத்தரங்குகள்,பயிற்சிப்பட்டறைகள் என நல்வழியில் பட்டைத்தீட்டிக்கொள்ள ஒரு நல்ல சாளரம் இந்த மெட்ராஸ் பல்கலைக்கழக வாய்ப்பு.என் தாய்க்கு இதில் மட்டற்ற மகிழ்ச்சி.மேலும் உழைத்து நல்வழியில் எனை செலுத்துவேன் என்று மனமார நம்புகிறேன்.வெல்வோம்.உழைப்பவரே உயர்ந்தவர்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

-அய்யன் திருவள்ளுவன்

-சக்தி விக்னேஷ்வர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s