காந்தி டுடே

image

கைத்தறி கடவுள்

காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் (அப்துல் கலாம் பிரதிபலிக்கும் முன்னுரையோடு) அமேஸானில் ஆர்டர் செய்துள்ளேன்.
சேத்தனின் half girlfriendம் what young India wants புத்தகமும் ஆர்டர் செய்து வந்தாயிற்று.வாசிக்க போகிறேன்.
அதற்கு முன் கிண்டிள் செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கி பார்த்தேன்.
கிளிம்ப்ஸஸ்(glimpses) வகையறாவுக்கு இது சொர்க்கம்.

மினி புத்தகங்களாக, சிறு சிறு பகுதிகளாக, முக்கியமான உரைகளாக,இலவச மற்றும் குறைந்த விலை முழு புத்தகங்களாக நிறைய பயனுள்ள வாசிப்பு இதில் அடங்கும். சில சமயம் முழு விலையுயர்ந்த புத்தகத்தையும் வாசிக்க செயலி தூண்டும்தான்.பொறுத்துக்கொள்ள வேண்டும்.
அவற்றை அமேஸான் கிண்டிள் ஈ ரீடர் வாங்கின பின்பு வாசித்துக்கொள்ளலாம்.
இந்த வரிசையில் நான் முதலில் வாசித்த பகுதி காந்தி டுடே.

image

பாப்பு

காந்தியை எவிடன்ஸோடு நேசிக்க எனக்கு மற்றுமொரு வாய்ப்பு.சில இடங்களில் அழுதுவிட்டேன்.என் கல் நெஞ்சையும் மீறி.
காந்தியை பற்றிய அடிப்படை புரிதலை சுலபமான மொழிநடை மூலம் நம்முள் செலுத்திவிட்டு,நூலின் ஆசிரியரான மார்க் ஷெப்பர்ட் அடுத்து காந்தியவாதிகள் நோக்கி நகர்கிறார்.

காந்தியின் ஆன்மீக வாரிசான வினோபா பாவே பற்றியும் அரசியல் வாரிசான ஜெயபிரகாஷ்(ஜேபி) நாராயணன் பற்றியும் அருமையான சில தகவல்கள் தருகிறார்.

image

வினோபா பாவே

1916ல் தனது இருபதாவது வயதில் வாரணாசி வந்த வினோபா பாவே சமஸ்கிருதத்தை கரைத்து குடிக்கிறார்.வேத மந்திரங்களின் மன்னன் ஆகிறார்.ஆனால் படித்து முடித்ததும் அவருக்குள் ஒரு மனக் குழப்பம்.இமயமலைக்கு சென்று சந்நியாசி ஆவதா இல்லை மேற்கு வங்கம் சென்று அரசியல் ஒடுக்குமுறைகளை ஒடுக்கும் தீவிரவாதி ஆவதா? என்று.
இந்நிலையில் தான் ஒரு தினசரியில் காந்தியின் பேட்டி ஒன்றை காண்கிறார்.காந்தியின் ஐடியாலஜியால் த்ரில் ஆகிறார்.
காந்தியிடம் தான் விரும்பிய இரண்டுமே இருப்பதை உணர்கிறார் பாவே.

image

நன்றி:காந்தி நூற்றாண்டு நினைவு குழு

அவரின் சபர்மதி ஆசிரமம் சென்று அவரின் நல்லாசி பெற்ற சீடராகிறார்.கடும் உழைப்பும், மத பேதமின்றி அறிவும் கொண்ட வினோபா காந்தியவாதிகளில் முதன்மையானவராக அவரது விமர்சகர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டவர்.

image

சர்வோதயா இயக்கம்

காந்திக்கு தெரியும்.இந்தியாவின் எதிரி வெள்ளைக்காரன் அல்ல.அவன் உள்ளே நுழைவதற்கு இடமளித்த நமது நாட்டின் ஏற்றத்தாழ்வுகள்.
காந்தியின் படுகொலைக்கு பிறகு யமுனை நதிக்கரையில் நடந்த அவரது இறுதி ஊர்வல விவரனை முதுகுத்தண்டை சில்லிட வைத்து ஏதோ ஒரு சொல்ல முடியாத வலியை பாய்ச்சியது.அதிலிருந்து வினோபா பற்றிய அதிசய குறிப்புகளே நம்மை மீட்டெடுக்கிறது.

வினோபா தன் காந்திய சீடர்களிடம் சொல்கிறார்.நாம் நம் இரு இலக்குகளில் ஒன்றினை அடைந்துவிட்டோம்.அது ஸ்வராஜ் எனப்படும் சுயராஜ்ஜியம்.நம் அடைய வேண்டிய நம் இரண்டாவது இலக்கு சர்வோதயம் எனப்படும் அனைவருக்குமான நல்வாழ்வு.
பாப்பு(காந்தி) பெரும்பான்மைக்கான நல்வாழ்வு என நம்மிடம் சொல்லவில்லை.எப்பொழுதும் முழுமையான எல்லோருக்குமான நல்வாழ்வு என்றே உரைப்பார்.அதுவே நம் நோக்கம் என்றார்.

காந்தியின் உருவாகவும், அவரின் மகனாகவும் வினோபா காந்தியவாதிகளால் வழிபடப்பட்டார்.ஆனால் அதை அவர் விரும்பவில்லை.பூரண சுயசார்பு(complete self reliance) என்ற ஆய்வை அவர் தன் ஆசிரமத்தில் நடத்திக் கொண்டிருந்தார்.

image

காந்தி இன்று இவர்களால் தொடர்கிறார்

இரண்டாம் சர்வோதயா மாநாட்டையே புறக்கணித்து அந்த ஆய்வை அவர் தன்னிலையிலே மேற்கொண்டிருந்தார்.ஆனால் ஹைதராபாத்தில் நடக்கும் மூன்றாவது சர்வோதயா மாநாட்டில் வினோபா கலந்துகொள்ளவில்லையென்றால் மாநாட்டையே நடத்தமாட்டோம் என்ற தொண்டர்களின் அன்பு கட்டளையை ஏற்று 300 கி.மீ தன் ஆசிரமத்தில் இருந்து நடந்தே அன்றைய ஹைதராபாத் மாகாணத்தை அடைந்தார்.

அன்றைய தேதிகளில் தெலுங்கானாவில் பெரும் ரணகளம் ஏழை கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களை ஒடுக்க அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்துக்கும் இவர்கள் இருவரிடையே பலியாடாக மாட்டிக்கொண்ட மக்களுக்கும் நடுவில் நிகழ்ந்துவந்தது.

ஹரிஜன மக்களின் நலனுக்காக அவர் ஹைதராபாத் முழுக்க பாதயாத்திரை மேற்கொண்டு நில செல்வந்தர்களிடம் பேசி, அவர்களின் அரக்க மனங்களைக்கூட மாற்றி நிலமற்ற ஏழைகளுக்கு பல லட்சம் ஏக்கர்கள் பெற்றுக்கொடுத்தார்.
அப்படித்தான் பூதன்(பூமி+தானம்) எனப்படும் பேரியக்கம் இந்தியாவில் நிறுவப்பட்டது.
ஒட்டுமொத்த இந்திய வேளாண் நிலங்களின் அளவில் ஆறில் ஒரு பங்கு நிலத்தை செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஹரிஜன ஏழை மக்களுக்கு கொடுத்தார்.
இன்று நாம் பேசும் சோஷியல் இங்க்ளூஷன் அன்று செயல்முறையில் வினோபாவால் செய்து காட்டப்பட்டது.ஹைதராபாத் தொடர்ந்து உத்திர பிரதேசம், பீகார் என தன் பாதயாத்திரையை தொடர்ந்து இதை அவர் சாத்தியமாக்கி காட்டினார்.

காந்தியின் கொள்கைகள் வெறும் ஏட்டு சுரைக்காய் அல்ல.அவை ஏழை மக்களின் கறிக்கும் உதவும் என்னும் பேருண்மையை இந்தியாவிற்கு உணர்த்தினார்.அன்றிலிருந்து காந்தியம் அமரத்துவம் பெற்றது.
காந்தியின் காதலர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் ஷெப்பர்ட்டின் காந்தி டுடே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s