அண்ணா சதுக்கம் டிப்போ மற்றும் ஓட்டை ஏக்டிவா

சென்னை பல்கலைக்கழகத்துக்கு தியாகராய நகரின் தம்பையா சாலையிலிருந்து 11H மற்றும் 12G ஆகிய பேருந்துகள் செல்லும்.ஒரு 20-25 நிமிட பயணம்.காலையில் ஐந்து முதல் பத்து நிமிட இடைவேளையில் ஒரு பேருந்து. பிரச்னை இல்லை.

இந்த மதிய நேரத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து விரைவாக வீடு திரும்புவதென்பது ஒரு குதிரைக்கொம்பு.ஏனெனில் ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து,ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என டங்குவாரு அறுந்தநிலைக்கு கால்கள் சென்றால்தான் போனால் போகிறதென்று ஒரு பேருந்து வரும்.ஒருநாள் கடும் வெயில்.தோலை உரித்து எலும்பை உருக்கி விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்தது.இத்தனைக்கும் இது ஆகஸ்ட்.இதுவே மே மாசம் என்றால் இன்னும் கொளுத்தியிருக்கும்.ஒரு முப்பந்தைந்து நிமிடம் பேருந்து நிறுத்தத்தில் நின்று 12ஜிக்காக காத்திருந்தேன்.அதை தவிர அத்தனைப் பேருந்துகளும் என்னை கடந்து சென்றன.

ஒரு பெரியவரிடம் விசாரித்து அண்ணா சதுக்கம் பேருந்து டிப்போவில் “நிறைய” திநகர் பேருந்துகள் வரும் என கேள்விப்பட்டு அங்கு நடந்து சென்றேன்.
அம்மா குடிநீர் போத்தல் வாங்கி முகத்தில் ஊற்றி வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முயன்றேன்.அங்கு ஒரு ஒன்றரை மணி நேரம் காத்திருந்திருப்பேன்.
டிரைவர்கள் லானா முடித்துவிட்டு நிழலில் பஸ்ஸை நிறுத்திவிட்டு மட்டையாகி இருப்பார்கள் போலும்.அட்லீஸ்ட் இருபது நிமிடத்திற்கு ஒரு முறையாவது வரவேண்டிய பஸ் காலம் தாழ்ந்து, காலம் மறந்து வந்தது.பயணிகள் கால் நொந்து நின்று ஏறினர்.

அங்குள்ள தகவல் நிலையத்திற்கு சென்று ஏன் 11H உள்ளே வருவதில்லை? என விசாரித்ததற்கு “வரவேண்டும். ஆனால் டிரைவர்கள் பல நேரங்களில் அந்த ரூலை மதிப்பதில்லை.என்ன செய்வது?” என்று அங்கிருந்த எம்டிசி சீனியர் ஆளே நொந்துக்கொண்டார்.
“இவிங்களலாம் யார்ங்க கேப்பாங்க.” என்றார்.

போனால் போகிறது என்று ரொம்ப நேரத்துக்கு பிறகு ஒரு 12ஜி வந்து ஜனங்களுக்கு உயிர் கொடுத்தது.இது ஒருநாள் டிராஜெடி என்றால் இன்னொரு நாள் வீறுகொண்டு என் அண்ணனின் பலநாட்கள் ஓட்டப்படாத ஏக்டிவாவின் சாவிக்கொத்தை போட்டு முக்கால் மணிநேரம் அதனோடு மாரடித்தும் அது இயங்க மறுத்த பிளாக் காமெடி இன்னொரு நாள் நிகழ்ந்தது.

எனக்கு ஏற்கனவே வண்டி மீது லைட்டாக டவுட்டு இருந்ததால்தான் மெயின் ரோட்டுக்கு உடனே செல்லாமல் வேறொரு சாலைவரை ஓட்டிச்சென்றேன்.
தலையில் ஹெல்மெட், பாக்கெட்டில் லைசென்ஸ், ஜி என் செட்டி சாலை பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப ஒரு தொகை, முன்கூட்டியே வீட்டிலிருந்து கிளம்பியது என வண்டி ஆசையில் கிளம்பி இருந்தேன்.

ஒரு மீட்டர் பயணத்திலேயே அவற்றை புஸ் ஆக்கியது வண்டி.குறுக்கே ஒரு டெம்போ சென்றதால் ஸ்லோ டவுன் செய்தபோது ஆஃப் ஆன வண்டியை அதன் பிறகு என்னால் எழுப்பவே முடியவில்லை.
ஹெல்மெட்டை கழற்றி ஸீட்டின் அடியில் வைத்து, வீடு வரை வண்டியை தள்ளிக்கொண்டே வந்து பார்க்கிங் லாட்டில் விட்டுவிட்டு பஸ் நிறுத்தம் நோக்கி ஓடோடி சென்றேன்.
வண்டி காலில் விழவில்லை.அது ஒன்றுதான் குறை.மற்றபடி எல்லாவகையிலும் முயற்சித்து விட்டேன்.

மாலை வந்து சோக் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று இடதுகை பெருவிரல் வீங்கிப் போனதுதான் மிச்சம்.சர்வீஸூக்கு விட்டு செல்ப் ஸ்டார்ட் பேட்டரியை ரீசார்ஜ் செய்தால்தான் வண்டி தேறும்.
எப்படியோ போக்குவரத்தை சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s