வாஜ்பாயி நாட்களில் காஷ்மீரம்

image

இன்றைய இந்தியா பாகிஸ்தான் நிலைமை என்ன? வழக்கம்போல காஷ்மீர குழப்பம்.
தென்னிந்தியர்களுக்கு காஷ்மீர் தூள் படத்தில் விக்ரம் ரீமா சென்னிடம் இங்கிலீஷ் தெரியாமல் எஸ்கேப் ஆக பாடும் “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்..
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்” என்ற லெவலில் தான் தெரியும்.

வடக்கே செல்லும் பட்டாளத்துக்காரர்கள், துணிந்த, அட்வெஞ்ச்சர் தேடும் ஹனிமூன் கிக் தம்பதிகள் தவிர தமிழர்கள் மற்றவர் காஷ்மீரத்தை கண்டது பெரும்பாலும் மணிரத்னத்தின் தயவால்தான்.மற்றபடி அது செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறும் ஒரு நியூஸ்.அடிக்கடி ஆங்கில சேனல் விவாதங்களில் மூச்சுமுட்ட விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருள்.இதுவே நம் காஷ்மீர அறிவு.

உண்மையில் பல நாட்கள் அங்கு பணியிலிருந்தவர்களுக்கே காஷ்மீரம் முழுவதும் புரிந்தபாடில்லை என்பதுதான் நிதர்சனம்.ஏனெனில் ஒரு காஷ்மீரியின் மனநிலை அப்படிப்பட்ட சந்தேகங்களால் பீடிக்கப்பட்ட பாவமான மனநிலை.
ஏ.எஸ்.துலாத் எழுதியிருக்கும் இந்த புத்தகம் அறிவுச் சந்தைகளில் நல்ல வியாபாரம் ஆகிறது.தொன்றுதொட்டு நமக்கு பாகிஸ்தானுடனான உறவில் பெரும் சிக்கல் காஷ்மீரமே என்பது விளங்கும்.
ஏற்கனவே எனக்கு புரிந்தவரையில் ஜம்முவுக்கு மேற்கிலுள்ள அனைத்தும் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரமாகினும் அவர்களின் வேட்கை குறையவில்லை.

ஐஎஸ்ஐ, கொரில்லா வீரர்கள், தீவிரவாதிகள் இவர்கள் அனைவரும் உடைய ஒரு பெரும் குழாம் அங்குள்ள பிரிவினைவாதிகளோடு இணைந்து காஷ்மீர விடுதலைக்கு மக்களை தூண்டி வருகின்றன.இதை ஒரு இந்திய அரசு டாப் அதிகாரத்தில் இருந்த ஒரு இன்டலிஜென்ஸ் அலுவலர் ஒரு புத்தகமாக எழுதினால் கிடைக்கும் அனுபவமே-Kashmir the Vajpayee years.

1947-48,1965,1999 என மூன்று போர்கள், ஆக்ரா பிரியாணி தூது, நவாஸ் ஷெரீப்-மோதி தற்காலிக இணக்கம் இவற்றையெல்லாம் விட காஷ்மீரத்துக்கு பயனுள்ள, முக்கியமான காலக்கட்டமாக அமைந்தது வாஜ்பாய் தலைமையிலான அரசு செயல்பட்ட பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசின் காலகட்டமே ஆகும்.

வாஜ்பாய் மீது காஷ்மீர முஸ்லீம் மக்கள் எவ்வளவு பெரிய மரியாதை வைத்திருந்தனர் என்பதை அறியும் பொழுது மெய் சிலிர்க்கிறது.அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தனது ஆட்சி முழுவதும் அடல் பிகாரி வாஜ்பாய் செயல்பட்டிருக்கிறார்.அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்த உறவை சரிவர மேம்படுத்த தவறிவிட்டதாக துலாத் உணர்கிறார.

மோடிக்கு காஷ்மீரிகள் ஓட்டுப்போட்டதற்கு அவர் அடுத்த வாஜ்பாயாக இருப்பார் என்று அவர்கள் பெரும் நம்பிக்கையே காரணம்.ஏ.எஸ் துலாத் ஐபி எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோவிலும், ரா எனப்படும் ரிசர்ச்&அனாலிஸிஸ் விங்கிலும் பல்லாண்டு தலைவராக இருந்தவர்.பின் பிரதம மந்திரி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு காஷ்மீர் சம்பந்தமான அத்தனை பேச்சுவார்த்தைகளையும் ஹூரியத் அமைப்பு, அங்குள்ள பண்டிட்டுகள், வியாபாரிகள், மத்திய அரசு ஆகியோரிடையே பாலமாக இருந்தவர்.

இந்த வாஜ்பாய் ஆட்சி காலகட்டத்திற்கு முன்பும் பின்பும் 10 வருடங்கள் இவர் பேசிய காஷ்மீரிகளுடனான உரையாடல்கள், அதன் மூலம் கிடைத்த அடிப்படை புரிதல்கள், பரூக் அப்துல்லாவிடம் துலாத் தகவல் சேகரிக்க முடியாத இயலாமை என இந்த புத்தகம் நகர்கிறது.

முன்னாள் பஞ்சாப் மாநில முதல்வரும், முன்னாள் குடியரசு தலைவரான ஜெயில் சிங் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்கள் நூலினிடையே நிரவிக் கிடக்கின்றன.முதல் முறை ஏ.எஸ்.துலாத்தும் ஜெயில் சிங்கும் சந்திகரில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சந்தித்து சாப்பிடும் தரமான சிக்கன் பிரியாணி துவங்கி, ஜெயில் சிங் அமெரிக்காவுக்கு இதய ஆபரேஷன் செய்துக்கொள்ள சென்று வந்தபோது அவரோடு சேர்ந்து செக்யூரிட்டி ஆபீஸராக 20 நாட்கள் அங்கு துலாத் ரவுண்டு அடித்தது எல்லாம் உபரி மசாலா தகவல்கள்.

ராஜஸ்தான் கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தன் பணியை தொடங்கிய துலாத் தலைமை பணிகளை அலங்கரித்திருக்கிறார்.
அவர் காஷ்மீரிகளை விரல்நுணி போல அறிந்துவைத்திருக்கிறார்.
அவர்கள் பற்றி அவர் சொல்லும் சில அரிய தகவல்கள்:

1.காஷ்மீரி நேரடியாக உண்மையை உரைக்க மாட்டார்.பல உட்கதைகள் கொண்டதுதான் அவர் கூறும் உண்மை.
2.காஷ்மீரில் உண்மைகளைவிட புனைக்கதைகளே உண்மையானவை.
3.காஷ்மீரி ஒருவர் உங்களை தன் இல்லத்து திருமணத்துக்கு கெஸ்ட்டாக அழைத்துவிட்டார் என்றால் அவரின் பரிபூரண நம்பிக்கையை நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

போன்ற சிலபல அதிரடி நிஜங்கள்.

இந்த புத்தகத்தை ஆதித்யா சின்காவுடன் இணைந்து எழுதியுள்ளார் துலாத்.பேச்சுவார்த்தையே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு என வாஜ்பாயி நிரூபித்து சென்றிருக்கிறார் என்பதை துலாத் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார்.

நீங்களும் வாசிக்க.
வர்ட்டா?!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s