தனி ஒருவன்

image

ரொம்ப நாட்களாக பார்க்க ஆசைப்பட்ட படம்.
எழும்பூர் சங்கம் மல்டிப்ளெக்ஸில் நண்பன், பெஞ்ச் மேட் சதீஷூடன் பார்த்தேன்.
நயன், அர்விந்த் ஸ்வாமி, ரவி கச்சிதமாக நடித்திருந்தார்கள்.

டிரக் மாபியா, கிரானைட் முறைகேடு, அடியாட்கள் சப்ளை இது மூன்றை நடத்தும் ஆட்களைத்தான் முதலில் குறி வைக்கிறார் ரவி.ஐபிஎஸ் தேர்வில் முதலிடம் பெற்று அழகிய முசோரியில் உள்ள ஆபீஸர்கள் டிரெயினிங்கின் போது நண்பர்களையும் காதலியையும் சந்திக்கிக்கிறார்.ஆனால் இந்த நெட்வொர்க்குக்கெல்லாம் தலைவர் வில்லாதி வில்லன் அர்விந்த் ஸ்வாமி.

நயனின் ஒன்சைட் லவ் மற்றும் பிரபோசல் சூப்பர்.அவங்களுக்கு ரிவர்ஸ்ல வயசாகுது.அழகாயிட்டே இருக்காங்க.லவ் யூ நயன்.
ரவி மிடுக்கு.தன்னோட கேரக்டரை எந்த அளவுக்கு மெருகேத்த முடியுமா அவ்வளவு உழைப்பையும் கொட்டியிருக்கார்.
ஒவ்வொரு நிமிடத்தையும் சமூகத்துக்காகவும் அதன் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் அறிவின் தேடலாகவுமே கழியும் ரவிக்கு நயனின் காதல் புதிது.

அர்விந்த் ஸ்வாமி தி ஷோ ஸ்டீலர்.எதற்காக எல்லாரும் அர்விந்தை பாராட்டுகிறார்கள் என்று படம் பார்த்த பின்பு தான் புரிந்தது.பழனியாக வாழ்வை ஆரம்பித்து சித்தார்த் அபிமன்யுவாக அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ரேஞ்சுக்கு வளர்ந்த ஸ்டைல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அவரது ஒவ்வொரு அசைவும் மேனரிஸமும் முழுமை.

அவர் உச்சரிக்கும் வார்த்தைகள்,அதன் ஒலி அளவு, அதன் நுணுக்கம் கூட ஈர்க்கிறது.அளந்து ரசித்து இயக்கியிருக்கிறார் ஜெயம் ராஜா(மோகன் ராஜா).
ஹிப்ஹாப் தமிழா இசையில் மாஸ் காட்டுகிறார். காதல் கிரிக்கெட், தீமை தான் வெல்லும் என அவருக்கு டபுள் டிலைட் பிரமோஷன் மக்களிடத்திலே.

வசனம் பக்கா சூப்பர்ப்.
“நாட்டுக்காகலாம் ஒண்ணும் இல்லை.நீ கேட்ட! நான் கொடுத்தேன்.அவ்ளோதான்.” இடம் கைதட்டல் அள்ளுது.நயன் காதலை ஏற்று ரவி திரும்ப எழுத்து மூலம் பிரபோஸ் பண்ணும் அந்த இடம் அதிரல்.கணேஷ் வெங்கட்ராமனும் ஏனைய நண்பர்களும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள்.அருமை.

இவ்வளவு மேட்டர் தன்னிடத்திலே வைத்துக்கொண்டு இந்த ஜெயம் பிரதர்ஸ் இவ்வளவு நாட்களும் ஏன் ரீமேக் செய்துவந்தனர் என்ற கேள்வியை தனி ஒருவன் திரைப்படத்தின் பெரும் வெற்றி மூலம் மக்கள் சத்தமாகவே கேட்டுவிட்டனர்.புகுந்து விளையாடுங்க பிரதர்ஸ்.உங்க கதை தான் சூப்பர் டூப்பர் ஹிட்.தெலுங்குலாம் இங்க இருந்துதான் கதையை கடன் வாங்கனும் இனிமே!

வாழ்த்துக்கள்.

Advertisements

Half Girlfriend-ஹாஃப் கேர்ள்பிரண்ட்

image

சேத்தன் வழக்கம் போல அசத்திவிட்டார்.
சப்பையாக ஆரம்பித்து செம்மையாக முடிந்தது கதை.
ஒரு பக்கா லோக்கல் பீகாரி பையன்(ஆனா ராஜ பரம்பரை) ஹைகிளாஸ் டெல்லி கல்லூரியில் சேர்ந்து செம்ம மாடர்ன் பொண்ணுக்கு காதல் வலை விடுவதும் அது நிகழ்ந்ததா என கதை நகர்வதும் சூப்பர்ப்.

பீகார், டெல்லி, பாட்னா, லண்டன், நியூ யார்க் என அசத்தல் கதைக்களங்கள்.கல்லூரி, நிகழ்காலம், அதி நிகழ்காலம் என பரேடு கட்டி டைம்லைன் மாற்றியிருக்கிறார்.ரியா சோமானி-மாதவ் ஜா செம்ம ஜோடி.
சேத்தனும் ஒரு கேரக்டராக வருகிறார்.சேத்தன் தன்னையும் தன் எழுத்தையும் சில இடங்களில் கதாபாத்திரங்களை வைத்தே சுய பகடி செய்திருக்கிறார்.
இயல்பை இயல்பாகவே வெளிப்படுத்தியிருக்கும் இடங்கள் படு இதம்.

உடல் முழுக்க வெது வெது ஒத்தடம் கொடுப்பது போல மனதிற்கு ஒத்தடம் கொடுக்கிறது புத்தகம்.என்னை பொறுத்தவரையில் எனக்கும் ஹாப் கேர்ள்பிரண்ட்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்கள் எவ்வளவு இதில் பொருந்தி போகிறார்கள் என்று ஒவ்வொரு இந்திய ஆணும் நினையும் வண்ணம் இந்த கதையை எழுதியிருப்பதுதான் நாவலின் வெற்றி.

வெறுமனே இரு மனங்களின் காதல் போரை சொல்லாமல் இந்தியாவின் ஆழ அரசியலை, வேறுபாடுகளை, அலசப்படாத பக்கங்களை சொல்லி செல்வதுதான் சேத்தன் டிரேட்மார்க்.இதில் அது மிக அற்புதமாக வொர்க்அவுட் ஆகி உள்ளது.

ரியாவின் பெர்சனல் ஜர்னல் பதிவுகள் மறைக்கப்படும் இந்திய பெண்கள் மனங்களின் பிரதிபலிப்பு.நியூயார்க் தருணங்கள் கவுதம் மேனன் படம் நினைவு தந்தாலும் அதை இன்னொரு லெவலுக்கு காதல் மூலம் மெருகேற்றியிருக்கிறார் சேத்தன்.

49 ரூபாய் கொடுத்து தான் 176 ரூபாய் மதிப்புள்ள பேப்பர்பேக்(paperback) எடிஷனை அமேஸான் சுதந்திர தின சலுகையில் வாங்கினேன்.ஆனால் அது விலை மதிப்பில்லாத பயணங்களை மனதளவில் எனக்களித்தது.
புத்தகங்களுக்கு என்றுமே விலை நிர்ணயிப்பது வேடிக்கை தான்.பாவம் அதை வைத்தும் பலர் ஜீவித்து தானே ஆகவேண்டும்?

சக்தி.

தமிழக மாக்டெயில்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கோலாகலமாக இரு நாட்கள் நடைபெற்று நேற்று நிறைவடைந்தது.முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் குவிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதார்.இதில் 10-20 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்தால்கூட பெறும் தொழிற்வளம் பெருக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தொலைக்காட்சி விவாத உரையாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னையே ஒருவாரமாக மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தகிதகித்தது.எப்படி கலைஞருக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம்,கோவை உலக தமிழ் செம்மொழி மாநாடு, குமரி திருவள்ளுவர் சிலை போன்றவை சாதனைகளோ அது போலவே இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது ஜெ சாதனை பக்கங்களில் ஒன்றாகும்.

என் கல்லூரிக்கு 12ஜி பேருந்தில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது, கடற்கரை சாலையில் எங்களை திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கறுப்பு நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஜிவ்வென்று முந்தி சென்றார்.அதுதான் நான் ஸ்டாலினை நேரடியாக முதல் முதலாக பார்க்கும் தருணம்.
டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தார்.அலுவல் நிமித்தமோ என்னவோ முகம் யோசனையில் இருந்தது.கோட்டைக்கு எங்கள் கல்லூரி வழியாக பல தலைவர்கள் சென்று வருகின்றனர்.மேலும் பலரை நேரில் காண வாய்ப்புண்டு.

இன்று பாரதியின் நினைவு தினமும் கூட.அந்த எட்டயபுரத்து மீசைக்காரர் என்றும் நம் தமிழாய் பயனிப்பார்.இது அவரது 94வது நினைவு நாள்.பாரதி நூற்றாண்டு இன்னும் ஆறு ஆண்டுகளில்!!

இரு நாட்களாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கல்லூரி செல்ல இயலவில்லை.இதுவும் கடந்து போகட்டும் பிரம்மா.
தரமணி பல்கலைக்கழக விடுதிக்கு விண்ணப்பித்து விட்டேன்.தேசியமயமாக்ககப்பட்ட வங்கியில் கட்டணம் செலுத்தி ரசீதை விடுதி மேலாளரிடம் அளித்துவிட்டேன்.வெஜிடேரியன் மெஸ்ஸூக்கே பரிந்துரைத்துள்ளேன்.விரைவில் அங்கு இடம் பெயர்வேன்.

அங்கிருந்து சேப்பாக்கத்துக்கு ரயில் பிடித்து செல்ல வேண்டும்.பறக்கும் ரயில்.இதுவும் கலைஞர் கொண்டுவந்த ஒரு திட்டம்.ஆனால் ரயில் நிலையங்கள் குப்பை கூளங்கள் போல காட்சி அளிக்கின்றன.
சலுகை கட்டணத்துக்கு விண்ணப்பித்து விட்டேன்.விரைவில் சீஸனல் பாஸ் வாங்கிவிடுவேன்.

தனி ஒருவன் அர்விந்த் ஸ்வாமியை திரையில் இன்னும் ரசிக்கவில்லை.எல்லாரும் ஓவராக ஹைப் ஏற்றுகிறார்கள்.நேரம் அமையவில்லை.யட்சன் என்னும் விஷ்ணுவர்தன் படமும் இன்று வெளியாகியுள்ளது.பா.விஜய் வேறு ஸ்ட்ராபெர்ரி என்ற பேய் படத்தில் நடித்துள்ளார்.பாகுபலி 600 கோடியை தாண்டிவிட்டதாம்.
யார் கண்டா? எல்லாம் கேள்வி ஞானம் தான்.

பாக்கலாம்.!

திருவண்ணாமலை டூ திண்டிவனம்&திருவண்ணாமலை டூ செங்கம் சாலைகள்

டிஸ்கவரி சேனலில் உலகின் அதி நவீன சாலைகள் என்று ஒரு டாப் 10 லிஸ்ட் நிகழ்ச்சி நடத்துவர்.
அதில் நம் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு சாலை இடம் பெற்றுள்ளதா என்றெல்லாம் எனக்கு தெரியாது.
ஆனால் அதில் அதி மட்டமான சாலைகள் என்று போட்டி ஏதேனும் நடந்தால் நிச்சயமாக அந்த அவார்டு நமக்கு தான்.

அதிலும் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர்/சேலம் செல்வதற்கு செங்கம் வரை உள்ள சாலை வழியே சென்றால் தெரியும்.ஏதோ சீரமைப்பு பணிகள் என்ற போர்வையில் கன்னா பின்னா என்று ரோட்டை வைத்திருக்கிறார்கள்.
நிறைய இடங்களில் ஜேசிபிக்கள் நிற்க-டேக் டைவர்ஷன் என்றொரு பலகை வேறு.

இது ஒருபுறம் என்றால் மற்றொரு பிரதான சாலையான திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் சாலையும் செஞ்சி-திண்டிவனம் வரை குண்டும் குழியுமாய் உள்ளது.நான் பொறியியல் படித்த காலத்தில் இருந்து இதே நிலை தான்.
இப்பொழுது படித்து முடித்து, வேலை சென்று ஒரு வருட அனுபவம் பெற்று பின் மேலாண்மை முதலாம் ஆண்டும் சேர்ந்து விட்டேன்.இன்னமும் நிலைமை மாறவில்லை.

NHAI ஆட்கள், அரசு அதிகாரிகள்,நம் அரசியல்வாதிகள் எல்லாரும் பயன்படுத்தும் மிக முக்கியமான ரூட் இது.எப்படி இவ்வளவு நாட்களாக இவ்வளவு கேவலமாக இவர்களால் இந்த சாலையை பராமரிக்க முடிகிறது?
இதற்கே ஒரு குவாலிட்டி அஷூரன்ஸ் அவார்டு இவர்களுக்கு தரப்பட வேண்டும்.
பிராவோ பிராவோ..
இந்த சாலையில் அதி நவீன புஷ்பேக் பேருந்தில் பயணிக்கும் போதுகூட அதி பயங்கர அதிரல்களை நீங்கள் உணரலாம் என்பது கூடுதல் சிறப்பு.
சாதாரண பேருந்துகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
தீம் பார்க் மான்ஸ்டர் ரைட், ரோலர் கோஸ்டர் தான்.

இரவில் பேருந்தில் ஜன்னலோர இருக்கை பிடித்து,காற்று வாங்கிக்கொண்டே இளைய ராஜா பாடலை இயர்ஃபோன்ஸில் ரசிப்பதென்பது ஒரு தொன்றுதொட்ட பாரம்பரியம்.
அதை நாம் சென்னையிலிருந்து திண்டிவனம் சாலை வரை தான் அனுபவிக்க முடியும்.
அதற்கு மேல் காஞ்சனா 2 வகையறா பாடல்களை கேட்டால்தான் அதிர்வுகளை சமாளிக்க முடியும்.

கார், பைக்கில் செல்பவர்கள், வயதானவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்து தான் இந்த பயணம் மேற்கொள்கிறார்கள்.பிரசவ வலியில் இந்த ரூட்டில் மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண்களை அழைத்து சென்றால் வழியிலேயே பிரசவம் கன்ஃபர்ம்.
குழந்தை ஆசை உள்ள,ஆனால் பெரும் சண்டை சச்சரவு உள்ள தம்பதி அருகருகே புஷ்பேக்கில் படுத்து சென்றால் குழந்தை பிறக்க வாய்ப்பு பிரகாசம் என்பதை கவனிக்க.எந்த சிட்டுக்குருவி லேகியமும் தேவையில்லை.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த இரு சாலைகளுக்கும் யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து பெற பெட்டிஷன் எழுதி மக்களோடு மக்களாக ஒரு கையெழுத்து போராட்டம் நடத்தலாம் என்றிருக்கிறேன்.
விரைவில் உங்கள் ஆதரவை அதற்காக நாட இருக்கிறேன்.
இப்பொழுது விடை பெறுகிறேன்.

வர்ட்டா??!!

இரண்டாம் வாரம் மேலாண்மையில்..

image

மென் திறன் வகுப்பில் ஜெர்மன் பாடத்தை வேறு டிபார்ட்மெண்ட் மாணவர்கள் நிரப்பி விட்டதால் எங்களுக்கு கல்தா கொடுத்துவிட்டார்கள்.
அதனால் சயின்டிபிக் ரைட்டிங் என்றொரு மென்திறன் கோர்ஸை தேர்வு செய்திருக்கிறோம்.இது பாயிண்ட் நம்பர் 1.இந்த கோர்ஸ் ஆராய்ச்சி தீஸிஸ் கட்டுரை, பேப்பர் பிரஸன்டேஷன் போன்ற இடங்களில் மிக பயனுள்ளதாக அமையும்.இது ஒரு புறம்.

முதல் கெஸ்ட் லெக்சர் முடிந்தாயிற்று.திருமதி.பத்மஜா அவர்கள் the drive that drives you என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகத்திற்குள் முதல்முறையாக என் நண்பன் பிரவீனுடன் நுழைந்து பார்த்தேன்.
சூப்பராக படிக்கலாம்.இரு புத்தகங்கள்-இந்திய பண்டைய ராணுவ என்சைக்ளோபீடியா என்ற புத்தகமும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தை பற்றிய விஷூவல் புத்தகமும் புரட்டினேன்.
பழமையும், மரத்தாலான டெஸ்க்குகளின் கம்பீரத்தில் சின்ன சின்ன டேபிள் லைட்டிங்குகளோடு, முன்னாள் அமர்ந்திருப்பவருக்கும் நமக்கும் இடையே உள்ள துவாரம் என விண்டேஜ் உணர்வு கொடுத்தது எங்கள் பல்கலைக்கழக நூற்றாண்டு நூலகம்.

ஆற்காடு நவாப் எங்கள் பல்கலைக்கு பரிசாக அளித்த மிகப்பெரிய அரண்மனை தர்பார் மண்டபத்தை கண்டோம்.பதினைந்து முதல் இருபது அடி இருக்கும் அந்த சீலிங்.
நவாப் உணர்வை விட ஏதோ தேவாலயம் போன்ற உணர்வு தான் அதிகமாக பட்டது எனக்கு.
பழங்கால தொங்கும் விளக்குகள், பெல்ஜியன் கண்ணாடி என அதுவொரு அனுபவம்.
கல்லூரி பிரெஷ்ஷர் தினத்தன்று கவிதை, பாட்டு, கலாய் என்று கலகலப்பாய் சென்றது.என் நண்பன் ராஜ்குமார் வாய் இருக்க வாக்ஸூக்கு(துறையின் மாணவ மேலாண்மை குழு) நிகழ்ச்சி நடத்த வேறென்ன வேண்டும்.
இன்னும் பற்பல நிகழ்வுகள் நண்பர்களுடன்.மீண்டும் சந்திக்கிறேன் மக்காஸ்.

வர்ட்டா??!!