திருவண்ணாமலை டூ திண்டிவனம்&திருவண்ணாமலை டூ செங்கம் சாலைகள்

டிஸ்கவரி சேனலில் உலகின் அதி நவீன சாலைகள் என்று ஒரு டாப் 10 லிஸ்ட் நிகழ்ச்சி நடத்துவர்.
அதில் நம் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு சாலை இடம் பெற்றுள்ளதா என்றெல்லாம் எனக்கு தெரியாது.
ஆனால் அதில் அதி மட்டமான சாலைகள் என்று போட்டி ஏதேனும் நடந்தால் நிச்சயமாக அந்த அவார்டு நமக்கு தான்.

அதிலும் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர்/சேலம் செல்வதற்கு செங்கம் வரை உள்ள சாலை வழியே சென்றால் தெரியும்.ஏதோ சீரமைப்பு பணிகள் என்ற போர்வையில் கன்னா பின்னா என்று ரோட்டை வைத்திருக்கிறார்கள்.
நிறைய இடங்களில் ஜேசிபிக்கள் நிற்க-டேக் டைவர்ஷன் என்றொரு பலகை வேறு.

இது ஒருபுறம் என்றால் மற்றொரு பிரதான சாலையான திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் சாலையும் செஞ்சி-திண்டிவனம் வரை குண்டும் குழியுமாய் உள்ளது.நான் பொறியியல் படித்த காலத்தில் இருந்து இதே நிலை தான்.
இப்பொழுது படித்து முடித்து, வேலை சென்று ஒரு வருட அனுபவம் பெற்று பின் மேலாண்மை முதலாம் ஆண்டும் சேர்ந்து விட்டேன்.இன்னமும் நிலைமை மாறவில்லை.

NHAI ஆட்கள், அரசு அதிகாரிகள்,நம் அரசியல்வாதிகள் எல்லாரும் பயன்படுத்தும் மிக முக்கியமான ரூட் இது.எப்படி இவ்வளவு நாட்களாக இவ்வளவு கேவலமாக இவர்களால் இந்த சாலையை பராமரிக்க முடிகிறது?
இதற்கே ஒரு குவாலிட்டி அஷூரன்ஸ் அவார்டு இவர்களுக்கு தரப்பட வேண்டும்.
பிராவோ பிராவோ..
இந்த சாலையில் அதி நவீன புஷ்பேக் பேருந்தில் பயணிக்கும் போதுகூட அதி பயங்கர அதிரல்களை நீங்கள் உணரலாம் என்பது கூடுதல் சிறப்பு.
சாதாரண பேருந்துகள் என்றால் கேட்கவே வேண்டாம்.
தீம் பார்க் மான்ஸ்டர் ரைட், ரோலர் கோஸ்டர் தான்.

இரவில் பேருந்தில் ஜன்னலோர இருக்கை பிடித்து,காற்று வாங்கிக்கொண்டே இளைய ராஜா பாடலை இயர்ஃபோன்ஸில் ரசிப்பதென்பது ஒரு தொன்றுதொட்ட பாரம்பரியம்.
அதை நாம் சென்னையிலிருந்து திண்டிவனம் சாலை வரை தான் அனுபவிக்க முடியும்.
அதற்கு மேல் காஞ்சனா 2 வகையறா பாடல்களை கேட்டால்தான் அதிர்வுகளை சமாளிக்க முடியும்.

கார், பைக்கில் செல்பவர்கள், வயதானவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள் எல்லாம் ரிஸ்க் எடுத்து தான் இந்த பயணம் மேற்கொள்கிறார்கள்.பிரசவ வலியில் இந்த ரூட்டில் மருத்துவமனைக்கு கர்ப்பிணிப் பெண்களை அழைத்து சென்றால் வழியிலேயே பிரசவம் கன்ஃபர்ம்.
குழந்தை ஆசை உள்ள,ஆனால் பெரும் சண்டை சச்சரவு உள்ள தம்பதி அருகருகே புஷ்பேக்கில் படுத்து சென்றால் குழந்தை பிறக்க வாய்ப்பு பிரகாசம் என்பதை கவனிக்க.எந்த சிட்டுக்குருவி லேகியமும் தேவையில்லை.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த இரு சாலைகளுக்கும் யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து பெற பெட்டிஷன் எழுதி மக்களோடு மக்களாக ஒரு கையெழுத்து போராட்டம் நடத்தலாம் என்றிருக்கிறேன்.
விரைவில் உங்கள் ஆதரவை அதற்காக நாட இருக்கிறேன்.
இப்பொழுது விடை பெறுகிறேன்.

வர்ட்டா??!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s