தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்

நடிப்பின் மன்னனாக லியோனார்டோ டீ கேப்ரியோ வலம் வந்திருக்கும் சித்திரம்.

வர்த்தக உலகின் தலைநகரமான நியூயார்க் நகரத்தின் வால் ஸ்ட்ரீட்டுக்கு பணக்காரனாகும் கனவுடன்-புதிதாக திருமணமான லியோ வருகிறார்.அவரை வால் ஸ்ட்ரீட்டின் கலாச்சாரத்துக்கு மாற்றுகிறார் மேத்யூ மெக்கானகே.தண்ணி அடிக்கிறார், தம் அடிக்கிறார், கை அடிக்கிறார், டிரக்ஸ் அடிக்கிறார், தொலைபேசியில் ஸ்டாக் பிரோக்கராக டயல் செய்து கஸ்டமர்களிடம் சாமர்த்தியமாக வாயடிக்கிறார். வால் ஸ்ட்ரீட்டின் கம்ப சூத்திரம் புரியும் தருவாயில் அவர் வேலைக்கு சேர்ந்த கம்பெனி கல்தா ஆகிறது.

மனைவியின் வற்புறுத்தலால் லாங் தீவில் உள்ள மட்டமான ஒரு பிரோக்கிங் ஏஜென்ஸியில் வேலைக்கு சேர்ந்து, தன் திறமையால் அதை வேற ரேஞ்சுக்கு மாற்றிவிடுகிறார்.அங்கு தன் வருங்கால உயிர் நண்பன் டானியை சந்திக்கிறார்.டானியும் லியோவும் சேர்ந்து பிங்க் ஷீட்ஸ் எனப்படும் மட்டமான கம்பனிகளின் பங்குகளை அதிக கஸ்டமர்களுக்கு 50% கமிஷனில் விற்கும் பிரோக்கிங் நிறுவனத்தை துவங்குகிறார்கள்.அதுதான் ஸ்ட்ராட்டன் ஓக்மண்ட். அவர்களுக்கு எந்த லாஜிக்கோ தொழில் தர்மமோ கிடையாது.ஒரே தர்மம் பணம்.அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களாகிறார்கள்.

என்ன செய்வது என தெரியாத அளவிற்கு பணம் குவிகிறது.அதை வைத்து இல்லாத டிரக்ஸையெல்லாம் தேடி தேடி அடிக்கிறார்கள்.லியோ மனைவியை விவாகரத்து செய்து விட்டு,நயோமி என்றொரு மாடலை திருமணம் செய்து கொள்கிறார்.கம்பெனியில் எல்லா வேலையாட்களும் வேலை நேரத்திலேயே ஃபக் செய்கிறார்கள்-அனைத்து கசமுசாக்களும் நடக்கின்றன.இது பத்தாதென்று ஒரு பிரைவேட் கப்பல், அதில் கூத்து, உலக பயணம்-இதர பார்ட்டிகள், பாலியல் தொழிலாளிகளுடன் தினசரி உறவு என்று சாதாரண மனிதனால் ஜீரணிக்க முடியாத வாழ்வை வாழ்கிறார்கள். கூடவே கோடி கோடியாக பணம் குவிகிறது.
இதற்கெல்லாம் ஒரேடியாக ஆப்பு கொடுக்கப் படுகிறது.அதை அவர்கள் எப்படி எடுத்தார்கள்? என்ன ஆனார்கள் என்பதுதான் படமே.
பாருங்கள்.

Advertisements

நானும் ரவுடிதான்

image

தனுஷ் தயாரிப்பு.
அனிருத் மியூசிக்.
விஜய் சேதுபதி-நயன்தாரா ப்பா ஜோடி.

இதை விட யூத் புல்லர் காந்தம் வேறென்ன வேண்டும்?
செம்ம கலர்ஃபுல் ஜாலி படம்.
நண்பர்களுடன் பார்த்து குலுங்கி சிரிக்க ஏதுவானது.

ப்ளஸ்: பிஜிஎம், சாங்ஸ்,சேதுபதி, இளம் நயன், ஆர்ஜே பாலாஜி கலாய்ஸ், மொட்டை ராஜேந்திரன் மீம்ஸ் பாடி லேங்குவேஜ், பார்த்திபன் நக்கல், மன்சூர் அலி கான்,”ராகுல்” பெரியவர், டயலாக்

மைனஸ்:ரொம்ப சுமாரான கதை,சில ரவுடி லாஜிக்

ஒரு தடவை பாக்கலாம்.விஜய் சேதுபதிக்காக இரண்டாவது தடவைகூட பாக்கலாம்.டயலாக் டைமிங் மாடுலேஷன்தான் செம்ம மாஸ். /\

மல்டிப்ளெக்ஸ, பக்கா லோக்கல் தியேட்டர் எங்க வேணா ஹிட் ஆகும். அதான் ‘சேதுபதி ரீச்’.

மேக்கிங் இந்தியா ஆஸம்

image

புனைவு அல்லாத சேத்தன் பகத்தின் இரண்டாவது புத்தகம்.
176 ரூவாய் விலை.
அமேஸான் ப்ரீ ஆர்டரில் 125 ரூவாயில் புக் செய்து வாங்கி பல நாட்கள் படிக்காமல் கிடந்தது.
சென்ற வார இறுதியில் படித்தே ஆகவேண்டும் என்ற வேட்கை பிறந்தததால் படித்து முடித்துவிட்டேன்.

படிப்பதற்கு முன் என்னிடம் பல பேர் இந்த புத்தகம் ஒன்றும் அவ்வளவு சிறப்பில்லை என்று விமர்சித்தார்கள்.எல்லாம் வெட்டி பிம்பம் வீண் ஜம்பம் என்று கூறப்பட்டது. நானும் எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தான் படிக்க அமர்ந்தேன்.

ஒரு கோணத்தில் பார்த்தால் ரொம்ப சிம்பிளான ,அலட்டிக் கொள்ளாமல் எழுதிய புத்தகமாக இது படுகின்றது.மறுபுறம் இவ்வாறு எளிமைப்படுத்துவதற்கு எத்தகைய மெனக்கெடல்களை சேத்தன் கையாண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.இரண்டு உணர்வுகளும் உங்களுக்கும் நிச்சயம்.அவரின் முதல் புதினமில்லா புத்தகம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எழுதப்பட்டது.
இந்த புத்தகம் பாஜக ஆட்சிக்கு வந்ததிற்கு பிறகு நடக்கும் விஷயங்களை, செய்ய வேண்டிய செயல்களை விவாதிக்கிறது.

யோசித்து பார்த்தால் சேத்தன் இந்த புத்தகத்தில் தொடாத விஷயங்கள் குறைவு.எல்லா பிரச்னைகளையும் வெறுமனே சுட்டிச் செல்லாமல் அதன் பின்புலத்தை ஆராய்ந்து, அதற்கு மிக சின்ன ஒரு பதிலையாவது அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் சேத்தன்.

கே-லெஸ்பியன் போன்ற பாலின சிறுபான்மையினர், முஸ்லிம்கள் போன்ற மத சிறுபான்மையினரின் உணர்வுகளை அவர்கள் கோணத்திலிருந்து அறிவியல் பூர்வமாக அணுகி, மற்றவர்களுக்கு புரிய வைக்க முயல்கிறார்.

இந்தியா எவ்வாறு ஆஸமான நாடாக அமைய முடியும் என்னும் வஸ்துக்களை புட்டு புட்டு வைக்கிறார்.அந்த கனவு போதையை மனதில் ஏற்றிக்கொண்டால் வியர்க்க விறுவிறுக்க உழைத்து முன்னேறலாம்.

எல்லாமே டிட்பிட்ஸ் போன்ற சின்னசின்ன துணுக்கு குறிப்புகள்.யார் வேண்டுமானாலும் யோசித்து விடலாம் என்பது போல தோன்றும்.
பட் உண்மையில் அது அவ்வளவு சுலபம் இல்லை.அந்த வித்தையை சேத்தன் கற்றிருக்கிறார்.அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ஒருமுறையேனும் வாசித்து, நம்மை சுய பகடி செய்து சிந்தித்து முன்னேற ஏற்ற நூல்.

Available on:
ஃபிலிப்கார்ட் மற்றும் அமேஸான்.

பிரேமம்

image

முடிவில்லா காதல்களின் கதை.
மலையாள ஃபிரெஷ் ஆட்டோகிராஃப்.
அல்போன்ஸ் புத்திரனின் ஹை கிராஃப்.

மலர் என்ற சாய் பல்லவிக்கு நம்மை காதலர்களாய் மாற்றும் படம்.மீசையிலா பள்ளி அரைவேக்காடாக சைக்கிள் துரத்தல், லேண்ட்லைன் காதல் மொழி என மாணவ நிவின்;

கறுப்பு சட்டை, கதர் வேட்டி, தாடி, சிகரட், சாராயம், ரவுடியிஸம் என கல்லூரி நிவின்;

பேக்கரி, சிகரட், ஏமாற்றம், முறுக்கு மீசை, திடீர் குதூகலம் என மெச்சூர் நிவின் – – மலர்,செலின்(மேரியின் தங்கை),பள்ளிக்கால மேரி காதல்கள் என சுழன்றடிக்கிறது படம்.ஆண்மனதை உண்மையாக கவர் செய்திருக்கிறது.

கட்டாஞ்சாயா, லெமன் ஜூஸ், டீக்கடை உரையாடல்கள்,கல்லூரி மாணவர்களின் பெஞ்ச் தட்டல் இசை, சண்டை அதிரடி தீம் மியூசிக், திலீப்பின் அந்த ஒரு ஸீன் மேஜிக், ஜொள்ளு சொட்டை வாத்தி, அவரின் அல்லக்கை பி.டி. மாஸ்டர், நெய்மீன் மீது நம் எச்சில் ஊறவைத்தல்(இத்தனைக்கும் நான் சைவம்), கேரள இயற்கை, அடிக்கடி பட்டாம்பூச்சி மூலம் விஷூவல் கதை சொல்லுதல், சூப்பர் வெடி+ ரியலிஸ சண்டை காட்சிகள், மலரின் கொஞ்சு மொழி, அவள் ஆடும் அதிரடி ஆட்டம், சைகை செய்யும் சொர்க்க உணர்வு, காதல் தோல்வியின் நறுமண வலி, மீண்டும் வாழ்வுண்டென்ற நம்பிக்கை விதைப்பு என இளம் இயக்குநர்களுக்கு கதையை எப்படி செதுக்கி நகர்த்த வேண்டும் என படியளந்திருக்கிறார் அல்போன்ஸ்.

அப்ளாஸ்.

சவுதி வரலாறு-ஒரு பதம்

கருத்தில் கொள்ளவேண்டியவை

இபின் சவுத்(19ம் நூற்றாண்டு).
வஹாப்
இபின் சவுத்(20ம் நூற்றாண்டு)
வஹாப் சந்ததியினர்.
1930 வாக்கில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.

பிரிட்டிஷ் துருப்புகளின் துணை.
வஹாபி சிந்தனை பள்ளியின் பழங்குடி வீரர்கள் திறன்.

ஷரியா குரான் படியும், முகம்மது நபிகளின் போதனைகள் படியும் எழுதப்பெற்ற சட்டம்.அதன் மிக கண்டிப்பான வடிவம் கொண்டு தூய்மையான இஸ்லாத்தை நோக்கி அரேபியாவை வழிநடத்த வஹாப் ஆசைப்பட்டார்.மதத்துக்குள் புதுமைகள் புகுத்துபவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணி நஜ்ப் மன்னன் அல்-சவுத் உடன் இணைந்தார்.

சவுத்துக்கும் இஸ்லாமிய பழங்குடி போர் வீரர்களை ஒன்றிணைக்க ஒரு மத பின்புலம் தேவைப்பட்டது.
இஸ்லாம் என்ற ஒரு குடை இரு தரப்பையும் இணைத்தது.
இருப்பினும் முந்தைய சவுத்தினால் அவரது லட்சியமான ஒருங்கிணைந்த சவுதி அரேபியாவை உருவாக்க முடியவில்லை.

1906ம்ஆண்டில் அல் சவுத் வம்சாவளியை சேர்ந்த இபின் சவுத், வஹாப் மத பள்ளியை சேர்ந்த பழங்குடி வீரர்களுடன் ஒருங்கிணைந்த அரேபியா என்ற ஒற்றை கொள்கையுடன், மதம் என்ற நெறியில் ரியாத் வரை பிடித்தார்.அங்குள்ள மதகுருக்கள் முதலில் ரஷித் பரம்பரைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ரியாத்தை சவுத் கைப்பற்றிய பின்னும் அந்த நிலை தொடருமா என்ன?

பாலைவன போரில் சவுத் கில்லாடி.
மெக்காவில் பிறந்து மதினாவில் வாழ்ந்த நபிகள் என்ற வகையில் அந்த இரு மசூதிகளையும் காப்பாற்றுபவராகவே தங்களை இன்றளவிலும் சவுதி மன்னர்கள் கருதி வருகின்றனர்.

இஸ்லாமிய உலகில் இந்த இரு நகரங்களாலும்தான் சவுதிக்கு பெரும் மதிப்பு.
1930 களில் சவுதியில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகளவில் மவுசு கூடியது.
முதல் உலகப் போருக்கு பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இபின் சவுத்துக்கு உதவியது.
ஒருங்கிணைந்த சவுதி அரேபியா உருவானது.

ஆனால் உலகமயமாக்கலை முழுதும் கைவிட முடியாத நிலையில் மன்னராட்சியும், அது இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதால் தவிர்க்க வேண்டும் என்று வஹாப் இனத்தவரும் கொள்கை வேறுபாட்டை இன்று அடைந்திருக்கின்றனர்.
அதுபோல தூய சுன்னி இனத்தவரும் முகம்மது நபிகளின் சந்ததியினரை பின்பற்றும் ஷியா இனத்தவரும் பெருமளவில் பிளவு கண்டனர்.இருந்தும் இரு மசூதிகளும் வருடந்தோறும் பல லட்சம் ஹாஜிக்களை பெறுகின்றன.

ஜெத்தாவில் இருக்கும் மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையமும் நிரம்பி வழிகிறது.எண்ணெய் வளமும் இன்னும் பல காலத்திற்கு கோல் புரிய உதவும்.இந்தியர்கள் பெரும்பாலும் தென்னிந்திய மலையாளர், தமிழர் வாழும் நாடு இன்றளவும் இது.

ஓமன், யேமன் தவிர கிட்டத்தட்ட அதிகபட்ச ஏரியா அரேபிய தீபகற்பத்தில் சவுதிக்கு தான் சொந்தம்.மிச்சமிருக்கும் சிறு நிலங்களில்தான் ஐக்கிய அரபு அமீரகங்களான துபாய், ஷார்ஜா, அபு தாபி, ஃபுஜைரா, ரஸ்-அல்-கைமா, இதர அமீரகங்களான பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளும் அமைந்துள்ளன.

ஆக இந்த மிகப்பெரிய நில சாம்ராஜ்யத்தை மதம் என்ற ஒற்றை கருவி கொண்டு ஒருங்கிணைத்து அதன் சுகங்களை ராஜாவாக பரம்பரை பரம்பரையாக அனுபவித்து இன்று வஹாப் மதகுருக்களின் அதிருப்தியையும் கூடவே பெற்று வந்துள்ளனர் சவுத் சந்ததியினர்.

இந்த அவார்டு காரனுங்க தொல்லை பெருந்தொல்லையா இருக்குபா!!

அராத்தின் ஹராமித்தனமான பதிவுகள் நன்றாக இருக்கும்.அதில் சாகித்ய அகாதெமி விருதை திருப்பி தருபவர்கள் பற்றிய நச் பதிவு இது.சுருக்குனு குத்தும் சில போலி தியாகிகளுக்கு..:)

காபிரைட் அராத்து

1.”சில போராட்டங்களின்போது பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை திரும்பத் தருவார்கள். இதுவே இந்தியாவில் ஆகச் சிறந்த போராட்ட வடிவம். மூர்க்க குணம் கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த போராட்டம். இவர்களை நான் தலை வணங்குகிறேன்.

ஏனென்றால் ரேஷன் கார்டு போச்சின்னா திரும்ப வாங்க முடியாது. அவ்ளோ சிரமம்.அது இல்லன்னா சிரமமோ சிரமம். ஒண்ணும் பண்ண முடியாது.

சாஹித்ய அகாடமியை திரும்ப கொடுப்பதால் , என்ன சிரமம் ? பெயருக்கு முன்னால் , பத்மஶ்ரீ போல கூட போட்டுக்கொள்ள முடியாது.

அரசை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் ரேஷன் கார்டு , கேஸ் கார்டு , டெபிட் கார்டு , பாஸ்போர்ட் , 10 வது / +2 சர்டிஃபிகேட் ( இருந்தா) , லைப்ரரி ஆர்டர் இதைப்போன்ற மேட்டர்களை திரும்பத் தருபவர்களை தலை வணங்கலாம்.

சும்மா , விருது , பாண்ட் பேப்பரை திரும்பத் தரேன்னு காம்டி பண்ணிட்டு ……

தில் இருந்தா , யாராச்சும் அம்மா கொடுத்த கலைமாமணி விருதை திருப்பித் தாங்க பாப்போம்.”

2.”சாஹித்ய அகாடமி ரிட்டர்ன் ஸ்பெஷல் கவுண்டர் திறப்பு. அக்டோபர் 15 நள்ளிரவு வரை செயல்படும்.ரிட்டர்ன் செய்ய நார்மல் சார்ஜஸ் 6.5 லட்சம். அதற்குப் பிறகு ரிட்டர்ன் செய்பவர்களுக்கு 12 லட்சம் முதல் 37 லட்சம் வரை அபராதம் . 4 வருடங்கள் வரை சட்டத்துக்குட்பட்டு சிறை தண்டனை.”

3.”சாஹித்ய அகாடமியை திரும்பத் தரும்போதுதான் சிலர் வாங்கியதே தெரியவருகிறது.”

காபிரைட் அராத்து

i agree with this.

நான் காபி செய்தது இருக்கட்டும்.இந்த மேட்டரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த சுட்டியை ஓபன் செய்து இதை பற்றி மேலும் வாசியுங்கள்.

அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா பழமை!

தமிழில் அழிக்கக்கூடாத எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் சாரு நிவேதிதாவின் தினமணியின் பழுப்பு நிற பக்கங்களில் முன்னுரையாக அவர் எழுதியிருக்கும் விஷயங்கள்.

“எனது இளம்பிராயத்து ஆசான்களில் ஒருவரான ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த தினமணியில் இதுவரை நான் எழுதியதில்லை என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது எழுதத் துவங்கும் இந்த வேளையில், எது பற்றி எழுதலாம் என யோசித்தேன். சினிமா பற்றி நிறையவே வந்துகொண்டிருப்பதால் அதைத் தவிர்க்க விரும்பினேன்.

அடுத்து, நம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மறதி பற்றி யோசித்தேன். ஏதோ ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவதுபோல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர்கூடத் தெரியாது.

சார்வாகன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். எழுத்தாளர்களுக்கே அவர் பெயர் தெரியுமா என்று தெரியவில்லை. நாரணோ ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்று ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு. உ.வே.சாமிநாதைய்யருக்கு சிலை வைத்துவிட்டோம். ஆனால் அவருடைய ‘என் சரித்திரம்’ என்ற நூலை எத்தனை பேர் படித்திருப்போம்? நோபல் பரிசு பெற்றதாலும், மேஜிகல் ரியலிசத்தினாலும் கார்ஸியா மார்க்கேஸின் பெயர் நமக்குத் தெரிகிறது. அவருடைய ‘நூறாண்டுகளின் தனிமை’ என்ற புகழ் பெற்ற நாவல் மொழிபெயர்ப்பிலும் வந்துவிட்டது. ஆனால், தென் அமெரிக்காவில் மேஜிகல் ரியலிசப் பாணியை முதல் முதலாகக் கையாண்டு வெற்றி கண்டவரான அலெஹோ கார்ப்பெந்த்தியருக்கு நோபல் கிடைக்காததால் நமக்கு அவர் பெயர் தெரியவில்லை.

இப்படி வரலாற்றின் பக்கங்களில் மறக்கடிக்கப்பட்ட ஏராளமான பெயர்களில் ஒரு சிலரையாவது இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.”

சாருவின் எழுத்து எனக்கு-நான் புதிய தலைமுறையில் பத்திரிகையாளனாக பணியில் சேர்ந்த காலத்தில் அவர் எங்கள் வார இதழில் எழுதிய “வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள்” தொடர் மூலம் அறிமுகம் ஆகிற்று.அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டேன்.எனக்கு அதிர்ச்சியாய் பதிலும் கிடைத்தது.அப்பொழுதுதான் அவர் என்னை தினமணியில் தான் எழுதி வரும் பழுப்பு நிற பக்கங்கள் பகுதி குறித்த தகவல் தெரிவித்தார்.அற்புதமான பகுதி.நான் மேலாண்மையில் முழு நேரமாக இறங்குவதற்கு முன் வரை விடாமல் வாசித்து வந்தேன்.இப்பொழுது விகடன் கூட வாசிக்க இயலவில்லை.என் நேர மேலாண்மையை மேலாண்மை அபகரித்துக் கொண்டுவிட்டது.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/

மேற்கண்ட சுட்டியில் பழுப்பு நிற பக்கங்களை நீங்கள் வாசிக்கலாம்.பழுப்பு வாசம் குமிழென வீசும்.பழமையின் மணமும் சுவையுமே தனி.அதை பருகினால் புரியும்.கொஞ்சம் பருகி பாருங்கள்.

சந்திரஹாசம்

image

http://www.vikatan.com/static/images/promotions/chandrahaasam/Chandrahaasam_emailer071015.gif

மேற்கண்ட சுட்டிக்கு சென்று வரவும்.

சோழர்களுக்கு பொன்னியின் செல்வன்.
பாண்டியர்களுக்கு சந்திரஹாசம்.
விகடனின் வைரல் மார்க்கெடிங்குக்கு ஈடு இணை இல்லை.
அதில் மயங்கினாலும் பெரும் தவறில்லை.

இந்த தலைமுறைக்கு ஏற்ப கிராஃபிக் நாவலாக
உருவாக்கி இருக்கிறார்கள்.
விலை 1500 ரூவாயிலிருந்து தள்ளுபடியாக 1000 ரூவாய்க்கு தருகிறார்கள்.

சகோதர யுத்தத்தால் சாய்ந்த பல சாம்ராஜ்யங்களுள் பாண்டிய சாம்ராஜ்யமும் ஒன்று.
அதன் கதையை வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

மேலும் வைகை நதி நாகரிகம் என்ற தொடரையும் விகடனில் எழுதி வருகிறார்.இயன்றால் அதையும் வாசிக்க.

இனர்ஷியா

ஆந்தையின் முறைப்பை போல தூக்கமிலா தருணங்களில் வரும் கடுப்பையெல்லாம் அடக்கிக்கொண்டு ஒரு முனிவர்போல அமர்ந்திருக்கையில் வேதாள விஸ்வாமித்ரா ஜாலி கற்பனைகள் நம்முள்ளே புரள்வதுண்டு.அது போலவே பலருக்கும் காந்தி பற்றிய கற்பனை உண்டு போலும்.காந்தி இவரை வைத்திருந்தார்-அவரை வைத்திருந்தார் என்று சொல்லி அவரை மட்டுபடுத்துவதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.இதற்கெல்லாம் பொளேர் என்று அடி கொடுப்பது போல எஸ்.ராவின் ஒரு பத்தியை நண்பர் அசோக் தன் பதிவுகளில் குறிப்பிட்டு வந்தார்.காந்தி குறித்து நானும் ஆங்கிலத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தேன்.

Today vijay and ajith fans are fighting over the fact whether puli is a blockbuster or worse than sura.
Tomorrow people will form new groups and start to fight Gandhi versus Bose clash of clans.

I am not here to pose as a Gandhi afficionado but let me tell you something.If his philosophy can inspire Mandela and Kalam, it holds good for any civilian. I think over statements of people questioning whether non violence holds good anymore in this nuclear world.
Ultimately ask Japan or after flaunting your Boscian war biceps in the future, you are sure to realise the Gandhian path is more sensible and rational.
Btw Happy Gandhi Jayanthi to haters bcos atleast u need him in your currency till Bose gets printed in the future.

Gandhi, undeniably had his own flaws like any other human being.So u don’t want to call him a Mahatma, Ok.Fair enough.But telling stupid stories preceded by a photoshopped Gandhi with pre-independent era British babes and Mountbatten wife is disgusting.Stop it for God’s sake.”

இது நண்பர் அசோக்கின் எஸ்ரா பதிவு :

“உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு காந்தி ஒரு விளையாட்டு பொம்மை, அவர்கள் உதைத்து விளையாட விரும்பும் ஒரு கால்பந்து, அவர்களுக்கு புதிராக இருப்பது எவ்வளவு உதைத்தாலும் இந்த பந்து திரும்ப திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பது தான்,

இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளை சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்க கூடுமா என்ன, அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை, ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது அவரை நேசிக்க செல்வதற்காக ஒரு பயிற்சி தானோ என்னவோ,

அந்தரங்கமாக ஒருவன் தனது மனதினுள் ஆழ்ந்து போனால் அவன் காந்தியின் நெருக்கத்தை உணரவே செய்வான், அவனால் காந்தியை வெறுக்கமுடியாது, அப்படி வெறுப்பதாக நடிப்பதற்கு தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக் கொள்வான், ஆனால் வெளியுலகிற்கு காந்தியை வெறுப்பவர்கள் தேவைப்படுகிறார்கள், அது காந்தியின் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,

காந்தி தனது புத்தகத்திற்கு The Story of My Experiments with Truth என்று பெயரிட்டிருக்கிறார், Experiment என்பது வெறும் சொல் கிடையாது, அது ஒரு, செயல்பாடு, அறிவியல்பூர்வமான வேலை, காந்தி என்ற மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானியிருக்கிறார், அவர் தொடர்ந்து மனிதனை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார், இந்தியர்கள் பொதுவில் உடலை மர்மபடுத்தவே விரும்புகிறார்கள், , அப்படி நடந்து கொள்ளாத முதல் இந்தியனாக காந்தியை மட்டுமே கருதுகிறேன்,

காந்தி கைத்தடியை ஊன்றி நடப்பதில்லை, கையில் அதை துணையாக தான் வைத்திருக்கிறார், அவருக்கு கைத்தடி என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவி. காந்தியின் வாழ்க்கை ஒளிவுமறைவற்ற உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனவர்களே அவர்மீது அவதூறுகளை பரப்புகிறார்கள், அவர் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகள் காலம் காலமாக பதில் சொல்லப்பட்டுக் கொண்டேவருகின்றன, ஆனாலும் வசைகள் ஒயவேயில்லை

காந்தியவாதிகள் உரத்துச்சப்தமிடுவதில்லை, ஆவேசமாக தங்கள் பக்க நியாயங்களுக்காக சண்டையிடுவதில்லை, அவர்கள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள், நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள், மௌனமாக நிலத்தை உழுவதைப் போன்ற பணியது, விளைய விரும்பும் தானியம் அந்த மண்ணில் வேர் ஊன்றி நிச்சயம் வளரும்.

நம்பிக்கைகள் பொய்த்துப்போன காலத்தில் வாழும் நமக்கு காந்தி எனும் தூயவெளிச்சம் மட்டும் துணையாக இருக்கிறது.

எஸ்.ரா எழுதிய காந்தியோடு பேசுவேன் சிறுகதையில் இருந்து சிறுபகுதி.”

வெறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.அன்பு செய்வதற்கு இவர்களுக்கு ஒரு காரணம் கூட கிடைக்கவில்லையே!அதுதான் என் ஆதங்கம்.இந்த எதிக்கல் இனர்ஷியா படு ஆபத்தானது.இதைதான் நான் எதிர்க்கிறேனே ஒழிய,காந்திக்கு எதிராக எழும் எதிர்க்குரல்கள் அனைத்தையும் முடக்குவது என் நோக்கம் அல்ல.காந்தியும் அதை விரும்பியிருக்க மாட்டார்.