சவுதி வரலாறு-ஒரு பதம்

கருத்தில் கொள்ளவேண்டியவை

இபின் சவுத்(19ம் நூற்றாண்டு).
வஹாப்
இபின் சவுத்(20ம் நூற்றாண்டு)
வஹாப் சந்ததியினர்.
1930 வாக்கில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.

பிரிட்டிஷ் துருப்புகளின் துணை.
வஹாபி சிந்தனை பள்ளியின் பழங்குடி வீரர்கள் திறன்.

ஷரியா குரான் படியும், முகம்மது நபிகளின் போதனைகள் படியும் எழுதப்பெற்ற சட்டம்.அதன் மிக கண்டிப்பான வடிவம் கொண்டு தூய்மையான இஸ்லாத்தை நோக்கி அரேபியாவை வழிநடத்த வஹாப் ஆசைப்பட்டார்.மதத்துக்குள் புதுமைகள் புகுத்துபவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணி நஜ்ப் மன்னன் அல்-சவுத் உடன் இணைந்தார்.

சவுத்துக்கும் இஸ்லாமிய பழங்குடி போர் வீரர்களை ஒன்றிணைக்க ஒரு மத பின்புலம் தேவைப்பட்டது.
இஸ்லாம் என்ற ஒரு குடை இரு தரப்பையும் இணைத்தது.
இருப்பினும் முந்தைய சவுத்தினால் அவரது லட்சியமான ஒருங்கிணைந்த சவுதி அரேபியாவை உருவாக்க முடியவில்லை.

1906ம்ஆண்டில் அல் சவுத் வம்சாவளியை சேர்ந்த இபின் சவுத், வஹாப் மத பள்ளியை சேர்ந்த பழங்குடி வீரர்களுடன் ஒருங்கிணைந்த அரேபியா என்ற ஒற்றை கொள்கையுடன், மதம் என்ற நெறியில் ரியாத் வரை பிடித்தார்.அங்குள்ள மதகுருக்கள் முதலில் ரஷித் பரம்பரைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ரியாத்தை சவுத் கைப்பற்றிய பின்னும் அந்த நிலை தொடருமா என்ன?

பாலைவன போரில் சவுத் கில்லாடி.
மெக்காவில் பிறந்து மதினாவில் வாழ்ந்த நபிகள் என்ற வகையில் அந்த இரு மசூதிகளையும் காப்பாற்றுபவராகவே தங்களை இன்றளவிலும் சவுதி மன்னர்கள் கருதி வருகின்றனர்.

இஸ்லாமிய உலகில் இந்த இரு நகரங்களாலும்தான் சவுதிக்கு பெரும் மதிப்பு.
1930 களில் சவுதியில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகளவில் மவுசு கூடியது.
முதல் உலகப் போருக்கு பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இபின் சவுத்துக்கு உதவியது.
ஒருங்கிணைந்த சவுதி அரேபியா உருவானது.

ஆனால் உலகமயமாக்கலை முழுதும் கைவிட முடியாத நிலையில் மன்னராட்சியும், அது இஸ்லாத்தை அசுத்தப்படுத்துவதால் தவிர்க்க வேண்டும் என்று வஹாப் இனத்தவரும் கொள்கை வேறுபாட்டை இன்று அடைந்திருக்கின்றனர்.
அதுபோல தூய சுன்னி இனத்தவரும் முகம்மது நபிகளின் சந்ததியினரை பின்பற்றும் ஷியா இனத்தவரும் பெருமளவில் பிளவு கண்டனர்.இருந்தும் இரு மசூதிகளும் வருடந்தோறும் பல லட்சம் ஹாஜிக்களை பெறுகின்றன.

ஜெத்தாவில் இருக்கும் மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையமும் நிரம்பி வழிகிறது.எண்ணெய் வளமும் இன்னும் பல காலத்திற்கு கோல் புரிய உதவும்.இந்தியர்கள் பெரும்பாலும் தென்னிந்திய மலையாளர், தமிழர் வாழும் நாடு இன்றளவும் இது.

ஓமன், யேமன் தவிர கிட்டத்தட்ட அதிகபட்ச ஏரியா அரேபிய தீபகற்பத்தில் சவுதிக்கு தான் சொந்தம்.மிச்சமிருக்கும் சிறு நிலங்களில்தான் ஐக்கிய அரபு அமீரகங்களான துபாய், ஷார்ஜா, அபு தாபி, ஃபுஜைரா, ரஸ்-அல்-கைமா, இதர அமீரகங்களான பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளும் அமைந்துள்ளன.

ஆக இந்த மிகப்பெரிய நில சாம்ராஜ்யத்தை மதம் என்ற ஒற்றை கருவி கொண்டு ஒருங்கிணைத்து அதன் சுகங்களை ராஜாவாக பரம்பரை பரம்பரையாக அனுபவித்து இன்று வஹாப் மதகுருக்களின் அதிருப்தியையும் கூடவே பெற்று வந்துள்ளனர் சவுத் சந்ததியினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s