வாகா

image

சமீபத்தில் யூ ட்யூப்பில் நிறைய தமிழ் புதுப்பட டிரெயிலர்களை காண முடிந்தது.

அவற்றில் சில வாகா, திருநாள், ஒருநாள் கூத்து, 144 போன்றவை நச்சென்று இருந்தன.
திருநாள் கும்பகோணம், தஞ்சாவூரை கதைக்களமாக கொண்ட பிளேடு என்ற ரவுடி பற்றியது.ஜீவா கச்சிதமாக பொருந்துகிறார்.ஊர்க்கார பொண்ணாக நயன் டிரெயிலர்லயே அவ்ளோ அழகு.லோக்கல் பசங்கதான் உண்மையா காதலிப்பாங்கன்னு ஒரு டயலாக் சொல்றாங்க.இப்போ நான் லோக்கல் பையனா இருக்கறதாலயும், கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் நான் லோக்கல் பையனா தான் நான் இருப்பேங்கிறதாலயும் இந்த டயலாக்கை நான் ரொம்ப ரசிக்கிறேன்.ஒத்துக்கிறேன்.

ஜீவாவுக்கு வில்லனாக பாண்டியநாடு புகழ் வில்லன் நடிக்க அனல் தெறி சண்டை காட்சிகள் கன்ஃபார்ம்.நீயா நானா கோபிநாத் முக்கிய போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐட்டம் டான்ஸ் உட்பட எல்லா கமர்ஷியல் பொட்டலங்களையும் கையாண்டிருக்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக ஒருநாள் கூத்து.அட்டகத்தி, குக்கூ, விசாரணை, கபாலி புகழ் தினேஷின் வித்தியாச படம்.திருமணம் எவ்வளவு பெரிய விஷயம் என்பதையே ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள் போல.

இது இல்லாமல் 144 என்ற படம்.மிர்ச்சி சிவா-அசோக்கின் சிரிப்பு படம்.இவை மட்டுமில்லாமல் அனிருத் இசையில் சித்தார்த் நடிக்கும் ஜில் ஜங் ஜக்.டிரெயிலர் ஒண்ணும் புரியலைங்க.வித்தியாசம்னு கேள்விப்பட்டிருக்கேன்.இது ரொம்ப வித்தியாசமா இருக்கு.
இவையில்லாமல் டார்லிங்-2.
மெட்ராஸ், உறுமீன் புகழ் கலையரசன் ஹீரோவாக நடிக்கும் பேய் படம்.தமிழ்ல ஏகப்பட்ட பேய்ப்படம் வருதுப்பா.

இவை எல்லாவற்றையும் விட என்னை ஈர்த்தது விக்ரம் பிரபுவின் வாகா பட டிரெயிலர்.
அப்பா பிரபுவின் கறார் கதை செலக்ஷன் விக்ரமை 100% ஹிட் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியுள்ளது.இவன் வேற மாதிரி, கும்கி, அரிமா நம்பி, இது என்ன மாயம், சிகரம் தொடு என எதுவுமே போரடிக்காத தரமான படங்களாக தமிழ் ஆடியன்ஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த வாகா.

image

இந்தியா-பாகிஸ்தான் பார்டர் கதைக்களம் என்பது படத்தின் பெயரிலேயே இருக்க, அதை பேக்ட்ராப்பாக வைத்து ரோஜா, தில்ஸே போன்ற காதல் கதையை ஹரிதாஸ் பட புகழ் இயக்குநர் முயன்றிருப்பது தெரிகிறது.வொர்க் அவுட் ஆனால் விக்ரம் பிரபுவின் முயற்சியில் நல்ல புள்ளி இது.வொர்க் அவுட் ஆகா விட்டாலும் வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுப்பவராக விக்ரம் அடையாளம் காணப்படுவார்.இமான் இசை வேறு.நல்ல படமாக அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.

வர்ட்டா.

Advertisements

நேரு-தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா

image

நேற்று நேரு பிறந்த தினம்.
குழந்தைகள் தினம்.எங்கள் தோழி சக்தியின் முயற்சியால் குன்றத்தூர் அருகே உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளோடு அந்த இனிமையான நாளை செலவிட்டோம்.

நேரு பற்றிய தகவல்கள் சிலவற்றை குழந்தைகள் பேசினர்.சாயங்காலம் வரை செம்ம ஜாலியாக ஃபிரெண்ட்ஸோடு சுற்றிவிட்டு தியாகராய நகர் வந்தேன்.தரமணி முழுக்க தண்ணீரில் மிதக்க சற்று நேரம் இங்கிருக்கலாம் என்று.

என் அக்கா எனக்கொரு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்தார்.என் வாசிப்பை ஆங்கிலத்திற்கு அப்டேட் செய்ததும் என் இளவேனில் அக்காதான்.ஹாரி பாட்டர் புத்தகங்கள் மூலம்.இப்பொழுது அதை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதும் அக்காதான்.ஆம் அவர் கொடுத்த அந்த அற்புத பரிசு அமேஸான் கிண்டிள் ஈ ரீடர்.என் வாழ்வின் மிக அர்த்தமுள்ள பரிசு இது.அறிவுசார் பரிசு. என் அறிவினை விசாலப்படுத்துவதில் அவருக்குள்ள அக்கறை என்னை சிலிர்க்க வைக்கிறது.

அக்கா தேங்க்யூ.மிக்க நன்றி.எவ்வளவு சொன்னாலும் தீராது.இது வெறும் பொருளல்ல.வேறொரு லெவல் அன்பளிப்பு.எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் நீ என் இறைவி.

இந்த கிண்டிலை என் மொபைல் ஹாட்ஸ்பாட்டோடு லிங்க் செய்து எனது அமேஸான் கணக்கோடு இணைத்துக்கொண்டு.கிண்டிள் ஸ்டோரில் இருந்து சஷி தரூரின் nehru-the invention of india என்ற புத்தக சாம்பிளை தரவிறக்கி வாசித்தேன்.

மிக அற்புதமான வர்ணனை.நீங்களும் இயன்றால் வாசியுங்கள்.
நேரு படித்த harrow பள்ளியில் தான் வின்ஸ்டன் சர்ச்சிலும் படித்தார்.அவர் இந்தியாவை கொச்சையாக வெறுத்தார்.நேரு இந்தியாவை உருவாக்கினார்.அதில் தவறுகள் இருந்தாலும் கூட.
மதச்சார்பின்மை,அணி சேராமை போன்ற குணங்கள் நேருவிற்கு தன் இல்லத்தில் இருந்தே கற்பிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.காஷ்மீர பண்டிட் பிராமணரான மோதிலால் அலகாபாத் பார் கவுன்சிலில் மிகப்பெரிய பணக்கார வக்கீல் ஆகிறார்.ஜவஹர்லால் நேரு செல்வ செழிப்புமிக்க பையனாக வளர்கிறார்.இருந்தாலும் தந்தையின் கண்டிப்பையும் சந்திக்கிறார். நேரு சுமாராக கிரிக்கெட், கால்பந்து விளையாடுவார்.நன்றாகவே ஓடுவார்.மீசை வைத்துக்கொள்ள பிடிக்காது(தந்தை மீசை பிரியர்).அம்மா பிள்ளை.

கண்ணாரு பட்டுவிடும் என நேரு அம்மா அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார்.அப்படிப்பட்ட நேரு தான் எதிர்காலத்தில் காந்திக்கு பிறகான இந்தியாவை தாங்கி வழிநடத்துகிறார்.
ஒருவர் பெரிய ஆளா சிறிய ஆளா?
காலம்தான் இந்த பதில்களை அளிக்கிறது.இன்னும் பல தகவல்களை தருகிற நூல்.
இயன்றால் வாசிக்க.

ஓலா

முன்னொரு நாள்-நான் என் நண்பர்கள் பிரபா மற்றும் பொன்வின் பூஜை விடுமுறை துவக்கத்தின் போது கோயம்பேடு செல்ல பெரும் பிரயத்தனம் செய்தோம்.

ரெஃபரல் மூலம் ஓலா புக் செய்ய முயன்ற பிரபாவுக்கு app ரெஸ்பான்ஸ் இல்லை.அடுத்து நான் டவுன்லோட் செய்து பிரபாவின் கூப்பனை போட்டு புக் செய்தேன்.டிரைவரின் நம்பர் கிடைத்தது,அழைத்தால் டிரைவர் பெசன்ட் நகரில் இருப்பதாக சொன்னார்.எஸ்ஆர்பி அருகே வருவதற்கே 2 மணி நேரம் ஆகும்.அது போதாமல் வடபழனி அருகே ஹெவி டிராஃபிக் ஜாம்.நீங்க கிண்டி போய் மெட்ரோல போய்க்கோங்க தம்பி என்றார் அசால்ட்டாக.

அப்புறம் புக்கிங் கேன்சல் செய்து 570 ஏசி வால்வோ பிடித்து நான், பிரபா, பொன்வின் மூவரும் பிதுங்கிக் கொண்டு கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் வரை தாக்கு பிடித்தோம்.அங்கே டிராஃபிக் ஸ்தம்பித்து நின்றதால் ஓடோடி மெட்ரோ ஸ்டேஷன் சென்று கோயம்பேடு அடைந்தோம்(சென்னை மெட்ரோ தனி பதிவாகவே இடலாம்).

இந்த களேபரங்கள் தீபாவளிக்கு சரிபட்டு வராது என்பதால் ஓலா செயலியில் ride later ஆப்ஷனில் ஆறாம் நவம்பர் மாலை நான்கரை புக்கிங் போட்டேன்.பஸ் 5.30 மணி.துல்லியமாக ஒரு மணி நேரத்தில் சென்றாக வேண்டும்.கூப்பன் அப்ளை செய்தேன்.அது ஏக்டிவேட் ஆனதா இல்லையா கூட தெரியாது.

5.30 மணி வேலூர் புக்கிங் (பூவிருந்தவல்லி ரூட் பெருங்களத்தூர் போலல்லாமல் கிளியராக இருக்கும் என்பதால்) தான் தேடினேன்.நான் தேடியே நேரத்தில் கேரளா திருச்சூர் வரை போகும் எஸ்இடிசி தான் இருந்தது.அதிலேயே வேலூர் புக்டு.

நாள் வந்தது.இண்டிகா மினி கார் டிரைவர் நம்பர் அரை மணி நேரம் முன்னர் தான் நமக்கு அனுப்பப்படும்.அழைத்தேன்.திருவான்மியூரில் இருப்பதாகவும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் டிரைவர் சொல்ல வெளியில் பைகளுடன் போய் நின்று பராக்கு பார்க்க சொன்னதுபோல் உடனே கார் வந்தது.விண்டோ மூடி ஏசி போட்டு வைத்திருந்தார்.நான் உள்ளே ஏறியதும் ஓலா மீட்டரை ஆன் செய்தார்.

ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு ரேட்டிங்.நகரத்து எல்லைகள் வரை தான் ஓலா செயல்பாடு.சென்னையை பொறுத்துவரை கேளம்பாக்கம் வரை, எஸ்ஆர்எம் வரை, ஆவடி வரை ஆபரேஷன்.
முதல் 4 கிலோமீட்டர் 80 ரூபாய்.அடுத்து ஒரு ஒரு கிலோமீட்டர் 10 ரூபாய்.இது போக டிராவலிங் டைம் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய்.

வண்டி சரியாக ஒரு மணி நேரத்தில் கோயம்பேடு அடைந்தது.வடபழனி, கிண்டி அருகே மட்டும் சிக்னல்களில் சிக்குண்ட கார்,மற்றபடி ஜம்மென்று சென்றது.நல்ல அனுபவம்.நல்ல கார்ப்பரேட் ஸ்ட்ராட்டஜி.கோயம்பேடு உள்ளே டாக்ஸி ஆட்டோ அனுமதிக்கப்படும் இடம்வரை வந்து நிப்பாட்ட செல்போன் மீட்டர் சார்ஜ் போட்டது.235 ரூபாய்.என் 200 ரூபாய் கூப்பன் அப்ளை ஆக மிச்சம் 35 ரூபாய் மட்டும் கேட்டார் டிரைவர்.எஸ்ஆர்பியில் இருந்து கோயம்பேட்டுக்கு வால்வோவே 40 ரூவாய்.ஸீட் கிடைக்குமா என்ற உத்தரவாதம் கிடையாது.ஆட்டோ என்றால் கறந்து விடுவார்கள் கறந்து.இதே ரேட் தொடர்ந்தால் ஓலா மாஸ்.இல்லை என்றால் நாங்க எஸ்கேப் பாஸ்.மார்க்கெட் ஷேரை நீங்க பிடிச்சாலும் கஸ்டமர் மனசை விட்டுடாதீங்க!

பஸ் சரியான நேரத்தில் ஏறினேன்.ஓலா டிரைவரும் ஜாலியாகத்தான் பேசிக்கொண்டு வந்தார்(டிரைவர் மூட் எல்லாம் variable.கணக்கில் வராது.நம்ம லக் பொறுத்தது).இந்த தகவல்களை சொன்னதெல்லாம் அவர்தான்.

இன்வாய்ஸ் இதோ:

image

என் மெயில் ஐடிக்கு அனுப்பட்ட நகல்.இன்னொரு விஷயமும் டிரைவரிடம் கேட்டேன்.கூப்பன் அப்ளை ஆனதா இல்லையா அவர்களுக்கு தெரியவே தெரியாதாம்.கஸ்டமர் இறங்கும் நேரத்தில் ஓலா மீட்டர்தான் கூப்பன்னா, ரெஃபரலா, ஓலா moneyயா, கேஷா என்று காட்டி கேட்குமாம்.கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கிறார்கள் இந்தியர்களை.ஊபரும் போட்டிக்கு வர எவ்வளவு free ரைட் கிடைக்கும் என டெஸ்ட் செய்து விடுவோம். 😉

விகடன் பிரசுரிக்காத என் பத்து செகண்ட் கதைகள்

image

1.மழை

இரண்டு செக்ஸி பெண்கள் மழையில் நடந்து சென்றனர்.
ஒருத்தி குடை பிடித்திருந்தாள்.
இன்னொருத்தி அவள் குடை மீது விழுந்து சிதறிக்கொண்டிருந்தாள்.

2. குழந்தையின் செருப்பு

சாலையில் நசுங்கி கிடந்தது ஒரு குழந்தையின் செருப்பு.
உலகின் அதி தீவிரமான ஆன்மிக நசிவு சித்திரம் மனதில் விரிந்தது.

3. சூது வாது

பூ கட்டிக்கொண்டிருக்கும் தன் மனைவியை வக்கிரமாக பார்க்கும் கஸ்டமரிடம்
“எவ்ளோ மொழம் பூ வேணும் சார்? வைஃபுக்கு வாங்கிட்டு போங்க” என்னும் அப்பாவி பூக்கடைக்காரர்.

4. அதிர்வதற்குள்

மழை.காரின் வைப்பரை இயக்கி, மெதுவாக ஓட்டிச்சென்றேன்.நீர் விலகி ரத்தம் வழிந்தது.நான் அதிர்ச்சியடைவதற்குள் இரு சிறுவர்கள் ஹோலி பொடியை வீசியபடியே மழையில் சிரித்து ஓடினார்கள்.

5. சாமானியன்?(!)

பதிப்பகத்தார் மறுத்த தன் கடைசி கவிதை தொகுப்பை விரக்தியில் பார்த்தான் பிரம்மா.சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன.இந்த வரிகளை வாசித்ததும் அரங்கமதிர்ந்தது.நட்சத்திர கவிஞர் பிரம்மாவின் வாழ்நாள் சாதனை விழா அது.

6. மைல்கல்

குலு மணாலி.13கி.மீ.என்றது கொண்டை ஊசி வளைவிலிருந்த மைல்கல்.அடித்துபிடித்து ஓட்டினான் ரவி.13வது கிலோமீட்டரிலும் அதே மைல்கல்.குலு மணாலி 13கி.மீ. தான் காரில் வைக்க மறந்த விநாயகரை நினைத்தான்.அன்று வெள்ளி 13.

7. அக்கு..பஞ்சர்

சர்க்கரைக்காக அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்க கிளினிக்குக்கு சென்றபோதுதான் தெரிந்தது சண்முகத்திற்கு-தனக்கான டாக்டர் பள்ளிப்பருவம் முழுக்க தான் முள்ளம்பன்றி தலையா என்று ஓட்டிய கிரியென்று.

8. ஐ.க்யூ

எடிசன் ஐ.க்யூ எந்திரத்தில் ஏறி உட்கார்ந்தார்.முட்டாள் என்று ரிசல்ட் வந்தது.அடுத்த ஒரு மணிநேரத்திலேயே ஆட்களை அனுப்பி எந்திரம் பழுதுபார்க்கப்பட்டது.

9. மாற்று திட்டம்

குடிநீரை கடல்நீராக்கும் கடலின் திட்டம் தனக்கு முன்பே தெரியவில்லையே என்று அலறினான் சுனாமியில் அடித்துச்செல்லப்படும்போது- சுத்திகரிப்பாலையின் தலைமை பொறியாளன் வினோத்.

10. கிளோபல் விருது

நோபலை தாண்டி ஓரு க்ளோபல் பரிசு கடவுள் கையால் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது.
அது குழந்தைகள் மறக்காத ரைம்ஸை தமிழில் எழுதியமைக்காக டிஆருக்கு.:)

11. ஆண்ட பரம்பரை

ஆண்ட பரம்பரை என்று ஜாதிசங்க கொடியை செவ்வாய் கிரகத்தில் நட்டான் மானங்கெட்ட ஒரு வீரத்தமிழன்.புல்ஷிட் ஏவுகணை மூலம் அடுத்த நொடியே அதை பஸ்பமாக்கினான் மார்ஸ் கடவுள்.

🙂 🙂

பீகார் எலெக்ஷன்

image

இந்த தடவை நிதீஷ் vs லாலு இல்லை.
நிதீஷ், லாலு vs மோடி, ஜீத்தன் ராம் மஞ்சி.
இந்தியாவில் எந்த பிரதமரும் பதவியேற்ற பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களுக்கு இவ்வளவு வெறித்தனமாக பிரச்சாரம் செய்ததில்லை.மோடி செய்தார்.

நாளை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில் exit polls எனப்படும் தேர்தல் முடிவு சர்வேக்கள் பிஜேபி மண்ணை கவ்வும் என்று திகில் கிளப்பியுள்ளன.
ஆரம்பத்தில் வெளியான சில முடிவுகள் அமித் ஷா-மோடி வியூகங்களுக்கு சாதகமாக இருந்தன.அவர்கள் ஆட்களும் அதுப்பாக திரிந்தனர்.ஆனால் இரண்டாம்,மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் லாலு-நித்தீஷ் காம்போ கிண்ணென்று நின்றுவிட்டதாக தகவல் பரவிற்று.

உடனே பிஜேபி பெருந்”தலைகள்” ஜகா வாங்க ஆரம்பித்தன.

“இதற்கும் மோடி இமேஜிற்கும் ஒரு தொடர்பும் இல்லை”-அருண் ஜெட்லி.

“பிஜேபி தோற்றால் தோல்வி எங்களுடையது அல்ல.பீகார் மக்களினுடையது”-சாக்ஷி மஹராஜ்.

அதேபோல லாலு அணியில்(grand alliance)நிதீஷ் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெள்ளந்தெளிவாக அறிவித்து விட்டனர்.ஆனால் பிஜேபி மஹாராஷ்டிரா,ஹரியானா நடைமுறையையே பின்பற்றி முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வில்லை.இது இன்னொரு பாயிண்ட்.

மற்றுமொன்று ஆர்எஸ்எஸ்இன் உள்குத்து.ஷா-மோடி கூட்டணி ஆர்எஸ்எஸ் ஐ கட்டுக்குள் வைக்க விரும்புகிறது.கட்சியையும் சங் பரிவாரையும் வேறுபடுத்தி காட்ட விரும்புகிறதாக பல தகவல்கள்.இந்நிலையில் தான் ஓபிசி, எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை புறந்தள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தல மோகன் பகவத் முழங்கியுள்ளார்.இது பிஜேபிக்கு எதிராக அவரே அடிக்கும் ஸேம் ஸைட் கோலாக கருதப்படுகிறது அரசியல் வட்டாரங்களில்.

ஆகமொத்தம் இந்த தேர்தலில் பிஜேபி தோற்றால் இரண்டு விஷயங்கள் நடக்க அதிக வாய்ப்புண்டு.

I.அமித் ஷா கட்சி தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கப்சிப் ஆக்கப்படுவார்.அந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் அபிமானி அமைச்சரொருவர் நியமிக்கப்படுவார்.

II.மோடி சிவசேனா, சந்திரபாபு நாயுடு போன்ற ஆட்களிடம் தொங்க வேண்டி இருக்கும்.

பார்ப்போம் நாளை என்ன ஆச்சரியம் காத்திருக்கிறதென்று.

நறுமணம்

விகடன் 2015 முதலாவது தீபாவளி சிறப்பிதழில் இமையத்தின் நறுமணம் என்னும் சிறுகதை வாசிக்க கிடைத்தது.

நகரமயமாதலில் தொலைந்து போகும் நம் கிராமத்து வெகுளி மனிதர்களின் உணர்வுகளை நான்கே கதாபாத்திரங்கள் கொண்டு அருமையாக உணர்த்தியிருப்பார்.

ஆனந்தன்
கதிரேசன்
கிழவன்-கிழவி
கள்ள வீரன் சாமி

இது தவிர ஆடு, மாடு, கோழிகள், கதைக்குள் நுழையாத பெரிசுகளின் வாரிசுகள், வாழை-முருங்கை மரங்கள், முந்திரி தோப்பு, நெற்காடு என தமிழக விவசாய பிரதேசங்களின் இன்றைய பரிணாமத்தை துல்லியமாக உணர வைக்கிறது.

விருத்தாசலம் வழியே 15 கிலோமீட்டருக்கு போடப்படும் புறவழிச்சாலை பற்றிய கதை.
கதையின் இறுதிக்காட்சி கண்களில் நீர் கசிவை ஏற்படுத்துகிறது நம்மையும் அறியாமல்.
நீங்களும் வாசிக்க.

ரூ.30-விகடன் 2015 தீபாவளி மலர் 1 (160 பக்கங்கள்)