ரஜினி முருகன்

image

மதுரைய அழகா புகைப்படங்களா காமிச்சு டைட்டில் போட ஆரம்பிச்சதுல இருந்தே எனக்கு படம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

வருத்தப்படாத வாலிபர் சங்க அதே டெம்ப்ளேட்.பேரு,ஹீரோயின் மட்டும் வேற.தொழில்நுட்ப குழு அதேதான்.

இதுல ஹீரோயின் பத்தி சொல்லியே ஆகணும்க.அவங்களை வேற படத்துல நான் பாக்கலை.ரொம்ப ஹோம்லியா,ரொம்ப அழகா இருந்தாங்க.அந்த ஒரு எ(கு)றும்பு சீன் அஜால் குஜால். 😉

சூரி பாடி லேங்குவேஜ் காமெடி நல்லா பண்றார்.சிவா மற்றும் பொன்ராம்,இமான் மற்றும் ஒளிப்பதிவாளரின் பலத்தோடு ஒரு ஜாலியான வருத்தப்படாத வாலிபர் பார்ட் 2 எடுத்திருக்காங்க.
கீர்த்தி சுரேஷ்காக பாட்டு,சீன்லாம் மறுபடியும் பாக்கணும். 😉

Advertisements

கதகளி

image

நல்ல பிக்சரைசேஷன்.நல்ல பிஜிஎம்.கிக் ஹீரோயின்.செம்ம அடி விஷால்.

ஹைலைட்–செல்பி வித் ரவுடிஸ்

வில்லன் நல்ல தோரணையா இருக்கார்.பாவம் கதைக்காக அவரை பாதியிலேயே சாவடிச்சாறங்க.

பொங்கலுக்கு ஜாலியா ஒரு தடவை பாக்கலாம்.

வர்ட்டா..

புதிய தமிழ் திரை வெளியீடுகள்

2015 இனிதே நிறைவுற்றது.
ஷங்கரின் ஐ மேஜிக்கை ராஜமௌலியின் பாகுபலி பறித்து கொள்ள “அதற்கும் மேலே” ஏதோ ஒரு யுக்தியை தேடி 2.0 எந்திரனை கையிலெடுத்து விட்டார் ஷங்கர்.
அர்னால்டு பட்ஜெட் தாங்கவில்லை என்பதால் அக்ஷய் குமார் ரஜினிக்கு வில்லன்.பாலிவுட் ஆடியன்ஸை அப்படியே தியேட்டரில் ஆஜர்படுத்தும் திட்டம்.பாகுபலி 2 வேறு வருகிறது ஷங்கர்.பார்த்து பண்ணுங்க.

கபாலி அமர்க்களப்படுத்தும் என நம்புவோம்.வெண்தாடி,மூன்று கெட்டப்,2007 பில்லா போல மலேசிய பின்புலம் என முயன்றிருக்கிறார் பா.ரஞ்சித்.திரையில் எப்படி அது பயணிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈட்டி போன்ற நல்ல முயற்சிகளை எடுத்திருக்கும் அதர்வாவின் அடுத்த பிராஜக்ட் கணிதன்.ரிப்போர்ட்டராக வருகிறார்.டிரெயிலிருந்து இது கல்வி சான்றிதழ் மோசடியை தோலுரிக்கும் படம் என புலப்படுகிறது.

மிருதன்-ஜெயம் ரவி நடிக்கும் தமிழ் திரை உலகின் முதல் ஜாம்பி திரைப்படம்.டிரெயிலரில் வில் ஸ்மித்தின் ஐ எம் லெஜண்ட் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.எனினும் முழு படமும் புது முயற்சி.ஊட்டி,கோவை கதைக்களம்.

தாரை தப்பட்டை.எதையும் மிகையான ரியலிஸம்,ரௌத்திரம் கலந்து விளாசும் இயக்குநர் பாலாவின் படைப்பு.ராஜா சாரின் 1000வது படம் என்ற மைல்கல் ப்ளஸ்களோடு வருகிறது.வரலட்சுமி கொழுக் மொழுக் ரௌத்திரம்.சசிகுமார் முரட்டு தாடி,நீண்ட முடி ரௌத்திரம்.

அச்சம் என்பது மடமையடா-டிரெயிலர் தெறிக்க விட்டுவிட்டது.ஏஆர் ரஹ்மான் இசையில் அந்த பாடலின் ஊடே விரியும் காட்சிகளின் வகைமை புல்லரிக்கிறது.சிம்பு தாடி கெட்டப் சூப்பர்.புதுப் பொண்ணு யாருப்பா?

கதகளி-விஷாலின் ஆக்ஷன்.பாண்டிராஜின் புது அதிரடி ரூட்.செல்பி வித் ரவுடிஸ் சீக்வன்ஸ் நன்று.கேதரின் தெரஸா ஜில்லு.அவரிடம் காண்டம் கேட்கும் விஷால் தில்லான ஜொள்ளு.

கெத்து-உதயநிதி புது கெட்டப்.வழக்கம்போல பெரிய ஹீரோயினி-எமி ஜாக்சன்.கதை வழக்கம் அல்ல. விதார்த் ப்ளூ லென்ஸ் கண்கள் கெட்டப்பில் மக்களை ஈர்ப்பார் என திடமாக நம்பலாம்.

இன்னும் அப்டேட்ஸ் தொடரும்.