சேதுபதி

image

1999.சென்னை உதயம் தியேட்டரில் தலைவர் ரஜினியின் படையப்பா படம் ஓடிக்கொண்டிருந்தது.தியேட்டர் வாசலில் பிரம்மாண்டமான தலைவர் கட் அவுட்.

அப்பொழுது எனக்கு 7 வயது.பொடியன்.என் பெரியம்மா வீடு கேகே நகர் ஹவுசிங் குவாட்டர்ஸில் இருந்தது.அப்பொழுதெல்லாம் சம்மர் லீவ் என்றாலே அது கேகே நகர் பெரியம்மா வீடுதான் எனக்கு.
பெரியம்மாவுடன் செந்தில் ஷாப்பி தினமும் சென்று வருவது இஷ்டமான காரியம்.பிறகு அவர்கள் போரூர் வீட்டிற்கு மாறிய பிறகும் பழைய பச்சை பல்லவன் பேருந்து அசோக் பில்லர்-கேகே நகர் வழியாகத்தான் செல்லும்.உதயம் ஸ்டாப்பிங் என்னை எப்பொழுதுமே வசீகரித்த ஒன்று.

அப்பொழுதிலிருந்தே உதயம் தியேட்டரில் ஒரு படமாவது பாத்துடணும் என்ற ஆவல் இருந்தது.இன்றுதான் அது நிறைவேறியது.

டிக்கட்நியூ.காம் சென்று உதயம் தியேட்டர் சேதுபதி புக்கிங் பார்த்தேன்.50 ரூவா டிக்கட் இருந்தது.எப்படியும் நேரிலேயே வாங்கிடலாம் என்றொரு ஹஞ்ச் சொன்னது.ஆன்லைன் என்றால் பிராசஸிங்,வரி என்று டிக்கட் விலையை விட 69 ரூவா அதிகம் வசூலித்துவிடுவார்கள்.

இரவு மெஸ்ஸில் டின்னர் சாப்பிட்டுட்டு நானும் பொன்வினும் M70 பஸ் பிடித்து,பீக் ஹவர் வேளச்சேரி டிராஃபிக்கில் ஊர்ந்து உதயம் அடைந்தோம். 50 ரூவா டிக்கெட் கேட்டேன்.லக்.கிடைத்துவிட்டது.9.45 நைட்ஷோ.
செம்ம டீஸண்ட்டான ஏஸி.ஸீட்.ஸ்கிரீன்.சவுண்ட்.எனக்கு பிடித்த தியேட்டர்.

சேதுபதி.விஜய் சேதுபதியின் ஆக்ஷன் அவதார்.முறுக்கு மீசை கெத்து.போலீஸ் விறைப்பு.செம்மையாக வொர்க் அவுட் ஆகி இருக்கு.பக்காவா இருக்கார்.மாடர்ன் டே மதுரை காப்.ராயல் என்ஃபீல்டு.இரண்டு பிள்ளைகள் பெற்றாலும் ஷைனான மனைவி என்று அளவான குடும்பம்.வாத்தியார் என்ற லோக்கல் தாதாவை எதிர்க்கும் வழக்கமான கதை.பட் செம்ம ஃபிரெஷ்ஷான,சுறுசுறுப்பான திரைக்கதை.நல்ல பிஜிஎம் மற்றும் பாடல்கள்.எஸ்பெஷலி நான் ராஜா.முதலில் வில்லனுக்கு.அப்புறம் நம்ம சேதுவுக்கு.ரம்யா நம்பீசன் கொழுக் மொழுக் அழகு.வச்சி வாழ்ந்திருக்கிறார் சேதுபதி.அந்த குட்டி பாப்பா சேதுபதி மகள் facetimeல் வீடியோ சேட் செய்வதும்,டெக்ஸ்ட் உரையாடலில் கணவன் மனைவி கொஞ்சுவதும்,மனைவியை சமாதான படுத்த நைஸாக கெத்து நழுவாமல் காலில் விழுவதும்,பின் அப்பட்டமாக விழுவதும்,பையனை வைத்தே வில்லன்களை விரட்டுவதும்,வில்லனின் அல்லக்கையை ரணகளப்படுத்தி “முறைக்காதே..சிரிப்பு வருது!” என வறுத்து கலாய்ப்பதிலும் படம் கிரிஸ்பியாக நகர்கிறது.இண்டர்வலில் சாப்பிட்ட அமெரிக்கன் சீஸ் ஃபிளேவர் லேஸ் போல.

விஜய் சேதுபதி ரசிகர்களும் ஆக்ஷன் மசாலா கமெர்ஷியல் ரசிகர்களும் தவற விடக்கூடாத நல்ல,தரமான ஆக்ஷன் படம் இது.

வர்ட்டா?

Advertisements

தி.க தலைவர் உரை

தாலி அறுப்பதிலும் உடன்பாடு இல்லை.மாட்டுக்கறி உண்பதிலும் உடன்பாடு இல்லை. எப்படி தாலியை அவிழ்ப்பது கிக்கான லிபரேட்டிங்கான சுயமரியாதை உணர்வோ சிலருக்கு தாலி ஏறுவதில் சுகம் இருக்கலாம்.அதை அறுத்தெறிவதால் மட்டும் பெரிதான சமூக மாற்றங்கள் உருவாக போவதில்லை.அது தனிநபர் பெர்சப்ஷன். பெண் அடிமைத்தனத்தின் ஒட்டுமொத்த ரூபமாக அதை உருவகித்து,அதை எதிரியாக சுருக்கிக் கொள்வது முட்டாள்தனம்.

இரண்டாவது பீஃப்.பீஃப் சாப்டுங்க.சாப்டாதீங்க.உங்க பெர்சனல்.அதை ஏன் அரசியல் ஆக்கணும்.தடுத்தா எதிர்க்கிறது ஓகே.அதுக்காக தமிழன்னா பீஃப் சாப்டணும் என்பது குறியீடு அல்ல.எப்படி நவநாகரீக தமிழன் ஜீன்ஸோ வெல்க்ரோ வேட்டியோ விருப்பத்துக்கு அணிகிறானோ(சொல்லப்போனால் தமிழச்சிகள் ஜீன்ஸில் செம்ம கிக்காக இருக்கிறாள்கள்.தமிழ் வாசகங்கள் அவர்கள் அணியும் டிஷர்ட்டுகளில் இடம்பெற்றால் தமிழ் அழியவே அழியாது என கட்டியம் கூறுகிறேன்) அது போலவே உணவும்.அதை ரைட் விங் ஆகட்டும் யார் ஆகட்டும் அரசியலாக்குவது அவர்களது கற்பனை வறட்சியையே காட்டுகிறது.

இந்த வேறுபாடுகள் இருந்தாலும் நண்பர் பத்துவின் முனைப்பால் இன்று திரு.கி.வீரமணியின் அம்பேத்கர் குறித்த உரையை நான் பயிலும் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டடத்தில் நேரில் கவனிக்க இயன்றது.கி.வீரமணி அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடர் கழகத்தின் தலைமை உறுப்பினர்.கறுப்பு சட்டைகளின் இன்றைய பிரதான முகங்களில் முதன்மையானவர்.பெரியார் எனும் இமயத்தை அருகில் அதிக காலம் இரசித்திருக்க கூடியவர்.தமிழிலும் ஆங்கிலத்திலும் சம புலமை உடையவர்.அதனால் ஒரு ஈர்ப்பு,மரியாதை அவர்மேல் உண்டு.

அம்பேத்கரிய சிந்தனைகளின் ஆணிவேர்களை வரலாற்றின் துணையோடு அலசிப்பார்த்தார்.மண்டல் கமிஷன் ஆய்வறிக்கையின் சில அதிர்ச்சிப் பக்கங்களை நம்முள் பாய்ச்சினார்.இன்னும் செல்ல வேண்டிய தூரம் பற்றியும்,ஆர்எஸ்எஸ் பற்றிய ரகசிய சாடலும் அவர் பேச்சின் சாராம்சமாக இருந்தன.

ஒரு மணிநேரம் உரையாற்றியிருப்பார்.அம்பேத்கர் குறித்த பயனுள்ள அறிவுசார் தகவல்களை நிறைத்துக் கொள்ள எனக்கொரு நல்வாய்ப்பாக அமைந்தது.இந்திய அரசியல் சாசனத்தை அமைத்த கர்த்தாவின் ஆழங்களை ஒரு பறவையின் பார்வையில் எவ்வளவுதான் நோக்க முடியும்?அது கடல் என்பது மட்டும் விளங்கியது.நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் தலைமை செயலரும், மிசோரத்தின் முன்னாள் ஆளுநருமான 88 வயது பெருங்கிழவனார் திரு.பத்மநாபன் ஐஏஎஸ்(மற்றொமொரு பத்து) சிறப்புரையாற்றினார்.

வர்ட்டா?

ஏக்ஷன் ஹீரோ பிஜூ

image

பிஜூ பாலோஸ் கேரளத்திலே கொச்சின் நகரின் புறநகர் ஒன்றில் ஸ்டேஷன் இன்ஸ்.

கறார் பேர்வழி.முதல் ரேங்க் எடுத்து எஸ்ஐ ஆனவர்.கை படு சுத்தம்.எல்லா சட்ட நுட்பங்களும்,நடைமுறை சிக்கல்களும் அறிந்து அதை நாசூக்காக கையாள்பவர்.முறுக்கு மீசை,போலீஸ் தொப்பை,முரட்டு பார்வை என வாழ்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் நிவின் பாலி.ஆம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகம்.ஹீரோயின் அனு சில சீன்கள்,பாடல்களில் ஹீரோ தோள் சாய மட்டுமே வந்தாலும் செம்ம கியூட்டா இருக்காங்க.

மேக்கிங் செம்ம நேர்த்தி.எந்த பூதாகார ஹைப் களும் இல்லாமல் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தன் அன்றாட வாழ்வில் கையாளும் பிரச்னைகளை திரையில் கொண்டு வந்திருப்பது சவாலான சபாஷ்.ராஜேஷின் பிஜிஎம் பிசிரடிக்காமல் படத்திற்கு உதவுகிறது.தியாகராய நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் நான்காவது ஸ்கிரீனில் திரைக்கு மிக அருகில் (10 ரூவா டிக்கெட்டுகள்-முதல்,இரண்டாம் ரோ) கல்லூரி நண்பர்களுடன் கண்டுகளிக்க அமைந்தது.

image

ஆனா ஏஸியை கன்னாபின்னா ஆன் பண்ணி யாரோ எங்க வாழ்க்கைல விளையாடிட்டாங்க பா.ஸ்நாக்ஸ் வெலையும் ரொம்ப அதிகமா கீது.ஒரு டயட் கோக் 60 ரூவா.ஒரு எக் பஃப்ஸ் 90 ரூவா. உட்கார இன்னும் சோஃபா யாருக்கும் போடலை.

இதலாம் கொஞ்ச நாள்ல சரி ஆக்கணும்.இல்லனா ஊத்திக்கும் மல்டிபிளெக்ஸ்.ஆங்.

வர்ட்டா.

இறுதி சுற்று-வேற லெவல் படம்

image

முதலில் இயக்குநர் திருமதி.சுதா விற்கு மிகப்பெரிய திருப்திகரமான வாழ்த்துக்கள்.

மேடியின் அல்டிமேட் கம்பேக்.அவரின் வாழ்நாள் சிறந்த படங்களில் ஒன்று.சமீபத்தில் நான் ரசித்த திரை காவியங்களில் ஒன்று.
ரித்திகா சிங்–அம்மாடி அம்மோவ்.என்னா பொண்ணு டா இது!! எங்க இருந்து டா புடிச்சீங்க.வேற லெவல் எனர்ஜி.அவள் தான் படத்தின் கெத்து தெறி மாஸ் எல்லாம்.
சும்மா அதிர வைக்கிற ஆக்டிங்.மேடியை முழுங்கிவிடும் போல ஆக்டிங் கில்.

ஒவ்வொரு வசனமும் பளிச்.சந்தோஷ் நாராயனின் தேனிசையும் அதிரடி பிஜிஎம்களும் உரம் சேர்க்க ,ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவின் நேர்த்த திரையில் மிளிர்கிறது.
50 ரூவா டிக்கெட்டில் ராயப்பேட்டா உட்லேண்ட்ஸ் சிம்பொனி தியேட்டரில் இன்று முதல் முறை படம் பார்த்தேன்.இந்த ‘ஹை’ அவ்வளவு எளிதில் தமிழ் படங்களில் கிடைக்காது.
இன்று கிடைத்து விட்டது. ரியலி ஹேப்பி-மேடிக்காகவும் ரித்திகாவிற்காகவும்,எனக்கு ரொம்ப நாள் கழித்து நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்த இயக்குநருக்கும்..

சபாஷ்.தமிழ் சினிமா இவ்வாறு கம்பீரமாக வாழட்டும்.சாலா கடோஸ்.

வர்ட்டா.