கோவை

image

அழகிய ஜங்ஷன் ஒரு மதியநேரத்தில்..

image

கோவைக்கு செல்வது எப்பொழுதும் பிடித்த ஒன்று.சென்னையை போன்ற இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்.ஆனால் சென்னையில் கிடைக்காத அமைதி.

image

கோவை மாநகரத்து வீதி ஒன்றில்

ஆடி,பிஎம்டபிள்யூ,பென்ஸ் போல தரமான கார்கள் ஷோரூம்களிலும் ரோடுகளிலும் அசால்ட்டாக தென்பட்டு பாயும்.மாநகராட்சியின் சுத்தமும் ஆச்சரியமளிக்கும்.மக்களின் ஏனுங்க போங்க வாங்க வாஞ்சையான மரியாதை ஆசையாக இருக்கும்.ஜங்ஷனில் ஒரு தடவை இரவு 2:28க்கு வந்திறங்கினேன்.காட்பாடியிலிருந்து ரயில்பிடித்து வந்து,சூடான பாதாம் பால் சாப்பிட்டுவிட்டு பயணிகள் காத்திருப்பறையில் அமர்ந்த நிலையிலேயே உறக்கம் லைட்டாக போட்டுவிட்டு மணி 4.45 ஆனவுடன் பல்துலக்கி,முகம் அலம்பி பேப்பருக்காக காத்திருந்தேன்.

image

ரெட்பஸ் டிக்கட்

தினத்தந்தி,தினமலர்,தினகரன் என அச்சுமணம் மாறாத புத்தம்புது செய்தித்தாள்கள் ஜங்ஷனில் வந்திறங்கின.முதல் மாநகர பேருந்து போக்குவரத்து காலை 5 மணிக்கு துவங்கும்.அதுவரை பேப்பர் வாங்கினேன் அங்கிருந்த மாற்றுத்திறனாளி கடைக்காரரிடம்.ஃபோனை சார்ஜ் செய்ய ஸாக்கெட்டில் போட்டுவிட்டு பேப்பர் படித்துக்கொண்டிருக்க,டொப் என்ற பல்ப் வெடிப்பது போன்ற சத்தம்.ஆனால் பல்ப் இல்லை.

image

ஐஆர்சிடிசி டிக்கட்

சுவரின் ஒரு துண்டு என் பேப்பர் மேல் வந்து தொப் என்று விழுந்தது.போய் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தால் அசால்ட்டாக அதை நிராகரித்தார்.பேப்பர்ல தான விழுந்தது? மண்டைல இல்லயே? என்று.கேட்டால் பூசுவேலை நடக்கிறதாம்.அப்புறம் என்ன மயித்துக்கு பயணிகளை அங்க விடுறீங்க என கேட்க தோன்றியது.கட்டுப்படுத்திக்கொண்டு வெளியேறினேன்.

image

மெஸ்மரைஸிங் சந்திப்பு

ஸ்டேஷனை விட்டு.மற்ற பெரிய ஜங்ஷன்களைப் போலல்லாமல் ரயில்வே பயணிகள் மேம்பாலமெல்லாம் இல்லை.இங்கு சப்வே எனப்படும் சுரங்கப்பாதை மட்டுமே.அதன்வழி நடந்து கோவையின் சாலைக் காற்றை உள்வாங்க ஆரம்பித்தேன்.ஒரு மாநகர பேருந்து வந்து நின்றது.நிறைய இடங்கள் அன்று செல்லவேண்டி இருந்ததால் 50 ரூவாய் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டேன்.ஐடி கார்டு கேட்டார் கண்டக்டர்.ஆச்சரியமாக இருந்தது.காட்டினேன்.காட்டிய பின்பே ஒருநாள் பயணச்சீட்டு தந்தார்.

image

மக்களின் அதிரடி நடமாட்டம்

அன்று சிவில் ஏரோட்ரோம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் எனக்கொரு நேர்காணல் இருந்தது.வேலை முடிந்ததும்,நேராக பேரூர் பட்டீசுவரர் ஆலயம் சென்று மனமாற தரிசித்தேன்.எதிரிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி முடித்து வெளிவந்தால் கையில் தீபாவளி பட்டாசு டோக்கன் தந்தார்கள்.ஜாலியாக இருந்தது.அது பண்டிகை டைம்.தினசரிகளின் கோவை எடிஷனில் பல யூனியன்களுக்கான போனஸ்கள் அந்தந்த ஆலை நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

image

மருதமலை கோவில் சென்றிருந்த பொழுது..

ஒப்பணக்கார வீதியில் போனஸ்கள் பொருட்களாய் மாறும் என நினைத்துக்கொண்டேன்.உக்கடம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் பூத்து இடத்தை நிரப்பி கிடக்க,மாநகராட்சி நிர்வாகம் ஜேசிபி பொக்லைன் எந்திரம் கொண்டு அதை நிரவி நீக்கிக்கொண்டிருந்தது.

image

தடாகம் ரோட்டிலுள்ள கல்லூரி ஒன்றில்..

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அடைந்தபோது அங்கு திருச்சி,மதுரை,நெல்லை,திண்டுக்கல முதலான மார்க்க பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களைக் கண்டேன்.மேட்டுப்பாளையம் ரோடு பேருந்து நிலையம் பெரிய நிலையில் கட்டப்பட்டிருந்தாலும்,பயன்பாட்டிலில்லாமல் பேருந்துகள் உள்நுழையாமல் வெளியிலேயே மக்களை ஏற்றி சென்றன.வெள்ளந்தி முகங்கள்,சில சமயம் கோவை குசும்பும் சேர்ந்து குழைந்து சிரித்துக்கொண்டிருந்தன.

image

ரயில்களின் ஒய்யார அழகு

காந்திபுரம் சிலதடவை வந்திறங்கி இருக்கிறேன்.ஒரு தடவை ரெட்பஸ் மூலம் டிராவல்ஸில் வந்திறங்கியபோது செம்ம தூக்கம்.காந்திபுரம் டிப்போ உள்ளே பேருந்திலேயே சிறிது நேரம் படுத்து,உறங்கிவிட்டு,பின்னர் நகருக்குள் செல்லலாம் என்று ஏங்கும் மனது.ஆனால் விட்டால் தானே? கால்நடைகளை இறக்கிவிட்டு செல்வதுபோல சென்றது செமி ஸ்லீப்பர் பேருந்து.

உணவும் சீராக அமைந்தது.எனக்கும் கோவைக்குமான ராசி.இரவில் ரயில் நிலையத்தைவிட்டு சென்னை நோக்கி செல்லும்போது,தென்னகத்து மான்செஸ்டரின் கம்பீர ஆலைகள் சில நம்முடன் பேசும் சங்கேத அமைதி பாஷைகளில்.
ஒருதடவை சரியான மழை பிடித்துக்கொண்டது ரயில் நிலையத்தில் இருக்கும்பொழுது.ஒரு மணிநேரம் தாமதாக வர நேர்ந்தது என் ரயில்.எல்லாமே அன்ரிசர்வ்ட் டிக்கட் தான்.ஆனால் இரவு நேரம் என்றால் எவருமே பயணிக்காத,யாரும் கண்டுகொள்ளாத/வராத பெர்த்களை நிரப்பியிருக்கிறேன் என் தூக்கத்தினால்.டிடிஆர் பகல் நேர ஃபர்ஸ்ட் கிளாஸ் அன்ரிசர்வ்ட்(!!!) பயணத்தின்போது ஒரு தடவை கேள்வி கேட்டார்.அவர்மேலும் தப்பில்லை.எனக்கும் அது பெரிய தப்பாய் தெரியவில்லை.இன்னொரு கம்பார்ட்மெண்ட் சென்று காத்திருக்க சொன்னார்.பெரிதாய் பிரச்னை ஒன்றும் இல்லை.இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே பயணித்தேன்.ஈரோடு கடக்கும்போது,நொய்யலாற்று பாலம் ஒன்று வருகிறதோ?? சாயப்பட்டறை நீர் ஒன்று ஆற்று நீரில் கலப்பது காணமுடிகிறது.அப்புறம் காவிரி நதி என்றே ஒரு ஸ்டேஷன் இருக்கிறது.

ஐஏஎஸ் ஆபீசர்கள் நிச்சயம் கோவையில் ஒரு பங்களா கட்டுவார்களாம் வசிக்க.நாமும் ஒன்று உருவாக்குவோம்.நிம்மதிக்காக.
இன்னும் பல செழுமையான இனிய பயணங்களை நோக்கிய நான்.
வர்ட்டா??!!

Advertisements

இம்மோர்டல்ஸ் ஆஃப் மெலூஹா

image

எப்பொழுதோ வாசித்திருக்க வேண்டியது.எல்லாவற்றிற்கும் ஒரு டிவைன் காலிங் தேவை போல.அமிஷ் திரிபாதியின் ராக்ஸ்டார் எழுத்து பிரவேச நூல்.

சிவனை கடவுளாக அல்லாமல் மனிதனாக சித்தரித்து,லாஜிக் சேர்த்து அழகூட்டியிருக்கும் பொக்கிஷம்.முதல் காட்சியிலேயே சிவன் சிவபானம் அடித்துக்கொண்டிருக்கிறார்.அங்கிருந்து பரபரக்கிறது கதை.நிறுத்த முடியாத வேகம்.

சூர்யவன்ஷிகள்,சந்திரவன்ஷிகள்,விகர்மாக்கள்,சோம்ரஸ் எனும் தெய்வீக அமர பானம் என மிஸ்ட்டிக்காக பயணிக்கிற கதையில் ராமன் யார்?முந்தைய மகாதேவர் யார்?நீலகண்டர் பெயர் காரணம்,நந்தி,பிரஹஸ்பதி,ஆயுர்வேதி என பல கேரக்டர்கள் பக்கா ரெஃபரன்ஸ்.மவுண்ட் மணாஸ் வெடித்து ஏற்படும் துயரம்,சதி சிவனுக்காக விஷ அம்பை நெஞ்சில் தாங்கும் தைரியம்,அவள் வீரன் ஒருவனுடன் அக்னி பரீட்சையில் துல்லியமாய் வெல்வது,வென்று அவனை மன்னிப்பது,சிவனுடனான நடன மற்றும் காதல் கல்யாண காட்சிகள் என கலகல பரபர.

இடையில் நண்பன் வீரபத்ரன்,சதி தோழி கிருத்திகாவை கைப்பிடித்து கரெக்ட் செய்தல்,சந்திரவம்ஷிகளுடனான போர்,நாகாக்களுடனான சண்டை,உண்மையான தர்மத்தை வாசுதேவ குல குருக்களிடமிருந்து அயோத்தியில் சிவன் உணர்தல்,சந்திரவம்ஷி பெண்களின் அழகான மற்றும் போல்டான செக்ஸினஸ்,அந்த நாட்டின் சுதந்திரம்,சூர்யவம்ஷி ரூல்ஸ்,அதை ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்யும் தளபதி(சதியின் பித்ரதுல்யா–தந்தைக்கு நிகரானவர்),தந்தை தக்ஷா,தாய் வீரினி,ஆனந்தமயியின் தூக்கலான டிரெஸ்ஸிங்,சிவனின் அல்ட்ரா சூப்பர் தத்துவங்கள்,மனு நாட்டு பிறப்பிடம் சங்கம்தமிழ் எனப்படும் லெமூரிய கான்செப்ட்,சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் மைகா முறை என எத்தனை புதுப்புது கோணங்கள்,வார்த்தைகள்?!

ஒரு புது உலகத்தையே படைத்திருக்கிறார் அமிஷ்.அடுத்து சிவா டிரைலாஜியின் இரண்டாம் பாகமான “தி சீக்ரட் ஆஃப் த நாகாஸ்” வாசிக்க இருக்கிறேன்.
நீங்களும் தவற விடாதீங்க.
வர்ட்டா??!

ஊபரு…ஆஃபரு

image

முன் இதை வலைத்தளத்தின் ஒரு பதிவில் ஓலா கேப்ஸ் பற்றி ஜாலியாக எழுதியிருந்தேன்.இப்பொழுது ஊபரை பற்றிய ஒரு நிதர்ஸனமான கட்டுரை எழுத வேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கிருக்கிறது.ரொம்ப பெரிய வார்த்தைலான் பேசறேன்ல?? எழுத்தாளன்னா அப்படித்தானாம். 😉

ச்சும்மாவே அலசி பாப்போமே.எப்படி இவ்ளோ ஃபிரீ ரைடு குடுக்க இவங்களுக்கு கட்டுப்படி ஆகுதுனு?
அதுலயும் நான்லான் மனசாட்சியே இல்லாம இதுவரைக்கும் 11 ஃபிரீ ரைடு போயிருக்கேன்னா பாத்துக்கோங்களேன்(ஆயிரம் தொழில்நுட்பம் அறிய வைப்பேன்.இந்தியன் யாரென்று புரிய வைப்பேன்..)
ஒரு ஃபிரீ ரைடோட வொர்த் 150 ரூவா.ஸோ 11X150=1650 ரூவாய் என் ஒருத்தனுக்கு மட்டும் ஊபர் செலவு பண்ணியிருக்கு.இது போதாம இன்னும் பல ஃபிரீ ரைடு வேற என்னால கிரியேட் பண்ண முடியும்.அந்த வாய்ப்பை ஊபர் எனக்கின்னமும் வழங்கிட்டுத்தான் இருக்கு.

என்னை மாதிரியே எல்லாரும் ஃபிரீ ரைடே போய்ட்டிருப்பாங்கன்னு சொல்ல முடியாது.விடாப்பிடிவாதிகள்,செல்வந்தர்கள்,அடிமைகள்,அடிமுட்டாள்கள்னு மக்கள் சென்சஸ்ல ஏவரேஜ் எடுத்து பாக்கும்போது ஒரு தறுதலைக்கு அட்லீஸ்ட் 2-3 ரைடாச்சு இலவசமா தண்டம் அழுவுறானுங்க.எப்படி இது சாத்தியம்?

இங்கதான் மேலைநாட்டு மார்க்கெட்டிங் வித்தைகளை நாம கத்துக்கணும்.ஒரு பெரிய ஆர்&டி டீமே ரூம்போட்டு வேலைபாத்திருக்கு.எப்படினு பலவாறு யோசிச்சு சிலவாறு பாயிண்ட்ஸ் கேதர் பண்ணியிருப்பீங்க.அதோட நான் சொல்றது டேல்லி ஆவுதானு பாத்துக்கோங்க.

1.எங்கயாச்சு ஓலாவுக்கோ ஊபருக்கோ விளம்பரங்கள் டிவில ஓடி பாத்திருக்கீங்களா?? செயலி(ஏப்) டவுன்லோட் பண்ண சொல்லுவாய்ங்க நியூஸ்பேப்பர்ல.அதை தவிர்த்து?
பாத்திருக்க வாய்ப்பில்லை.ஏன்னா அந்த விளம்பர செலவுகள்தான் இவங்க நமக்கு கொடுக்கற ஃபிரீ ரைடுங்க.

2.நாம டிவி,பேப்பர்,ரேடியோல பாக்குற விளம்பரங்கள்லான் நான்-இன்டராக்டிவ் வகை விளம்பரங்கள்.ஓலா,ஊபர் செய்வதோ எக்ஸ்பீரியன்ஷல்(அனுபவபூர்வ) மார்க்கெட்டிங்.அதாவது பயனாளியை நேரடியாக சேவையை அனுபவிக்க வைத்து எமோஷனலாக தாக்கி,”நன்றி சொல்ல உனக்கு…வார்த்தை இல்லை எனக்கு” என்கிற “நண்பன் போட்ட சோறு,நிதமும் தின்னேன் பாரு” ரேஞ்சுக்கு உருகும் நிலைக்கு தள்ளி,அவர்கள் மனதில் ஒரு பிராண்டாக அஸ்திவாரத்தை நச்சுனு போட்டு பில்டிங் கட்டுற வித்தைதான் இது.

3.இதுல என்ன தப்பு?வியாபார உலகுல அவனவன் காசை நம்மகிட்ட இருந்து பிடுங்க ட்ரை பண்றான்.இவன் நல்லதுதானே செய்றான் என்பவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி வரும் ஓலாவை பார்த்தால் புரியும்.ரேட்டை கடுமையாக உயர்த்தியாச்சு.ஃபிரீ ரைடுலான் அவ்ளோ ஈஸியா கொடுக்க மாட்டான்.ஏன்னா இப்பொழுது அவன் வசம் இருப்பது அவன் கொழுக்க வைத்த இலவச சிக்கன் பீஸூகள்.இப்போ அவன் செய்யும் வேலையெல்லாம் அவங்களை நல்லா வறுத்து சாப்பிடுற வேலைதான்.இது வணிக ரீதியாக தவறு என்று ஓரேடியாக சொல்லிவிட முடியாது.

4.ஏன்னா பிஸினஸ்ல உங்களுக்கு பிரேக்-ஈவன் பத்தி கேள்விபட்டிருந்தா இது புரியும்.போட்ட முதல்,வருமானமா மாற ஆரம்பிக்கற தருணம்.ஓலா அத கிராஸ் பண்ண ஆரம்பிச்சிடுச்சு.ஊபரும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சிடும்.

5.பஸ்,டிரெயின்,நடராஜா சர்வீஸ்,ஆட்டோ என பலவாறு வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை ஒரே சாம்ராஜ்யமாக-பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டாக நிகராக, மெட்ரோ மற்றும் இதர பெரிய நகரங்களில் உருவாக்கும் மல்டிநேஷனல் சிம்பிள் பி-ப்ளான் தான் இது.பெரிய சகுனி வேலைலாம் இல்ல.

6.இது தெரியாம “போட்ருக்காங்க வேதாளம்! சாம்பார்ல முருங்கைக்காயை முழுசா
போட்ருக்காங்க வேதாளம்!”னு பொலம்புற சொம்பு சுதாக்களே இது அவ்ளோ எமோஷனலா மூக்கை சிந்துற மேட்டர்லான் இல்ல.அதே போல பெரிய துரோகம்லான் கிடையாது.

நீ ஆடுன்னு நினைச்சு அவன் இன்வெஸ்ட் பண்றான்.பிரியாணி ஆவுறதும்,வெட்டறதுக்கு முன்னாடி ஓடி போறதும் உன் சாமர்த்தியம்.

அவ்ளோதான் இந்த கட்டுரையுடைய சாராம்சம்.
வர்ட்டா??!

காதலும் கடந்து போகும்

image

திங்கள்.மதியம்.உணவு அருந்திவிட்டு பொடிநடையாய் ஸ்டேஷன் அடைய வியர்வை.அவ்ளோ வொர்த் ஆ??
நண்பர்கள் ககபோ அழைத்திருந்தார்கள்.

ஐநாக்ஸ்.சிட்டி செண்டர். மைலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலுக்கும் கலங்கரை விளக்கத்துக்கும் இடையிலான இடம்.3.45 ஷோ.120 ரூவா டிக்கட்.போஷான மூவி ஹால்.புஷ் பேக் டால்பி ஏஸி கும்தா.போய் அமர்ந்ததும் கார்த்தியின் தோழா பட டிரெயிலரும் சில வணிக விளம்பரங்களும் திரையிட்டார்கள்.

விஜய் சேதுபதி செயின் ஸ்மோக்கர் என்பதால் செலின் “மடோனா செபாஸ்டியன்” வாய்ஸ்தான் புகைப்பிடித்தலின் தீமைகள் சொல்கிறது.தர்மம்.
நலன் குமரசாமி நல்ல படம் எடுத்திருக்கிறார்.வாழ்த்துக்கள்.

நமக்கென்ன வேலை? லட்டு மாதிரி இருக்கும் மடோனா செபாஸ்டியனை ரசிப்பது ஒன்றுதான்.படத்தில் அவரது பெயர் யாழினி.இவள் யாழினும் இனியவள்.விஜய் சேதுபதி நிஜ ரவுடி கதிர் வேடம்.அதனால் நிஜமாகவே அடியும் வாங்குகிறார்,அடியும் கொடுக்கிறார்.

image

படத்தில் காதலே இல்லாத ஒரு காதல் கதை.செம்ம ஃபிரெஷ்ஷாக இருந்தது பார்ப்பதற்கு.யாழினி கதிருடன் சரக்கடித்து,போதையில் உளறி,கட்டிப்பிடித்து தூங்கி,காலையில் எஸ் ஆகி,கதிரை எஸ்கிமோ நாயாக்குவதும்,அதை தொடர்ந்து கதிர் செய்யும் லொள்ளும் அந்த டிரேட்மார்க் ஸீனின் தனி சுவை.

யாழினிக்கு தேவை சென்னையில் ஒரு நிரந்தர ஐடி வேலை.அதற்கு உதவுகிறார் ரவுடி கதிர்.கதிருக்கு தேவை பார் ஓனர் ஆகும் பாக்கியம்.அதற்கு தடையாக கெட்ட போலீஸ் சமுத்திரக்கனி நிற்கிறார்.அதை தாண்டி ஜெயித்தாரா என்பது ஒரு லைன்.

இன்னொரு லைன் யாழினிக்கும் கதிருக்கும் இடையிலான நான் லீனியர் காதல்.அந்த விழுப்புரம் செஷன் செம்ம கியூட்.ட்ரெயினில் யாழினி கொடுக்கும் ட்ரெயினிங்கையும் மீறி,பதற்றத்தில் கதிர் யாழினியின் பெற்றோர் முன்பு கேவலமாக சொதப்புவதும்,அதையும் மீறி அவள் அப்பா கதிரை ரிலாக்ஸ் செய்வதும் உச்சக்கட்ட “லோல்”.

சாங்,பிஜிஎம் ஜாலி.நல்ல கேமரா.குட் ஸ்டண்ட் சீக்வென்ஸ்(சில்க்கு பார் ஃபைட் மற்றும் ரிவெஞ்ச்).ஜாலியான படம் பார்க்க வரும் குடும்பங்களுக்கு ஏற்ற தரமான சேதுபதி சரக்கு.

வர்ட்டா??

கதா பாத்திரங்கள்-பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்–பெயர்க் காரணம்–பொன்னி(காவிரி) நதியின் புதல்வன்.சிறுவயதில் குடும்பத்தாருடன் செல்லும்போது, படகில் இருந்து தவறிய விழுந்த அருள்மொழிவர்மனை காவிரித்தாயே கைகொண்டு காப்பாற்றியதாக அப்பொழுது நம்பப்பட்டு வந்தது.அதனாலேயே இந்த பெயர்.(உண்மையில் செல்வனை காத்தது காவரித்தாய் ரூபத்தில் வந்த,சுந்தர சோழரின் முதல் மனைவி ஊமைப்பெண்–மந்தாகினி தேவி அம்மையார்)

1.செம்பியன் மாதேவி–மகான் கண்டராதித்த சோழரின் மனைவி.பெரிய பிராட்டியார்.ஆகப்பெரிய சிவபக்தை.ஆதித்தனையும்,இராஜஇராஜனையும் எடுத்து பல கலைகளையும் ஊட்டி வளர்த்தவர்.

2.வானமாதேவி–சுந்தர சோழரின் ஊரறிந்த மனைவி.இராணியார்.குந்தவை,ஆதித்தன்,அருள்மொழியின் அம்மா.

3.அநிருத்த பிரம்மராயர்–சோழ நாட்டின் முதன்மந்திரி.ஆழ்வார்க்கடியான் என்பவன் இவரின் சீடன்.இருவரும் புத்தியிலும் சமயோஜிதத்திலும் மகா வல்லவர்கள்.தீவிர திருமால் பக்தர்கள்.

4.பெரிய பழுவேட்டரையர்–உடம்பில் 67 விழுப்புண் பெற்ற மாவீரர்.சோழ நாட்டின் தனாதிகாரி.பழுவூர் வம்சம் சோழ குலத்தோடு பெண்கொடுத்து,பெண் எடுக்கும் அளவுக்கு அந்நியோன்னியமானது.நந்தியின்பால் கொண்ட மயக்கத்தினால்,விபரீதமறியாது அவளை தன் இராணியாக்கிக் கொண்டவர்.

5.சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி–பழையாறை அரண்மணை கட்டுக்காவல் தலைவர்.சோழ படைத்தளபதி.சிலகாலம் தஞ்சைகோட்டை காவலிலும் ஈடுபட்டவர்.வானதியின் சின்ன தகப்பனார்.

6.சின்ன பழுவேட்டரையர்–பெரிய பழுவேட்டரையரின் தமையன்.தஞ்சை கோட்டைத்தளபதி.பழைய மதுராந்தகன்(புதிய பாண்டியன்) இவரது மருமகன்.நந்தியினை ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்கொண்டு சரியாக எதிர்க்கிறார்.

7.திருக்கோவலூர் மலையமான்–சுந்தர சோழரின் மாமனார்.வானமாதேவியின் அப்பா.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருள்மொழியின் தாத்தா.இருந்தாலும் ஆதித்த கரிகாலன் மேல் அதிக பாசம்.காஞ்சியில் அவனுடனும் பார்த்திபேந்திரனுடனும் காலத்தை கழிப்பவர்.

8.பெரிய சம்புவரையர்–கடம்பூர் சிற்றரசின் ராஜா.இவர்களும் சோழகுலத்தின் மிக நெருக்க உறவுகள்.வந்தியத்தேவனின் உயிர்நண்பன்,இடைக்கால எதிரியாக தன்னைக்கருதிக்கொண்ட கந்தமாறன்,அவன் தங்கை மணிமேகலையின்(வந்தியத்தேவன் மீது ஒருதலை காதல் கொண்ட அழகு பதுமை) தகப்பனார்.

9.வல்லவரையன் வந்தியத்தேவன்–வாணர் குலத்து வீரன்.இளவரசன்.நம் கதையின் உண்மை நாயகன்.ஹாஸ்யமும்,வீரமும்,காதலும்,சமயோசிதமும் சரி அளவில் கலந்த அற்புத மனிதன்.குந்தவையின் டபுள்சைடு காதலன்.நந்தினி,மணிமேகலையின் ஒன்சைடு காதலன்.வானதி,பூங்குழலியின் நல்ல நண்பன்.கோபிகையர் கொஞ்சும் நம் கதையின் கண்ணன்.

10.நந்தினி–பெரிய பழுவேட்டரையரின் மனைவி.ஆதித்த கரிகாலரின் முன்னாள் காதலி.வீரபாண்டியனின் வளர்ப்பு மகள்.மந்தாகினியின் மகளும்கூட.
அவன் இறப்புக்கு பழிவாங்குவதற்காகவே சோழநாட்டில் அரசியலில் புகுந்தவள்.ஆனால் அவள் மனம் உண்மையில் வந்தியத்தேவனை மட்டுமே ஒருதலையாக நேசித்தது என்று குந்தவை வாயாலேயே பிற்பாடு வந்தியத்தேவனுக்கும் நமக்கும் வெளிப்படுகிறது.பேரழகி.மாய மோகினி.எதிர்ப்படும் எவரையும் வசியப்படுத்தும் சக்தி பெற்றவள்.நந்தினி காலால் இட்ட கட்டளையை ஒருகட்டத்தில் பார்த்திபேந்திரன்,கந்தமாறன் போன்ற பல ஆடவர்கள் தலையால் நிறைவேற்றினார்கள்.அவள் வலையில் சிக்காத ஒருவன் வந்தியத்தேவன் மட்டுமே.அவள் உண்மையிலேயே அவனை நேசித்தாலும் அவளை நாசூக்காக பிரிந்தவன்.அதன்மூலம் சோழகுலத்துக்கு ஈடில்லா நீதி செய்தவன்.இருந்தும் நந்தினியே எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரம்.அவள்மேல், கதையை படிக்கும் பல இளைஞர்களுக்கும் மோகம் உண்டாகும் அளவிற்கு கல்கி அவளைப் படைத்திருக்கிறார்.

11.பார்த்திபேந்திர பல்லவன்–ஆதித்த கரிகாலரின் நண்பன்.பல்லவ மன்னன்.அப்பொழுது பல்லவர்கள் சோழர்களின் நண்பர்கள்.அவர்கள் நாடும் சோழநாடாய் இருந்தது.மாமல்லையும்,காஞ்சியும் சோழநாட்டின் வடக்கு தலைநகர் என்ற அளவு நட்பு இருந்தது.குந்தவை மேல் ஒருதலையாக ஆசைப்பட்டவர்.வந்தியத்தேவனை எதிரியாக நினைத்தவர்.மற்றபடி சோழ குலத்துக்கு நிறைய உதவி செய்திருப்பவர்.

12.மந்தாகினி தேவி–நந்தினியின் அம்மா.ஊமை இராணியார்.சுந்தர சோழரின் முதல் மனைவி.பொன்னியின் செல்வன் உயிரை காவிரியிலும்,ஈழத்திலும் காத்தது மட்டுமல்லாமல் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் உயிரை தாக்க வந்த வேலை தன் மார்பில் தாங்கி,உயிர்த்தியாகம் செய்து காத்த பெண் தெய்வம்.

13.கந்தமாறன்–இளைய சம்புவரையன்.இவர்களின் அரண்மணையிலேயே சோழ வம்சத்தை சீரழிக்கும் சதியாலோசனை கூட்டமும்,பின் விதியின் வசத்தால் ஆதித்த கரிகாலரின் படுகொலையும் நிகழ்கிறது.

14.மணிமேகலை–வந்தியத்தேவனின் தீராக்காதலி.அவனைத்தவிர வேறொருவனையும் நினையாமல்(பழைய மதுராந்தகன்,ஆதித்த கரிகாலர்),இறுதியில் அவன் வரும்வரை காத்திருந்து,வந்தியத்தேவன் மடியிலேயே உயிரைவிட்ட உத்தமி.

15.குந்தவை–இளைய பிராட்டியார்.பேரழகி.பெரும் அறிவு.வந்தியத்தேவனின் டபுள் சைடு காதலி.அவனின் வருங்கால மனைவி.ராஜராஜனின் அக்கா.வானதியின் தோழி.

16.வானதி–கொடும்பாளூர் இளவரசி.பேரழகி.அணிச்ச மலரினும் மென்மையான குணத்துக்காரி.அருள்மொழியின் காதலி.அவன் மகன் இராஜேந்திர சோழனை பெற்றெடுத்த வயிற்றுக்காரி.அதன்மூலம் அழியாப்புகழ் பெற்றவள்.

17.பூங்குழலி–புதிய மதுராந்தகர்(பழைய சேந்தன் அமுதன்) மனைவி,காதலி எல்லாம்.சில காலம் பொன்னியின் செல்வரை டாவு அடித்தவள்.ஓடக்கார பெண்.செம்ம நாட்டுக்கட்டை.அலையை சமாளிக்கும் திம்சுக்கட்டை.கோடியக்கரைக்கும் ஈழத்துக்குமே படகு தன்னந்தனியாக விடுமளவு திராணியும்,துணிச்சலும் கொண்டவள்.சமுத்திர குமாரி.சோழ நாட்டின் எதிர்பாரா வருங்கால இராணி.

18.சேந்தன் அமுதன் என்கிற புதிய மதுராந்தகர்–மந்தாகினியின் ஊமைத்தங்கையின் மகனாக முதலில் அறியப்பட்டு,பின் உண்மையில் செம்பியன் மாதேவி-கண்டராதித்தரின் திருப்புதல்வனாக அடையாளங்காணப்பட்டு,சோழ கிரீடம் பொன்னியின் செல்வர் கையாலேயே சூட்டப்பட்டு, சிங்காதனம் ஏறி 15 வருடம் உத்தம சோழன் என்கிற பெயருடன் ஆட்சி நடத்தியவர்.

இவர்களல்லாமல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளான மந்திரவாதி ரவிதாஸன்,இடும்பன்காரி மற்றும் பலர்,பாதாள சிறையில் பைத்தியக்காரனாக அடைக்கப்பட்டிருந்த கருத்திருமன்,வைத்தியர் மகன் முட்டாள் பினாகபாணி போன்ற பல குட்டி குட்டி கதாபாத்திரங்களும் வந்து கதைக்கு விறுவிறுப்பும்,வலுவும்,அழகும் சில சமயம் ஆபத்தும்,சில சமயம் நன்மைகளும் விளைவிக்கும்.

அழகு தொடர் தொடர்வோம்.

பொன்னியின் செல்வன் சீரிஸ்

டிவியில் சீரியல் போட்டால் பார்க்கும் சனம்.ஆங்கில,கொரியன் தொடர்களை ரசிக்கும் சனம்.படங்களில் தொடர் படங்களையும் விடாமல் தேடி ரசிக்கும் சனம்(தூம் சீரிஸ்,ஆஷிக்கி சீரிஸ்,சிங்கம்,எந்திரன்).
என் பொன்னியின் செல்வன் தொடர்பான அலசல் தொடர் வலைப்பூக்களையும் முகரும் என நம்பி தொடங்கி தொடர்கிறேன்.

ஏன் இதை ஒரு ப்ளாக் பதிவாக எழுத முடியாது என்பது தமிழ் நாட்டவருக்கு நன்றாகவே தெரியும்.கல்கி மூன்றரை வருட காலம் வாராவாரம் எழுதி,வெளியிட்ட அற்புத தொடர் இது.பின் நூலாக வெளிவந்தும் சக்கைப்போடு போட்டது.நான் இதை முழுமையாக வாசித்து,இரசிப்பதற்கே 13 மாதங்களுக்கும் அதிகமான கால அவகாசம் தேவைப்பட்டது.அத்தகைய பிரம்மாண்டத்தைப் பற்றிய அலசலும் பிரம்மாண்டமாகத்தான் இருக்க முடியும்,இருக்க வேண்டும்.அதற்காக வேண்டியே இந்த அணில் முயற்சி.

மனிதனால் எழுதப்பட்ட மொழிகளிலேயே தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் தலையாயதே.அதில் வெற்றிக்கண்ட பல எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி.எதற்காக இவ்வளவு இழுவை என்றால் தமிழ் அவ்வளவு நெடிதுயர்ந்த மொழி.அதன் ஆழங்களை,அர்த்தங்களை,வெற்றிகளை-எவ்வளவு முயன்றாலும் சுருக்கி,அடக்கி ஆளமுடியாது.ஆகவே இந்த ஜஸ்டிஃபிகேஷன்.

அப்பேற்பட்ட கல்கியின் படைப்புகளான பொய்மான் கரடு,சேரமான் காதலி,சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன் போன்ற புதினங்கள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு அவ்வளவு பின்னிப் பிணைந்தவை.ராஜா கதைகளையும் பாமர பார்வை கொண்டே எழுதி,புரியவைத்தவர் அவர்.நாமெல்லாம் எத்தனாம் தலைமுறை தமிழர்கள்? முரட்டு தூய தமிழை உபயோகிக்காமல்,காலத்திற்கேற்றார்போல் புரிகிற கான்செப்டை எழுதுபவர் கல்கி.

பொன்னியின் செல்வன் என்ற அருள்மொழிவர்மன் என்கிற இராஜஇராஜன் என்கிற சோழ பரம்பரை மன்னனின் கதையையே அவர் வாண ராஜா பரம்பரையாக இருந்தாலும்,பாமர பார்வை கொண்ட ஹீரோ வல்லவரையன் வந்தியத்தேவன் வழியாகவே நமக்கு சொல்கிறார்.கதையின் உச்சம் அருள்மொழியாக இருந்தாலும்,கதையை மொத்தமாக தாங்கிப் பிடிக்கும் தூண் என்னவோ-அது வந்தியத்தேவன் தான்.
அவனிலிருந்தே சீரிஸை ஆரம்பிப்போம்.அதற்கு முன் சோழ பரம்பரை பற்றிய ஒரு இண்ட்ரோ.

1.புறாவுக்கு எடைக்கு எடை தன் சதை கொடுத்து நீதி வழங்கிய சிபி.இவர் வழி வந்ததாலேயே சோழ மன்னர்கள் செம்பியன் என்றழைக்கப்படுகிறார்கள்.

2.கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்குவதற்காக சொந்த மகனையே பலியிட்டு நீதி வழங்கிய மனுநீதி சோழன்.

3.காவரியையும் கொள்ளிடத்தையும் ஒருபுள்ளியில் காலமெல்லாம் கல்லைக்கொண்டு அடக்கி,கங்கை வரை வெற்றிக்கொண்ட கரிகால் பெருவளத்தான்.

4.அவன்பின்னர் இராஜகேசரி,கோப்பரகேசரி என மாறி மாறி பட்டப்பெயர் பெற்று கோலோச்சிய மன்னர்கள் இருந்தாலும்

ஒரு கட்டத்தில்  சோழநாடு தஞ்சாவூரையும் பழையாறையையும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களாகவும் நில அளவில் சுருங்கி போயிற்று.

5.ஆனால் மனதளவில் சுருங்காத,அதன்பின் வந்த விஜயாலய சோழன் சோழநாடு மொத்தத்தையும் மீட்டு இராஜாவாக மீண்டும் முடிசூடினான்.

6.அதன்பின் ஆதித்தன்.நில அளவையும்,சோழ நாட்டின் எல்லைகளையும் பல போர்கள் தொடுத்து விரிவுபடுத்தினான்.

7.அதன்பின் அரிஞ்சய சோழர்.இருக்கின்ற நில அளவை காப்பாற்றி ஆட்சி நடத்தினார்.இவருக்கு பிறந்தவர்களே மூவர்.

8.இராஜாதித்தர்–பாண்டியர்களுடன்
போரின்போது யானைமீது வீர சொர்க்கம் எய்தினார்.

9.கண்டராதித்தர்(இராஜாதித்தரின் தமையன்)–கண்டிராதித்த சோழர் மிகப்பெரிய சிவபக்தர்.தென்னாடு முழுவதும் பற்பல சிவாலயங்களை எழுப்பியும்,சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தும்,சிவாலயங்களை புதிப்பித்து திருப்பணி செய்வதிலும் சிவ மந்திர நூல்களான தேவாரம் முதலியவற்றை ஓலைச்சுவடிகளிலும்,கற்வெட்டுகளிலும் இடம்பெறச் செய்து சிவபதம் அடைந்தார்.

10.இவருக்கு பின் இராஜாதித்தர் மற்றும் இவரின் தமையரான சுந்தர சோழர் அரியணை ஏறி ஆட்சி நடத்தி வந்தார்.
இவர்தம் காலத்திலேயே பொன்னியின் செல்வன் நடக்கிறது.இவருக்கு இரு புதல்வர்கள்.

11.மூத்தவர் வீரத்தில் அர்ஜூனனையும்,அபிமண்யுவையும் ஒத்த சிங்கம்–ஆதித்த கரிகாலன்.சோழ சைன்யத்தின்(வீரர் திரள்படையின்) வடதிசை மாதண்ட நாயகன்.காஞ்சி,வடபெண்ணைக்கு அப்பால் உள்ள சைனயங்களின் தலைவன்.வடக்கே இரட்டை மண்டலம்,இராஷ்டரகூடம்,கன்னரநாடு,கலிங்கர்கள் போன்ற எல்லா பேராபத்துகளையும் எதிர்த்து நிற்கும் சிம்மம்.ஆனால் முரட்டு முன்கோபம்.

12.இளையவர்–அருள்மொழிவர்மர்.தென்திசை மாதண்ட நாயகர்.கதையின் துவக்கத்தில் ஈழத்தில் சிங்கள மன்னன் மகிந்தனை ஓட ஓட ரோஹண வனத்துக்குள் விரட்டி,அவனையும் பாண்டிய நாட்டு மணிமகுடத்தையும்,இரத்தின ஹாரத்தையும் தேடிக்கொண்டிருப்பவர்.இராஜஇராஜன்.இராஜனுக்கெல்லாம் இராஜன்.இதற்கு பின் இப்படியொரு மன்னன் வாழ்ந்ததும் இல்லை.உலக வரலாற்றில் அலக்சாண்டரையும்,இந்திய வரலாற்றில் அசோகரையும் மட்டுமே இவருக்கு ஈடு இணையாக குறிப்பிட தகுந்தவர்கள்.
உலக அரசியல் காரணமாக இன்னமும் அறிவிக்கப்படாத ஆனால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட உலக அதிசயமான தஞ்சை பெருவுடையார் கோவிலின் மூலகர்த்தா.

தொடர்வோம் ருசியான வரலாறு.

மகளிர் தின வாழ்த்துக்கவி

கவிஞர்கள் வெறும் பொய்யர்கள் என்றொரு கருத்துண்டு!
அவர்கள் கவிதைகளில் கற்பனை கலந்திருப்பதால்..

அந்த கற்பனை நிஜமாகிவிட்டால்
கவிஞர்கள் நல்லவர்களாகி விடுவார்கள்.
நானும் இன்று நல்லவனாகிறேன்
பெண்மை என்னும் உண்மையை கவிப்படைப்பதினால்!

பெண்மையை புகழ்ந்துரைக்க எனக்கென்ன தகுதி இருக்கிறது?
ஆம்…இருக்கிறது.
என் தாயின் செல்லப்பிள்ளையாய்
என் தோழிகளின் உயிர்நேசனாய்
என் சகோதரிகளின் விளையாட்டு பொம்மையாய்
வருங்கால என்னவளின் மன்னவனாய்..
தகுதி மட்டுமல்ல தலையாய கடமையும் இருக்கிறது…

இவ்வளவு நாட்களும் பெண்ணைப் பற்றிய கவிதை என்றால்..
ஆண்களுக்கு அவர்கள் செய்யும் தியாகங்கள் பற்றியே பட்டியல் நீளும்.
இதில் ஆண் கவிஞர்களின் கயமையே அதிகம்;
அவர்களைப் பொறுத்தவரை
பெண் என்றால் தியாகம்;பெண் என்றால் வலிகளின் மறதி;

இதில் ஓரளவு உண்மையும் உண்டென்பதால்
பெண்களும் இக்கவிகளை ரசித்துவிடுகிறார்கள்..
பாவம் அதில் பெருமளவு கயமை இருப்பதை உணராமல்…

நான் இங்கு இருப்பதோ
கொஞ்சமாவது உண்மை உரைத்து செல்லலாம் என்றே!

உண்மைகள் சுடத்தான் செய்யும்
ஆனால் அதன் வெப்பம் மட்டுமே உயிரின் சாட்சி!

பெண் என்பவள் தெய்வம் அல்ல
உன்னைவிட கீழ்த்தரமானவளும் அல்ல..
அவள் உன் பாதி;உன் மனிதத்தின் மீதி…
உனக்கென்று உள்ள உரிமைகள் யாவையும்
தகுதியோடு சேர்த்து ஆளும் திறனுடையவள்..
அவள் உன் குரு;அவள் உன் ஆன்மா!
உன் மகிழ்ச்சியின் ஆணிவேர்..
அவளுக்கென்று ஆசைகள் உண்டு…
அவளுக்கென்று லட்சியங்கள் உண்டு…
உன்னிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக
இவற்றை அவள் தியாகம் செய்ய வேண்டியதில்லை…

விலகிச் செல்லும் பெண்ணிடம் அன்பைக்கூட திணிக்காதே!
உன்னை நம்பி வரும் பெண்ணுக்காக உன் திமிரைக்கூட மதிக்காதே…..

நன்றி……வணக்கம்.

ஐபிஎல் பிட்டிங்

பணக்காரங்க மட்டுமில்லை.என்னை மாதிரி மேலாண்மை மாணவர்கள் விளையாடும் கேம்.முக்கிய கல்லூரிகளின் மேலாண்மை விழாக்களில் தவறாமல் இடம் பெறும் கேம்.

பார்க்க ரொம்ப சிம்பிளான,உண்மையில் ரொம்ப அறிவுசார்ந்த,பொறுமை சார்ந்த சேலஞ்சிங் கேம்.ஒரு சிறு சறுக்கல் கேமையே உருக்குலைத்து விடும்.ஆட்ட விதிகள்,மூளையின் நியூரான்களை ஒவ்வொரு நிமிடமும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.சூதாட்டம் போல தோன்றும்.உண்மையில் இது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு அறிவியல் நிகழ்வு.

எங்கு பதுங்க வேண்டுமோ-அங்கு பதுங்க வேண்டும்.எங்கு அக்ரெஸ்ஸிவாக ஏறி அடிக்க வேண்டுமோ அங்கு பாய வேண்டும்.இரண்டுக்கும் இடைப்பட்ட நகத்துடிப்பு ஸ்டேஜ்களும் உண்டு.

குறிப்பிட்ட தொகை(கோடிகளில்) வழங்கப்படும்.
நூற்றுக்கணக்கான ப்ளேயர்கள் பேட்ஸ்மேன்,பவுலர் வரிசைகளாக பவர்பாயிண்ட் மூலம் பிரஜக்ட் செய்யப்படுவர்.ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு டேபிள்.ஒரு கண்காணிப்பாளர்-நாம் வாங்கிய ப்ளேயரின் ரேட்டிங்,அவரை நாம் வாங்கிய விலை,அவர் எந்த ப்ளேயர் ரகத்தை சார்ந்தவர்,அவர் வெளிநாட்டவரா லோக்கலா? இதை குறித்துக்கொள்ள.
இது போதாதென்று ஓவரால் கண்காணிப்பாளர்கள் இருவர்.ஏல நிகழ்ச்சியை நடத்துபவர் ஒருவர்.மட்டுமில்லாமல் எல்லா டீம் ரெக்கார்டும் மற்ற எல்லா டீம்களாலும் நோட் செய்யப்படும்.

இதில்

1)குறிப்பிட்ட தொகையை மீறக்கூடாது
2)11 பிளேயர்+1 கோச்/அம்பாஸடர் வாங்கியாக வேண்டும்
3)அவர்கள் 7 இந்தியர்கள்,4 வெளிநாட்டவராக இருத்தல் வேண்டும்
4)அதில் நால்வர் மட்டைக்காரர்கள்,நால்வர் பந்துவீச்சாளர்கள்,இருவர் சகலகலா வல்லவர்கள்,ஒருவர் விக்கட் கீப்பர்.இந்த மிக்ஸிங்கில் ஒரு கேப்டனும் வந்தாக வேண்டும்.

போன்ற எந்த விதியையும் மீறக்கூடாது.மீறினால் சொல்லமாட்டார்கள்.விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் நமக்கே தானாக விளங்கும் வரை.
இறுதிவரை விளங்காதவர்களுக்கு disqualified எனும் தகுதிநீக்கம் பற்றி உரைநடை பாடம் தனியே எடுக்கப்படும்.அந்த அசிங்கத்தை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

இது எவ்வளவு அற்புத ரிசோர்ஸ் கேம் என்பது விளையாட விளையாட தான் விளங்குகிறது.
எல்லாமே இங்க ஆக்ஷன் தான்.
ஸ்போர்ட்ஸ்,ஸ்பெக்ட்ரம்,நிலக்கரி,எரிவாயு,வர்த்தக சந்தைகள்,பொதுத்துறை-தனியார் கான்ட்ராக்ட்கள் என.
டைம் இஸ் மணி.மணி இஸ் டைம் ரகம்.
இங்க பொழைக்க இந்த மாதிரி ஆட்டம் எங்களை போன்ற ஆட்களுக்கு அதிகம் தேவை.விளையாடுவோம்.கத்துக்குவோம்.ஜெயிப்போம்.லந்து பண்ணுவோம்..!! _/\_

வர்ட்டா??!!