கதா பாத்திரங்கள்-பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்–பெயர்க் காரணம்–பொன்னி(காவிரி) நதியின் புதல்வன்.சிறுவயதில் குடும்பத்தாருடன் செல்லும்போது, படகில் இருந்து தவறிய விழுந்த அருள்மொழிவர்மனை காவிரித்தாயே கைகொண்டு காப்பாற்றியதாக அப்பொழுது நம்பப்பட்டு வந்தது.அதனாலேயே இந்த பெயர்.(உண்மையில் செல்வனை காத்தது காவரித்தாய் ரூபத்தில் வந்த,சுந்தர சோழரின் முதல் மனைவி ஊமைப்பெண்–மந்தாகினி தேவி அம்மையார்)

1.செம்பியன் மாதேவி–மகான் கண்டராதித்த சோழரின் மனைவி.பெரிய பிராட்டியார்.ஆகப்பெரிய சிவபக்தை.ஆதித்தனையும்,இராஜஇராஜனையும் எடுத்து பல கலைகளையும் ஊட்டி வளர்த்தவர்.

2.வானமாதேவி–சுந்தர சோழரின் ஊரறிந்த மனைவி.இராணியார்.குந்தவை,ஆதித்தன்,அருள்மொழியின் அம்மா.

3.அநிருத்த பிரம்மராயர்–சோழ நாட்டின் முதன்மந்திரி.ஆழ்வார்க்கடியான் என்பவன் இவரின் சீடன்.இருவரும் புத்தியிலும் சமயோஜிதத்திலும் மகா வல்லவர்கள்.தீவிர திருமால் பக்தர்கள்.

4.பெரிய பழுவேட்டரையர்–உடம்பில் 67 விழுப்புண் பெற்ற மாவீரர்.சோழ நாட்டின் தனாதிகாரி.பழுவூர் வம்சம் சோழ குலத்தோடு பெண்கொடுத்து,பெண் எடுக்கும் அளவுக்கு அந்நியோன்னியமானது.நந்தியின்பால் கொண்ட மயக்கத்தினால்,விபரீதமறியாது அவளை தன் இராணியாக்கிக் கொண்டவர்.

5.சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி–பழையாறை அரண்மணை கட்டுக்காவல் தலைவர்.சோழ படைத்தளபதி.சிலகாலம் தஞ்சைகோட்டை காவலிலும் ஈடுபட்டவர்.வானதியின் சின்ன தகப்பனார்.

6.சின்ன பழுவேட்டரையர்–பெரிய பழுவேட்டரையரின் தமையன்.தஞ்சை கோட்டைத்தளபதி.பழைய மதுராந்தகன்(புதிய பாண்டியன்) இவரது மருமகன்.நந்தியினை ஆரம்பத்திலிருந்தே சந்தேகங்கொண்டு சரியாக எதிர்க்கிறார்.

7.திருக்கோவலூர் மலையமான்–சுந்தர சோழரின் மாமனார்.வானமாதேவியின் அப்பா.ஆதித்த கரிகாலன்,குந்தவை,அருள்மொழியின் தாத்தா.இருந்தாலும் ஆதித்த கரிகாலன் மேல் அதிக பாசம்.காஞ்சியில் அவனுடனும் பார்த்திபேந்திரனுடனும் காலத்தை கழிப்பவர்.

8.பெரிய சம்புவரையர்–கடம்பூர் சிற்றரசின் ராஜா.இவர்களும் சோழகுலத்தின் மிக நெருக்க உறவுகள்.வந்தியத்தேவனின் உயிர்நண்பன்,இடைக்கால எதிரியாக தன்னைக்கருதிக்கொண்ட கந்தமாறன்,அவன் தங்கை மணிமேகலையின்(வந்தியத்தேவன் மீது ஒருதலை காதல் கொண்ட அழகு பதுமை) தகப்பனார்.

9.வல்லவரையன் வந்தியத்தேவன்–வாணர் குலத்து வீரன்.இளவரசன்.நம் கதையின் உண்மை நாயகன்.ஹாஸ்யமும்,வீரமும்,காதலும்,சமயோசிதமும் சரி அளவில் கலந்த அற்புத மனிதன்.குந்தவையின் டபுள்சைடு காதலன்.நந்தினி,மணிமேகலையின் ஒன்சைடு காதலன்.வானதி,பூங்குழலியின் நல்ல நண்பன்.கோபிகையர் கொஞ்சும் நம் கதையின் கண்ணன்.

10.நந்தினி–பெரிய பழுவேட்டரையரின் மனைவி.ஆதித்த கரிகாலரின் முன்னாள் காதலி.வீரபாண்டியனின் வளர்ப்பு மகள்.மந்தாகினியின் மகளும்கூட.
அவன் இறப்புக்கு பழிவாங்குவதற்காகவே சோழநாட்டில் அரசியலில் புகுந்தவள்.ஆனால் அவள் மனம் உண்மையில் வந்தியத்தேவனை மட்டுமே ஒருதலையாக நேசித்தது என்று குந்தவை வாயாலேயே பிற்பாடு வந்தியத்தேவனுக்கும் நமக்கும் வெளிப்படுகிறது.பேரழகி.மாய மோகினி.எதிர்ப்படும் எவரையும் வசியப்படுத்தும் சக்தி பெற்றவள்.நந்தினி காலால் இட்ட கட்டளையை ஒருகட்டத்தில் பார்த்திபேந்திரன்,கந்தமாறன் போன்ற பல ஆடவர்கள் தலையால் நிறைவேற்றினார்கள்.அவள் வலையில் சிக்காத ஒருவன் வந்தியத்தேவன் மட்டுமே.அவள் உண்மையிலேயே அவனை நேசித்தாலும் அவளை நாசூக்காக பிரிந்தவன்.அதன்மூலம் சோழகுலத்துக்கு ஈடில்லா நீதி செய்தவன்.இருந்தும் நந்தினியே எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரம்.அவள்மேல், கதையை படிக்கும் பல இளைஞர்களுக்கும் மோகம் உண்டாகும் அளவிற்கு கல்கி அவளைப் படைத்திருக்கிறார்.

11.பார்த்திபேந்திர பல்லவன்–ஆதித்த கரிகாலரின் நண்பன்.பல்லவ மன்னன்.அப்பொழுது பல்லவர்கள் சோழர்களின் நண்பர்கள்.அவர்கள் நாடும் சோழநாடாய் இருந்தது.மாமல்லையும்,காஞ்சியும் சோழநாட்டின் வடக்கு தலைநகர் என்ற அளவு நட்பு இருந்தது.குந்தவை மேல் ஒருதலையாக ஆசைப்பட்டவர்.வந்தியத்தேவனை எதிரியாக நினைத்தவர்.மற்றபடி சோழ குலத்துக்கு நிறைய உதவி செய்திருப்பவர்.

12.மந்தாகினி தேவி–நந்தினியின் அம்மா.ஊமை இராணியார்.சுந்தர சோழரின் முதல் மனைவி.பொன்னியின் செல்வன் உயிரை காவிரியிலும்,ஈழத்திலும் காத்தது மட்டுமல்லாமல் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் உயிரை தாக்க வந்த வேலை தன் மார்பில் தாங்கி,உயிர்த்தியாகம் செய்து காத்த பெண் தெய்வம்.

13.கந்தமாறன்–இளைய சம்புவரையன்.இவர்களின் அரண்மணையிலேயே சோழ வம்சத்தை சீரழிக்கும் சதியாலோசனை கூட்டமும்,பின் விதியின் வசத்தால் ஆதித்த கரிகாலரின் படுகொலையும் நிகழ்கிறது.

14.மணிமேகலை–வந்தியத்தேவனின் தீராக்காதலி.அவனைத்தவிர வேறொருவனையும் நினையாமல்(பழைய மதுராந்தகன்,ஆதித்த கரிகாலர்),இறுதியில் அவன் வரும்வரை காத்திருந்து,வந்தியத்தேவன் மடியிலேயே உயிரைவிட்ட உத்தமி.

15.குந்தவை–இளைய பிராட்டியார்.பேரழகி.பெரும் அறிவு.வந்தியத்தேவனின் டபுள் சைடு காதலி.அவனின் வருங்கால மனைவி.ராஜராஜனின் அக்கா.வானதியின் தோழி.

16.வானதி–கொடும்பாளூர் இளவரசி.பேரழகி.அணிச்ச மலரினும் மென்மையான குணத்துக்காரி.அருள்மொழியின் காதலி.அவன் மகன் இராஜேந்திர சோழனை பெற்றெடுத்த வயிற்றுக்காரி.அதன்மூலம் அழியாப்புகழ் பெற்றவள்.

17.பூங்குழலி–புதிய மதுராந்தகர்(பழைய சேந்தன் அமுதன்) மனைவி,காதலி எல்லாம்.சில காலம் பொன்னியின் செல்வரை டாவு அடித்தவள்.ஓடக்கார பெண்.செம்ம நாட்டுக்கட்டை.அலையை சமாளிக்கும் திம்சுக்கட்டை.கோடியக்கரைக்கும் ஈழத்துக்குமே படகு தன்னந்தனியாக விடுமளவு திராணியும்,துணிச்சலும் கொண்டவள்.சமுத்திர குமாரி.சோழ நாட்டின் எதிர்பாரா வருங்கால இராணி.

18.சேந்தன் அமுதன் என்கிற புதிய மதுராந்தகர்–மந்தாகினியின் ஊமைத்தங்கையின் மகனாக முதலில் அறியப்பட்டு,பின் உண்மையில் செம்பியன் மாதேவி-கண்டராதித்தரின் திருப்புதல்வனாக அடையாளங்காணப்பட்டு,சோழ கிரீடம் பொன்னியின் செல்வர் கையாலேயே சூட்டப்பட்டு, சிங்காதனம் ஏறி 15 வருடம் உத்தம சோழன் என்கிற பெயருடன் ஆட்சி நடத்தியவர்.

இவர்களல்லாமல் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளான மந்திரவாதி ரவிதாஸன்,இடும்பன்காரி மற்றும் பலர்,பாதாள சிறையில் பைத்தியக்காரனாக அடைக்கப்பட்டிருந்த கருத்திருமன்,வைத்தியர் மகன் முட்டாள் பினாகபாணி போன்ற பல குட்டி குட்டி கதாபாத்திரங்களும் வந்து கதைக்கு விறுவிறுப்பும்,வலுவும்,அழகும் சில சமயம் ஆபத்தும்,சில சமயம் நன்மைகளும் விளைவிக்கும்.

அழகு தொடர் தொடர்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s