கோவை

image

அழகிய ஜங்ஷன் ஒரு மதியநேரத்தில்..

image

கோவைக்கு செல்வது எப்பொழுதும் பிடித்த ஒன்று.சென்னையை போன்ற இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்.ஆனால் சென்னையில் கிடைக்காத அமைதி.

image

கோவை மாநகரத்து வீதி ஒன்றில்

ஆடி,பிஎம்டபிள்யூ,பென்ஸ் போல தரமான கார்கள் ஷோரூம்களிலும் ரோடுகளிலும் அசால்ட்டாக தென்பட்டு பாயும்.மாநகராட்சியின் சுத்தமும் ஆச்சரியமளிக்கும்.மக்களின் ஏனுங்க போங்க வாங்க வாஞ்சையான மரியாதை ஆசையாக இருக்கும்.ஜங்ஷனில் ஒரு தடவை இரவு 2:28க்கு வந்திறங்கினேன்.காட்பாடியிலிருந்து ரயில்பிடித்து வந்து,சூடான பாதாம் பால் சாப்பிட்டுவிட்டு பயணிகள் காத்திருப்பறையில் அமர்ந்த நிலையிலேயே உறக்கம் லைட்டாக போட்டுவிட்டு மணி 4.45 ஆனவுடன் பல்துலக்கி,முகம் அலம்பி பேப்பருக்காக காத்திருந்தேன்.

image

ரெட்பஸ் டிக்கட்

தினத்தந்தி,தினமலர்,தினகரன் என அச்சுமணம் மாறாத புத்தம்புது செய்தித்தாள்கள் ஜங்ஷனில் வந்திறங்கின.முதல் மாநகர பேருந்து போக்குவரத்து காலை 5 மணிக்கு துவங்கும்.அதுவரை பேப்பர் வாங்கினேன் அங்கிருந்த மாற்றுத்திறனாளி கடைக்காரரிடம்.ஃபோனை சார்ஜ் செய்ய ஸாக்கெட்டில் போட்டுவிட்டு பேப்பர் படித்துக்கொண்டிருக்க,டொப் என்ற பல்ப் வெடிப்பது போன்ற சத்தம்.ஆனால் பல்ப் இல்லை.

image

ஐஆர்சிடிசி டிக்கட்

சுவரின் ஒரு துண்டு என் பேப்பர் மேல் வந்து தொப் என்று விழுந்தது.போய் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தால் அசால்ட்டாக அதை நிராகரித்தார்.பேப்பர்ல தான விழுந்தது? மண்டைல இல்லயே? என்று.கேட்டால் பூசுவேலை நடக்கிறதாம்.அப்புறம் என்ன மயித்துக்கு பயணிகளை அங்க விடுறீங்க என கேட்க தோன்றியது.கட்டுப்படுத்திக்கொண்டு வெளியேறினேன்.

image

மெஸ்மரைஸிங் சந்திப்பு

ஸ்டேஷனை விட்டு.மற்ற பெரிய ஜங்ஷன்களைப் போலல்லாமல் ரயில்வே பயணிகள் மேம்பாலமெல்லாம் இல்லை.இங்கு சப்வே எனப்படும் சுரங்கப்பாதை மட்டுமே.அதன்வழி நடந்து கோவையின் சாலைக் காற்றை உள்வாங்க ஆரம்பித்தேன்.ஒரு மாநகர பேருந்து வந்து நின்றது.நிறைய இடங்கள் அன்று செல்லவேண்டி இருந்ததால் 50 ரூவாய் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டேன்.ஐடி கார்டு கேட்டார் கண்டக்டர்.ஆச்சரியமாக இருந்தது.காட்டினேன்.காட்டிய பின்பே ஒருநாள் பயணச்சீட்டு தந்தார்.

image

மக்களின் அதிரடி நடமாட்டம்

அன்று சிவில் ஏரோட்ரோம் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் எனக்கொரு நேர்காணல் இருந்தது.வேலை முடிந்ததும்,நேராக பேரூர் பட்டீசுவரர் ஆலயம் சென்று மனமாற தரிசித்தேன்.எதிரிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி முடித்து வெளிவந்தால் கையில் தீபாவளி பட்டாசு டோக்கன் தந்தார்கள்.ஜாலியாக இருந்தது.அது பண்டிகை டைம்.தினசரிகளின் கோவை எடிஷனில் பல யூனியன்களுக்கான போனஸ்கள் அந்தந்த ஆலை நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

image

மருதமலை கோவில் சென்றிருந்த பொழுது..

ஒப்பணக்கார வீதியில் போனஸ்கள் பொருட்களாய் மாறும் என நினைத்துக்கொண்டேன்.உக்கடம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் பூத்து இடத்தை நிரப்பி கிடக்க,மாநகராட்சி நிர்வாகம் ஜேசிபி பொக்லைன் எந்திரம் கொண்டு அதை நிரவி நீக்கிக்கொண்டிருந்தது.

image

தடாகம் ரோட்டிலுள்ள கல்லூரி ஒன்றில்..

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அடைந்தபோது அங்கு திருச்சி,மதுரை,நெல்லை,திண்டுக்கல முதலான மார்க்க பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களைக் கண்டேன்.மேட்டுப்பாளையம் ரோடு பேருந்து நிலையம் பெரிய நிலையில் கட்டப்பட்டிருந்தாலும்,பயன்பாட்டிலில்லாமல் பேருந்துகள் உள்நுழையாமல் வெளியிலேயே மக்களை ஏற்றி சென்றன.வெள்ளந்தி முகங்கள்,சில சமயம் கோவை குசும்பும் சேர்ந்து குழைந்து சிரித்துக்கொண்டிருந்தன.

image

ரயில்களின் ஒய்யார அழகு

காந்திபுரம் சிலதடவை வந்திறங்கி இருக்கிறேன்.ஒரு தடவை ரெட்பஸ் மூலம் டிராவல்ஸில் வந்திறங்கியபோது செம்ம தூக்கம்.காந்திபுரம் டிப்போ உள்ளே பேருந்திலேயே சிறிது நேரம் படுத்து,உறங்கிவிட்டு,பின்னர் நகருக்குள் செல்லலாம் என்று ஏங்கும் மனது.ஆனால் விட்டால் தானே? கால்நடைகளை இறக்கிவிட்டு செல்வதுபோல சென்றது செமி ஸ்லீப்பர் பேருந்து.

உணவும் சீராக அமைந்தது.எனக்கும் கோவைக்குமான ராசி.இரவில் ரயில் நிலையத்தைவிட்டு சென்னை நோக்கி செல்லும்போது,தென்னகத்து மான்செஸ்டரின் கம்பீர ஆலைகள் சில நம்முடன் பேசும் சங்கேத அமைதி பாஷைகளில்.
ஒருதடவை சரியான மழை பிடித்துக்கொண்டது ரயில் நிலையத்தில் இருக்கும்பொழுது.ஒரு மணிநேரம் தாமதாக வர நேர்ந்தது என் ரயில்.எல்லாமே அன்ரிசர்வ்ட் டிக்கட் தான்.ஆனால் இரவு நேரம் என்றால் எவருமே பயணிக்காத,யாரும் கண்டுகொள்ளாத/வராத பெர்த்களை நிரப்பியிருக்கிறேன் என் தூக்கத்தினால்.டிடிஆர் பகல் நேர ஃபர்ஸ்ட் கிளாஸ் அன்ரிசர்வ்ட்(!!!) பயணத்தின்போது ஒரு தடவை கேள்வி கேட்டார்.அவர்மேலும் தப்பில்லை.எனக்கும் அது பெரிய தப்பாய் தெரியவில்லை.இன்னொரு கம்பார்ட்மெண்ட் சென்று காத்திருக்க சொன்னார்.பெரிதாய் பிரச்னை ஒன்றும் இல்லை.இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே பயணித்தேன்.ஈரோடு கடக்கும்போது,நொய்யலாற்று பாலம் ஒன்று வருகிறதோ?? சாயப்பட்டறை நீர் ஒன்று ஆற்று நீரில் கலப்பது காணமுடிகிறது.அப்புறம் காவிரி நதி என்றே ஒரு ஸ்டேஷன் இருக்கிறது.

ஐஏஎஸ் ஆபீசர்கள் நிச்சயம் கோவையில் ஒரு பங்களா கட்டுவார்களாம் வசிக்க.நாமும் ஒன்று உருவாக்குவோம்.நிம்மதிக்காக.
இன்னும் பல செழுமையான இனிய பயணங்களை நோக்கிய நான்.
வர்ட்டா??!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s