தி சீக்ரெட் ஆஃப் தி நாகாஸ்-The Secret of the Nagas

image

நமக்கு சிவனைத் தெரியும்.
பார்வதியை தெரியும்.
காளியை உண்மைலயே யாருனு தெரியுமா?
நமக்கு கார்த்திகேயனை தெரியும்.கணேசனை தெரியும்.கணேசன் உண்மைலயே யாருனு தெரியுமா?
நமக்கு நந்தியை தெரியும்.வீரபத்ரரை தெரியும்.அவங்க சிவன்க்கு என்னன்னு தெரியுமா?
நமக்கு சிவனை கடவுளா தெரியும்.ஓம் நம சிவாய னு சொல்லத் தெரியும்.அது ஏன்னு தெரியுமா?

நமக்கு சரஸ்வதி நதி தெரியும்.கங்கை தெரியும்.பிரம்மபுத்ரா தெரியும்.பிருங்கா நதி தெரியுமா?
சரஸ்வதியும் நர்மதையும் கிட்டத்தட்ட ஒரே அளவுடையவைனு தெரியுமா?
ஆடல்வல்லானின் உண்மை காட்சிகள் தெரியுமா?
சங்கம்தமிழ் தெரியுமா? பின் விளைந்த மனுதர்மம் தெரியுமா? மேற்கிலிருந்து கிழக்கு நகரும் நதிகள் வடக்கில் அதிகம் இல்லை என்ற விவரம் தெரியுமா?
குணாக்கள் யார்? மெலூஹர்கள் யார்? ஸ்வத்வீப்பர்கள் யார்? பிருங்கர்கள் யார்? காசி குடிமகன்கள்? நாகாக்கள்?

எது நன்மை?எது தீமை? அதன் தத்துவம்?
இந்த துளைக்கும் கேள்விகளுக்கு துல்லியமான விடைகள் புதினத்தின் ரூபத்தில் உங்கள் அறிவின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.கிண்டிலில் வாசிக்க இயன்றது.நீங்களும் தவறாது வாசிக்க..அடுத்து வாயுபுத்திரர்களின் சத்தியம்(The Oath of the Vayuputras) வாசித்தால் இந்த டிரிலாஜி நிறைவாகி விடும்.
வர்ட்டா??!

Advertisements

கோ-2 மற்றும் மருது-The Udhayam weekend

image

சனிக்கிழமைக்கூட எக்ஸைட்டுக்காக உழைத்துக்கொண்டிருந்தோம்.அதனால் வேலை முடிந்தவுடன் எனக்கு பிடித்த கிளாசிக் மல்டிபிளெக்ஸ் உதயம்க்கு பறந்தாச்சு(கேர்ள்பிரண்டோட பாக்குறதுக்கு ஏற்றதல்ல..பாதுகாப்பில்ல)..நண்பர்களோடவோ தனியாகவோ போனால் சொர்க்கம்.

ஈவ்னிங் ஷோ-கோ 2.நைட்ஷோ-மருது.
முதலில் கோ 2.சொதப்பலாக இருந்தாலும் நல்ல முயற்சி.இரண்டாம் பாதி வரைக்கும் என்ன நடக்கபோகுது,நடந்தவையும் எதனால் நடந்ததுனு யூகிக்க முடியாத அளவு கதையை நகர்த்தியிருக்கிறார் புது இயக்குநர் சரத்.

லியோன் ஜேம்ஸின் இசை செம்ம தரம்.கண்ணம்மா பாட்டே சாட்சி.கோஹில்லாவும் காதில் பாயும் இன்பத்தேன்.பிஜிஎம்மும் நன்றாக பயன்படுத்துகிறார்.நல்ல எதிர்காலம் உண்டு.வாழ்த்துக்கள்.பாபி சிம்ஹாவுக்கு இது மாஸ் வெற்றி இல்லையென்றாலும் ஹீரோவாக தனித்து தெரிகிறார்.நிக்கி கல்ராணி.டார்லிங் லட்டுகுட்டி.கியூட் சிரிப்பு,செம்ம ஸ்ட்ரக்சர்,குறும்பு.பிரகாஷ்ராஜ்,இளவரசு போன்றோர் கொடுத்த வேலையை பக்காவாக செய்திருக்கின்றனர்.
கோ 2 இரண்டாம் பாதியில் நகரும் திரைக்கதை வேகத்தை முதல் பாதியிலும் தர இயன்றிருந்தால் இது மேலும் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.

அடுத்து மருது.
கார்த்தி-விஷால்
லட்சுமி மேனன்-ஸ்ரீதிவ்யா
தம்பி இராமையா-சூரி
ராஜ்கிரண்+கோவை சரளா-அப்பத்தா
மதுரை பின்புலம்-மதுரை பின்புலம்
கொம்பன் மீசை-மருது தாடி+மொட்டை
தேவர் குறியீடுகள்-தேவர் குறியீடுகள்
கறுப்பு நிறத்தழகி-அக்கா பெத்த ஜூக்காவண்டி
ஜிவி-இம்மான்
அதிரடி-மேலும் அதிரடி
ரத்தாறு,பழிவாங்கல்-அதிக ரத்தாறு,அதிக ரௌத்ர பழிவாங்கல்
மொத்தத்துல கொம்பன் 2.0-மருது 1.0
எப்படி வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ரஜினிமுருகனும் இரண்டு பேர்கொண்ட ஒரே மாதிரியான படங்களோ,அதேபோல கிட்டத்தட்ட கொம்பனோட இரட்டைத்தான் இந்த மருது.

வர்ட்டா??!!

தி சிவில் வார்-The Civil War

image

இந்த படத்திற்கு ஏன் கேப்டன் அமெரிக்கா பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை.அயர்ன் மேன் பெயரைக்கூட வைத்திருக்கலாம்.என் கணிப்பு கேப்டன் அமெரிக்காவை அயர்ன்மேனை விட மாஸாக மாற்றினால்தான் உண்மையில் அவருக்கு சரிசமமாகவாவது மக்கள் மனதில் கேப்டன் பதியமுடியும் என்ற மார்வெல்லின் ஸ்ட்ராட்டஜியாக இருக்கலாம்.

ஐநாக்ஸ் சிட்டிசெண்டர்.பக்கா தியேட்டர்.முப்பரிமாணத்தில் ரசிக்க இயன்றது.மார்வெல்லின் முழு கான்செப்ட்களும் புரியாது என்றாலும் ஒரு புரிதல் படத்தை பற்றி ஒன்று.அயர்ன் மேனுக்காகவே நான் சென்றேன்.
படத்தில் பிளாக் விடோ ஸ்கார்லெட் செக்ஸி வழக்கம்போல.பிளாக் பாந்தர் என்ற புதிய சூப்பர் ஹீரோவை களம் இறக்கி இருக்கிறார்கள்.ஸ்பைடர்மேனை ஒரு சிறுவனை வைத்து ரீபூட் செய்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் சீன்களெல்லாம் அவர்கள் ரேஞ்ச்.சவுண்டு எஃபெக்ட்டுகளும் மிரட்டல்.என்னன்னவோ கில்ஃபான்ஸ் ஆகி கேப்டன் அமெரிக்காவும் அயர்ன் மேனும் இரு அணிகளாக பிரிந்து பிரித்துமேய்கிறார்கள்.கதை இந்த அளவுக்கு புரிந்தாலே படத்தை ரசிக்கிற மாதிரிதான் எடுத்திருக்கிறார்கள்.பாமரனும் இங்கிலீஷ் புரியாமலே கூட ரசிக்கலாம்.அதான் உலகம் முழுவதும் பில்லியன் டாலர்களாக கொட்டி குவித்துக்கொண்டிருக்கிறது.மார்வெல்லுக்கு சரியான வசூல் வேட்டைக்காலம்.முதலில் டெட்பூல்.இப்பொழுது சிவில் வார்.
அப்புறம் ஐநாக்ஸ் செல்பவர்கள் ஸ்டாண்டர்டாக ஒரு ஆளுக்கு 120 ரூவா சினிமா டிக்கட்,ஒரு மணிநேரத்துக்கு 10 ரூவா வீதம் வண்டிக்கு பார்க்கிங் சார்ஜ்,ஸ்நாக்ஸ் குறைந்தபட்சம் 50 ரூவாய்க்கு மேல்தான் என்ற கணக்கோடு சென்றால் ஷாக் ஆகாமல் நிம்மதியாக படம் பார்த்துவிட்டு வரலாம்.இல்லனா அதிர்ச்சிதான்.

வர்ட்டா??!

டேக்கன் 3-Taken 3

image

என்னடா இவன் புதுப்படத்துக்கு ரிவ்யூ எழுதற மாதிரி பழைய படத்துக்குலாம் எழுதறானே என்று நினைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.
நான் பார்க்காத படம்ல.இப்பதான் பார்க்க முடிஞ்சது.அருமையான ஆக்ஷன் ஸ்கிரிப்ட்.

லயாம் நீசனின் நடிப்பிற்கு பேட்மேனில் அவர் நடித்திருக்கும் ரஸ்-ஆல்-குல் கதாபாத்திரமே போதும் சாட்சியாக.அவரே முழுப்பட ஹீரோவாக வந்தால்.சூப்பர்.அவரின் ஹோர்ஸ் குரல்,வித்தியாசமான தாடி,ஹேர்ஸ்டைல்,பார்வை எல்லாமே மிரட்டலாக இருக்கும்.துப்பாக்கி ஐ எம் வெயிட்டிங் ஸீன்,தனி ஒருவன் லிஃப்ட் மேல் ஏறி வேவு பார்க்கும் ஸீன் எல்லாம் டேக்கன் சீரிஸில் எப்பொழுதோ வந்தாச்சு.

நல்ல கதைக்களம்.எல்லா படங்களிலும்(3 மொத்தம்) ஏதாவது ஒரு கிட்னாப்பிங் நடக்கும்.அதை சமயோசிதம் கொண்டு பிரயன் வில்ஸாக வரும் லயாம் நீசன் வெல்வார்.இது இந்த சீரிஸில் இறுதி படம் என்பதால் சற்று வித்தியாசமாக ஆரம்பத்திலேயே மர்டரோடு ஆரம்பித்து அதை கிளைமாக்ஸ் நோக்கி நகர்த்தியிருப்பது சின்ன மாற்று.

பிஜிஎம்,கேமரா,ஆக்ஷன் சீன்ஸ்லாம் ஹாலிவுட் காரய்ங்களுக்கு கத்தா தரணும்? அவங்க இதே வேலையாத்தானே திரியறாங்க.சேஸிங்,ஃபைட்டிங்லாம் டேக்கனுக்குனு உண்டான ட்ரேட்மார்க் கச்சிதம்.டேட்டாவை என்னாமா பென்ட்ரைவ்ல போட்டு உருவறார் மனுஸன்.நானும் இன்ஜினியர்தானே இந்த சம்பவம்லாம் எப்ப செய்யப்போறேனு தெரில 😉

மொத்தத்துல டேக்கன் 3 பார்க்காதவங்க-ப்ளூ ரே டிவிடி வாங்கி ஹோம் தியேட்டர்லயோ கலர் டிவிலயோ போட்டு ரசிச்சு பாருங்க.ப்ரூஸ் லீ,ஜாக்கி சான்,வில் ஸ்மித் லாம் மட்டும் ஆக்ஷன் இல்லை.லயாம் நீசனும்தான் அதுல மாஸ்.ஸோ அவர் படங்களையும் பாருங்க.ட்ரீட்.

வர்ட்டா?!

சூர்யாவின் 24-the movie

image

சம்முகுட்டி

காசி தியேட்டர்.நைட் ஷோ.தல ரசிகர்களின் கொண்டாட்ட தியேட்டர்.இவர்கள் ஜங்கிள்புக் படம் போட்டால் கூட போடுவார்கள்.ஆனால் விஜய் படம் போடமாட்டார்கள்.அவ்வளவு வெறித்தனமான தல கோட்டை.அந்த கோட்டையில் ஒரு சூர்யா படம் பார்த்தேன்.நண்பன் ஒருவனுடன்.

24 என்ற பெயர்கொண்ட இந்த படம் நல்ல மூளைக்கார இயக்குநரால் கையாளப்பட்டுள்ளது.சமந்தா அவ்வளவு அழகு.அள்ளிக்கொள்ளலாம் அழகு.
சூர்யா வில்லன் ஆத்ரேயாவா அதகளம் பண்றார்.ரொம்ப நாளைக்கு அப்றோம் ஒரு வெயிட்டான ரோல்.

விக்ரம் குமார்(படத்தின் இயக்குநர்)மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் டீம் கடுமையா உழைச்சிருக்காங்க.சில ஸீன்கள்லாம் பாக்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும் அப்டி இருக்கு.உதாரணத்துக்கு எல்லா டைம் ஃபிரீஸ் ஸீன்களுமே.மழைத்துளி,தோனி,கிளைமேக்ஸ்னு.பக்கா.

இரண்டாம் பாதியில ஒரு பாட்டு வருது.அவ்ளோ பியூட்டியான லொக்கேஷன்,லிரிக்ஸ்,மியூசிக் மற்றும் அசைவுகள்.ஆனா முற்றிலும் தேவையில்லாத ஒரு சூழ்நிலைல அத சொருகி இருக்காங்க.அத பாத்து காண்டான காசி தியேட்டர் ரசிக பெருமக்கள் தங்கள் நுரையீரல்களை கருக்குவதற்காக பாடலின் போதே வெளியே தம்மடிக்க போயிட்டாங்க.அதை தவிர்த்து எங்கியுமே லாஜிக்கலா பிசிரடிக்காம நகர்த்தி இருக்குறதுதான் படத்தின் வெற்றி.

ஆத்ரேயா டா..
ஆயுஷ்மான் பாவ்..போல வசன உச்சரிப்பிலும் சூர்யா நேர்த்தி.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.ஏஆர்ஆர் பத்திலான் நான் சொல்லணுமா? படத்தோட மிகப்பெரிய பலமே அவரோட அதிரடி பிஜிஎம்கள் தான்.

வர்ட்டா??!!

ஹோம் டெலிவரி

image

பாசக்கார பயபுள்ள

ஸ்பார்க் ஸ்டூடியோஸ்.எங்கள் எஸ்எஸ்என் கல்லூரியில் இது ஒரு மினி பிரடகஷன் பிராண்டு.தரமான குறும்படங்கள் தயாரிக்கும் பட்டறை.கல்லூரி நண்பன் கமல் பிரகாஷின் கனவுலகம்.

கமலுக்கும் எனக்குமான உரையாடல்கள் அதிகம் இருந்ததில்லை.ஆனால் மரியாதைமிக்க பகிர்தல்கள் உண்டு.என்றாவது ஒருநாள் ரேண்டமாக வாட்ஸேப்பிலோ ஃபேஸ்புக்கிலோ சேட்டிங்கில் பேசிக்கொள்வதோடு சரி.சரி குறும்படத்திற்கு வருவோம்.

கமல் இயக்கி,எடிட் செய்து யூட்யூப்பில் வெளியிட்டிருக்கும் புது ஷார்ட் தான் இந்த ஹோம் டெலிவரி.காதல் மனைவியின் பெயரை பிரடக்ஷன் கார்டில் போட ஆரம்பித்ததிலிருந்தே படத்தின் மீதான மரியாதை அதிகரித்தது.
அது படத்தின் கான்டென்ட்டால் பன்மடங்கு உயர்ந்தது.சென்னை பெருமழை காலத்தில் கமலுக்கு உதித்த இந்த ஐடியா–படமாக்கப்பட்டிருக்கும் களமும்,விதமும் பாராட்டுதலுக்குரியவை.பல அங்கீகாரங்கள் இந்த குறும்படத்திற்கு கிடைத்ததில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை.தகுதி இருக்குமிடத்திற்கு தங்ககிரீடம் தானாக வந்து சேரும்.

image

ஸ்பார்க் லோகோ

படத்தோட களம் இன்றைய வினோத மனிதர்களின் ஈரமற்ற மனசாட்சிக்கு ஒரு சாட்டையடி.ஆனால் அதை ஒரு வாத்தியார் போல புகட்டாமல் தோழன் போல தோள்மேல் கைபோட்டு சொல்லியிருக்கிற விதம்தான் ஈர்ப்பு.
ஸ்கிரீன்பிளேவுக்கு சரியான எடுத்துக்காட்டு அந்த லீட் ரோல் பையன் போடற முகநூல் ஸ்டேட்டஸூங்க.
இதோ பாருங்க..

image

ஆஸோமேடிக் ஆரோமலே..டேய் அது பேய்மழை டா

image

தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி?? இருடி வர்றேன்

image

சோறு தண்ணி இல்லாம கெடக்குற நாய்க்கு அதுப்பை பாரு

image

வச்சான்ல மாப்பு ஆப்பு..

நாலு ஸ்டேட்டஸ் மூலம் மொத்த திரைக்கதைக்கும் ஒரு லிங்க் கிடைச்சுடுது.அதுவும் தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி ஹியூமர்லாம் சாட்டையடி பிளா

க்

ரகம்.தரம்.பிஜிஎம் நல்லா இருந்தது.
திறமை பல மைல்கள் பாயும்.கமலின் பாய்ச்சலுக்காக ரசிகனா காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

வர்ட்டா??!!

பாக்காதவங்க இந்த லிங்க்ல் போய் உங்க பிரவுசர்லயோ யூட்யூப் செயலிலயோ எஞ்சாய் பண்ணுங்க.கொஞ்சம் உங்களுக்கு கீழ இருக்றவங்க பத்தியும் சிந்திங்க..

ஹோம் டெலிவரி-Home delivery by Kamal Prakash

கபாலி டீஸர்

image

சைரன் அலறுகிறது..
ரஜினியின் ஃபுட்ஸ்டெப்ஸ்..
சந்தோஷ் நாராயணனின் வேற லெவல் தீம் மியூசிக் தெறிக்கிறது..
#நெருப்புடா என பின்னணியில் ஒலிக்க தலைவர் ஃபிரேம் பை ஃபிரேம் ஜொலிக்கிறார்..
நீங்க ஏன் கேங்க்ஸ்டார் ஆனீங்க என்ற அனானிமஸ் கேள்விக்கு தனது டிரேட்மார்க் மனதுவிட்ட சிரிப்பை பதிலாக உதிர்க்கிறார்.

அப்றோம் கேங்ஸ்டர் கிஷோர் “யார்ரா அந்த கபாலி?வர்ற சொல்லுடா அவனை!” என கொக்கரிக்க
மறு ஃபிரேமில் வீழ்ந்துகிடக்கும் அடியாளிடம் ரஜினி “தமிழ் படங்கள்ல மரு வச்சிகிட்டு,மீசையை முறுக்கிகிட்டு நம்பியாரு கைய பிசஞ்சு “ஏ கபாலி”னு கூப்ட உடனே குனிஞ்சு “சொல்லுங்க எஜமா”னு சொல்வானே அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா?” (அடி பின்னிவிட்டு) கபாலி டா என கையை உயர்த்தி சிலிர்க்க வைப்பார்..
சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பழைய ட்ரேட்மார்க் ரஜினி ஃபாண்ட் திரையில் பொறுமையாக மிளிரும்.அப்புறம் கபாலி என்ற டைட்டில் மின்னி மறையும்.

பின் இடது பக்க வகிடு எடுத்த பழைய ரஜினி ஹர்ஸ்டைலை கோதிவிட்டு ஸ்டைலாக பூப்போட்ட சட்டைபோட்டு மின்னல் நடை நடப்பார் ரஜினி.பிஜிஎம் “நெருங்குடா” என உறுமும். “மகிழ்ச்சி” என்ற ஒற்றை வார்த்தை சொல்லி முடிப்பார்.நடுவில் ராதிகா ஆப்தே ஒரு கிளிம்ப்ஸ்.தலைவரின் ப்ளூ கூலர்ஸ் போட்ட அடிதடி அதிரடிகள்.
டீஸர் பார்த்த ஒவ்வொரு தமிழ்சினிமா ரசிகனாலும் மனதின் மூலமே இன்ச் பை இன்ச் வர்ணிக்க கூடிய டீஸர்.
இந்திய டீஸர்களுக்கான அத்தனை ரெக்கார்டுகளையும் சகட்டுமேனிக்கு உடைச்சாச்சு.
மகிழ்ச்சி என்ற சாதாரண தமிழ் வார்த்தை ட்விட்டர்,ஃபேஸ்புக்,மீம்ஸ் என அகில உலக அளவில் டிரெண்ட் அடிக்கிறது.

image

மேற்கண்ட இமேஜ் அந்த கடலில் ஒரு சேம்பிள்.
அதுதான் சூப்பர் ஸ்டார்.படம் ஜெயிக்றது தோக்றதுலாம் தாண்டிய ஒரு ஆளுமை.ஒரு வசீகரம்.மேத்யூ மெக்கானகே(இன்டர்ஸ்டெல்லார் ஹீரோ) வரை வைரல் ஆகி இருக்கும் கபாலி டீஸரின் தற்போதைய பார்வையாளர்கள் ஸ்கோர் 6 மில்லியன்(3 மே).அதாவது வெளியிடப்பட்ட மூன்றே நாட்களில்..

ஹிந்தி என்ற ராட்சச மார்க்கெட்டை வைத்துக்கொண்டு பாலிவுட்காரர்கள் ஆடும் கேமை நின்ற இடத்திலேயே தவிடுபொடி ஆக்கும் திறமை நம் கலைப்புலி எஸ்.தாணு போன்றோருக்கும் உண்டு என்பதை பறைசாற்றியிருக்கும் மைல்கல் இது.

image

கதையும்,திரைக்கதையும் சிறப்பாக அமைந்தாலே இந்த படம் ஓகோ லெவல்..வாழ்த்துக்கள் பா.இரஞ்சித் மற்றும் டீம்.
மகிழ்ச்சி.

வர்ட்டா??!!

எக்ஸைட் இன்டர்ன்

image

எஸ்எஸ்என்.
தெற்கு ரயில்வே.
மனிதநேயம்.
இன்ஃபோசிஸ்.
புதிய தலைமுறை.
சென்னை பல்கலைக்கழகம்.

வாழ்க்கைல எதுவுமே வேஸ்ட் இல்லைங்க.இது நான் அனுபவபூர்வமா உணர்ந்தது.என்ன? அது வொர்க் அவுட் ஆகுறதுக்கு டயம் பிடிக்கும்.அவ்ளோதான்.மத்தபடி லக் இல்லை.கிடைக்காது.சோம்பேறித்தனம்.சாக்குபோக்கு.எல்லாமே பயன் இல்லாத மடமை.

காலம் கனிஞ்சு வரணும்.சில நுட்பங்களை இறைவன் வடிவமைக்கணும்.அதுவரைக்கும் நாம வாழ்க்கையோட வலிகளை தாங்கணும்.அப்போதான் வாழ்க்கையோட இன்பம் நமக்கு புரியும்.
அமைந்தகரையில அலுவலகம்.பூவிருந்தவல்லி உட்பட பல இடங்களில் வேலை.இரண்டு மாத அனுபவம்.வெயில்.மங்காத்தா கூலர்ஸ்.வியர்வை.ஹெல்மட்.ஃபார்மல்ஸ்.ஸ்டைஃபெண்ட்.பெட்ரோல்.ஜூஸ்.இளநீ.அலைச்சல்.அசதி.உற்சாகம்.அங்கீகாரம்.பைக்குங்க.டிராஃபிக் போலீஸ்.சிக்னல். பேப்பர்ஸ்.லைசென்ஸ்.ஆர்சி.இன்ஷ்யூரன்ஸ்.பைபாஸ்.கூட்ரோடு.மேம்பாலம்.இரண்டு வேளை குளியல்.ஹமாம்.மைசூர் சேண்டலு.தலைக்கு ஹென்னா.செம்பருத்தி.சிகைக்காய்.சால்ட் அண்ட் பெப்பர்.இன்னிங் வித் பெல்ட்டு.ஷூ சாக்ஸூ.தூக்க தியாகம்.

பல்சர் 200.135.ஏக்டிவா.டிஸ்கவர்.விக்டர்.ஸ்டார் சிட்டி.சிபிஆர்.என்ஃபீல்டு.எஃப்ஸீ.ஆர்எக்ஸ்100.ஸ்ப்ளெண்டர்.ஹெல்மட் ஷட்டர் கடுப்பு.பழகல்.
இன்னைக்கு எக்ஸைட் பற்றிய முழு விவரங்களையும் அவுட்லைனையும் எக்ஸைடின் வட்டார தானியங்கி விற்பனை தலைவர் திரு.அனந்தகிருஷ்ணன் விளக்கினார்.நாளையிலிருந்து களத்தில் திரு.குமரகுரு அவர்களோடு 15 நாட்கள்.பிறகு 15 நாட்கள் பீட்டர்.பிறகு 15 நாட்கள் மற்றொமொருவர்.அப்பப்போ ரிப்போர்டிங்.சர்வே.பல.

இவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கிறது எக்ஸைட் பிளான்.இது பயன் நிச்சயம் நன்மையாகவே அளிக்கும்.வர்ட்டா??

மனிதன்-Manidhan

image

உதயம் தியேட்டரின் சூரியன் ஸ்கிரீனில் உதயசூரியன் வீட்டு வாரிசின் லேட்டஸ்ட் படத்தை முதல் நாள் நைட்ஷோ 85 ரூவா டிக்கட்ல பாத்தேன்.டிரெயிலரில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பதாக போட்டிருந்தபோதே நிச்சயம் கதை அவருக்கு பிடித்திருக்க வேண்டும் என்று புரிந்தது.

என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ.அகமது இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.படத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னால் என்ன முடியுமா அதை சரியாக ஸ்கிரீனில் அழகாக கொண்டுவந்திருக்கிறார்.அந்த வகைல இது ஃபர்ஸ்ட் பிராப்பர் உதயநிதி படம்.இதே டிராக்ல போனா நிலைத்த இடத்தை நடிகரா பிடிக்க முடியும்.

அற்புதமான சினிமாட்டோகிராஃபி.ஒளிப்பதிவாளரின் மெனக்கெடல்கள் தான் படத்தின் பலமே.உதயநிதி அவ்ளோ அழகா கேமரால தெரியறார்யா சும்மாவா? படத்துல ஹைலைட் விவேக் மற்றும் பிரகாஷ்ராஜ்-‘டத்தோ’ இராதாரவி காம்போ தான்.டைட்டில் கார்ட்ல உதயநிதி படு டீசண்ட்டா இவங்க பேரையெல்லாம் முதல்லேய போட்டுடறார்.அதுக்கு அப்றோம்தான் உதயநிதி ஹன்சிகா பெயர்கள்லாம் வருது.அதேபோல படம் முழுக்க அழகா அடக்கி வாசிச்சு தேவையான எமோஷன்ஸை முடிஞ்ச வரைக்கும் ஆடியன்ஸ்க்கு போர்ட்ரே பண்ணியிருக்கார் உதயநிதி.

இவ்வளவு நாள் உதயநிதியை வெறுத்தவங்க கூட இந்த படத்துல அவரை சகிச்சுக்க கத்துப்பாங்க.அந்த கட்டத்தை அடைஞ்சதுதான் இந்த படம் மூலம் உதயநிதிக்கு கிடைச்ச கிஃப்ட்.மொக்க வக்கீல் பிக்ஷாட் வக்கீல்க்கு எதிரா ஒரு செம பெரிய கேஸை எடுத்து வாதாடி லாஜிக்கலாவே வென்று பெரிய ஆள் ஆகிடுறான்.அது மூலமா அவன் லைஃபே செட்டில் ஆகிடுது.இதான் கதை.இதுல வர்ற அவன் மாமன் பொண்ணு மட்டும்தான் ஹன்சிகா.மத்தபடி விஷூவலைசேஷன்க்காகவும் வக்கீல் ஆதிசேஷன்(பிரகாஷ்ராஜ்)காகவுமே பாக்கலாம் படம்.பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸஸ்.

மனிதன்-உதயநிதி 2.0

வர்ட்டா..!!