தி சிவில் வார்-The Civil War

image

இந்த படத்திற்கு ஏன் கேப்டன் அமெரிக்கா பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை.அயர்ன் மேன் பெயரைக்கூட வைத்திருக்கலாம்.என் கணிப்பு கேப்டன் அமெரிக்காவை அயர்ன்மேனை விட மாஸாக மாற்றினால்தான் உண்மையில் அவருக்கு சரிசமமாகவாவது மக்கள் மனதில் கேப்டன் பதியமுடியும் என்ற மார்வெல்லின் ஸ்ட்ராட்டஜியாக இருக்கலாம்.

ஐநாக்ஸ் சிட்டிசெண்டர்.பக்கா தியேட்டர்.முப்பரிமாணத்தில் ரசிக்க இயன்றது.மார்வெல்லின் முழு கான்செப்ட்களும் புரியாது என்றாலும் ஒரு புரிதல் படத்தை பற்றி ஒன்று.அயர்ன் மேனுக்காகவே நான் சென்றேன்.
படத்தில் பிளாக் விடோ ஸ்கார்லெட் செக்ஸி வழக்கம்போல.பிளாக் பாந்தர் என்ற புதிய சூப்பர் ஹீரோவை களம் இறக்கி இருக்கிறார்கள்.ஸ்பைடர்மேனை ஒரு சிறுவனை வைத்து ரீபூட் செய்திருக்கிறார்கள்.

ஆக்ஷன் சீன்களெல்லாம் அவர்கள் ரேஞ்ச்.சவுண்டு எஃபெக்ட்டுகளும் மிரட்டல்.என்னன்னவோ கில்ஃபான்ஸ் ஆகி கேப்டன் அமெரிக்காவும் அயர்ன் மேனும் இரு அணிகளாக பிரிந்து பிரித்துமேய்கிறார்கள்.கதை இந்த அளவுக்கு புரிந்தாலே படத்தை ரசிக்கிற மாதிரிதான் எடுத்திருக்கிறார்கள்.பாமரனும் இங்கிலீஷ் புரியாமலே கூட ரசிக்கலாம்.அதான் உலகம் முழுவதும் பில்லியன் டாலர்களாக கொட்டி குவித்துக்கொண்டிருக்கிறது.மார்வெல்லுக்கு சரியான வசூல் வேட்டைக்காலம்.முதலில் டெட்பூல்.இப்பொழுது சிவில் வார்.
அப்புறம் ஐநாக்ஸ் செல்பவர்கள் ஸ்டாண்டர்டாக ஒரு ஆளுக்கு 120 ரூவா சினிமா டிக்கட்,ஒரு மணிநேரத்துக்கு 10 ரூவா வீதம் வண்டிக்கு பார்க்கிங் சார்ஜ்,ஸ்நாக்ஸ் குறைந்தபட்சம் 50 ரூவாய்க்கு மேல்தான் என்ற கணக்கோடு சென்றால் ஷாக் ஆகாமல் நிம்மதியாக படம் பார்த்துவிட்டு வரலாம்.இல்லனா அதிர்ச்சிதான்.

வர்ட்டா??!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s