எங்கே உன் கடவுள்

image

புத்தக கண்காட்சியில் இருந்து வாங்கிக்

ொண்டு வந்து நேற்றிரவே வாசித்து முடித்த புத்தகம்.துக்ளக் இதழில் சாரு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.துக்ளக் இதழில் இதை நான் பின்பற்றாததால் அவரது மற்ற தொடர்கள் போல இணையத்தில் வாசிக்க இயலாது போயிற்று.கிடக்கட்டும்.வாசிப்பின்பம் தொகுப்பின் மூலம் கிட்டியிருக்கிறது.

இன்றைய மனிதர்களின் கலாச்சாரத்தினை,மனிதமிலாத்தன்மையை அந்நியனாக நின்று சாடியிருக்கிறார் சாரு.அற்புதமான நடை.பிரிஸ்க் எழுத்து.தலைப்பின் காரணம் தன் நண்பரின் பத்தாம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்ஈ பையன் ஒருவன் கேட்ட கேள்விதான்.அறிவியலை மேலோட்டமாக படித்துவிட்டு “உன் கடவுள் யார்?எங்கே?கண்ணுக்கு தெரியவில்லையே” என்று கபடி ஆடியிருக்கிறான்..ச்சீ பகடி செய்திருக்கிறான்.

பகுத்தறிவு என்ற பெயரில் மாற்று கருத்தையே ஏற்றுக்கொள்ள பக்குவப்படாத மனங்களை இந்த கல்விமுறையும் சமூகமும் கட்டமைக்கிறது என்பதை கொஞ்சம் காட்டமாக சாடுவதற்காகவே இந்த டைட்டில்.அவரவரக்கு அவரவர் நம்பிக்கை.பல அற்புதமான சுவாரஸ்யமான சம்பவங்களை பக்கத்துக்கு பக்கம்,நொடிக்கு நொடி புகுத்தி ஜாலியாக எழுதிச்செல்கிறார் சாரு.அவர் எழுத்தில் ஒரு குதூகலம் இருக்கிறது.அதையெல்லாம் ஒன் பை ஒன்னாக சொன்னால் ஸ்பாயிலராக அமைந்துவிடும் என்பதாலும் அதைத்தவிர எனக்கு வேற வேலை இல்லை என்று நீங்கள் நினைத்துவிட வாய்ப்பிருப்பதாலும் ( ;P ) நீங்களே பழைய துக்ளக் இதழ்களை தூசித்தட்டி எடுத்துப்பாத்தோ இல்ல புத்தம்புது மைமணம் கமழும் தாள்களால் நிரம்பிய,சாருவின் கைவண்ணம் பொதிந்த,கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை வாங்கியோ வாசித்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வர்ட்டா??!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s