ஜூன் ஆரம்பம்

image

ஸ்ரீரங்க கோபுரத்தின் இரவு நேர ஜொலிப்பு

நவாசுத்தின் சித்திக்கி

கேங்க்ஸ் ஆப் வசேபூர்.பட்லாபூர்.இரண்டு மிரட்டல் பெர்ஃபார்மன்ஸ்கள்.
கார்த்தி சுப்புராஜ் தனது ட்ரீம் படத்தில் ரஜினியை ஹீரோவாகவும் அவருக்கு வில்லனாக சித்திக்கியை மட்டுமே தேர்வு செய்வேன் என்றும் ஒரு சந்திப்பில் பேட்டியாளர் ஒருவரிடம் கூறியது.அன்டர்-ரேட்டட்டாக வலம் வந்தவர்.தற்பொழுது அவார்டு வேட்டையில் திளைக்கிறார்.அடுத்த வரவு ராமன் ராகவ் 2.0.மிரட்டலாக இருக்கும் என்று புரிகிறது.

பில்லா 2018

இதுக்கு எனக்கு ரிவ்யூ எழுத தெரியாதுங்க.ஏன்னா இப்போதான் இது உறுதியே ஆகியிருக்கு.அதுவுமில்லாம இது சிலம்பரசன் படம்.2018ன்னா அட்லீஸ்ட் ஒரு 2019ஆச்சு ஆகும்.ஆனா எப்டியோ ரிலீஸ் ஆயிடும்.வெங்கட் பிரபு இயக்கம்,யுவன் இசைன்னு இப்போ பரபரப்பை அதிகாரபூர்வமாகவே கிளப்பிட்டு இருக்காங்க.ரஜினி,அஜித் நடிச்ச இந்த ரோலை சிம்பு அதே கெத்தோட கொண்டு போனா நல்லா இருக்கும்.கஷ்டம்தான்.வெயிட்ட்ட்ட்ட்ட் பண்ணி பாப்போம். #ட்விட்டர்

முகமது அலி

இவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.இவர் ஒரு மாபெரும் குத்துச்சண்டை வீரர்.இவரை வைத்து பல வாசகங்கள் வரும்.படிச்சிருக்கேன்.இவரோட ஒரு மேட்ச் கூட நான் சத்தியமா பாத்ததில்லை.இருந்தாலும் முகநூல் உலகம் காட்டுற மதிப்பை பாக்கும்போது இவரு உண்மைலயே பலருக்கு ஆதர்ஸமா வாழ்ந்திருக்கக்கூடிய மனுஸன்கிறது மட்டும் புரியுது.அந்த மரியாதைக்காக நானும் போடுறேன். ஆர்ஐபி முகமது அலி அவர்களே.அமைதியில் நிலைப்பெறுங்கள்.

சந்திரபாபு(நாயுடு)
ஒரு மாஸ்டர் பொலிட்டிகல் ப்ளேயர்.
தெலுங்கானா பிரிவினை பின் அமராவதி பிராஜக்ட் கையில் எடுத்தார்.குறைந்தது பத்து வருஷம் ஒழுங்கா கட்டி முடிக்க வேண்டிய வேலை.வேற அரசு வந்தா மாற்றாந்தாய் மனப்பான்மை தான் நிலவும்.எனவே மக்கள் 2019லும் இவருக்கு வாக்களிக்க மிக அதிக வாய்ப்பு.ஏற்கனவே ஆட்சிக்கு வந்து 2 வருஷங்கள் ஆச்சு.
ஹைதராபாத் ஐ உலக தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில் புகுத்திய சந்திரபாபுவின் அடுத்த பிராஜக்ட்தான் இந்த அமராவதி.இதை வச்சு தல ஒரு பத்து வருஷம் ஓட்டுவார்ல?
ஆனா என்ன ஹைதராபாத்க்கு அதீத முக்கியத்துவம் கொடுத்ததையே பிரிவினைக்கு ஒரு காரணமா சிலர் சொல்றாங்க.அதே தவறு இங்கேயும் நடக்காம இருந்தா நன்று.

பிரெயின் டிரெயின்

பெயர்-மைநாக் சர்க்கார்
பிறந்தது-துர்காபூர்,மேற்கு வங்கம்

இளங்கலை-ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்,ஐஐடி கரக்பூர்

முதுகலை-ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்

முனைவர்-கலிஃபோர்னியா பல்கலை,லாஸ் ஏன்ஜெலஸ்

பிராஜக்ட்-செயற்கை மனித இதயம் செய்வது

தற்போதைய பட்டம்-இரட்டை கொலைக்காரன்

காரணம்-தான் எழுதிய கம்ப்யூட்டர் கோடை தன் பேராசிரியர் திருடி இன்னொரு மாணவனுக்கு கொடுத்தது

பிரெயின் டிரெயின்ல சில கதைகள் தவறாகவும் போயிடுது.அமெரிக்கால அசால்ட்டா கன் லைசென்ஸ் கொடுக்றாங்க போல.இவர் பயன்படுத்தி இருக்றது எல்லாமே அரசு அங்கீகாரம் பெற்ற செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞரை நான் இன்னும் கொண்டாடி இருப்பேன்.காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து தமிழின தனிப்பெரும் தலைவராகி இருக்கும் வாய்ப்பை அரை மணி நேர வேளையில் தவறவிடாமல் இருந்திருந்தால்.

கொண்டாடுகிறேன்.தமிழ் வரலாற்றை இவர் இல்லாமல் புரட்ட முடியாது என்பதால்.எல்லாருக்கும் கறுப்பு பக்கங்கள் உண்டு.உங்கள் வெள்ளை பக்கங்களை மட்டும் நினைவில் வைத்து மனசை தேற்றிக்கொள்கிறேன்.யாரும் உத்தமரல்ல என்ற உண்மையை உணர்ந்துகிட்டு.பேசுற எங்களவிட நிறையவே நீங்க செஞ்சிருக்கீங்க.அந்த ஒரு தருணம் ஏன் நீங்க தவற விட்டீங்க?

வர்ட்டா??!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s