கேம் ஆஃப் திரோன்ஸ்

image

லவ்லி கலீஸி

பொண்ணுங்க.பசங்க.ஜூனியர்.சீனியர்.ஆடு.மாடு.கோழி.கன்னுக்குட்டு எல்லாரும் எல்லாரும் இந்த சீரியல் பாக்றாங்க.பாத்துட்டு “விண்டர் இஸ் கமிங்”னு ஸ்டேட்டஸ் போடறாங்க.ஜான் ஸ்நோ க்கு ரசிகர் மன்றம் வைக்றாங்க.கலீஸியை கொண்டாடுறாங்க.

ஆர்யா ஸ்டார்க் குக்கு ஒண்ணுன்னா நான் கடவுள் ஆர்யா ரேஞ்சுக்கு உறுமுறாங்க.இதை நான் பாக்கலனு சொன்னா பைத்தியக்காரன்,ரசனை கெட்டவன்னு சொல்றாங்க.வாழ்க்கைய ரசிக்க தெரியாதவங்கிற ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பிச்சுடுறாங்க.

நானும் பாக்கவே இல்லனுலாம் சொல்ல முடியாது.முதல் சீஸன்ல நாலு எபிஸோடு பாத்தேன்.அது என்ன நேரமா காலமா தெரில.அதுக்கு அப்றோம் அதை நான் பாக்கவே இல்ல.பாத்த வரைக்கும் கதை ஒண்ணும் புரில.சில கிம்பஜக் கில்மா சீன்ஸ்லாம் கன்ஃபார்ம் இருக்கும்.இன்னும் இந்த ஏழு கிங்டம் கான்செப்ட்,நைட்வாக்கர்ஸ் என்னன்னமோ சொல்றீங்களே..அந்த ரேஞ்சுக்கு புரியல..பொறுமையா ஒரு வரி வசனம்கூட விடாம கவனிக்றீங்க போல.கருமம் எதையோ கவனிச்சு தொலைங்க.நான் உருப்படியா பாத்து முடிச்ச ஒரே இங்கிலீஷ் சீரிஸ் “ஃபிரெண்ட்ஸ்”.
அதுக்கு அப்றோம் “ஹவுஸ் எம்.டி” ஒரு நாலு சீஸன் பாத்திருக்கேன்.அஞ்சாவது சீஸன் பாத்துட்டு இருக்கேன்.முதல்ல அதை கம்ப்ளீட் பண்ணிட்டு வரேன்.
எப்டியும் கேம் ஆஃப் திரோன்ஸ் வெறியர்கள் ஜிகாபைட் ஜிகாபைட்டா ஹார்டு டிஸ்க்குகளை நிரப்பி எச்.டி பிரிண்ட்ல வச்சிருப்பீங்க.வந்து வாங்கிக்குறேன்.. 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s