ஒரு மலையாளக் கவிதையின் தமிழ் மறுபிறப்பு

”அப்படி இல்ல தாத்தா இப்படி”
என்று சொல்லி என் பேரக்குழந்தை என்னிடமிருந்த
செல்பேசியை பிடுங்கினான்

தண்ணீரின் மேல்
பூச்சிகள் பறந்து செல்வதுபோல அவனது விரல்கள்
அதில் நடனமாடின

நான் தொடும்போது வராத
ஒரு உலகம்
அவன் கைபட்டதும் எழுகிறது வண்ணங்கள் விரிகின்றன எழுத்துக்கள் நகர்கின்றன போர் வீரர்கள் வாளோடு அழைகிறார்கள்

”இங்க கொண்டா”
என்று சொல்லி நான் அழுத்தும்போது அது உறைந்து நின்றுவிடுகிறது

”நீங்க அழுத்துறிங்க
இவ்வளவு அழுத்தக்கூடாது மெல்லத் தொட்டா போதும் இப்படி மெல்லத் தொட்டா போதும் தொடக்கூட வேண்டாம்
கையக் காட்டினாலே போதும்” என்றான் பேரன்.

அப்படியென்றால்
இதுதானா வாழ்க்கைக்கான ரகசியம்
இத்தனை வயது வரை
மெல்லத் தொட வேண்டிய இடங்களை வன்மையாக தொட்டதனால்தான் வாழ்க்கை என்னை
இங்கே நிறுத்தியிருக்கிறதோ

ஓங்கி உதைத்துத் திறந்த கதவுகள்
வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள்
மிதித்துத் தாண்டிய தொலைவுகள் எல்லாமே இப்படி மெதுவாக கடந்து வரவேண்டியவை தானா.

~கல்பற்றா நாராயணன்

Advertisements

இது தீரா நட்பு கண்மணி!

ஒரு தடவை ஒரு நட்பிலோ உறவிலோ தோற்றுப்போனால் அந்த நட்பை / உறவை புறந்தள்ளிவிட்டு இரக்கமே இல்லாமல் அரக்கன் போல நடந்து போக மனம் வருவதில்லை.

சொல்வதற்கு வேண்டுமானால் கெத்தாக இருக்கும். ஆனால் மனசு ஏங்கும். பாழாய் போன இயற்கையே என் மனசையும் புத்தியையும் ஒண்ணா படைச்சிருக்க கூடாதா?

யாரையும் அவ்வளவு எளிதில் கிட்டக்கூட நெருங்கவிட மாட்டேன்.ஆனா சில மனிதர்கள் வாழ்வில் சூறாவளி போல நுழைஞ்சு,அன்பு கதகளி ஆடி,அதே ஸ்பீடுல டேக் டைவர்ஷன் பண்ணி போயிடறாங்க. இன்னிக்கு நேத்துனு இல்ல.இனிமேட்டும் இது பொருந்தும்.
ஆனா அவங்க எல்லாருமே என்கிட்ட கொடுத்தது செம்ம யான அன்பு மட்டும் தான்.அந்த அன்பு ஒன்றுக்கு என்றைக்கும் நான் அடிமை. அது இல்லாம வாழ்வில்லை.

ஒரு தடவை அடிபட்டோமேனு பயந்து மனிதர்களை விட்டு விலகி போய்ட்டே இருந்தா,போய்கிட்டே இருக்க வேண்டியது தான்.

கோபம் இருக்கும் இடத்தில தான் அன்பு அதைவிட அதிகமா இருக்கும்.அந்த நம்பிக்கை என்னிக்குமே என்னை மத்த மனுஷங்களோட இணைச்சிட்டே இருக்கும். வாங்க மக்கா!! நேசிக்கலாம் ❤ ❤ 🙂

டி.எம் கிருஷ்ணா

image

கர்நாடக இசையை கச்”சேரி”களுக்குள் மட்டும் சிக்கவிடாமல் சேரி மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்.திறமைக்கும் பிறந்த இடத்துக்கும் என்னடா சம்மந்தம் என்று திமிராக கேட்டவர்.பிராமண துவேஷி,சங்கீத துரோகி என்று சக கலைஞர்களாலேயே எச்சில் துப்ப பெற்றவர்.கலையை கட்டுக்குள் அடக்காமல் மனிதம் என்ற சொல்லுக்குள் அடக்க முனைந்த ஒரே காரணத்தால்.

இந்த முயற்சிகளை நம்மளவர்கள் உதாசீனப்படுத்தியிருக்கலாம்.ஆனால் உலகம் இவரை அங்கீகரிக்க இருக்கிறது.

ராமன் மகசேசே விருதை பெற இருக்கிறார் சங்கீத வித்வான் திரு.டி.எம் கிருஷ்ணா..எம்.எஸ் மாவுக்கு கிடைத்த அதே அங்கீகாரம்.

கூவத்து குப்பத்தையும் இசையால் தூய்மையாக இணைக்கும் முயற்சியில் இருப்பவர்.வாழ்த்துக்கள் 🙂