ஆள் பாதி..ஆடை மீதி

1

சில மக்கள் எந்தெந்த சூழ்நிலைக்கு என்னென்ன உடை அணிய வேண்டும்கிறதுல எவ்ளோ குறியா இருக்காங்கன்னு பாக்குறேன். ஆனா அவங்களை குறை சொல்ல முடியாது.

நான் நேர்ல பாக்றபோ ஒல்லியா இருப்பேன்.சுமாரான முகம்.அவ்ளோ கலர் கிடையாது.கறுப்புக்கும் மாநிறத்துக்கும் ஊசலாடிட்டு இருக்ற நிறம்.டிரெஸ்ஸிங் சென்ஸ் சுத்தமா கிடையாது.எந்த நிகழ்வுக்கு எந்த உடை அணியணும்கிற புரிதல் அறவே கிடையாது.துணி பாத்து பாத்து எடுக்கணும்னு மெனக்கெட்டது கிடையாது.
இதுவரை நான் அணியும் எந்த உடையுமே என் அம்மாவோ வீட்டினரோ என் ஃபிரெண்ட்ஸோ எடுத்து கொடுத்ததா இருக்கேன்.என்கிட்ட வந்து திடீர்னு என் ஷர்ட் சைஸ்,இடுப்பளவுலாம் கேட்டீங்கன்னா முழிப்பேன்.என் பாட்டுக்கு என்ன கிடைக்குதோ அதை எடுத்து போட்டுகிட்டு நான் பாட்டுக்கு சுத்திகிட்டு இருப்பேன்.என்னை புரிஞ்சவங்களுக்கு என் உடையோ அழகோ ஒரு பொருட்டல்லனு ஒரு நினைப்பு பிளஸ் ஒரு சோம்பேறித்தனம்.
பிராண்ட் கான்ஷியஸ்,கலர் கான்ஷியஸ் எதுவும் இல்லை.

என்னை முதல் முதல்ல நேர்ல பாக்குறவங்களுக்கு என் உடை மூலமா உயர்ந்த அபிப்ராயம் நிச்சயம் வந்திருக்காது.ஏன்னா அதுல என் மெனக்கெடல்கள் துளியும் இல்லைனு எனக்கு தெரிஞ்சதுதான்.
ஆனா முகநூலில் நீங்க பாக்குற என் புகைப்படங்கள் பளிச்னு நல்லா தரமா இருக்கும்.ஏன்னா அது என்னோட சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.அது மட்டும் நான் கான்ஷியஸாவே செய்யுற ஒரு வேலை.
அது ஒருவிதமான பிராண்டிங்.ஆள் பாதி ஆடை பாதின்னு இருக்ற உலகத்துல அது தவிர்க்க முடியாதது.

என்னை சுத்தி இருக்ற மக்களை,இந்த நகரத்தை கவனிக்கும் போது கொஞ்சமாச்சும் நல்லா டிரெஸ் பண்றா விக்னேஷ்வரா ன்னு எனக்கு நானே நினைச்சுப்பேன்.உடைங்கிறது எவ்வளவு சக்திவாய்ந்த ஒரு கான்செப்ட்னு எனக்கு அப்பப்போ தோணும்.கபாலி படம் அந்த எண்ணத்தை பயங்கரமா வலுவாக்குச்சு.

இன்னிக்கு இருக்ற சமூக கட்டமைப்புல இருக்றவன் இல்லாதவன்கிற ரெண்டே கேட்டகரிதான். இது மட்டுமே அசைக்க முடியாத பிரிவினை.மத்தது காலப்போக்குல அழிஞ்சிடும்.

உடைங்கிற விஷயத்துல கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய போக்கை மாத்திக்கணும்கிற இடத்துல நான் இருக்கேன்.கஷ்டம் தான் ஆனா தவிர்க்க முடியாதது.
முயற்சி பண்றேன்.ஆனாலும் அழுக்கு படிந்த,கந்தலான ஜீன்ஸோட என்னை அடுத்த முறை நீங்க பார்க்க நேர்ந்தா கண்டுக்காதீங்க.கொஞ்சம் டைம் ஆகும். அவ்ளோதான்.

Advertisements

முகநூல் பரிணாம வளர்ச்சி

fb

லைக்கு பதில் லவ் சிம்பள்,ஹாஹா சிம்பள்,ஏங்க்ரி,கண்ணீர் சிந்துவது போன்ற ஸ்மைலிக்கள்.

நண்பனின்/தோழியின் சுவற்றில் நேரடியாக ஷேர் செய்யும் வசதி.

தற்காலிக புரொஃபைல் பிக்சர்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள்-nametests,bla bla..

மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி செட்டிங்ஸ்.

மீம்ஸ் உலகத்தின் தாய்வீடு.

புரளிகளின் ஒன்றாம் நம்பர் புகலிடம்.

கருத்துகள் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காக புரிந்துக்கொள்ளப்படும் இடம்.யாரையோ நினைத்து போட்ட பதிவிற்கு யாரோ ரியாக்ட் ஆவார்கள்.

அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகளின் நம்பர் 1 பிரச்சார மேடை.

என்னைப்போன்ற ஷோ-ஆஃப்களின் ஆத்மார்த்த சந்திப்பு.

செய்தித்தாள்,ரேடியோ,வேலைவாய்ப்பு தளம்,ரெஸ்யூமே பில்டர்,ரம்மி,வீடியோ எல்லாவற்றின் தனிப்பட்ட தளங்களை பெருமளவு தகர்த்து,மனித மனங்களின் ஒற்றை கான்சன்ட்ரேஷன் புள்ளியாக வளர்ந்தது.

ஆறு வருட முகநூல் வாழ்வில் நான் கண்ட சில மாற்றங்கள் இவை.
இதனோடு சேர்ந்து சேட்டிங்,டேட்டிங்,ஜோதிட மேட்ரிமோனியல் சர்வீஸ்களும்,அச்சில் ஏற்றப்படக்கூடாத பல நாதாரித்தனங்களும் சரமாரியாக,சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் தளம்.

ஏதாச்சு மிஸ் ஆகி இருந்தா மனசுல அப்டேட் பண்ணிக்கோங்க.