அம்மா பற்றி என் அம்மா எழுதிய சில வரிகள்

புரட்சித்தலைவி அம்மா குறித்து என் அம்மா திருமதி.கமலவல்லி இயற்றிய வரிகள்:

அம்மாவும் நீங்கள்!அப்பாவும் நீங்கள்!

ஆண்டவரும் நீங்கள்!எங்களை ஆண்டுவரும் நீங்கள்!

அன்பும் நீங்கள்! அருளும் நீங்கள்!

ஆக்கமும் நீங்கள்! எங்களுக்கெல்லாம் ஊக்கமும் நீங்கள்!

சொக்கத்தங்கம் நீங்கள்! சொல்வதையெல்லாம் செய்வீர் நீங்கள்!

சோதனைகளின் முன்னேயுள்ள கொம்புதனை நீக்கிவிட்டு

சாதனைகளாக்கிடும் சக்தியை எங்கு கற்றீர்?

உமைப் பாராட்ட வார்த்தை மாயங்கள் போதாது!

என்றாலும் வணக்கத்துடன் அளிக்கின்றேன் சில கருத்தை-

சாந்தமாகப் பார்த்து,சாதுவாகி நின்றீர்! யாதுமாகி நின்றீர்!

புரட்சித்தலைவி அம்மா! எங்களின் அன்புக்குரிய அம்மா!

பன்மொழி அறிந்த தன்னிகரற்ற தாயே!நம்

தமிழ்நாட்டுத் தங்கங்களும்,தரணிதனிலே

தலை நிமிர்ந்து நடைபோட

தாயே நீர் அளித்த திட்டங்கள் ஏராளம்! ஏராளம்!

தரமாய் உடையுடுத்தி-சீருடையுடுத்தி

சரமாய்-சரம் சரமாய் பள்ளிசெல்ல-மாணவர்களுக்கு

நான்குமுறை-ஆண்டிற்கு நான்குமுறை சீருடை தந்தீர் நீங்கள்!

விலையில்லா புத்தகங்கள்-குறிப்பேடுகள் தந்து

சலிப்பின்றி,களிப்புடன் கற்க செய்தீர் நீங்கள்!

மிதிவண்டிகள் தந்துதவி மதிவளர்க்க வித்திட்டீர் நீங்கள்!

பேருந்தில் பயணிக்க fare ஏதுமின்றி busfare ஏதுமின்றி

விருப்பமுடன் செல்ல உதவிட்டீர் நீங்கள்!

கடைக்கோடி தமிழனும்,தடையின்றி கற்றிட-கணினி அறிவியலைக் கற்றிட

மடிக்கணினி தந்து,மகிழ்வித்தீர் நீங்கள்! மகிழ்ந்திட்டீர் நீங்கள்!

இடைநிற்றல்தன்னை,தடைபோட்டு தடுத்திட்டு,

பெற்றோர்தம் பிள்ளைகளை,பிடிப்புடனே படிக்கவைக்க

நலத்திட்டங்கள் பலதந்து,நல்வழி தந்திட்டீர் நீங்கள்!

பெண்கல்வி ஆதரித்து,பெரிதும் உதவிட்டீர்!பெண்களுக்கு

இன்சென்ட்டிவ்[incentive] தந்து,இன்டெலிஜெண்ட்[intelligent] ஆக்கிவிட்டீர்!

ஆடவரும் பெண்டிரும் அழகாய் பயின்றிட,ஆதரவுதந்த-தருகின்ற

அரும்பெரும் தலைவியே!எங்கள் அன்பிற்குரிய அன்னையே!

கல்வி வளர்ச்சியடைய கருணைகொண்ட தாய் நீங்கள்!

தடைக்கற்கள் வந்தால்,தகர்த்தெறியும் வீரத்தாய் நீங்கள்!

தர்மத்தை நிலைநாட்டும் தங்கத்தாரகை நீங்கள்!

சிரித்த முகத்துடன் இருக்கும் சிங்காரத்தாய் நீங்கள்!

வாழ்க உங்கள் புகழ்!வாழ்க உங்கள் பெயர்!

வாழ்க உங்கள் அன்பு!

அமைதியில் நிலைப்பெறுங்கள்!!

Advertisements

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா


​ஒரு ஜியோ சிம்,ஒரு மோடம்,ஒரு ஹார்ட் டிஸ்க் தேவை.

அம்பானி கொடுக்கும் டைம் லிமிட் இருக்கும் வரை,கிடைக்கும் நேரத்துல எல்லாம் புரட்சித் தலைவி பாடல்கள்,படங்கள்,அரசியல் உரைகள்,முக்கிய பேட்டிகள் முழுவதையும் தரவிறக்கப் போகிறேன்.

மற்றவர்களைப் போல் வெறுமனே அவரது பரு உடலின் மறைவினை மட்டும் நினைத்து வெம்பிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவரது முழு வாழ்வு எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்த முதல்வர் முகம் சலனமற்றது.கம்பீரமானது.அவரது வாழ்வியலை கொண்டாட விரும்புகிறேன்.68 வயதில் நம்மை விட்டு பிரிந்தது அதிர்ச்சியே என்றாலும் அவர் நிறைவான ஒரு பொது வாழ்வை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்.

என்னை பொறுத்தவரை அவருடைய இறுதி ட்ராவல் அப்போல்லோ-போயஸ்-ராஜாஜி ஹால்-இறுதிச்சடங்கு அல்ல..
அலுவலகம்-முதலமைச்சர் பிம்பம்-பெண்ணிய சக்தி-மனதிலிருந்து அழிக்கமுடியாத ஆளுமை.

பலர் அவரை,அவரின் பெயரை களங்கப்படுத்த பல முயற்சிகள் செய்திருப்பர்.ஆனால் எவ்வளவு துணிச்சல்,மனத் திராணி வேண்டும் இந்த அக்கினி பிரவேசங்களை மேற்கொள்வதற்கு.
நான் அவரது வாழ்வை நிறைய தெரிந்துக்கொண்டு,மனதில் முழு புரிதலான நெருக்கத்தோடு அவரை என்றும் கொண்டாடவே விரும்புகிறேன்.

அமைதியில் நிலைத்திருங்கள் அம்மா..(இது அரசியல் கோஷ அம்மா அல்ல..ஒரு குறிப்பிட்ட வயது முழுமைப்பெற்ற தாய்க்கு இரு தலைமைக்கு அப்பாற்பட்ட ஒருவன் கொடுக்கும் குறைந்தபட்ச அளவிலான மரியாதை)

உங்கள் புகழ்,உங்கள் அன்பு தமிழகம் உள்ள மட்டில் நிலைத்திருக்கும்.