எம்பிஏ


இது வரைக்கும் பை லக்/பை டிசைன்,எனக்கு பிடிச்ச மாதிரியான/என் மைண்ட் செட்டுக்கு ஏத்த மாதிரியான கல்லூரிகளே எனக்கு கிடைச்சிருக்கு.

எனக்கு எப்டினா நான் படிச்சிடுவேன்,வேலை செஞ்சிடுவேன்.ஓரளவு எப்பயுமே சின்சியராவும்,கன்சிஸ்டெண்ட் டாவும் இருந்துடுவேன்.ஆனா என்னை யாரும் கிடுக்குபிடி போடக்கூடாது.

என்னை என் பாட்டுக்கு விட்டா வேலை தானா நல்லபடியா நடக்கும்.அதனால தான் எனக்கு ட்ரில் மாஸ்டர் மாதிரி வேலை வாங்குற இடங்களை பிடிக்காது.அதுக்காக அந்த கல்லூரி மாணவர்களை நான் குறை சொல்லமாட்டேன்.பட் they deserve better.அதுதான் என் பெர்சனல் கருத்து.
SSNல இன்ஜினியரிங்கும் சரி,மெட்ராஸ் யுனிவர்ஸிட்டில எம்பிஏ வும் சரி என்னை விட்டுப் பிடிக்கற மாதிரியான இடங்கள்.

கோயம்புத்தூர்ல கவுன்ஸிலிங் முடிச்சிட்டு மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி DOMS குள்ள நுழையறேன்.இந்த இடமும் சரி,இங்கிருக்கிற மனிதர்களும் சரி நம்ம அலைவரிசை ங்கிறத ஆத்மார்த்தமா உணர்ந்தேன்.

அது என்னிக்குமே பொய்ச்சது இல்ல.

என் ஸ்கூல் நண்பர்கள் அளவுக்கு எனக்கு கல்லூரிலயும் ஸ்பெஷல் நண்பர்கள் கிடைச்சது இந்த சுதந்திரமான மனநிலை எப்பயுமே அந்த இடங்கள்ல இருந்ததால தான்.
இடையில ஒரு மூணு மாசம் மட்டும் கோடிங் உலகத்துக்குள்ள எட்டி பார்த்தேன்.மைசூர்ல.அது வாழ்நாள் முழுக்க பண்ண முடியுமா? அப்டினு யோசிக்கும் போது என்னால பண்ணமுடியாது தான் தோணுச்சி.அது ஒரு வணிக நிறுவனமாகவே இருந்தாலும் ஒரு மினிமம் சுதந்திர உணர்வு இல்லாம உலவமுடியாது.குறிப்பா மனசுக்கு.அதனால அங்க இருந்து வெளியே வந்ததுக்கு அப்றோம் வேற கம்பனி தேடாம என்னுடைய திறன்கள் வச்சி மட்டும் ஏதாச்சும் பண்ணமுடியுமான்னு சுத்திட்டு இருந்தப்ப தான் “புதிய தலைமுறை” எனக்கு பத்திரிக்கையாளன்ங்கிற அங்கீகாரம் கொடுத்து ஒரு கட்டம் உயர்த்துச்சு.என் பெயருக்கு பின்னாடி டிகிரி ங்கிற ஒண்ணு இல்லைனா கூட பொழச்சிக்கலாம்கிற மலை மாதிரி நம்பிக்கைய குடுத்துச்சி.நான் அங்கேவும் தொடர்ந்து இருந்திருக்கலாம்.

ஆனா பி.ஜி பண்ணலாம்கிற ஒரு ஐடியா வந்தது.பட் கண்டிப்பா மறுபடியும் இன்ஜினியரிங்கே பண்ணக்கூடாதுங்கிற விஷயமும் எனக்கு நாலு வருஷத்துல நல்லாவே புரிஞ்சிடுச்சு.CAT னு பெரிய லெவல்ல யோசிக்காம வேலூர்ல தந்தை பெரியார் அரசு கல்லூரில போய் TANCETக்கு பதிவு பண்ணிட்டு வந்தேன்.

முதல் நாள் கவுன்சிலிங்ல சென்னை பல்கலை கிடைச்சா பண்ணுவோம்.இல்லனா இல்ல.அப்டி வந்தேன்.மோசம் போகல. 🙂

Advertisements