உலகமயமாதல் தவறில்லை.எப்பொழுது?

விதர்பா விவசாயி

ஷாம்பூவிலும்,கண்டிஷனரிலும்,கலரிங்கிலும் இன்ன பிற கிறுக்குதனங்களிலும் சிக்குண்ட காலங்கள் துறந்து

இன்றைய தினங்களில் தலைக்குளியல் என்றால் சிகைக்காய்.பாட்டில் டாபர் நெல்லிக்காய் எண்ணெய் இருந்தாலும் வீட்டிலிருந்து அம்மா மருதாணி,செம்பருத்தி,கறிவேப்பில்லை போன்ற வஸ்துக்கள் கலந்து ஏற்படுத்திய இயற்கை எண்ணெய் கலவை ஒன்று அலமாரியில் எப்பொழுதும் அகப்படும்.பல் துலக்க பற்பொடி இல்லையென்றாலும் சுதேசிய கலவையான டாபர் சிகப்பு(கிராம்பு பட்டை வாசனைக்காகவே)காலையின் தொண்டை கரகரப்பை சமன் செய்யும்.

எட்டிப் பார்க்கும் என் இளம் நரைகளின் கொட்டம் அடக்க மேற்கு மாம்பல ஆயுர்வேத கடைகளின் மருதாணி மாதமிருமுறை வெற்றி பெறும்.

ஹமாம் இந்திய பெயரென்றாலும் ஏமாறாமல் கோட்ரேஜ்ஜின் சிந்தால் சூரிய நரவேட்டையை குளும் அரண் அமைத்து காக்கும்.

பொவண்ட்டோ தேசியமே என்றாலும் நம் இளநீர்,நீர்மோர்,உப்பு சோடா,பயநீ,கூழ் முன் நிற்க முடிவதில்லை.

உலகமயமாதல் தவறில்லை.அந்த உலகை ஆள்வது நாம் என்னும் போதினிலே! 😎😎

Advertisements

உண்மைகள் நாற்றமடிக்கத்தான் செய்யும்.

ஆவணப்பட ஸ்கிரீன்ஷாட்

​கக்கூஸ் டாக்யுமெண்டரி

பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப் படுவதாய் நண்பர்களிடம் இருந்து தகவலும் அழைப்பும் வந்தது.வர இயலவில்லை.அதற்கு மன்னிக்கவும்.
நண்பன் பிரபாகரனிடம் இருந்து 3.5 ஜிபிக்கு இந்த ஆவணப்படத்தை காப்பி செய்து லேப்டாப்பில் பார்த்தேன்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னால் 20 செகண்டுகள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க முடியவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு ஆடியோவாக கேட்பேன்.முழுவதும் பார்த்து முடித்தேன்.மனம் கனத்தது.

நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் திட்டமிடப்பட்டு ஈடுபடுத்த படுவதற்கு பெயர் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு பதிவு இந்த ஆவணப்படம்.இயக்குநர் திவ்யபாரதிக்கு சல்யூட்.

உண்மைகளை உணர்ந்தால் தான் செயலாக்கம் பெற முடியும்.உண்மைகளை மறுத்துக்கொண்டே இருப்பதனால் அந்த துர்நாற்றம் மானுடம் மீது ஒரு அழியா கறையாய் வீசிக்கொண்டே இருக்கும் என்னும் செருப்படி பதிவு.