உண்மை நேசம்

நண்பன் விக்ரம் பின்வரும் இந்த கன்டென்ட்டை விரைவில் திரையில் உயிர்ப்பிக்க இருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் நியூஸ்பேப்பரை பார்க்கும் போதும் எனக்கு பயமா இருக்குது.

(சுத்தி பாத்துட்டு) உண்மைலயே பயமாதாங்க இருக்குது.

பொண்ணுங்களை சீரழிக்கற ரேப்பிஸ்டுகளை கொல்லுற சீரியல் கில்லரா நான் மாறிடுவேனோங்கிற பயம் அதிகமாதான் இருக்கு.
டெல்லில தான் ரேப் நடக்குது.தமிழ்நாட்ல இல்லடா னு தலைதூக்கி நடந்த காலமெல்லாம் மலையேறி போச்சு.

இந்த மிருகங்கள் சின்ன குழந்தையையும் விடறது இல்ல.சாகற நிலைமைல இருக்ற பெண்களையும் விடறது இல்ல.

அவங்களை பொறுத்த வரைக்கும் பொண்ணுங்கிறவ ஒரு சதைப் பிண்டம்.

உணர்ச்சியில்லாம புணரப்படும் ஒரு போதை வஸ்து.

அவளோட அன்பு,அவளோட உணர்வுகள்,அவளோட வலிகள் இந்த மாதிரி மனிதத்தன்மையே இல்லாத நாய்ங்களுக்கு என்னைக்குமே புரியாது.
பாத்தேன்.நியூஸ்பேப்பர்லயே ஒரு ஓரமா ரேப்பிஸ்ட்டுக்கு கூட மனிதாபிமானம் காட்டுற சில கிறுக்கு *****களை.

ஏன் அந்த பொண்ணு மனுஷி இல்லையா?டெல்லியில் அவனுங்க இச்சைக்காக பலியான பச்சை சிசுவுக்கு மனிதாபிமானம் காட்டமாட்டீங்களா?
ஏஸி ரூம்ல சோஃபால உட்காந்து டிவில நியூஸா பாக்குற நமக்கே இவ்ளோ வலி இருக்கும்னா அவங்க குடும்பத்தோட வேதனைய என்னன்னு சொல்றது?
குழந்தை பெண்ணுன்னு தெரிஞ்சா கருவறுக்க பாக்குறீங்க.

தப்பிச்சு வந்து பொறந்தா கல்லிப்பால் ஊத்துறீங்க.

தறிகெட்டு கெடக்கும் சமுதாயத்தை தட்டிக்கேட்க நாதியில்லாம எல்லா குற்றச்சாட்டையும் சுமையையும் அவ மேல திணிக்கிறீங்க.

நின்னா தப்பு,நடந்தா தப்பு,பாத்தா தப்பு,சிரிச்சா தப்பு,குனிஞ்சா தப்பு,நிமிந்தா தப்பு,ஒரு பையன் கூட பேசி பழகிட்டா போதுமே.அவ கதையவே முடிக்றவங்க தான நீங்க?
முதல்ல கற்புங்கிறத பெண்ணோட பிறப்புறுப்புல கொண்டுபோய் திணிச்ச நாயை தேடி அடிக்கணும்.கற்பழித்தல் ங்கிற சொல்லையே நான் வன்மையா எதிர்க்கிறேன்.
ஒரு பெண்ணோட கற்பு அவ மனசுல இருக்குங்க.அதை யாராலயும் அழிக்க முடியாது.

நாம செய்ய வேண்டியதுலாம் அவளோட துயர்களை துடைக்க வேண்டியது மட்டும்தான்.
ரேப்பிஸ்டுகளை சாதாரண தண்டனைகளால தண்டிக்க முடியாது.குரூரத்தை கலங்கடிக்கும் குரூரம் தான் இதற்கு தீர்வாக முடியும்.அதுக்காக நான் உங்களை சட்டத்தை கைல எடுத்துக்க சொல்லலை.சட்டத்தை மரண தண்டனையா கடுமையாக்கணும்னு தான் சொல்றேன்.
சட்டம் இயற்றுபவர்களுக்கு ஒண்ணே சொல்லிக்கறேன்.இன்னைக்கு அந்த பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடந்தா இதே மாதிரி மனிதாபிமானம்,வெட்டி நியாயம் பேசிட்டு இருப்பீங்களானு.
வன்முறை சமுதாயத்தில் பெண்ணுக்கான ஆயுதம் மட்டும் மென்முறை ஆகாது.என்றும் பெண்மையை காத்திடுவோம்.👊🏻

Advertisements