என்றும் உழுதவன் அழலாகாது

​இது நண்பன் விக்ரமுக்காக நான் எழுதிய விவசாயிகள் பற்றிய கன்டென்ட்.விரைவில் இதையும் நீங்கள் திரையில் அவன் உணர்வூட்ட காண்பீர்கள். 🙂
(தட்டில் சாப்பிட்டுக் கொண்டே)

(ஒரு வாய் சோற்றை கையில் எடுத்து பார்த்துவிட்டு தட்டில் போட்டுவிட்டு,மறுபடி ஒரு பருக்கை அளவு மட்டும் கையில் எடுத்துக்கொண்டு)
நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா வேணா இருக்கலாம்.பல பிசினஸ் பண்ணலாம்.ஆனா நிலத்துல நின்னு உழைக்காம என்னால ஒரு பருக்கையக் கூட உருவாக்க முடியாது.
அதாங்க விவசாயி.
கோவணம் கட்டி கழனில வேலை செஞ்ச விவசாயியோட நிலைமை,இப்போ முழுசா அவுத்தும் கேட்பாரற்று கிடக்குது.
எலிக்கறி சாப்பிட்டு,மண்டை ஓட்டு மாலை போட்டு,அம்மணமா நின்னு,தற்கொலை செஞ்சாவது நமக்கு சோறு போட்டுடனும்னு உழுதவன் நினைக்குறான்.

ஆனா நாமதான் அவன் நினைப்பே இல்லாம விதர்பா,தஞ்சைனு அவன் தற்கொலைக்கு துணை போயிட்டு இருக்கோம்.
இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு நினைக்குறீங்க?மழை பொய்ச்சுடுச்சி,WTO மாநாட்டுல உச்சக்கட்ட விலை நிர்ணயம் ஆகிடுச்சு.இன்னும் கொஞ்ச நாள்ல ரேஷன் அரிசுக்கு பதிலா உங்க அக்கவுண்ட்ல மானியப் பணம்தான் இருக்கும்.இது எல்லாத்த விடவும் விவசாயியோட இன்றைய நிலைமைக்கு காரணம் நாமதாங்க.
ஆமா!நம்மளோட இந்த கள்ளத்தனமான அமைதிதான் காரணம்.விவசாயிகளை புறக்கணிக்றது மூலமா நாம அந்நிய நாட்டுக்கு அடிமையாக போறோம்.நம்ப மரபை இழக்கப்போறோம்.
அவன் என்ன சந்தைல விக்கறானோ அததான் மூடிட்டு இறக்குமதி பண்ணி சாப்பிட போறோம்.கொடுமையான மரபணு உணவுகள் உட்பட.இந்த நிலை உங்களுக்கு வரணுமா?
ஒன்னு மட்டும் சொல்றேன்.உறுதியா மனசுல ஏத்திக்கோங்க.
“அன்னம் தரும் உழவனை நினை.அரசியல் சாக்கடையும் பாசனத்திற்கு பயன்படும்.

மேற்கு மட்டும்தான் மேதைத்தனம் என்றால்

சூரியன் எங்கே தோழா உதிக்கும்?

நாடி நரம்பெல்லாம் வாடி வருந்தினாலும்

உழவன் இருந்தால்தான் உன் உணவு சிறக்கும்”

Advertisements

உண்மை நேசம்

நண்பன் விக்ரம் பின்வரும் இந்த கன்டென்ட்டை விரைவில் திரையில் உயிர்ப்பிக்க இருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் நியூஸ்பேப்பரை பார்க்கும் போதும் எனக்கு பயமா இருக்குது.

(சுத்தி பாத்துட்டு) உண்மைலயே பயமாதாங்க இருக்குது.

பொண்ணுங்களை சீரழிக்கற ரேப்பிஸ்டுகளை கொல்லுற சீரியல் கில்லரா நான் மாறிடுவேனோங்கிற பயம் அதிகமாதான் இருக்கு.
டெல்லில தான் ரேப் நடக்குது.தமிழ்நாட்ல இல்லடா னு தலைதூக்கி நடந்த காலமெல்லாம் மலையேறி போச்சு.

இந்த மிருகங்கள் சின்ன குழந்தையையும் விடறது இல்ல.சாகற நிலைமைல இருக்ற பெண்களையும் விடறது இல்ல.

அவங்களை பொறுத்த வரைக்கும் பொண்ணுங்கிறவ ஒரு சதைப் பிண்டம்.

உணர்ச்சியில்லாம புணரப்படும் ஒரு போதை வஸ்து.

அவளோட அன்பு,அவளோட உணர்வுகள்,அவளோட வலிகள் இந்த மாதிரி மனிதத்தன்மையே இல்லாத நாய்ங்களுக்கு என்னைக்குமே புரியாது.
பாத்தேன்.நியூஸ்பேப்பர்லயே ஒரு ஓரமா ரேப்பிஸ்ட்டுக்கு கூட மனிதாபிமானம் காட்டுற சில கிறுக்கு *****களை.

ஏன் அந்த பொண்ணு மனுஷி இல்லையா?டெல்லியில் அவனுங்க இச்சைக்காக பலியான பச்சை சிசுவுக்கு மனிதாபிமானம் காட்டமாட்டீங்களா?
ஏஸி ரூம்ல சோஃபால உட்காந்து டிவில நியூஸா பாக்குற நமக்கே இவ்ளோ வலி இருக்கும்னா அவங்க குடும்பத்தோட வேதனைய என்னன்னு சொல்றது?
குழந்தை பெண்ணுன்னு தெரிஞ்சா கருவறுக்க பாக்குறீங்க.

தப்பிச்சு வந்து பொறந்தா கல்லிப்பால் ஊத்துறீங்க.

தறிகெட்டு கெடக்கும் சமுதாயத்தை தட்டிக்கேட்க நாதியில்லாம எல்லா குற்றச்சாட்டையும் சுமையையும் அவ மேல திணிக்கிறீங்க.

நின்னா தப்பு,நடந்தா தப்பு,பாத்தா தப்பு,சிரிச்சா தப்பு,குனிஞ்சா தப்பு,நிமிந்தா தப்பு,ஒரு பையன் கூட பேசி பழகிட்டா போதுமே.அவ கதையவே முடிக்றவங்க தான நீங்க?
முதல்ல கற்புங்கிறத பெண்ணோட பிறப்புறுப்புல கொண்டுபோய் திணிச்ச நாயை தேடி அடிக்கணும்.கற்பழித்தல் ங்கிற சொல்லையே நான் வன்மையா எதிர்க்கிறேன்.
ஒரு பெண்ணோட கற்பு அவ மனசுல இருக்குங்க.அதை யாராலயும் அழிக்க முடியாது.

நாம செய்ய வேண்டியதுலாம் அவளோட துயர்களை துடைக்க வேண்டியது மட்டும்தான்.
ரேப்பிஸ்டுகளை சாதாரண தண்டனைகளால தண்டிக்க முடியாது.குரூரத்தை கலங்கடிக்கும் குரூரம் தான் இதற்கு தீர்வாக முடியும்.அதுக்காக நான் உங்களை சட்டத்தை கைல எடுத்துக்க சொல்லலை.சட்டத்தை மரண தண்டனையா கடுமையாக்கணும்னு தான் சொல்றேன்.
சட்டம் இயற்றுபவர்களுக்கு ஒண்ணே சொல்லிக்கறேன்.இன்னைக்கு அந்த பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கு நடந்தா இதே மாதிரி மனிதாபிமானம்,வெட்டி நியாயம் பேசிட்டு இருப்பீங்களானு.
வன்முறை சமுதாயத்தில் பெண்ணுக்கான ஆயுதம் மட்டும் மென்முறை ஆகாது.என்றும் பெண்மையை காத்திடுவோம்.👊🏻

​காலா கரிகாலன்

முதல் பார்வை


பெனரோமா

ரஜினி 2.0க்கு பிறகு நடித்து வெளிவர இருக்கும் படம்.கபாலிக்கு

பிறகு ரஜினியும்,இரஞ்சித்தும் இணையும் படம்.அட்டக்கத்தி,மெட்ராஸ்,

கபாலியை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை

தொடர்ந்து பிரதிபலிக்கும் பா.இரஞ்சித்தின் மற்றொமொரு நன்

முயற்சி.சந்தோஷ் நாராயணன் ரஜினிக்கு இசையமைக்கும்

இரண்டாவது திரைப்படம்.மருமகன் தனுஷின் வொண்டர்பார்

ஸ்டூடியோஸ் மாமனார் ரஜினிக்காக தயார் செய்யும் முதல் படம்.

கபாலி மலேசியாவில் திரைப்படமாக்கப்பட்டது.காலா கரிகாலன்

மும்பையின் தாராவி போன்ற அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில்

படமாக்கப்படுகிறது.ரஜினியின் புதிய ஃபார்முலாவில் கபாலியைத்

தொடர்ந்து இது இரண்டாவது படம்.

கபாலி நான்கைந்து முறை நான் திரையரங்கில் ரசித்த படம்.காரணம்

நிறைய.ரஜினி கமர்ஷியலாக அல்லாமல் நடித்துப் பார்த்து பல நாள்

ஆனதாலும் பிடித்துப்போயிருக்கலாம்.பெண்மைக்கு இரஞ்சித் வழங்கும்

பிரத்யேக இடம் காரணமாக இருக்கலாம்.கருத்தும் சொல்லி,

கமர்ஷியலாகவும் சாதிக்க முடிந்தது கபாலியில்.
காலா கரிகாலனும் அவ்வாறே தமிழ் திரையுலகில் ஒரு தனித்த இடம்

பெறும் என உறுதியாக நம்பலாம்.இன்று காலை பெயர் வெளியிடப்

பட்டது.மாலை இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

காலா தமிழனுக்கு என்ன சொல்ல வருகிறான் என்பதைக்காண

நானும் பல ரசிகர்கள் போல ஆவலாகவே இருக்கின்றேன்.

ரஜினி வயதிற்கேற்ப நடிக்க ஆரம்பித்துவிட்டது மிக திருப்தியளிக்கிறது.

ஒரு லுங்கி கட்டிக்கொண்டு மஹாராஷ்டிரா ரெஜிஸ்ட்ரேஷன்

ஜீப்பின் மேல் தெனாவட்டாக கூலர்ஸ் போட்டு அமர்ந்திருக்கும் இந்த

ரஜினியைத்தான் நானும் என் நண்பர்களும் என்றும் 

எதிர்பார்க்கிறோம்.தொடரட்டும் ரஜினியின் புதிய ட்ரெண்ட்.

எத்தனையாவதோ ரஜினி போஸ்ட்

ரசிகர்களுடனான லேட்டஸ்ட் உரையாடல் போது..

ரஜினிகாந்த்
நடிகர்கள் கிட்ட அரசியல் தலைவனை தேடுற கெட்ட பழக்கத்துனால இல்ல.சும்மா டைம்பாஸூக்காக தான் யூட்யூப்ல இந்த வீடியோவ பாக்க ஆரம்பிச்சேன்.நான் முதல்லயே சொல்லிட்றேன்.எனக்கு ரஜினி ரொம்ப பிடிக்கும்.பிடிக்காதுன்னுலாம் பீலா விட மாட்டேன்.பிகு பண்ணிக்க மாட்டேன்.ஆனா அதுக்காக அவர் ஏழைகளுக்கு உதவி செஞ்ச தர்மபிரபு,தனி ராஜாங்கம் நடத்துற பேரலல் கவர்மண்ட் அப்படிலாம் எதிர்பார்த்து இல்ல.
அவர் மிகப்பெரிய நடிகர்.என்டர்டெயினர்.பல மக்கள் அவரை நேசிக்கறாங்க.அவரை எதிர்க்கறவங்களும் உண்டு.போக ரஜினியோட தத்துவம்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த ஸ்பிரிச்சுவல்,ஃபிலாசஃபி,குட்டிக் கதைங்க,மெஸ்மரைசிங் சிரிப்பு,அவரோட வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு,பாடி லேங்குவேஜ் னு பல விஷயங்கள் இருக்கு.
இப்போ 2 நாளைக்கு முன்னாடி வந்த ரஜினி பேட்டியை பத்தி முதல்ல பத்திரிக்கைல தான் படிச்சேன்.என்னன்னவோ எழுதி இருந்தாங்க.நானும் ஓ தலைவன் குழப்பியே காலத்தை ஓட்டிடுவான் போலன்னு நினைச்சேன்.

இன்னிக்கு அந்த 16 நிமிஷ முழு வீடியோவ பார்த்தேன்.அப்டி என்னதான் பேசி இருக்கறார்னு.
எந்த ஏமாத்து சத்தியங்களும் இல்ல.

தேவையில்லாத சவடால் எதுவும் விடல.

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும்,குறைகளையும் பிரஸ் முன்னாடியும் மக்கள் முன்னாடியும் ஏத்துக்கற தன்மை.

தன்னை வானத்துல இருந்து குதிச்ச தேவன் மாதிரி கற்பனை பண்ணிக்காம,தான் யாரு,தன்னால என்ன பிராக்டிகலா செய்ய முடியும்கிற விவரங்கள் அவருக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சிருக்கு.

இந்த தெளிவு கேப்டன் கிட்ட இருந்திருந்தா அவர் ஆட்சியவே புடிச்சிருக்கலாம்.
ரஜினிகாந்த் வரி கட்டுற சாதாரண குடிமகன்தான்.(என்ன நாம லட்சத்துல வரி கட்டுறோம்.அவர் கோடிகள்ல கட்டுறார்).அவர் பெரிய சேவகரோ,மகாத்மாவா வோ இருக்க தேவையில்ல.

ஆனா இன்னிக்கு இருக்ற பல அரசியல்வாதிங்க கிட்ட இல்லாத தெளிவும்,பொறுமையும்,மனிதத் தன்மையும் அவர்கிட்ட நல்லாவே இருக்கு.

அதுமட்டும் தான் நான் சொல்லிக்கறது.அவர் வரட்டும் வராம போகட்டும்.முதல்ல அந்த வீடியோ லிங்க் தர்றேன்.பாத்துட்டு நான் சொன்னதுல தப்பிருந்துச்சுனா கேளுங்க.தெரிஞ்சதை சொல்றேன்.

உலகமயமாதல் தவறில்லை.எப்பொழுது?

விதர்பா விவசாயி

ஷாம்பூவிலும்,கண்டிஷனரிலும்,கலரிங்கிலும் இன்ன பிற கிறுக்குதனங்களிலும் சிக்குண்ட காலங்கள் துறந்து

இன்றைய தினங்களில் தலைக்குளியல் என்றால் சிகைக்காய்.பாட்டில் டாபர் நெல்லிக்காய் எண்ணெய் இருந்தாலும் வீட்டிலிருந்து அம்மா மருதாணி,செம்பருத்தி,கறிவேப்பில்லை போன்ற வஸ்துக்கள் கலந்து ஏற்படுத்திய இயற்கை எண்ணெய் கலவை ஒன்று அலமாரியில் எப்பொழுதும் அகப்படும்.பல் துலக்க பற்பொடி இல்லையென்றாலும் சுதேசிய கலவையான டாபர் சிகப்பு(கிராம்பு பட்டை வாசனைக்காகவே)காலையின் தொண்டை கரகரப்பை சமன் செய்யும்.

எட்டிப் பார்க்கும் என் இளம் நரைகளின் கொட்டம் அடக்க மேற்கு மாம்பல ஆயுர்வேத கடைகளின் மருதாணி மாதமிருமுறை வெற்றி பெறும்.

ஹமாம் இந்திய பெயரென்றாலும் ஏமாறாமல் கோட்ரேஜ்ஜின் சிந்தால் சூரிய நரவேட்டையை குளும் அரண் அமைத்து காக்கும்.

பொவண்ட்டோ தேசியமே என்றாலும் நம் இளநீர்,நீர்மோர்,உப்பு சோடா,பயநீ,கூழ் முன் நிற்க முடிவதில்லை.

உலகமயமாதல் தவறில்லை.அந்த உலகை ஆள்வது நாம் என்னும் போதினிலே! 😎😎

உண்மைகள் நாற்றமடிக்கத்தான் செய்யும்.

ஆவணப்பட ஸ்கிரீன்ஷாட்

​கக்கூஸ் டாக்யுமெண்டரி

பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப் படுவதாய் நண்பர்களிடம் இருந்து தகவலும் அழைப்பும் வந்தது.வர இயலவில்லை.அதற்கு மன்னிக்கவும்.
நண்பன் பிரபாகரனிடம் இருந்து 3.5 ஜிபிக்கு இந்த ஆவணப்படத்தை காப்பி செய்து லேப்டாப்பில் பார்த்தேன்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னால் 20 செகண்டுகள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க முடியவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு ஆடியோவாக கேட்பேன்.முழுவதும் பார்த்து முடித்தேன்.மனம் கனத்தது.

நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் திட்டமிடப்பட்டு ஈடுபடுத்த படுவதற்கு பெயர் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு பதிவு இந்த ஆவணப்படம்.இயக்குநர் திவ்யபாரதிக்கு சல்யூட்.

உண்மைகளை உணர்ந்தால் தான் செயலாக்கம் பெற முடியும்.உண்மைகளை மறுத்துக்கொண்டே இருப்பதனால் அந்த துர்நாற்றம் மானுடம் மீது ஒரு அழியா கறையாய் வீசிக்கொண்டே இருக்கும் என்னும் செருப்படி பதிவு.

அரசு கல்லூரி எங்களை ராஜாவாக்கும் அரியணை

சென்னை பல்கலைக்கழக மேலாண்மை மாணவன் சக்தி டா!!

இதல்லாம் பெருமைனா நாங்களும் சொல்லுவோம்டா
ஒரு சில்லுவண்டு எப்போ பாரு கம்பேர் பண்ணியே சாவடிக்கும்.

ஒரு முறை பேசறப்ப சொல்லுச்சு “எங்க சீனியர் ஐஐஎம் ல படிச்சார்.

ஸ்டார்ட்டிங் பேக்கேஜ் 12 லட்சம் வாங்குனார் தெரியுமா?”
நான்: “செத்த பொத்திண்டு போறியா?12 லட்சம் ஃபீஸ் கட்டி 12 லட்சம் 

சம்பளம் வாங்குற உன் சீனியர் பத்தி சொல்றியே! வெறும் 25,000

ஃபீஸ் கட்டி படிச்சு 6 லட்சம்,7 லட்சம் லாம் ஸ்டார்ட்டிங்லயே

 என் சீனியர்ஸ்,சூப்பர்

சீனியர்ஸ் நிறைய பேரு வாங்குனாங்க,வாங்குறாங்க.

நான் என்ன உன்னை 

மாதிரி தம்பட்டம் அடிச்சிட்டா திரியுறேன்?”
திறமைக்கும் சம்பளத்துக்கும் என்னடா சம்பந்தம்?இதல்லாம் என்னடா

கம்பேரிஷன்?

அவனவன் இருக்ற இடம்,வளர்ந்த வாழ்ந்த சூழ்நிலைலாம் வச்சு

பாருங்கடா.

யாரையும் சிறுசா எடை போடாதீங்க.கல்வியை பிசினஸா பாக்குறது

கேவலம்.ஆனா அதுதான் ரூல் ஆகிடுச்சு.

அப்படி பாத்தாக்கூட return on investment தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியும்னா

எங்க மக்கள் பக்கத்துலக்கூட உங்களால வர முடியாதே.

Silly பிரிமியர் காலேஜ் guys & their ஜயிஞ்ஜக் சில்லுவண்டுஸ்.
திறமை இருக்றவன் எங்க வேணாலும் பொழைச்சுப்பான்.

பொழைச்சிக்கணும்.Rule of Survival. 

கவர்மண்ட் காலேஜ் swag டா. #DOMS #UniversityOfMadras

எம்பிஏ


இது வரைக்கும் பை லக்/பை டிசைன்,எனக்கு பிடிச்ச மாதிரியான/என் மைண்ட் செட்டுக்கு ஏத்த மாதிரியான கல்லூரிகளே எனக்கு கிடைச்சிருக்கு.

எனக்கு எப்டினா நான் படிச்சிடுவேன்,வேலை செஞ்சிடுவேன்.ஓரளவு எப்பயுமே சின்சியராவும்,கன்சிஸ்டெண்ட் டாவும் இருந்துடுவேன்.ஆனா என்னை யாரும் கிடுக்குபிடி போடக்கூடாது.

என்னை என் பாட்டுக்கு விட்டா வேலை தானா நல்லபடியா நடக்கும்.அதனால தான் எனக்கு ட்ரில் மாஸ்டர் மாதிரி வேலை வாங்குற இடங்களை பிடிக்காது.அதுக்காக அந்த கல்லூரி மாணவர்களை நான் குறை சொல்லமாட்டேன்.பட் they deserve better.அதுதான் என் பெர்சனல் கருத்து.
SSNல இன்ஜினியரிங்கும் சரி,மெட்ராஸ் யுனிவர்ஸிட்டில எம்பிஏ வும் சரி என்னை விட்டுப் பிடிக்கற மாதிரியான இடங்கள்.

கோயம்புத்தூர்ல கவுன்ஸிலிங் முடிச்சிட்டு மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி DOMS குள்ள நுழையறேன்.இந்த இடமும் சரி,இங்கிருக்கிற மனிதர்களும் சரி நம்ம அலைவரிசை ங்கிறத ஆத்மார்த்தமா உணர்ந்தேன்.

அது என்னிக்குமே பொய்ச்சது இல்ல.

என் ஸ்கூல் நண்பர்கள் அளவுக்கு எனக்கு கல்லூரிலயும் ஸ்பெஷல் நண்பர்கள் கிடைச்சது இந்த சுதந்திரமான மனநிலை எப்பயுமே அந்த இடங்கள்ல இருந்ததால தான்.
இடையில ஒரு மூணு மாசம் மட்டும் கோடிங் உலகத்துக்குள்ள எட்டி பார்த்தேன்.மைசூர்ல.அது வாழ்நாள் முழுக்க பண்ண முடியுமா? அப்டினு யோசிக்கும் போது என்னால பண்ணமுடியாது தான் தோணுச்சி.அது ஒரு வணிக நிறுவனமாகவே இருந்தாலும் ஒரு மினிமம் சுதந்திர உணர்வு இல்லாம உலவமுடியாது.குறிப்பா மனசுக்கு.அதனால அங்க இருந்து வெளியே வந்ததுக்கு அப்றோம் வேற கம்பனி தேடாம என்னுடைய திறன்கள் வச்சி மட்டும் ஏதாச்சும் பண்ணமுடியுமான்னு சுத்திட்டு இருந்தப்ப தான் “புதிய தலைமுறை” எனக்கு பத்திரிக்கையாளன்ங்கிற அங்கீகாரம் கொடுத்து ஒரு கட்டம் உயர்த்துச்சு.என் பெயருக்கு பின்னாடி டிகிரி ங்கிற ஒண்ணு இல்லைனா கூட பொழச்சிக்கலாம்கிற மலை மாதிரி நம்பிக்கைய குடுத்துச்சி.நான் அங்கேவும் தொடர்ந்து இருந்திருக்கலாம்.

ஆனா பி.ஜி பண்ணலாம்கிற ஒரு ஐடியா வந்தது.பட் கண்டிப்பா மறுபடியும் இன்ஜினியரிங்கே பண்ணக்கூடாதுங்கிற விஷயமும் எனக்கு நாலு வருஷத்துல நல்லாவே புரிஞ்சிடுச்சு.CAT னு பெரிய லெவல்ல யோசிக்காம வேலூர்ல தந்தை பெரியார் அரசு கல்லூரில போய் TANCETக்கு பதிவு பண்ணிட்டு வந்தேன்.

முதல் நாள் கவுன்சிலிங்ல சென்னை பல்கலை கிடைச்சா பண்ணுவோம்.இல்லனா இல்ல.அப்டி வந்தேன்.மோசம் போகல. 🙂

வள்ளுவம்

ட்விட்டர்,பஞ்ச் டயலாக்லாம் இல்லாத காலத்திலேயே வள்ளுவர் என்னென்ன பண்ணிவச்சிருக்கார் பாருங்க..!

காலம் பிறழ்ந்தமைக்கு மன்னியுங்கள்.குறளுக்கு ஓர் நாள் போதாது.1330 குறளையும் மனனம் செய்தவர்களுண்டு இங்கே.

வாழ்க்கையில் நான் அதிகம் பயணித்த குறள்கள்.

1.யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்

சொல் லிழுக்கு பட்டு

பொருள்:நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் நாவடக்கம் இல்லீனா நீ காலி

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

பொருள்:அன்பிருக்கிற மனசுதான் அடுத்தவனுக்கு ஏதாச்சு நல்லது செய்யும்.

3.எண்ணி துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

பொருள்:டிக்ளேர் பண்ணிட்டா நம்ம பேச்சை நாமளே கேட்கக்கூடாது.

4.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு

பொருள்:உங்க மனசோட உயரம்தான் உங்க வாழ்க்கையோட உயரம்.

5.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:எதையும் அப்டே நம்பிடாம கொஞ்சமாச்சு ஆராய்ஞ்சு பாக்கணும்.

6.தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

பொருள்:நாம வாழணும்.செம்மயா வாழ்ந்தான்டாங்கிற மாதிரி வாழணும்.இல்லனா வேஸ்ட்டு.

7.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

பொருள்:பெத்தவங்களை நேசி.மத்ததெல்லாம் தூசி.

8.ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க தன்மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்

பொருள்:ஆடிபோய் ஆவணி போனாலும் நாம டாப்பா வர்றதுதான் நம்ம அம்மாவுக்குலாம் பெருமை.

9.கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்கு தக

பொருள்:டின்னு கட்டி படிச்சு கன்னு மாதிரி நிக்கணும் பா.

10.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

பொருள்:(கில்லி விஜய் ஸ்லாங்கில் கன்ட்டினுயூ செய்க)இப்ப இவர் சொல்லிருக்கிறபடி நடந்தாதான் சுற்றமும் நட்பும் நிலைக்கும். 😉 

#வள்ளுவம் #திருக்குறள் #சக்தியதிகாரம் 🙂 #collage #MyFavoriteKurals #Thirukural #Thiruvalluvar #Couplets #Twitter #PunchDialogues

கிங்ஃபிஷர் 2017 

மல்லையா ஊர்ல இருந்தா என்ன?இல்லைனா என்ன?

அவர் கடன் வச்சிருந்தா என்ன?வச்சில்லன்னா என்ன?

அதை மத்திய சர்க்கார் தள்ளுபடி பண்ணா என்ன? பண்ணலைனா என்ன?

எங்களுக்கு கிங்ஃபிஷர் கேலண்டர் வருஷா வருஷம் ரிலீஸ் ஆகியே தீரணும்..ஆங்

என்னடா இவன் இப்டி பேசறானேனு பாக்கறீங்களா? பின்ன என்ன? டக்கரு டக்கரு வீடியோ ரிலீஸ் பண்ண ஒரே காரணத்துக்காக அவரை defame பண்றதுக்காக

பெண்களை கேவலப்படுத்துகிறார்னு ஹிப்ஹாப் தமிழா ஆதி மேல கேஸ் போட்ட பீட்டா அமைப்போட No Fur Campaign இணையதளத்திற்கு போங்க.ஆதியோட கிளப்புல மப்புல பாட்டு லிரிக்ஸோட definition புரியும்.இவங்கள மாதிரி நம்மூர் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை எதிர்க்காம அட்லீஸ்ட் ஃபியுச்சர் பாலிவுட் சூப்பர்ஸ்டார்ஸ் ஆகப்போற லோக்கல் இந்தியன் சூப்பர்மாடல்களுக்கு வாய்ப்பளிக்கிற தலைவன் விஜய் மல்லையா,அதை நாம் மண்டைய போடும்வரை நடத்தப்போகும் சின்ன தலைவன் சித்தார்த் மல்லையா,இதற்கெல்லாம் விதைபோட்ட கிங்ஃபிஷரின் கட்டுமரம் விட்டல் மல்லையா அவர்களை பியர் அடித்துக்கொண்டே பாராட்டுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன் மக்களே.

கவர்மெண்ட் குடுத்தா டாஸ்மாக்..மல்லையா குடுத்தா தப்பா?

எப்டியும் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நன்மை அளிக்க போற ஜல்லிக்கட்டை இன்னும் 15 நாள் பொங்கலுக்குள்ள பாக்க போறது இல்ல.அட்லீஸ்ட் மல்லையாவோட ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் ஜெயிக்குதா/சஹாரா இந்தியா ஃபோர்ஸ் ஒன் ஃபார்முலா ஒன் ஜெயிக்குதானாச்சு பாப்போம்.No pun intended.
Sources:

1.Twitter “Celebrating 15 years of Kingfisher Calendar” hashtag

2.Hiphop Tamizha Adhi

3.Elango Kallanai anna’s statuses regarding Jallikattu

4.Kingfisher Calendar 2017 official website and 15 year archives 😛

5.Peta “No Fur Campaign” official website(still better than Jockey or Nothing ad campaign 😛 )