போக்குவரத்து கழக கூப்பாடுகள்

©சக்தி®™

சென்னை பெருவெள்ளம்.2015.ரீவைண்ட்.

தரமணியில் வசிக்கிறேன்.கல்லூரி லீவு.ஹாஸ்டல் லீவு.ஓலா காரன் போட்டு விட்றான்.ஓஎம்ஆர் ரோட்ல அங்கங்க பள்ளம்.வேளச்சேரி பாதி மூழ்க,திருவான்மியூர் MRTS நடந்தே சென்றோம் விடுதியிலிருந்து சிலர்.

பறக்கும் ரயில் வரக்கூட பல மணிநேரம் ஆனது.வந்த கடற்கரை ரயிலும் வெள்ளத்திற்கு அஞ்சுவது போல ஊர்ந்தே சென்றது பாலத்தின் ஊடே.பார்க்கில் இறங்கி சென்ட்ரலை நோக்கிய ஓட்டம்.உள்ளே போனால் அத்தனை ரயில்களும் பல மணி நேர தாமதம்/ரத்து.
வெளியில் வந்து 2 மணி நேரம் காத்திருந்து ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டே கொட்டும் மழையில் ஆபத்பாந்தவன் போல வந்த எம்டிசியில் ஏறி கோயம்பேடு விரைந்தோம்.
பார்த்தால் கோயம்பேடு ஏற்கனவே ஸ்தம்பித்திருந்தது.போக்குவரத்து முற்றிலும் ரத்து.

சென்னையை சுற்றியுள்ள பெருவாரியான பெருத்த நீர்நிலைகள் தூர்வாரப்படாத அவலத்தால் உடைந்து,பெருகி ஏற்கனவே சாக்கடையும் சாலைகளும் இணைந்து நாறிக்கொண்டிருந்த சென்னையை நாதியற்ற தீவாக்கிய செய்தி காதில் ஏறி அனைவருக்கும் பரவிக் கொண்டிருந்தது.

சுனாமிலயே சும்மிங் போட்டு தப்பிக்கக்கூடிய தெம்பிருக்கும் எம் இளைஞர்களுக்கும் மாட்டிக்கிட்டோம்டா என்ற ஒருவகை பீதி கிளம்பியது.
நண்பன் ஒருவன் புலம்ப ஆரம்பித்துவிட்டான்.செத்தா நான் எங்கூர்ல தான்டா சாவேன்.அதுக்கு மொதல்ல சென்னைய விட்டு எப்டியாச்சு வெளிய வந்துடணும்டானு.

என்ன செய்வது? எல்லா போக்குவரத்து தடங்களும் நீரில் மூழ்கிய/மூழ்கிக்கொண்டிருக்கும்/மூழ்கிவிட்டதாக மக்கள் நினைத்து குமுறிக்கொண்டிருக்கும் வேளையில் பூவிருந்தவல்லி நோக்கிய சில எம்டிசிக்கள் கடும் மழையிலும் இயங்கிக்கொண்டிருப்பதை பார்த்த எங்கள் கூட்டம்,செம்பரம்பாக்கமும் உடைந்து சென்னை தீவாகிவிட்டதாக வதந்தி பரப்பிக்கொண்டிருக்கும் சில விஷமிகளின் வாயை அடைக்கும் விதமாக வேலூர் சென்னை நெடுஞ்சாலை,சென்னையை காக்கும் அரணாக அப்பொழுதும் இயங்கிக் கொண்டிருந்தது.

இயக்கியது எம் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக அண்ணன்மார்கள்,படு மூத்த கிழரத்தம் பாய்ஞ்சிய இளநெஞ்சத்து சகோதரர்களே.

ஒரு பெருசு கெத்தாக ஏறி வேலூர் வண்டியை கிளப்பியது.வண்டி வீராணம் என்ன? செம்பரம்பாக்கம் என்ன? பூண்டி என்ன? புழல் என்ன? கடல் என்ன? எதன் மீதும் பயணித்து ஊர் சேர்ந்திருக்கும்.

ஓட்டுனது எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸூனு யாருக்கு தெரியும்? கியர் போட்டு போட்டு இரும்பாகிப் போன கைகள்.உழைத்து உழைத்தும் சலிக்காத ஒரு சிரிப்பு.

ஸ்டியரிங்கை புடிக்ற ஸ்டைலு.பென்ஸூ வச்சிருக்றவன் லான் லைன்ல நின்னு டிப்ஸ் கேக்கணும் டா.அப்படி ஒரு அடாவடி.பெருசு வெரட்டு வெரட்டு என்று விரட்டியதில் வீடுபோய் சேர்ந்தவர்கள் எம்மாத்திரம் பேர்?

பெருசு போல் எத்தனை உழைப்பாளர்கள்? எத்தனை பேருந்துகள்? எத்தனை தருணங்கள்? எத்தனை உயிர்கள்? எத்தனை உழைப்பு? எத்தனை வியர்வை? எத்தனை ரத்தம்.

பெருமுதலாளிகளின் கோடிகளை அவர்கள் காலடியில் கொட்டி கிடத்தினாலும் ஈடாகாது.
அப்பேற்பட்ட உழைப்பாளர்களின் உணர்வை என்றும் மதிக்க. மக்களுக்கும் மேலே உள்ளவர்களுக்கும் ஒருங்கிணைந்த வேண்டுகோள்.

©சக்தி®™

Advertisements

என்றும் உழுதவன் அழலாகாது

​இது நண்பன் விக்ரமுக்காக நான் எழுதிய விவசாயிகள் பற்றிய கன்டென்ட்.விரைவில் இதையும் நீங்கள் திரையில் அவன் உணர்வூட்ட காண்பீர்கள். 🙂
(தட்டில் சாப்பிட்டுக் கொண்டே)

(ஒரு வாய் சோற்றை கையில் எடுத்து பார்த்துவிட்டு தட்டில் போட்டுவிட்டு,மறுபடி ஒரு பருக்கை அளவு மட்டும் கையில் எடுத்துக்கொண்டு)
நான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா வேணா இருக்கலாம்.பல பிசினஸ் பண்ணலாம்.ஆனா நிலத்துல நின்னு உழைக்காம என்னால ஒரு பருக்கையக் கூட உருவாக்க முடியாது.
அதாங்க விவசாயி.
கோவணம் கட்டி கழனில வேலை செஞ்ச விவசாயியோட நிலைமை,இப்போ முழுசா அவுத்தும் கேட்பாரற்று கிடக்குது.
எலிக்கறி சாப்பிட்டு,மண்டை ஓட்டு மாலை போட்டு,அம்மணமா நின்னு,தற்கொலை செஞ்சாவது நமக்கு சோறு போட்டுடனும்னு உழுதவன் நினைக்குறான்.

ஆனா நாமதான் அவன் நினைப்பே இல்லாம விதர்பா,தஞ்சைனு அவன் தற்கொலைக்கு துணை போயிட்டு இருக்கோம்.
இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு நினைக்குறீங்க?மழை பொய்ச்சுடுச்சி,WTO மாநாட்டுல உச்சக்கட்ட விலை நிர்ணயம் ஆகிடுச்சு.இன்னும் கொஞ்ச நாள்ல ரேஷன் அரிசுக்கு பதிலா உங்க அக்கவுண்ட்ல மானியப் பணம்தான் இருக்கும்.இது எல்லாத்த விடவும் விவசாயியோட இன்றைய நிலைமைக்கு காரணம் நாமதாங்க.
ஆமா!நம்மளோட இந்த கள்ளத்தனமான அமைதிதான் காரணம்.விவசாயிகளை புறக்கணிக்றது மூலமா நாம அந்நிய நாட்டுக்கு அடிமையாக போறோம்.நம்ப மரபை இழக்கப்போறோம்.
அவன் என்ன சந்தைல விக்கறானோ அததான் மூடிட்டு இறக்குமதி பண்ணி சாப்பிட போறோம்.கொடுமையான மரபணு உணவுகள் உட்பட.இந்த நிலை உங்களுக்கு வரணுமா?
ஒன்னு மட்டும் சொல்றேன்.உறுதியா மனசுல ஏத்திக்கோங்க.
“அன்னம் தரும் உழவனை நினை.அரசியல் சாக்கடையும் பாசனத்திற்கு பயன்படும்.

மேற்கு மட்டும்தான் மேதைத்தனம் என்றால்

சூரியன் எங்கே தோழா உதிக்கும்?

நாடி நரம்பெல்லாம் வாடி வருந்தினாலும்

உழவன் இருந்தால்தான் உன் உணவு சிறக்கும்”

உலகமயமாதல் தவறில்லை.எப்பொழுது?

விதர்பா விவசாயி

ஷாம்பூவிலும்,கண்டிஷனரிலும்,கலரிங்கிலும் இன்ன பிற கிறுக்குதனங்களிலும் சிக்குண்ட காலங்கள் துறந்து

இன்றைய தினங்களில் தலைக்குளியல் என்றால் சிகைக்காய்.பாட்டில் டாபர் நெல்லிக்காய் எண்ணெய் இருந்தாலும் வீட்டிலிருந்து அம்மா மருதாணி,செம்பருத்தி,கறிவேப்பில்லை போன்ற வஸ்துக்கள் கலந்து ஏற்படுத்திய இயற்கை எண்ணெய் கலவை ஒன்று அலமாரியில் எப்பொழுதும் அகப்படும்.பல் துலக்க பற்பொடி இல்லையென்றாலும் சுதேசிய கலவையான டாபர் சிகப்பு(கிராம்பு பட்டை வாசனைக்காகவே)காலையின் தொண்டை கரகரப்பை சமன் செய்யும்.

எட்டிப் பார்க்கும் என் இளம் நரைகளின் கொட்டம் அடக்க மேற்கு மாம்பல ஆயுர்வேத கடைகளின் மருதாணி மாதமிருமுறை வெற்றி பெறும்.

ஹமாம் இந்திய பெயரென்றாலும் ஏமாறாமல் கோட்ரேஜ்ஜின் சிந்தால் சூரிய நரவேட்டையை குளும் அரண் அமைத்து காக்கும்.

பொவண்ட்டோ தேசியமே என்றாலும் நம் இளநீர்,நீர்மோர்,உப்பு சோடா,பயநீ,கூழ் முன் நிற்க முடிவதில்லை.

உலகமயமாதல் தவறில்லை.அந்த உலகை ஆள்வது நாம் என்னும் போதினிலே! 😎😎

உண்மைகள் நாற்றமடிக்கத்தான் செய்யும்.

ஆவணப்பட ஸ்கிரீன்ஷாட்

​கக்கூஸ் டாக்யுமெண்டரி

பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப் படுவதாய் நண்பர்களிடம் இருந்து தகவலும் அழைப்பும் வந்தது.வர இயலவில்லை.அதற்கு மன்னிக்கவும்.
நண்பன் பிரபாகரனிடம் இருந்து 3.5 ஜிபிக்கு இந்த ஆவணப்படத்தை காப்பி செய்து லேப்டாப்பில் பார்த்தேன்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னால் 20 செகண்டுகள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க முடியவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு ஆடியோவாக கேட்பேன்.முழுவதும் பார்த்து முடித்தேன்.மனம் கனத்தது.

நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் திட்டமிடப்பட்டு ஈடுபடுத்த படுவதற்கு பெயர் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு பதிவு இந்த ஆவணப்படம்.இயக்குநர் திவ்யபாரதிக்கு சல்யூட்.

உண்மைகளை உணர்ந்தால் தான் செயலாக்கம் பெற முடியும்.உண்மைகளை மறுத்துக்கொண்டே இருப்பதனால் அந்த துர்நாற்றம் மானுடம் மீது ஒரு அழியா கறையாய் வீசிக்கொண்டே இருக்கும் என்னும் செருப்படி பதிவு.

வள்ளுவம்

ட்விட்டர்,பஞ்ச் டயலாக்லாம் இல்லாத காலத்திலேயே வள்ளுவர் என்னென்ன பண்ணிவச்சிருக்கார் பாருங்க..!

காலம் பிறழ்ந்தமைக்கு மன்னியுங்கள்.குறளுக்கு ஓர் நாள் போதாது.1330 குறளையும் மனனம் செய்தவர்களுண்டு இங்கே.

வாழ்க்கையில் நான் அதிகம் பயணித்த குறள்கள்.

1.யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்

சொல் லிழுக்கு பட்டு

பொருள்:நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் நாவடக்கம் இல்லீனா நீ காலி

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

பொருள்:அன்பிருக்கிற மனசுதான் அடுத்தவனுக்கு ஏதாச்சு நல்லது செய்யும்.

3.எண்ணி துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

பொருள்:டிக்ளேர் பண்ணிட்டா நம்ம பேச்சை நாமளே கேட்கக்கூடாது.

4.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு

பொருள்:உங்க மனசோட உயரம்தான் உங்க வாழ்க்கையோட உயரம்.

5.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்:எதையும் அப்டே நம்பிடாம கொஞ்சமாச்சு ஆராய்ஞ்சு பாக்கணும்.

6.தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

பொருள்:நாம வாழணும்.செம்மயா வாழ்ந்தான்டாங்கிற மாதிரி வாழணும்.இல்லனா வேஸ்ட்டு.

7.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

பொருள்:பெத்தவங்களை நேசி.மத்ததெல்லாம் தூசி.

8.ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க தன்மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்

பொருள்:ஆடிபோய் ஆவணி போனாலும் நாம டாப்பா வர்றதுதான் நம்ம அம்மாவுக்குலாம் பெருமை.

9.கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்கு தக

பொருள்:டின்னு கட்டி படிச்சு கன்னு மாதிரி நிக்கணும் பா.

10.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

பொருள்:(கில்லி விஜய் ஸ்லாங்கில் கன்ட்டினுயூ செய்க)இப்ப இவர் சொல்லிருக்கிறபடி நடந்தாதான் சுற்றமும் நட்பும் நிலைக்கும். 😉 

#வள்ளுவம் #திருக்குறள் #சக்தியதிகாரம் 🙂 #collage #MyFavoriteKurals #Thirukural #Thiruvalluvar #Couplets #Twitter #PunchDialogues

அம்மா பற்றி என் அம்மா எழுதிய சில வரிகள்

புரட்சித்தலைவி அம்மா குறித்து என் அம்மா திருமதி.கமலவல்லி இயற்றிய வரிகள்:

அம்மாவும் நீங்கள்!அப்பாவும் நீங்கள்!

ஆண்டவரும் நீங்கள்!எங்களை ஆண்டுவரும் நீங்கள்!

அன்பும் நீங்கள்! அருளும் நீங்கள்!

ஆக்கமும் நீங்கள்! எங்களுக்கெல்லாம் ஊக்கமும் நீங்கள்!

சொக்கத்தங்கம் நீங்கள்! சொல்வதையெல்லாம் செய்வீர் நீங்கள்!

சோதனைகளின் முன்னேயுள்ள கொம்புதனை நீக்கிவிட்டு

சாதனைகளாக்கிடும் சக்தியை எங்கு கற்றீர்?

உமைப் பாராட்ட வார்த்தை மாயங்கள் போதாது!

என்றாலும் வணக்கத்துடன் அளிக்கின்றேன் சில கருத்தை-

சாந்தமாகப் பார்த்து,சாதுவாகி நின்றீர்! யாதுமாகி நின்றீர்!

புரட்சித்தலைவி அம்மா! எங்களின் அன்புக்குரிய அம்மா!

பன்மொழி அறிந்த தன்னிகரற்ற தாயே!நம்

தமிழ்நாட்டுத் தங்கங்களும்,தரணிதனிலே

தலை நிமிர்ந்து நடைபோட

தாயே நீர் அளித்த திட்டங்கள் ஏராளம்! ஏராளம்!

தரமாய் உடையுடுத்தி-சீருடையுடுத்தி

சரமாய்-சரம் சரமாய் பள்ளிசெல்ல-மாணவர்களுக்கு

நான்குமுறை-ஆண்டிற்கு நான்குமுறை சீருடை தந்தீர் நீங்கள்!

விலையில்லா புத்தகங்கள்-குறிப்பேடுகள் தந்து

சலிப்பின்றி,களிப்புடன் கற்க செய்தீர் நீங்கள்!

மிதிவண்டிகள் தந்துதவி மதிவளர்க்க வித்திட்டீர் நீங்கள்!

பேருந்தில் பயணிக்க fare ஏதுமின்றி busfare ஏதுமின்றி

விருப்பமுடன் செல்ல உதவிட்டீர் நீங்கள்!

கடைக்கோடி தமிழனும்,தடையின்றி கற்றிட-கணினி அறிவியலைக் கற்றிட

மடிக்கணினி தந்து,மகிழ்வித்தீர் நீங்கள்! மகிழ்ந்திட்டீர் நீங்கள்!

இடைநிற்றல்தன்னை,தடைபோட்டு தடுத்திட்டு,

பெற்றோர்தம் பிள்ளைகளை,பிடிப்புடனே படிக்கவைக்க

நலத்திட்டங்கள் பலதந்து,நல்வழி தந்திட்டீர் நீங்கள்!

பெண்கல்வி ஆதரித்து,பெரிதும் உதவிட்டீர்!பெண்களுக்கு

இன்சென்ட்டிவ்[incentive] தந்து,இன்டெலிஜெண்ட்[intelligent] ஆக்கிவிட்டீர்!

ஆடவரும் பெண்டிரும் அழகாய் பயின்றிட,ஆதரவுதந்த-தருகின்ற

அரும்பெரும் தலைவியே!எங்கள் அன்பிற்குரிய அன்னையே!

கல்வி வளர்ச்சியடைய கருணைகொண்ட தாய் நீங்கள்!

தடைக்கற்கள் வந்தால்,தகர்த்தெறியும் வீரத்தாய் நீங்கள்!

தர்மத்தை நிலைநாட்டும் தங்கத்தாரகை நீங்கள்!

சிரித்த முகத்துடன் இருக்கும் சிங்காரத்தாய் நீங்கள்!

வாழ்க உங்கள் புகழ்!வாழ்க உங்கள் பெயர்!

வாழ்க உங்கள் அன்பு!

அமைதியில் நிலைப்பெறுங்கள்!!

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா


​ஒரு ஜியோ சிம்,ஒரு மோடம்,ஒரு ஹார்ட் டிஸ்க் தேவை.

அம்பானி கொடுக்கும் டைம் லிமிட் இருக்கும் வரை,கிடைக்கும் நேரத்துல எல்லாம் புரட்சித் தலைவி பாடல்கள்,படங்கள்,அரசியல் உரைகள்,முக்கிய பேட்டிகள் முழுவதையும் தரவிறக்கப் போகிறேன்.

மற்றவர்களைப் போல் வெறுமனே அவரது பரு உடலின் மறைவினை மட்டும் நினைத்து வெம்பிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவரது முழு வாழ்வு எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்த முதல்வர் முகம் சலனமற்றது.கம்பீரமானது.அவரது வாழ்வியலை கொண்டாட விரும்புகிறேன்.68 வயதில் நம்மை விட்டு பிரிந்தது அதிர்ச்சியே என்றாலும் அவர் நிறைவான ஒரு பொது வாழ்வை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்.

என்னை பொறுத்தவரை அவருடைய இறுதி ட்ராவல் அப்போல்லோ-போயஸ்-ராஜாஜி ஹால்-இறுதிச்சடங்கு அல்ல..
அலுவலகம்-முதலமைச்சர் பிம்பம்-பெண்ணிய சக்தி-மனதிலிருந்து அழிக்கமுடியாத ஆளுமை.

பலர் அவரை,அவரின் பெயரை களங்கப்படுத்த பல முயற்சிகள் செய்திருப்பர்.ஆனால் எவ்வளவு துணிச்சல்,மனத் திராணி வேண்டும் இந்த அக்கினி பிரவேசங்களை மேற்கொள்வதற்கு.
நான் அவரது வாழ்வை நிறைய தெரிந்துக்கொண்டு,மனதில் முழு புரிதலான நெருக்கத்தோடு அவரை என்றும் கொண்டாடவே விரும்புகிறேன்.

அமைதியில் நிலைத்திருங்கள் அம்மா..(இது அரசியல் கோஷ அம்மா அல்ல..ஒரு குறிப்பிட்ட வயது முழுமைப்பெற்ற தாய்க்கு இரு தலைமைக்கு அப்பாற்பட்ட ஒருவன் கொடுக்கும் குறைந்தபட்ச அளவிலான மரியாதை)

உங்கள் புகழ்,உங்கள் அன்பு தமிழகம் உள்ள மட்டில் நிலைத்திருக்கும்.

ஆள் பாதி..ஆடை மீதி

1

சில மக்கள் எந்தெந்த சூழ்நிலைக்கு என்னென்ன உடை அணிய வேண்டும்கிறதுல எவ்ளோ குறியா இருக்காங்கன்னு பாக்குறேன். ஆனா அவங்களை குறை சொல்ல முடியாது.

நான் நேர்ல பாக்றபோ ஒல்லியா இருப்பேன்.சுமாரான முகம்.அவ்ளோ கலர் கிடையாது.கறுப்புக்கும் மாநிறத்துக்கும் ஊசலாடிட்டு இருக்ற நிறம்.டிரெஸ்ஸிங் சென்ஸ் சுத்தமா கிடையாது.எந்த நிகழ்வுக்கு எந்த உடை அணியணும்கிற புரிதல் அறவே கிடையாது.துணி பாத்து பாத்து எடுக்கணும்னு மெனக்கெட்டது கிடையாது.
இதுவரை நான் அணியும் எந்த உடையுமே என் அம்மாவோ வீட்டினரோ என் ஃபிரெண்ட்ஸோ எடுத்து கொடுத்ததா இருக்கேன்.என்கிட்ட வந்து திடீர்னு என் ஷர்ட் சைஸ்,இடுப்பளவுலாம் கேட்டீங்கன்னா முழிப்பேன்.என் பாட்டுக்கு என்ன கிடைக்குதோ அதை எடுத்து போட்டுகிட்டு நான் பாட்டுக்கு சுத்திகிட்டு இருப்பேன்.என்னை புரிஞ்சவங்களுக்கு என் உடையோ அழகோ ஒரு பொருட்டல்லனு ஒரு நினைப்பு பிளஸ் ஒரு சோம்பேறித்தனம்.
பிராண்ட் கான்ஷியஸ்,கலர் கான்ஷியஸ் எதுவும் இல்லை.

என்னை முதல் முதல்ல நேர்ல பாக்குறவங்களுக்கு என் உடை மூலமா உயர்ந்த அபிப்ராயம் நிச்சயம் வந்திருக்காது.ஏன்னா அதுல என் மெனக்கெடல்கள் துளியும் இல்லைனு எனக்கு தெரிஞ்சதுதான்.
ஆனா முகநூலில் நீங்க பாக்குற என் புகைப்படங்கள் பளிச்னு நல்லா தரமா இருக்கும்.ஏன்னா அது என்னோட சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.அது மட்டும் நான் கான்ஷியஸாவே செய்யுற ஒரு வேலை.
அது ஒருவிதமான பிராண்டிங்.ஆள் பாதி ஆடை பாதின்னு இருக்ற உலகத்துல அது தவிர்க்க முடியாதது.

என்னை சுத்தி இருக்ற மக்களை,இந்த நகரத்தை கவனிக்கும் போது கொஞ்சமாச்சும் நல்லா டிரெஸ் பண்றா விக்னேஷ்வரா ன்னு எனக்கு நானே நினைச்சுப்பேன்.உடைங்கிறது எவ்வளவு சக்திவாய்ந்த ஒரு கான்செப்ட்னு எனக்கு அப்பப்போ தோணும்.கபாலி படம் அந்த எண்ணத்தை பயங்கரமா வலுவாக்குச்சு.

இன்னிக்கு இருக்ற சமூக கட்டமைப்புல இருக்றவன் இல்லாதவன்கிற ரெண்டே கேட்டகரிதான். இது மட்டுமே அசைக்க முடியாத பிரிவினை.மத்தது காலப்போக்குல அழிஞ்சிடும்.

உடைங்கிற விஷயத்துல கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய போக்கை மாத்திக்கணும்கிற இடத்துல நான் இருக்கேன்.கஷ்டம் தான் ஆனா தவிர்க்க முடியாதது.
முயற்சி பண்றேன்.ஆனாலும் அழுக்கு படிந்த,கந்தலான ஜீன்ஸோட என்னை அடுத்த முறை நீங்க பார்க்க நேர்ந்தா கண்டுக்காதீங்க.கொஞ்சம் டைம் ஆகும். அவ்ளோதான்.

முகநூல் பரிணாம வளர்ச்சி

fb

லைக்கு பதில் லவ் சிம்பள்,ஹாஹா சிம்பள்,ஏங்க்ரி,கண்ணீர் சிந்துவது போன்ற ஸ்மைலிக்கள்.

நண்பனின்/தோழியின் சுவற்றில் நேரடியாக ஷேர் செய்யும் வசதி.

தற்காலிக புரொஃபைல் பிக்சர்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள்-nametests,bla bla..

மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி செட்டிங்ஸ்.

மீம்ஸ் உலகத்தின் தாய்வீடு.

புரளிகளின் ஒன்றாம் நம்பர் புகலிடம்.

கருத்துகள் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காக புரிந்துக்கொள்ளப்படும் இடம்.யாரையோ நினைத்து போட்ட பதிவிற்கு யாரோ ரியாக்ட் ஆவார்கள்.

அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகளின் நம்பர் 1 பிரச்சார மேடை.

என்னைப்போன்ற ஷோ-ஆஃப்களின் ஆத்மார்த்த சந்திப்பு.

செய்தித்தாள்,ரேடியோ,வேலைவாய்ப்பு தளம்,ரெஸ்யூமே பில்டர்,ரம்மி,வீடியோ எல்லாவற்றின் தனிப்பட்ட தளங்களை பெருமளவு தகர்த்து,மனித மனங்களின் ஒற்றை கான்சன்ட்ரேஷன் புள்ளியாக வளர்ந்தது.

ஆறு வருட முகநூல் வாழ்வில் நான் கண்ட சில மாற்றங்கள் இவை.
இதனோடு சேர்ந்து சேட்டிங்,டேட்டிங்,ஜோதிட மேட்ரிமோனியல் சர்வீஸ்களும்,அச்சில் ஏற்றப்படக்கூடாத பல நாதாரித்தனங்களும் சரமாரியாக,சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் தளம்.

ஏதாச்சு மிஸ் ஆகி இருந்தா மனசுல அப்டேட் பண்ணிக்கோங்க.

ஒரு மலையாளக் கவிதையின் தமிழ் மறுபிறப்பு

”அப்படி இல்ல தாத்தா இப்படி”
என்று சொல்லி என் பேரக்குழந்தை என்னிடமிருந்த
செல்பேசியை பிடுங்கினான்

தண்ணீரின் மேல்
பூச்சிகள் பறந்து செல்வதுபோல அவனது விரல்கள்
அதில் நடனமாடின

நான் தொடும்போது வராத
ஒரு உலகம்
அவன் கைபட்டதும் எழுகிறது வண்ணங்கள் விரிகின்றன எழுத்துக்கள் நகர்கின்றன போர் வீரர்கள் வாளோடு அழைகிறார்கள்

”இங்க கொண்டா”
என்று சொல்லி நான் அழுத்தும்போது அது உறைந்து நின்றுவிடுகிறது

”நீங்க அழுத்துறிங்க
இவ்வளவு அழுத்தக்கூடாது மெல்லத் தொட்டா போதும் இப்படி மெல்லத் தொட்டா போதும் தொடக்கூட வேண்டாம்
கையக் காட்டினாலே போதும்” என்றான் பேரன்.

அப்படியென்றால்
இதுதானா வாழ்க்கைக்கான ரகசியம்
இத்தனை வயது வரை
மெல்லத் தொட வேண்டிய இடங்களை வன்மையாக தொட்டதனால்தான் வாழ்க்கை என்னை
இங்கே நிறுத்தியிருக்கிறதோ

ஓங்கி உதைத்துத் திறந்த கதவுகள்
வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள்
மிதித்துத் தாண்டிய தொலைவுகள் எல்லாமே இப்படி மெதுவாக கடந்து வரவேண்டியவை தானா.

~கல்பற்றா நாராயணன்