அம்மா பற்றி என் அம்மா எழுதிய சில வரிகள்

புரட்சித்தலைவி அம்மா குறித்து என் அம்மா திருமதி.கமலவல்லி இயற்றிய வரிகள்:

அம்மாவும் நீங்கள்!அப்பாவும் நீங்கள்!

ஆண்டவரும் நீங்கள்!எங்களை ஆண்டுவரும் நீங்கள்!

அன்பும் நீங்கள்! அருளும் நீங்கள்!

ஆக்கமும் நீங்கள்! எங்களுக்கெல்லாம் ஊக்கமும் நீங்கள்!

சொக்கத்தங்கம் நீங்கள்! சொல்வதையெல்லாம் செய்வீர் நீங்கள்!

சோதனைகளின் முன்னேயுள்ள கொம்புதனை நீக்கிவிட்டு

சாதனைகளாக்கிடும் சக்தியை எங்கு கற்றீர்?

உமைப் பாராட்ட வார்த்தை மாயங்கள் போதாது!

என்றாலும் வணக்கத்துடன் அளிக்கின்றேன் சில கருத்தை-

சாந்தமாகப் பார்த்து,சாதுவாகி நின்றீர்! யாதுமாகி நின்றீர்!

புரட்சித்தலைவி அம்மா! எங்களின் அன்புக்குரிய அம்மா!

பன்மொழி அறிந்த தன்னிகரற்ற தாயே!நம்

தமிழ்நாட்டுத் தங்கங்களும்,தரணிதனிலே

தலை நிமிர்ந்து நடைபோட

தாயே நீர் அளித்த திட்டங்கள் ஏராளம்! ஏராளம்!

தரமாய் உடையுடுத்தி-சீருடையுடுத்தி

சரமாய்-சரம் சரமாய் பள்ளிசெல்ல-மாணவர்களுக்கு

நான்குமுறை-ஆண்டிற்கு நான்குமுறை சீருடை தந்தீர் நீங்கள்!

விலையில்லா புத்தகங்கள்-குறிப்பேடுகள் தந்து

சலிப்பின்றி,களிப்புடன் கற்க செய்தீர் நீங்கள்!

மிதிவண்டிகள் தந்துதவி மதிவளர்க்க வித்திட்டீர் நீங்கள்!

பேருந்தில் பயணிக்க fare ஏதுமின்றி busfare ஏதுமின்றி

விருப்பமுடன் செல்ல உதவிட்டீர் நீங்கள்!

கடைக்கோடி தமிழனும்,தடையின்றி கற்றிட-கணினி அறிவியலைக் கற்றிட

மடிக்கணினி தந்து,மகிழ்வித்தீர் நீங்கள்! மகிழ்ந்திட்டீர் நீங்கள்!

இடைநிற்றல்தன்னை,தடைபோட்டு தடுத்திட்டு,

பெற்றோர்தம் பிள்ளைகளை,பிடிப்புடனே படிக்கவைக்க

நலத்திட்டங்கள் பலதந்து,நல்வழி தந்திட்டீர் நீங்கள்!

பெண்கல்வி ஆதரித்து,பெரிதும் உதவிட்டீர்!பெண்களுக்கு

இன்சென்ட்டிவ்[incentive] தந்து,இன்டெலிஜெண்ட்[intelligent] ஆக்கிவிட்டீர்!

ஆடவரும் பெண்டிரும் அழகாய் பயின்றிட,ஆதரவுதந்த-தருகின்ற

அரும்பெரும் தலைவியே!எங்கள் அன்பிற்குரிய அன்னையே!

கல்வி வளர்ச்சியடைய கருணைகொண்ட தாய் நீங்கள்!

தடைக்கற்கள் வந்தால்,தகர்த்தெறியும் வீரத்தாய் நீங்கள்!

தர்மத்தை நிலைநாட்டும் தங்கத்தாரகை நீங்கள்!

சிரித்த முகத்துடன் இருக்கும் சிங்காரத்தாய் நீங்கள்!

வாழ்க உங்கள் புகழ்!வாழ்க உங்கள் பெயர்!

வாழ்க உங்கள் அன்பு!

அமைதியில் நிலைப்பெறுங்கள்!!

Advertisements

புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா


​ஒரு ஜியோ சிம்,ஒரு மோடம்,ஒரு ஹார்ட் டிஸ்க் தேவை.

அம்பானி கொடுக்கும் டைம் லிமிட் இருக்கும் வரை,கிடைக்கும் நேரத்துல எல்லாம் புரட்சித் தலைவி பாடல்கள்,படங்கள்,அரசியல் உரைகள்,முக்கிய பேட்டிகள் முழுவதையும் தரவிறக்கப் போகிறேன்.

மற்றவர்களைப் போல் வெறுமனே அவரது பரு உடலின் மறைவினை மட்டும் நினைத்து வெம்பிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவரது முழு வாழ்வு எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்த முதல்வர் முகம் சலனமற்றது.கம்பீரமானது.அவரது வாழ்வியலை கொண்டாட விரும்புகிறேன்.68 வயதில் நம்மை விட்டு பிரிந்தது அதிர்ச்சியே என்றாலும் அவர் நிறைவான ஒரு பொது வாழ்வை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார்.

என்னை பொறுத்தவரை அவருடைய இறுதி ட்ராவல் அப்போல்லோ-போயஸ்-ராஜாஜி ஹால்-இறுதிச்சடங்கு அல்ல..
அலுவலகம்-முதலமைச்சர் பிம்பம்-பெண்ணிய சக்தி-மனதிலிருந்து அழிக்கமுடியாத ஆளுமை.

பலர் அவரை,அவரின் பெயரை களங்கப்படுத்த பல முயற்சிகள் செய்திருப்பர்.ஆனால் எவ்வளவு துணிச்சல்,மனத் திராணி வேண்டும் இந்த அக்கினி பிரவேசங்களை மேற்கொள்வதற்கு.
நான் அவரது வாழ்வை நிறைய தெரிந்துக்கொண்டு,மனதில் முழு புரிதலான நெருக்கத்தோடு அவரை என்றும் கொண்டாடவே விரும்புகிறேன்.

அமைதியில் நிலைத்திருங்கள் அம்மா..(இது அரசியல் கோஷ அம்மா அல்ல..ஒரு குறிப்பிட்ட வயது முழுமைப்பெற்ற தாய்க்கு இரு தலைமைக்கு அப்பாற்பட்ட ஒருவன் கொடுக்கும் குறைந்தபட்ச அளவிலான மரியாதை)

உங்கள் புகழ்,உங்கள் அன்பு தமிழகம் உள்ள மட்டில் நிலைத்திருக்கும்.

ஆள் பாதி..ஆடை மீதி

1

சில மக்கள் எந்தெந்த சூழ்நிலைக்கு என்னென்ன உடை அணிய வேண்டும்கிறதுல எவ்ளோ குறியா இருக்காங்கன்னு பாக்குறேன். ஆனா அவங்களை குறை சொல்ல முடியாது.

நான் நேர்ல பாக்றபோ ஒல்லியா இருப்பேன்.சுமாரான முகம்.அவ்ளோ கலர் கிடையாது.கறுப்புக்கும் மாநிறத்துக்கும் ஊசலாடிட்டு இருக்ற நிறம்.டிரெஸ்ஸிங் சென்ஸ் சுத்தமா கிடையாது.எந்த நிகழ்வுக்கு எந்த உடை அணியணும்கிற புரிதல் அறவே கிடையாது.துணி பாத்து பாத்து எடுக்கணும்னு மெனக்கெட்டது கிடையாது.
இதுவரை நான் அணியும் எந்த உடையுமே என் அம்மாவோ வீட்டினரோ என் ஃபிரெண்ட்ஸோ எடுத்து கொடுத்ததா இருக்கேன்.என்கிட்ட வந்து திடீர்னு என் ஷர்ட் சைஸ்,இடுப்பளவுலாம் கேட்டீங்கன்னா முழிப்பேன்.என் பாட்டுக்கு என்ன கிடைக்குதோ அதை எடுத்து போட்டுகிட்டு நான் பாட்டுக்கு சுத்திகிட்டு இருப்பேன்.என்னை புரிஞ்சவங்களுக்கு என் உடையோ அழகோ ஒரு பொருட்டல்லனு ஒரு நினைப்பு பிளஸ் ஒரு சோம்பேறித்தனம்.
பிராண்ட் கான்ஷியஸ்,கலர் கான்ஷியஸ் எதுவும் இல்லை.

என்னை முதல் முதல்ல நேர்ல பாக்குறவங்களுக்கு என் உடை மூலமா உயர்ந்த அபிப்ராயம் நிச்சயம் வந்திருக்காது.ஏன்னா அதுல என் மெனக்கெடல்கள் துளியும் இல்லைனு எனக்கு தெரிஞ்சதுதான்.
ஆனா முகநூலில் நீங்க பாக்குற என் புகைப்படங்கள் பளிச்னு நல்லா தரமா இருக்கும்.ஏன்னா அது என்னோட சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.அது மட்டும் நான் கான்ஷியஸாவே செய்யுற ஒரு வேலை.
அது ஒருவிதமான பிராண்டிங்.ஆள் பாதி ஆடை பாதின்னு இருக்ற உலகத்துல அது தவிர்க்க முடியாதது.

என்னை சுத்தி இருக்ற மக்களை,இந்த நகரத்தை கவனிக்கும் போது கொஞ்சமாச்சும் நல்லா டிரெஸ் பண்றா விக்னேஷ்வரா ன்னு எனக்கு நானே நினைச்சுப்பேன்.உடைங்கிறது எவ்வளவு சக்திவாய்ந்த ஒரு கான்செப்ட்னு எனக்கு அப்பப்போ தோணும்.கபாலி படம் அந்த எண்ணத்தை பயங்கரமா வலுவாக்குச்சு.

இன்னிக்கு இருக்ற சமூக கட்டமைப்புல இருக்றவன் இல்லாதவன்கிற ரெண்டே கேட்டகரிதான். இது மட்டுமே அசைக்க முடியாத பிரிவினை.மத்தது காலப்போக்குல அழிஞ்சிடும்.

உடைங்கிற விஷயத்துல கொஞ்சம் கொஞ்சமா என்னுடைய போக்கை மாத்திக்கணும்கிற இடத்துல நான் இருக்கேன்.கஷ்டம் தான் ஆனா தவிர்க்க முடியாதது.
முயற்சி பண்றேன்.ஆனாலும் அழுக்கு படிந்த,கந்தலான ஜீன்ஸோட என்னை அடுத்த முறை நீங்க பார்க்க நேர்ந்தா கண்டுக்காதீங்க.கொஞ்சம் டைம் ஆகும். அவ்ளோதான்.

முகநூல் பரிணாம வளர்ச்சி

fb

லைக்கு பதில் லவ் சிம்பள்,ஹாஹா சிம்பள்,ஏங்க்ரி,கண்ணீர் சிந்துவது போன்ற ஸ்மைலிக்கள்.

நண்பனின்/தோழியின் சுவற்றில் நேரடியாக ஷேர் செய்யும் வசதி.

தற்காலிக புரொஃபைல் பிக்சர்கள்.

மூன்றாம் தரப்பு செயலிகள்-nametests,bla bla..

மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி செட்டிங்ஸ்.

மீம்ஸ் உலகத்தின் தாய்வீடு.

புரளிகளின் ஒன்றாம் நம்பர் புகலிடம்.

கருத்துகள் பயங்கர மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காக புரிந்துக்கொள்ளப்படும் இடம்.யாரையோ நினைத்து போட்ட பதிவிற்கு யாரோ ரியாக்ட் ஆவார்கள்.

அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகளின் நம்பர் 1 பிரச்சார மேடை.

என்னைப்போன்ற ஷோ-ஆஃப்களின் ஆத்மார்த்த சந்திப்பு.

செய்தித்தாள்,ரேடியோ,வேலைவாய்ப்பு தளம்,ரெஸ்யூமே பில்டர்,ரம்மி,வீடியோ எல்லாவற்றின் தனிப்பட்ட தளங்களை பெருமளவு தகர்த்து,மனித மனங்களின் ஒற்றை கான்சன்ட்ரேஷன் புள்ளியாக வளர்ந்தது.

ஆறு வருட முகநூல் வாழ்வில் நான் கண்ட சில மாற்றங்கள் இவை.
இதனோடு சேர்ந்து சேட்டிங்,டேட்டிங்,ஜோதிட மேட்ரிமோனியல் சர்வீஸ்களும்,அச்சில் ஏற்றப்படக்கூடாத பல நாதாரித்தனங்களும் சரமாரியாக,சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் தளம்.

ஏதாச்சு மிஸ் ஆகி இருந்தா மனசுல அப்டேட் பண்ணிக்கோங்க.

அராத்துவும் இளங்கோ அண்ணனும்..

hqdefaultஅராத்து

ரொம்ப வசீகரமான ஒரு ஆளுமை.மற்ற பெரிய ஆளுமைக கூடலாம் கம்பேர் பண்ணல. பட் இவருக்குனு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு.எல்லா கருத்துகளையும் இவர்கூட எனக்கு உடன்பாடு கிடையாது.

பட் வெளிப்படைத்தன்மை,removing the shackles,நக்கல்,நையாண்டில இந்த ஆளை அடிச்சிக்கவே முடியாது.
இளங்கோ அண்ணன் வைக்கிற meaningful கான்டென்ட் என்னோட அன்றாட நடவடிக்கைகளை ஒரு ஆளு சவுக்கடி வச்சி தட்டி கேட்டாப்ள இருக்கும்.அப்பப்ப மண்டைல தட்டிட்டே இருப்பார் என்னோட மதிப்பீடுகளை(அவருக்கே தெரியாம)..மொத நாளு ரெமோ வை புகழ்ந்திருப்பேன்.அடுத்த நாள் ஏண்டா சினிமாலே விழுந்து கிடக்குறீங்க அயோக்கிய பசங்களா ங்கிற மாதிரி ஒரு தட்டு தட்டுவார்.அடங்கிடுவேன்.

அராத்து கிட்ட எனக்கு பிடிச்சது.பெண்களுக்கு அவர் தர உச்சகட்ட உரிமை.மேலோட்டமா பாக்குறவங்களுக்கு அவர் எழுத்து கொச்சையா தெரியும்.பட் யோசிச்சு பாத்தா அவர் நம்ம புனிதங்களையும்,மதிப்பீடுகளையும் என்னடா பெரிய டேஷூங்கிற மாதிரி நக்கலா சாடியிருப்பார்.அதுல புனிதம்கிற பேர்ல பெண்களை அடிமைப்படுத்துற தால அந்த புனிதங்களை அவர் தகர்த்துகிட்டே வந்திருப்பார்.நாம கெட்ட வார்த்தைனு ஒதுக்கி இருக்றதலாம் சரளமா பிரயோகிப்பார்.நமக்கு அந்த தில்லு வர ரொம்பப நாளாகும்பா.ஏன்னா அதுலக்கூட ஒரு சாடலான கோபம் உண்டு..எல்லா கெட்டவார்த்தையும் பெண்கள் ரிலேட்டடா வச்சிட்டா உட்ருவோமாங்கிற தில்லுக்கு துட்டு ஆட்டிட்யூட்.தவறான எல்லாத்தையும் அசால்டா நைஸா தகர்க்கணும்கிற வித்யாசமான இலக்கணம்.என்னுடைய எழுத்துல அராத்து வோட தாக்கம் எப்டியோ லைட்டா அண்டிக்குது. பட் அவர் கருத்துகள் மட்டும் எடுத்துகிட்டு என்னோட நடைல குடுக்கணும்னு தான் முயற்சி பண்ணுவேன் இனிமேட்டும்.

#மகிழ்ச்சி 🙂

ஆனந்த பவன் மிக்சரும் ஆனந்த கண்ணீரும்

பிஎச்டி வைவா

என் வாழ்க்கைலயே முதல் முறையா போன வாரம் ஒரு வைவா அட்டெண்ட் பண்ணேன்.பாவம் அந்த அக்கா.

78 பேரு கவரை பிரிச்சு ஒரே நேரத்துல மிக்சர் திண்ற சவுண்டையும் தாண்டி,தொண்டத்தண்ணி கிழிய 5 வருஷ உழைப்பை வந்திருக்கிற ஆடியன்ஸ் முன்னாடி கவனமா present  பண்ணாங்க.
கேள்வி கேட்கும் படலம் வந்துச்சு.எனக்கு தெரிஞ்சு ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியை கூட இந்திய ராணுவம் அப்டி விசாரிச்சு இருக்காது.

You must accept ur mistake.You should not fight backனு நடுல குரல்கள் வேற.ஒரு வழியா ஒரு மணி நேரத்துக்கு அப்றோம் I confer this doctorate upon …….னு சொல்லும்போது அவங்க கிட்டத்தட்ட ரத்தக்கண்ணீரே வடிச்சிட்டாங்க.

தயவு செஞ்சு அவங்க பேசுனதுக்கு அப்றோம் ஸ்நாக்ஸ் கொடுங்க.எல்லா வாயும் நறநறனுகிட்டு. கருமம்.என்னா கான்செப்ட்னே தெரில. :/

ஒரு மலையாளக் கவிதையின் தமிழ் மறுபிறப்பு

”அப்படி இல்ல தாத்தா இப்படி”
என்று சொல்லி என் பேரக்குழந்தை என்னிடமிருந்த
செல்பேசியை பிடுங்கினான்

தண்ணீரின் மேல்
பூச்சிகள் பறந்து செல்வதுபோல அவனது விரல்கள்
அதில் நடனமாடின

நான் தொடும்போது வராத
ஒரு உலகம்
அவன் கைபட்டதும் எழுகிறது வண்ணங்கள் விரிகின்றன எழுத்துக்கள் நகர்கின்றன போர் வீரர்கள் வாளோடு அழைகிறார்கள்

”இங்க கொண்டா”
என்று சொல்லி நான் அழுத்தும்போது அது உறைந்து நின்றுவிடுகிறது

”நீங்க அழுத்துறிங்க
இவ்வளவு அழுத்தக்கூடாது மெல்லத் தொட்டா போதும் இப்படி மெல்லத் தொட்டா போதும் தொடக்கூட வேண்டாம்
கையக் காட்டினாலே போதும்” என்றான் பேரன்.

அப்படியென்றால்
இதுதானா வாழ்க்கைக்கான ரகசியம்
இத்தனை வயது வரை
மெல்லத் தொட வேண்டிய இடங்களை வன்மையாக தொட்டதனால்தான் வாழ்க்கை என்னை
இங்கே நிறுத்தியிருக்கிறதோ

ஓங்கி உதைத்துத் திறந்த கதவுகள்
வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள்
மிதித்துத் தாண்டிய தொலைவுகள் எல்லாமே இப்படி மெதுவாக கடந்து வரவேண்டியவை தானா.

~கல்பற்றா நாராயணன்

ஜனநாயக வலைப்பூவியல்

இது ஒரு கட்செவி அஞ்சல் ஆசிரியன் இயற்றிய அற்புத படைப்பு.
பெயர் தெரியாத அதை போன்ற படைப்பாளிகளுக்கு இந்த சமர்ப்பணம்.தாயின் அன்பு பற்றிய ஒப்பற்ற பதிவு.

அம்மா! அம்மா!
✏ ‘அம்மா’ சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!
✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் ‘அம்மா’வின் பால்தான்.
✏ தன் ‘அம்மா’ தனக்கு என்னவெல்லாம்
செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை. அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.
✒ ‘அம்மா’ என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.
✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, ‘தாயை’ விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.
✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் ‘அம்மா’ மட்டும்தான்.
✏ ஓர் ‘அம்மா’வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!
✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் ‘அம்மா’ வின் கவனம்.
✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் ‘அம்மா’.
✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், ‘அம்மா’ மட்டும்தான்.
✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று ‘அம்மா’ வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்.
✒ தேங்காய் திருகும்போது, ‘அம்மா’ விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!
✏ அம்மா…! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.
நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் ‘தாயை’த் தேடுது மனசு.
✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு ‘அம்மா’! உங்களுக்கு..?
✒ ‘அம்மா’ என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.
✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் ‘அம்மா’ வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.
✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் ‘அம்மா’வின் அன்பு.
✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே ‘அம்மா’!
✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். ‘அம்மா’, நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்…!
✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை.
என் மூச்சுள்ள வரை காப்பேன் ‘அம்மா’ உன்னை.
✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது ‘அம்மா’ வின் முகம்.
✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், ‘அம்மா’ வின் கருவறை.
✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் ‘அம்மா’!
✏ ‘அம்மா…!’ அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!      என் நண்பர் அனுப்பியது.

வர்ட்டா??!!

இது தீரா நட்பு கண்மணி!

ஒரு தடவை ஒரு நட்பிலோ உறவிலோ தோற்றுப்போனால் அந்த நட்பை / உறவை புறந்தள்ளிவிட்டு இரக்கமே இல்லாமல் அரக்கன் போல நடந்து போக மனம் வருவதில்லை.

சொல்வதற்கு வேண்டுமானால் கெத்தாக இருக்கும். ஆனால் மனசு ஏங்கும். பாழாய் போன இயற்கையே என் மனசையும் புத்தியையும் ஒண்ணா படைச்சிருக்க கூடாதா?

யாரையும் அவ்வளவு எளிதில் கிட்டக்கூட நெருங்கவிட மாட்டேன்.ஆனா சில மனிதர்கள் வாழ்வில் சூறாவளி போல நுழைஞ்சு,அன்பு கதகளி ஆடி,அதே ஸ்பீடுல டேக் டைவர்ஷன் பண்ணி போயிடறாங்க. இன்னிக்கு நேத்துனு இல்ல.இனிமேட்டும் இது பொருந்தும்.
ஆனா அவங்க எல்லாருமே என்கிட்ட கொடுத்தது செம்ம யான அன்பு மட்டும் தான்.அந்த அன்பு ஒன்றுக்கு என்றைக்கும் நான் அடிமை. அது இல்லாம வாழ்வில்லை.

ஒரு தடவை அடிபட்டோமேனு பயந்து மனிதர்களை விட்டு விலகி போய்ட்டே இருந்தா,போய்கிட்டே இருக்க வேண்டியது தான்.

கோபம் இருக்கும் இடத்தில தான் அன்பு அதைவிட அதிகமா இருக்கும்.அந்த நம்பிக்கை என்னிக்குமே என்னை மத்த மனுஷங்களோட இணைச்சிட்டே இருக்கும். வாங்க மக்கா!! நேசிக்கலாம் ❤ ❤ 🙂

டி.எம் கிருஷ்ணா

image

கர்நாடக இசையை கச்”சேரி”களுக்குள் மட்டும் சிக்கவிடாமல் சேரி மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்.திறமைக்கும் பிறந்த இடத்துக்கும் என்னடா சம்மந்தம் என்று திமிராக கேட்டவர்.பிராமண துவேஷி,சங்கீத துரோகி என்று சக கலைஞர்களாலேயே எச்சில் துப்ப பெற்றவர்.கலையை கட்டுக்குள் அடக்காமல் மனிதம் என்ற சொல்லுக்குள் அடக்க முனைந்த ஒரே காரணத்தால்.

இந்த முயற்சிகளை நம்மளவர்கள் உதாசீனப்படுத்தியிருக்கலாம்.ஆனால் உலகம் இவரை அங்கீகரிக்க இருக்கிறது.

ராமன் மகசேசே விருதை பெற இருக்கிறார் சங்கீத வித்வான் திரு.டி.எம் கிருஷ்ணா..எம்.எஸ் மாவுக்கு கிடைத்த அதே அங்கீகாரம்.

கூவத்து குப்பத்தையும் இசையால் தூய்மையாக இணைக்கும் முயற்சியில் இருப்பவர்.வாழ்த்துக்கள் 🙂